Monday, August 10, 2009

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!

என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. "துபாயில் இருந்து குசும்பன்", "அமெரிக்காவில் இருந்து டேனியல்", "சிங்கபூரில் இருந்து பித்தன்" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே!!


இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

8 கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

8 வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

8 கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

8 "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...

எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

97 comments:

நையாண்டி நைனா said...

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

இப்படி சொல்லிட்டா நீங்களும் பல நாடுகளுக்கு போன பெரிய அறிவாளின்னு நாங்க நெனப்போமா...?
நெவர்.

இந்த ஊரு ஆளுங்க தான் இப்படி பீத்திப்ப்பாங்க... புவர் கண்ட்ரி, இன்டீசன்ட் பீபுள்.
லண்டன்லே எல்லாம்... இப்படி சொல்லவே மாட்டாங்க...

Want to be said...

This one is excellent Mr.Vadalooran.
Most of the blogs here are focusing only love but nothing comic.
You shown a distinction here.
Actually what you said was true but I think at the same time not all of them,even though Im out of India hope I never tried to show off.
But I have seen many people especially Ladies who goes to abroad after their marriage(You cant even imagine, they would be Queen Elizabeth's grand daughters when they come back to India).

Keep writing about these peelaa's.
Hope this will reach all peelaa parties who are working out of India(Who they say them self's NRI as if they born to white couples)

Bye,
Want to be unknown.

டக்ளஸ்... said...

யூ சீ..!
வாட் பியூப்புள்ஸ் கைன்ட் யூ ஆர்...?
ஒன் மினரல் வாட்டர் ஈவன் நோ தேர் ஆன் இன்டியா மேன்..?
ஓ..ஃபன்னி..வெரி ஃபன்னி.
நெக்ஸ்ட் மீட் டோயிங் யூ..
ஆங்..பாய்.

டக்ளஸ்... said...

\\ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)\\

யாரு அந்தாளு...?

நாஞ்சில் நாதம் said...

:))

நாகா said...

Haa Haa Haa..

டக்ளஸ்... said...

\\Want to be said...
This one is excellent Mr.Vadalooran.\\

இந்த கொடுமைய கேக்க யாருமே இல்லையா கடவுளே..?

டக்ளஸ்... said...

கலை இந்த பதிவு ரொம்ப அழகு...!
நான் இத சொல்லியே ஆகனும்..!


(மேலே சொல்லியிருப்பவை அனைத்திற்கும் இப்பதிவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை)

டக்ளஸ்... said...

ஆப்பரசன் படிச்சுட்டு போறவனில்லை.
அடிச்சுட்டு போறவன்.

டக்ளஸ்... said...

மீ த பத்து.

dondu(#11168674346665545885) said...

இப்படித்தான் சமீபத்தில் 1974-ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய என் பங்காளி பேசித் திரிந்து என்னிடம் நாலு கும்மாங்குத்து வாங்கினான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அது ஒரு கனாக் காலம் said...

kalai super pathivu, jokes apart its all 100% true ... ( tamil font not working now ..sorry)

துபாய் ராஜா said...

//வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?//

ஹி.ஹி.ஹி.எல்லாம் ஒரு ஞபாகார்த்தமா இருக்கட்டும்தான்.

//குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)//

:))

// கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)//

:))

//8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)//

தட்டை கழுவியும் வச்சிருவோம்ல. இல்லைன்னா குமட்டுல குத்து வாங்குறது யாரு??!! :))

//8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. !)//

இதே துபாயில இருக்கும்போது நம்ம ஊரு பணத்துல கணக்கு போடுறது.:)

//8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)//

என்ன செய்ய வயிறு அவ்வளவு கெட்டுப்போய் கிடக்கு. :))

//8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)//

:))

//8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)//

:))

//8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!//

இதுல சிலது மட்டும் நமக்கு பொருந்தும். :)))))

என் பக்கம் said...
This comment has been removed by the author.
என் பக்கம் said...

என்ன வடலூரான் ஊருக்கு கிளம்பிட்டீங்க போல?

வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

கலை கலக்கல்ஸ் :)

இன்னொன்னு இருக்கே. கையேந்தி பவன்ல சாப்பிட்டாலும் கைய துடைக்கிறதுக்கு டிஸ்யூ பேப்பர் தான் வேணும்னு அடம்பிடிக்கிறது.

இதெல்லாம் சொந்த சரக்கு மாதிரி இருக்கே :)

☀நான் ஆதவன்☀ said...

டோண்டு சார் :))))

சென்ஷி said...

இப்படியெல்லாம் பதிவுல எழுதிட்டா நாங்க செய்யாம விட்ருவோமாக்கும்.

துபாய்ல நீ எங்க தங்கியிருந்தேன்னு எவனும் கேக்காத வரைக்கும் நாங்க பண்ற அலம்பல் ஆகாசம் வரைக்கும் கேக்குமில்ல..

ஆனா கொடும! ஊர்ல முக்காவாசி துபாயை பார்த்தவனாவே இருக்கறதுதான் கஷ்டமா இருக்குது. எதை சொன்னாலும் தண்ணியக்குடி தண்ணியக்குடின்னு குசும்பன் ரேஞ்சுக்கு அடக்குறானுங்க..

நிம்மதியா ஃபீல் பண்ண விடலைன்னு பார்த்தா இங்க பதிவுல சொம்பை நசுக்கி வச்சிருக்கீங்க.. நல்லா இரும்வே! :)

அக்னி பார்வை said...

சூப்பரப்பு சூப்பரப்பு...

RAD MADHAV said...

என்ன கொடுமை அய்யா இது ....
நம்ம கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் இவரு நம்மலப்பாத்து கேட்டுப்புட்டாருங்களே???? :-)))

ஜெஸிலா said...

எதென்ன தன்னிலை விளக்கமா? உங்கள பத்தி நீங்களே எழுதிக்கிட்டது தெரியுதே. :-)

R.Gopi said...

நான் அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு எஸ்கேப்....

Sukumar Swaminathan said...

உண்மையை மறைக்காமல் வாக்குமூலம் கொடுத்த ....
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.....

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ஹா

1. ருபீஸ் என்ற வார்த்தை வாயிலேயே வராது, ஒரே திர்ஹாம்ஸ், டாலர்னு தான் வரும்
2. இங்கே இருந்துக்கொண்டு ருபீஸ் கணக்கு பாக்குறது
3. அடுத்தவனை எகக்காலமா பாக்குறது
4. பணத்தை மொத்தமா எடுத்து அதுலேர்ந்து ஒன்னு உருவி கொடுக்குறது (ரெஸ்டாரெண்ட்..)
5. சிகெரெட் பற்றவைக்காமலே விரல், உதடு மாத்திக்கிட்டே பேசுறது....

இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்

அமுதா கிருஷ்ணா said...

ஒரு மாதம் மட்டும் வெளிநாடு போய் வருபவர்களுக்கு இது பொருந்தாது..நான் மே மாதம் மலேஷியா,சிங்கப்பூர் போய் வந்தேன்..அப்பாடி இங்காவது போய்ட்டு வந்தேனு சொல்லியாச்சு!!!

ஆ.ஞானசேகரன் said...

//எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!//


ம்ம்ம் இப்படிதான் சிங்கபூரல... புரிஞ்சுருக்கும்னு நினைக்கின்றேன்..

ஜியா said...

நாலு வருசமா மெயிலுல ஆங்கிலத்துல சுத்திக்கிட்டு இருந்தத அருமையா ஆட்டையப் போட்டு தமிழ்ல எழுதியிருந்தாலும்... ப்ராக்கட்ல உங்க கமெண்ட்ஸ் நல்லா இருந்தது... :))

ஜோ/Joe said...

:)

செந்தழல் ரவி said...

Super !!!!!!!!!

ச.செந்தில்வேலன் said...

கலக்கல் கலை.. :))

வழிப்போக்கன் said...

