Wednesday, March 30, 2011

ட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)


<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா

<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.

<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது... # வாழ்க பயம்!

<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் - ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!

<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் - நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?

<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் - எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்

<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க - பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்

<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் :-) அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் :-(

<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் - நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! - SLO"GUN"

<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்... - என்னமா என்னை புகழ்றானுங்க....ம்?

<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க - இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்

<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.

<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க... கூட்டி பல நாள் ஆகுது!

<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்

<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் - "தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்" # டீட்டெய்லு??

<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்

<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா... கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?

Tuesday, March 15, 2011

உயிரோடதான் இருக்கேன்! - (IAB)

வணக்கம் நண்பர்களே... நலமா?

என்னடா.. 1வருஷமா இவன் பதிவு ஒண்ணையும் காணோம்னு ஆளாளுக்கு, இவன் செத்துத்தான்னு நிம்மதியா இருந்தீங்களா? காலாட்டிக்கிட்டே தூங்கலைன்னா மனுசன் செத்துட்டதா நெனச்சி புதைச்சிருவாங்களாம்.. அதான் அப்படி ஏதாவது நினைச்சு கருமாதி பண்ணிடாதீங்கனு சொல்லிட்டு போலாம்னு வந்தேன் :)



நிற்க.

கொஞ்ச நாளா பதிவுலகம் பக்கமே வர முடியல.. (டபுள் மீனிங்?) வேலை தேடுதல், கல்யாணம், கருமாதின்னு பல நவீன பிரச்சனைகள். இப்போ எல்லாம் ஓரளவுக்கு சிமெண்ட் போட்டு செட் ஆக்கியாச்சு! சரி.. எல்லாம் முடிச்சு வேலை வெட்டி இல்லாதவன் என்ன செய்வான்? கரெக்ட்... அதேதான்... ஆரம்பிச்சிட்டேன். (எவன்டா அவன்? அதுகுள்ள மவுஸை, க்லோஸ் பட்டன் கிட்ட கொண்டுபோறது?)

ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதினாலும், நா சொல்லிக் கொள்ளும்படியா ஒன்னும் எழுதி கிழிக்கலை இதுவரைக்கும். சில சமயங்கள்ல ஆணி அடிப்பது அதிகமானாலோ, மன/பணகஷ்டம் அதிகமானாலோ, கண்டிப்பா பதிவுலகத்துல எழுதவோ படிக்கவோ மனசு வரலைங்க. (அப்டி எழுத, படிக்கலன்னா செத்தா போயிடுவ? # உங்க மனசாட்சி) அஃப்கோர்ஸ், இந்த மாதிரி வழக்கமான விதிகள் மான்புமிகு பதிவுலக பரதேசிகளுக்கு பொருந்தாது! அது யாரு யாருன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

உட்காறு.

அப்படி என்ன முக்கியம் இது? பதிவு எழுதி, கமெண்ட் போடுறதுன்னு சில பேர் கேட்பீ்ங்க. சரிதான்! அதை செய்ததால் எனக்கு இந்த பதிவுலகம் சில முக்கியமான நண்பர்களை கொடுத்திருக்கு! சில சிக்கலான சூழ்நிலையில் இருந்த போது பண உதவியும், மனஉறுதியும் அளித்த நண்பர்கள் வினோத், சென்ஷி, அறிவுதேடல் கார்த்திகேயன், ஆதவன், அகமத் சுபைர், குசும்பன் மற்றும் பல நண்பர்கள் எந்த ஒரு பலனையும் எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன். நன்றி சொல்லி அவர்களை அன்னியப்படுத்த விரும்பவில்லை!

படுத்துக்கோ.

என்னய்யா... நா சரியாதானே பேசறேன்? இது வரைக்கும் சைலண்ட் மோடில் இருந்த என் பதிவு, இனி ஸ்டார்ட் மியூஜிக் மோடில் மாறுகிறது. இனி பொழுதுபோகாத வேளையில்.. பல மொக்கைகளோடு வந்து...

டன் டன் டன் டன் டன்ன்ன்...
யேய் டன்டனக்கா.. டனக்குனக்கா...
ஜிந்தாக்தா.. ஜிந்தா ஜிந்தா.. ஜிந்தாக்தா.. தா..


