Friday, May 22, 2009

கலக்கல் - 1



புரளியும், நானும்...
காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ இயந்திரம் மாதிரி வேலை செஞ்சிட்டு, இங்க துபாய்ல பொழப்ப ஒட்ட வேண்டி இருக்கு, இதுல வெந்த புண்னுல ஃப்பேர்க் வைச்சி நோன்டுற மாதிரி, ஆப்பீஸல உள்ள சில டாபர்ஸ்.. என் உணர்வ கேலி பண்ணிப்பாக்குதுங்க!

ஒன்னுமில்ல பாஸ்... நானே மாவீரன் பிரபாகரனை சுட்டுட்டோம், போட்டுட்டோமுன்னு.. புரளியை கிளப்பின பத்திரிகையையும், தொலைக்காட்சி மீடியங்களையும் நா கருவிக்கொண்டிருக்க... இங்க, மலபாரிங்க... சிங்கள சாக்கடைங்க கிட்ட பார்ட்டி கேக்குதுங்க.. அதுக்கு சாக்கடை சொல்லுது..." இப்ப ரெசசன் டைம், அதனால..கண்டிப்பா வைக்கிறேன் வெயிட் பன்னுங்கன்னு". இதலாம் என் முன்னாடியே, நா இருக்கும் போதே பேசுதுங்க... பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்? மேல நாட்டுல இருக்குற இங்கலீஸ்காரன் எப்டி புரிஞ்சிப்பானுங்க?

இப்ப நெனைக்கறேன், தமிழ்நாட்டுல இருந்தாலாவது... நம்க்கு ஆறுதலா, சப்பக்கட்டு கட்றதுக்காவது ஆள் இருப்பாங்க.. இங்க அந்த ஆறுதலும் இல்ல!
இதுக்கு கட்டிங் இல்ல.. புல் அடிச்சாலும் போதாது! ஏன் இவ்வளவு கோவம்னா, மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறியகொண்டு வந்து சேத்துட்டானுங்க!!

-------------------------------------------------------------------------------------

ஏன் நம்ம குடிக்கிறம்முன்னா..

  • ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது.
  • 24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன ?
  • நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.
  • கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீர் ஒன்றே சாட்சி
  • குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை.
-------------------------------------------------------------------------------------

க்கூக்குக்கூ.... ஹைக்கூ

*நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி!

*வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று
தெறிப்பது கெட்டமீன் வாடை!

* நிரந்தர முதல்வரின் லேட்டஸ்ட் வீடு
இதுதான் அவர் சமாதி!

41 comments:

Mythees said...

குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை

ha ha super mamu.....

Suresh Kumar said...

நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம். ///////////////////////

இதுக்காகவே குடிக்கணும் தல

சுந்தர் said...

// பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்//

தமிழனே ,தமிழனை புரிஞ்சுக்க வழியில்லையாம், இதுல அடுத்தவனை என் சொல்றீங்க நண்பா ?..................... உங்கள் படைப்பு மிக அழகு., தங்க மகள்.....

யூர்கன் க்ருகியர் said...

குடிக்கும்போது தொட்டுக்க எந்த ஊறுகாய் நல்லாருக்கும் ?

Anonymous said...

கலையரசே நீங்கள் கொலையரசாக வேண்டாம்.....உணர்வு புரியாதோரோடு உறவு புனைதல் வேண்டாம் வலி தவிருங்கள்.....குட்டிப்பொண்ணு குயூட் பொண்ணு...ஹைக்கூ..புது வாசம்....வாழ்த்துக்கள்....

ஷண்முகப்ரியன் said...

*நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி!//
நன்று, கலையரசன்.

கலையரசன் said...

for mythees
நெசமாவா?

for Suresh Kumar
எப்ப தல பார்ட்டி ஆரம்பிக்களாம்?

for தேனீ - சுந்தர்
உன்மைதான், ஒத்துக்கறேன்.

கலையரசன் said...

for ஜுர்கேன் க்ருகேர்
ஆச்சி ஊறுகாய்!

for தமிழரசி
இனி தவிர்க்கிறேன், கருத்திற்க்கு நன்றி

for ஷண்முகப்ரியன்
நன்றி ஐயா!

naanum kadavul said...

அருமையான பதிவு உங்களுக்கு என் அழந்த அனுதாபங்கள்.

ஏன் நம்ம குடிக்கிறம்முன்னா:
ஹா ஹா அருமையான தலைப்பு அற்புதமான விளக்கம்.இத தான் நான் சொன்னா
புரிஜிக்க மாடேங்குதுங்க கிறுக்கு பய புள்ளைங்க

ஆதவா said...