ரசிக்கும் படியாக இருந்தது...
:)))

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல நகைச்சுவை...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மாப்பி,
மீண்டும் ஒரு அற்புதமான பதிவு போட்டு அலுவலகம் என்றும் பாராமல் சிரிக்க வைத்தாய்.
உம்மானாம் மூஞ்சிகளுக்கும் சிரிப்பு கண்டிப்பாக வந்திருக்கும்டா.
கலக்கிட்டடா காப்பி....

ஆடிக்கும் அம்மாவாசைக்கும் ஒரு பதிவு போட்டாலும் லட்சத்தில ஒன்னு..

மாப்பி கக்கூசுக்கு கூட ரேபான் க்ளாஸ் போட்டு போவாங்க..
கூடவே 160gb ipodடில் பிங்க் பிளாயிட் கேப்பாங்க...
டாவின்சி கோடு புத்தகத்தை போல ஒரு புத்தகம் இல்லைன்னு சொல்லுவாங்க.
mac நோட் புக் மாதிரி ஒரு நோட் புக் இல்லைன்னு சொல்லுவாங்க..
விண்டோஸ் சுத்த வேஸ்ட் ,முட்டாளுக யூஸ் பண்ணுவதுன்னு சொல்லுவாங்க..

மச்சான் நான் எப்போவும் mont blanc செண்டு தான் யூஸ் பண்ணுறது..
மத்த செண்டு எனக்கு அலர்ஜின்னு சொல்லுவானுங்க..

காசுக்கு புடிச்ச கேடா டீசல் ஜீன்சை 2000 dhs குடுத்து கூட வாங்கி போடுவாங்க
இதையெல்லாம் நான் நேர்ல பாத்து நொந்தவன்..


தமிழ்மணம்...தமிளிஷ்...திரட்டி களில் ஒட்டு போட்டாச்சு...ஆபீஸில் வேலை அதிகம் இருந்ததால் உடனே கருத்து போடா முடியவில்லை.இனிமேல் செண்டு அடிக்கவே யோசிப்பெண்டா..

பிரியமுடன் பிரபு said...

மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)
///
அந்த பயம் இருக்கட்டும்...............

பிரியமுடன்.........வசந்த் said...

மச்சான் அப்ப ஊருக்கு போனா இது மாதிரியெல்லாம் பண்ணனுமா?

நீயும் இது மாதிரிதான் திரிஞ்சியா?

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

Joe said...

ஏற்கனவே மின்னஞ்சலில் சுற்றித் திரியும் ஒன்றை உங்கள் நகைச்சுவை கலந்து மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

பெயர்களைக் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். வருடம் ஓரிரு மாதம் ஜப்பானில் வேலை பார்க்க செல்பவனை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? நான் இந்த மாதிரி அலப்பரைகள் செய்யாத ஒரு சாமானியன் என்பதை இனிமேல் விளக்கிச் சொன்னாலும் எந்த பயனுமில்லை.

சிவகுமார் said...

நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்கள், காமெடியாக கூறியுள்ளதால் யாரும் பெரிதுபடுத்த மாட்டார்கள், இல்லையெனில் ஆட்டோவில் கூலிப்படையை அனுப்பியிருப்பார்கள் நம் ஜிகுனா சில்பான்சுகள்!

யப்பா, என்ன வெயிலு, எக்ஸூஸ் மீ, ஒரு மினரல் வாட்டர் நல்லா கூலிங்கா கிடைக்குமா?

சுசி said...

//(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)//

ஐ லைக் யுவர் எண்ணம் கலையரசன். சிரிச்சு சிரிச்சு cheek க்கு போச்சு...

Anonymous said...

Yappa yerkanve forward email lla vanthu kanju thenju pona recordardu visayam ethu.. infact forward email lla vanthathu rombave pin pointing aa erukkum. ethavathu puthusa pannupa. ethu oru matternnu ethukku 40 peru comment vera.. hmm kali kalam.

பிரசன்னா இராசன் said...

ஹா.. ஹா.. கெட்ட கலாய் அண்ணே. ஹே யூ நோ வாட்? வீ தி யூ.எஸ் ரிட்டன் நெவர் டூ திஸ் கைண்ட் ஆப் ஸ்டஃப். யூ ஸி பட் ஐ டோண்ட் நோ அபவுட் துபாய் பீப்பிள். வெரி ஃபன்னி.. வெரி ஃபன்னி...

sakthi said...