(உங்களுக்கு எந்த மெட்டு புடிக்குதோ அதை போட்டுக்குங்க)

Sunday, January 10, 2010

அட.. மானங் கெட்டவனே!!

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ? அப்டின்னு சுப்ரமணிய பாரதியார் எழுதியிருந்தலும், நாம எல்லாம்.. சரி.. சரி.. நா மட்டும்தான்.. மானத்தை மாஞ்சா போட்டு பறக்கவுடுவோம்! "சரி, அதுக்கென்னடா இப்ப?"ன்னு ஒரு 'நாட்டாமை சொம்பை' தூக்கி நடுவுல போடுறது நல்லாவே கேக்குது. ஒன்னுமில்லைங்க.. காலையில என் கூட வேலை பாக்குற ஒருத்தரு, அவரோட வேலையை ஒழுங்கா பாக்காததால, அவரு ஒழுங்கா வேலை பாக்குறாரான்னு பாக்கற ஒருத்தவருகிட்ட, திட்டு வாங்கிட்டாரு!

ஏத்து வாங்குனவன் அப்டியே போவாம, என்கிட்ட வந்து.. "மானம் மருவாத உள்ளவன் எவனாவது இங்க வேலை பாப்பானா? இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்க... நாளு தெரு பிச்ச எடுத்து சாப்புடலாம்" ன்னு சொல்லிட்டு போயிட்டான்! (அட.. கோ-டாக்! அதை என்னை பாத்து ஏன்டா சொன்ன??) சரி.. மானம்னா என்ன? அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கா? கடந்த ஒரு வருஷத்துல எத்தனை முறை போயிருக்கு? எங்கங்க போயிருக்கு?, எந்தந்த இடத்துல போயிருக்கு? அப்டின்னு சும்மாதானே இருக்கோம்ன்னு பழைய டேட்டாவை, விரலை வச்சி சுரண்டி பாத்ததுல.... டொய்ன்..டொய்ன்..டொய்ன்.. (Flash for UR Front)

maanam.gif picture by rkarasans


ஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி.. என் நண்பன் இதை எதுக்குடா மாட்டிட்டு வந்தேன்னு கேட்டு கொஞ்ச மானம் போச்சி! அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி!!

இதுனாலும் பரவாயில்லை.. ஒரு நாள் என் ரூமுக்கு வந்த என் தம்பி.. என்னுடைய பர்சனல் இன்டர்நெட் கனெக்சன்ல யூ டியூப்ல வீடியோ எதையோ பாத்துகிட்டு இருக்குறப்ப.. "ஐ.. இந்த சைட்டை ப்ளாக் பண்ணலையா?" ன்னு ஆப்பீஸ்ல இருக்குற பழக்க தோஷத்துல கேட்டு கொஞ்சம் மானம் போச்சி! சரின்னு அவனும் சிரிச்சிகிட்டே ஊருலேருந்து வந்திருந்த சித்தி பொண்ணு கல்யாண சி.டி.யை போட்டு பார்த்தான், பார்த்துகிட்டே இருக்குறப்ப.. சிவ பூஜை கிங்காங் போல பக்கத்து ரூம்மெட் வந்து கிரிகெட் ஸ்கோர் பாக்க டி.வியை மாத்த சொல்ல.. நான் ரிமோட்ல ஆல்ட் + டேப் கீயை தேடிகிட்டு இருந்தேன்! நீங்க என்னத்த தேடுறீங்க? பாக்கி உள்ள மானமும் போச்சின்னு சொன்னாதான் அடுத்த பாரா போவீங்களோ???

writing_tshirt-.jpg picture by rkarasans


அடுத்த (கட்ட(மா)னம், என் கூட வேலை செய்யுற நோண்டுலிங்கம் ஒருதன், மொபைல்ல உள்ள ஒரு முக்கிய மெசேஜை தெரியாம டெலீட் பண்ணிட்டு, தலையில கை வச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். நா சும்மா இல்லாம கூலா போயி அவங்கிட்ட.. "விட்ரா.. விட்ரா... 'ரீசைக்ளின் பின்'லேருந்து எடுத்துகலாம்"ன்னு சொன்னப்ப விட்ட 'லுக்'குலயே மானம் போச்சி! இப்டி எங்க போனலும் என் மானத்தை மால்லாக்க போட்டு கும்மியடிச்சதை நினைச்சு உடம்பு சரியில்லாம போச்சு. சரிடான்னு முடியாம நடந்து போயி மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா? 500mg வேணுமான்னு கேட்க, நான் உடனே 512mg குடுங்கன்னு சொல்லி, அவமானமா.. மானம் போச்சி!!