குடிக்கிறதுக்கு இப்படியொரு புள்ளிவிபரங்களா?? ரசிக்கும்படியா இருக்குங்க....

வினோத் கெளதம் said...

நல்ல தான் இருக்கு குடியின் தத்துவம்..

ஆமா கட்டிங் அப்படின என்ன..

Manivarma said...

தலிவா,
நீங்க பெரிய பெரிய ஆளு.

தல‌வன் நீங்ககககக..

அன்பரசு said...

//கலையரசன் said...
for ஜுர்கேன் க்ருகேர்
ஆச்சி ஊறுகாய்!//

கலையரசன் ரொம்ப அனுபவிச்சு எழுதிய்ருக்கீங்கன்னு நெனக்கிறேன்... நாக்கு சும்மா மதமதங்குது.

நம்ம காம்பினேசன பாருங்க,
-பூண்டு ஊருகாய் (அல்லது மாங்காய் ஊருகாய்) ப்ரியா இருந்தால் நல்லது
-அவிச்ச முட்டை 2 (அல்லது மூனோ, நாலோ..உங்க கெப்பாசிட்டிக்கு ஏத்த மாதிரி)
-பகார்டி ரம் (குறைந்தது 1/2)
-செவன் அப் அல்லது ஸ்பிரைட் தேவையான அளவு

மெல்ல ஸ்டார்ட் பண்ணி போனோம்னா சொர்க்கம் என்ன அதுக்கு மேலேயும் போகலாங்கோ!

அப்புறம் உங்களுக்கே தெரியும்னு நெனக்கிறேன் கொலையாளிய நம்புனாலும் நம்பலாம் ஆனா....

விட்டுதொலைங்க இவனுங்க புத்தி தெரிஞ்சதுதானே

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் கலையரசன்..

உங்கள் பக்கமும் நல்லாவே இருக்கு, குடிக்கிறதுக்கு இப்படியெல்லாமா?

கண்ணா.. said...

//
பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்? மேல நாட்டுல இருக்குற இங்கலீஸ்காரன் எப்டி புரிஞ்சிப்பானுங்க?
//

இதுதான் இங்கு உண்மையில் நடைபெறும் விஷயம்....என்னோடு வேலைபார்க்கும் ஓரு மலையாளி..நீங்க ஏன் தமிழ்நாட்டுல இருந்து அங்க போய்ட்டு தனிநாடு கேக்குறீங்கனு சொல்லுறான்...

நாமதான் இவன்களுக்கு சரியா புரிய வைக்கலயோ..?

கனவுகளின் காதலன் said...

நண்பர் கலையரசன் அவர்களே,

சிறப்பான, இயல்பான நடை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் கருத்துக்கள். பாராட்டுக்கள்.

கலையரசன் said...

for naanum kadavul
நன்றி உங்கள் அனுதாபதிற்கு!

for ஆதவா
வருகைக்கும், ரசிப்புக்கும்.. வந்தனம்!

for vinoth gowtham
கட்டிங்னா.. வெட்டுறது மாப்பு!

கலையரசன் said...

for ஆ.ஞானசேகரன்
வருகைக்கும்.. வாழ்த்துக்கு நன்றி!

for Kanna
அவனுங்களுக்கு பட்டாதான் சகா புத்தி வரும்..
சொல்லி புரியவைக்க முடியாது!

for கனவுகளின் காதலன்
முதல் வருகைக்கு, நன்றி!

கலையரசன் said...

for Manivarma
தலிவா, ஓவரோ?


for பனங்காட்டான்
வாங்க பாஸ்.. கட்டிங் போட்டுட்டு
பேசுவோம் (ஹி.. ஹி..உங்க செலவுலதான்)

coolzkarthi said...

// பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்? மேல நாட்டுல இருக்குற இங்கலீஸ்காரன் எப்டி புரிஞ்சிப்பானுங்க?
//
நண்பரே உங்கள் வார்த்தைகள் உண்மை....

ப்ரியமுடன் வசந்த் said...

கட்டிங்,வாட்டர்,ஊறுகாய் இதுல வாட்டர் ஊறுகாய் தெரியும் அதென்னங்கண்ணா கட்டிங் டெய்லர் கட்டிங்கா?

பதிவு நல்லாயிருக்கு கலை

//*நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி!//

நல்லாயிருக்கு ஹைக்கூ

ப்ரியமுடன் வசந்த் said...

கோபத்தை குறைச்சுக்கோங்க.....

பட்டிகளின் பருப்பு நம்மகிட்ட வேகாது

பொறுமை

பொறுமை

பொறுமை

kishore said...

innoru quarter sollu machi

செல்வன் (அன்பு ) said...

உங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே....

http://tamilseithekal.blogspot.com/

Jackiesekar said...