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

ஆமாம் கலை
இந்த அனுபவமும் நிறைய உண்டு

சதங்கா (Sathanga) said...

நம்பர் மூனு, விவேகானந்தர் தெரு
துபாய் குறுக்கு சந்து
துபாய்

பார்த்திபனின் 'துபாய் முகவரியை' நினைவுபடுத்துகின்றன பதிவும் பின்னூட்டங்களும் :)))

Anonymous said...

ரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சு . :)))))))))))))))

குசும்பன் said...

//கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)//

இதுதான் செம கலக்கல்! அருமை கலை!


அப்புறம் வாட் யா நோ ஏசி? அங்க கக்கூஸ்ல கூட ஏசி இருக்கும் என்று அலப்பறை கொடுப்பது:)

குசும்பன் said...

// 40 peru comment vera.. hmm kali kalam.
//

ஹா ஹா யாரு கலை இந்த காண்டு கஜேந்திரன்?

கலையரசன் said...

நையாண்டி நைனா -க்கு
நன்றி! அவனாடா நீயி....?

For- Want to be..
Credit for coming up & make the acquaintance of my post.

டக்ளஸ் -க்கு
நன்றி தோழா... உங்க கும்மிக்கும், வருகைக்கும்!!

//ஜெர்ரி கிங் யாரு அந்தாளு...?//
அவருதான் Maths in 10 Lessons புக் எழுதுனவரு டக்கு!

//மீ த பத்து//
ஏன் இந்த (கொ)கலை வெறி?

நாஞ்சில் நாதம்-க்கு
சிரிப்புக்கு நன்றிங்கண்ணா!!

பித்தன் said...

பாஸ் இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் நம்மள குத்தம் சொல்லியே போழைக்குறாங்க... நமகொன்னும் அடி வாங்குறது புதுசில்லையே.... இந்தியா இன்னும் மாறவே இல்ல....

கலையரசன் said...

dondu(#11168674346665545885) -க்கு
நன்றி ஐயா.. உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்!!
//இப்படித்தான் சமீபத்தில் 1974-ல்//
1974 உங்களுக்கு சமீபமா...?
அவ்வ்வ்வ்வ்..

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சுந்தர் சார்.. உங்க வேலையை நான் செஞ்சிட்டேன் இந்த தடவை!!

துபாய் ராஜா -க்கு
நன்றி துபாய் ராஜா!
துபாய்ல எங்க ராசா இருக்க?
உன் போன் நம்பர மெயில் அப்புங்க... @ rkarasans@gmail.com

என் பக்கம் -க்கு
வாங்க பிரதீப்..
நீங்களே பேக் பண்ணி ஊருக்கு அனுப்பிடுவீங்க போல?
இப்ப இல்ல.. டிசம்பர்லப்பா!!

Suresh Kumar said...

எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! //////////////

மொத்ததில வடிவேலு ரேஞ்சில சொல்லுவாங்கனு சொல்லுங்க . வடிவேல் படம் கூட அந்த படத்தையே போட்டிருக்கலாம் ( துபாய் டிரெஸ் )

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி சூர்யா வருகைக்கு..
நான் செய்யல.. நான் செய்யல.. ன்னு கதறுனாலும் விடமாட்டீங்களே!!
அப்புறம்.. உங்க பாய்ண்ட் ஹேஸ் பீன் நோட்டட்!!

சென்ஷி -க்கு
வாங்க சென்ஷி...
உங்க ஊரில் இருந்து அவ்வளவு பேரு இங்க வந்துயிருக்காங்கலா?
பேசாம அமெரிக்கா பக்கம் போயிடுங்களேன்..
நம்ம பீலாவை தொடர வசதியா இருக்கும் பாருங்க.

அக்னி பார்வை -க்கு
நன்றியண்ணே.. நன்றியண்ணே..

RAD MADHAV -க்கு
நன்றி மாதவ்.. நாங்க உசாருங்கோவ்!

கபிலன் said...