தோ.. இப்ப கடைசியா அவதார் படம் பாக்க தியேட்டர் போனப்ப, ஷாப்பிங் மால்ல பர்ச்சேஸ் பண்ண கூப்பனை காமிச்சிட்டு (தெரியாமதாங்க.. ம்கும்.. நம்ப மாட்டீங்களே!) உள்ள போக பாக்க.. கவுண்டர்காரன் சட்டை புடிச்சி இழுத்து டிக்கேட் கேட்டு வாங்க அங்க கொஞ்சம் மானம் போச்சி! அது மட்டுமா? உள்ள போயி படம் பாக்கறப்ப.. டைம் என்னன்னு தெரிஞ்சிக்க கம்ப்யூட்டர்ன்னு நினைச்சு, ஸ்கிரீன் ஓரத்துல கெடிகாரத்தை தேடி பாத்தேங்க.. தேடி பார்த்ததோட சும்மா இல்லாம, அந்த உண்மையை இப்ப உங்ககிட்ட சொல்லி... ஒட்டிகிட்டுயிருந்த மொத்த மானமும் போச்சுல்ல! போச்சுல்ல!! போச்சுல்ல!.

முக்காத குறிப்பு : இதுக்கு முன்னாடி உனக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு? எதுல ஏறி போச்சு? அப்டின்னு எல்லாம் ரொம்ப மொக்கையா எதையும் யோசிக்காம.. தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போங்க!!

Wednesday, January 6, 2010

ஏதோ நம்மளால முடிஞ்சது!!

2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2010 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பு சுமார் 1,20,000 பேருங்க. தமிழகத்தில் வாகனப் பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. 01.11.2009 நிலவரப்படி தமிழகத்தில் 8,66,483 போக்குவரத்து வாகனங்களும் 98,99,761 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் ஆக மொத்தம் 1,07,66,244 வாகனங்கள் இயங்கி வருகின்றன. அபரிதமான வாகன பெருக்கத்தினாலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவினாலும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் 2009 ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் சாலை விபத்துக்களில் 10,958 உயிர்களை தமிழகம் இழந்துள்ளது. (ஸ்ப்பா.. நன்றி விசயகாந்த்!)

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகம் என்பது காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல, இதற்கு சாலைகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தன்னார்வ தமிழன் ஆதவன் அவர்கள் கேட்டுகொண்டதுக்கினங்க.. ஏதோ நம்மாளால முடிஞ்ச சில பாதுக்காப்பு விளம்பரங்களும்.. கடைசியா ஒரு ஐந்து பேருக்கு ஆப்பும்..

Safety5.jpg picture by rkarasans

Safety6.jpg picture by rkarasans


safety1.jpg picture by rkarasans

safety2.jpg picture by rkarasans

safety4.jpg picture by rkarasans
safety7.jpg picture by rkarasans

safety8.jpg picture by rkarasans

சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை (இனிமே நண்பர்களா இருப்பாங்க????) அழைக்கிறேன்.

தன்மான தமிழன் விகொ..

தான தலைவன் ஹாலிவுட் பாலா...

வீர தமிழச்சி சுசி...

அஞ்சா நெஞ்சன் நாஞ்சில் பிரதாப்..

நாட்டுக்கொரு நல்லவன் செந்தில்வேலன்...

(நீங்களும் ஒரு 5 பேரை கூப்பிட்டு உங்க பழிய தீர்த்துக்குங்க!!)

விஸ்கி: நான் எந்த விருதிற்காவும், எந்த திரட்டியிலும், எந்த பிரிவுலும், எந்த சுற்றிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே நண்பர்களே.. எனக்கு ஓட்டு எப்படி போடுவது? என்று சிந்திப்பதை விட்டுவிட்டு நாலு பேருக்கு நல்லது செய்யுங்க! நீங்களும் நல்லா இருங்க!!
Blog Widget by LinkWithin