உண்மைதான் கலை பிரபாகரன் மேல மலையாளிங்க ரொம்பவே காண்ட இருப்பானுங்க....

என்ன செய்ய குவாட்டரும் உறுக்காயும்தான் சிறந்த வழி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நண்பரே, பதிவர்கள் சந்திப்பு நன்றாகத் தான் இருக்கும். நான் தயார்..

மேலும் தொடர்பு கொள்ள velanss@rediffmail.com ...

வாழ்த்துகள்..

nzpire said...

////நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்./////

அட அட என்ன விளக்கம் டா...அண்ணே இத ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா...நாங்க பல பேத்துக்கு பாவமே பண்ணிருக்க மாட்டோம்......
கொஞ்சம் கால தாமதம் ஆய்போச்சு....பரவல்ல இன்னைல இருந்து சொர்கத்துக்கு போறதுக்கு ட்ரை பண்றோம்....

வாழ்த்தி வழியனுபுங்க அண்ணே!....

வந்தா மப்போட வரேன்,
இல்ல மல்லாக்க படுத்து மட்டை ஆரேன்...

Prapa said...

ஒரே அசத்தல் .........வாழ்த்துக்கள் நண்பரே!

ஆ! இதழ்கள் said...

கொலையாளிய நம்புனாலும் நம்பலாம் ஆனா....//

ம்.. ம்... அடப்போங்கப்பா...

கண்ணா.. said...

கலை நானும் துபாய்லதான் இருக்கேன்.. ஏற்கனவே இது குறித்து நண்பர் வினோத் கூறியிருந்தார்..நல்ல முயற்சி...ஏற்பாடு செய்யவும்..நான் நிச்சயம் கலந்து கொள்வேன்...
என் செல்பேசி எண் - 050 - 9253270
நிஜபெயர் - வெங்கடேஷ்

நன்றி

Rafiq Raja said...

வித்தியாசமான பதிவு. குடியில் நன்மை இருப்பதாக குடிக்கும் நண்பர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்... அனுபவம் இல்லாததால் அதை பற்றி அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை.

தனக்கு சரியென்று எதுபடுகிறதோ, அதை ஜரூராக செய்யுங்கள். மனம் தானே நமக்கு எல்லாம் முதலாளி. :)

ÇómícólógÝ

Tech Shankar said...

அட அட அட. வால்பையன் கிட்டே கம்பெனி கேளுங்க. அவர் பறந்து வந்து கொடுப்பார் கம்பெனியை.

நசரேயன் said...

நான் இனிமேல ஒழுங்கா குடிக்கிறேன்

அது ஒரு கனாக் காலம் said...

kalai my email id
jwmarriott@gmail.com ...
I live pretty close to sivestar !!!!!!

sakthi said...

நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கிங்க

கணினி தேசம் said...

Kalai...,

Bloggers meeting is a good idea.


I'm staying in Sharjah. Office in Dubai.

Contact me at indkumar@gmail.com

There are more Tamil Bloggers in Dubai/Sharjah like Abu Afsar, Abi Appa, Keezhai Raasa, etc.,...

ஷண்முகப்ரியன் said...

சுட்டி கொடுத்து உதவிய நண்பர் கலையரசனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
karthikeyanswamy.blogspot.com

இந்த நண்பர் சொன்ன நன்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்,கலை.

kishore said...

i invited you in my latest post. read it..

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

cheena (சீனா) said...

அன்பின் கலையரசன்

அருமையான ப்பதிவு - துக்கம் பகிர துணை இல்லாத போது பீர்தான் துணையா ..... ம்ம்ம்ம்

குடிப்பதர்கான காரணங்கள் ஏற்றவையாகத்தான் இருக்கின்றன

குறும்பாக்கள் அருமை

தங்க மகள் கவர்கிறாள்

நல்வாழ்த்துகள் கலை

Joe said...

நல்ல பதிவு கலை.

ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்த கருத்துக்கள் என்றாலும், நீங்கள் தமிழாக்கம் நன்றாக செய்திருக்கிறீர்கள்.

குடி போதைக்கு நான் எதிரி அல்ல, இருந்தாலும் அதைக் குறைத்து ஈழத் தமிழர் நல்வாழ்வுக்கு நன்கொடை அனுப்புங்கள். ஐயோ பாவம் தமிழர்கள் பல பேர் இறந்துட்டான்களே-ன்னு தண்ணி அடிக்கிறத விட, போரில் காயம்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவி செய்வது அதை விட முக்கியமில்லையா?

பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்பது உறுதி. மீண்டும் ஒரு நாள் எழுச்சி ஏற்படும்.

Blog Widget by LinkWithin