அட்டா...நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைங்க கலை, நல்ல நகைச்சுவையான பதிவு, அருமை...அத்தனையும் உண்மை !

கலையரசன் said...

ஜெஸிலா -க்கு
வாங்க யக்கோவ்.. முதல் வருகைக்கு நன்றி!
என்னக்கா... இப்படி பிரிச்சி பேசுறீங்க?
நாமெல்லாம் ஒன்னுகுள்ள ஒன்னு!!

R.Gopi -க்கு
நன்றி கோபி.. வரவு வச்சாச்சு!!

Sukumar Swaminathan -க்கு
வாங்க சுகு.. என்னைய கும்முறதிலேயே குறியா இருங்க எல்லாரும்.

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு.. உங்க பாய்ண்ட்ஸ் அருமைய்யா!
ஆனா 5வது என்னன்னு புரியல.

அமுதா கிருஷ்ணா -க்கு
வாங்க மேடம்..
ஹலோ, சொல்லிட்டு எங்க கிளம்புறீங்க?
டிரீட் குடுங்க.. கஷ்டப்பட்டு கேட்டுயிருகோம்!!

கலையரசன் said...

ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி சிங்கப்பூர் சேகரு! போதுமபாப்பா.. இப்ப சந்தோஷமா?

ஜியா -க்கு
வாங்க ஜி.. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!
மேட்டர் ஒன்னும் சிக்கல.. அதான்.. ஹி.. ஹி..

ஜோ/Joe -க்கு
நன்றி ஜோஜோ!! (எத்தனை ஜோப்பா இருக்கீங்க?)

செந்தழல் ரவி -க்கு
நீங்களே சுப்பருன்னு சொல்லிட்டீங்களேஏஏஏஏ...
நன்றி தல..

கோவி.கண்ணன் said...

இன்னிக்குத் தான் பார்த்தேன்......அனைத்தும் குபீர் குபீர் ரகம் !

:)

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்..

வழிப்போக்கன் -க்கு
நன்றி பாஸ் உங்கள் சிரிப்புக்கும், வாழ்த்துக்கும்!

குறை ஒன்றும் இல்லை !!! -க்கு
நன்றி தோழா.. அதான் பெயரே சொல்லுதே!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி கார்த்தி! நீ பழகுறவனுங்களை பார்த்தா பெரிய பீட்டரா இருப்பானுங்க போல.. பாத்து சூதானமா இருந்துக்கோ! மறுபடியும் நன்றி.. உன் தொடர் வருகைக்கும், ஓட்டு ஊக்கத்திற்க்கும்!!

பிரியமுடன் பிரபு -க்கு
நன்றி பிரபு உங்க மிரட்டலுக்கு..
நீங்க வசந்துக்கு சொந்தகாரரா?

கலையரசன் said...

பிரியமுடன் வசந்த் -க்கு
என்ன மச்சி இப்டி கேட்டுட்ட...
முதல் வெக்கேசனா உனக்கு?
போய்ட்டு வா தெரியும் உனக்கே!

Joe -க்கு
நன்றி ஜோ!
நீங்கள் எதுவும் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்க பெயரை சேர்த்துவிட்டேன்! இப்பொழுது நீக்கிவிட்டேன்.. அக்காரியத்திற்க்கு வருந்துகிறேன்!!

சிவகுமார் -க்கு
நன்றி பாஸ்.. இனி அதுவேற செய்வாங்களா அவுங்க?
எதுக்கும் ஜாக்கிரதையாவே இருகேன்!!

சுசி -க்கு
ஐ லய்க் யுவர் கமெண்ட் சுசி!
சாரி... லண்டன் சுசி!!

கலையரசன் said...

Anonymous -க்கு
வாங்க அனானி.. எப்புடி கண்டுபுடிச்சீங்க, இது மெயில் வந்ததுன்னு?
கண்டிப்பா நீங்க RAW அமைப்பை சேர்ந்தவராதான் இருக்கனும்!!
அப்புறம்.. அது kali kalam இல்ல.. kalai kalam!!

பிரசன்னா இராசன் -க்கு
நன்றி ராசா..
இது வேறையா? நீ தமிழ்ல இங்கிலிபீசு அடிக்கிற..
அந்த அனானி.. இங்கிலிபீசுல தமிழ் அடிக்குது!!

sakthi -க்கு
வாங்க சக்தி.. நல்லவேளை, மறுநாளாவது போயிடுச்சா வாசனை?

சதங்கா -க்கு
நன்றி முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்!
சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் என்பதை விட்டுடீங்க?

mayil -க்கு
நன்றி மயில்.. பேரு அழகா இருக்கு!!

தண்டோரா இனி... மணிஜி.. said...

ஊருக்கு வரும்போது சொல்லப்பா...

கலையரசன் said...

குசும்பன் -க்கு
நன்றிண்ணே! உண்மையான பாராட்டுதானா? ஒன்னும் பிரியலை!!
காண்டு கஜேந்திரன் குதுருக்குள்ள இல்லையா?

பித்தன் said...
என்ன பாஸ் சொல்றீங்க?
சம்பத்தமே இல்லாம இருக்கே..
ஒருவேளை வேற எங்கியாவது போடவேண்டிய கமெண்டோ?

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்! அந்த படம் தெளிவா கிடைக்கலை..
அதான் இந்த படத்தை போட்டுடேன்!

கபிலன் -க்கு
நன்றி நண்பரே... உங்களுக்கு பிடித்தால் சரிதான்!

KISHORE said...

சரியா சொன்ன மச்சான்.. இங்க ஒருத்தன் என்னை 10 நாளா படுத்தி எடுக்குறான்..
என்ன ஒன்னு அவன்கிட்ட ஒரே ஒரு பழக்கம் மட்டும் மாறல... அதான் குளிக்காம இருக்குறது... எந்த நாட்டுக்கு போய்ட்டு வந்தாலும் குளிக்க மாட்றான்... நான் இவ்ளோ நேரம் சொன்னது வினோத்கெளதம் பத்தி தான்னு தப்பா நெனச்சிடாத...

Joe said...

No worries, mate!
Thanks.

(Sorry, transliteration not working)

jackiesekar said...

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)//

கரிக்டா சொன்னிங்க வாத்தியரே பதிவு அருமை மற்றும் நல்ல கூர்மையான பார்வை...

வால்பையன் said...

அமெரிக்கா ரிட்டர்ன்ஸ் தோளை குலுக்கு குலுக்கி பேசுவார்களாமே!

Anonymous said...

dai, ventru, moodu da. ippadi pasi, pasi-ya urpudaporathilai.

Mr_Adore said...

என்னகன்னா எல்லாத்தையும் சொல்லிட்டு அந்த கேன் வாஷ் சூ வ விட்டுடிங்க ???? நம்ப ஊர்ல இருக்கும் போது பாட்ட செருப்பு போட்டவனெல்லாம் பாத்ரூம் போன குட கேன் வாஷ் போட்டிட்டு போற அலபர இருகே அத தாங்க முடியாது( அந்த கேன் வாஷ் சூ வ தப்பி தவறி கலடின்ன தொலன்சோம் ) ..... இதுல வேற சொல்லிகிறது மாப்ள சூ இல்லாம எங்கயுமே போக முடியமட்டேன்குதுட நு சொல்லும்போது எனக்கு ஒன்பது ரூபாய்க்கு ஒரு மிளகாய் வாங்கி தேசிகிட்ட மாதிரி உடம்பு எரியும் பாருங்க.......

அப்புறம் செல் போன பாக்கெட் ல வைகாம கைல வச்சி கிட்ட அலைரது, டிஷு பேப்பர் டவல் பேப்பர் அது இருந்த தான் முஞ்ச தொடைபேன் நு அடம் பிடிக்கிறது... வெஸ்டர்ன் டோய்லெட் இருந்த தான் " அது " வரும் நு சொல்லறது, இப்படி நெறியா இருக்கு...

இதெலாம் நாங்க எதுக்கு தெர்யுமா காது கொடுத்து கேட்டு கொண்டு இருகோம் சொல்லுங்க....எல்லாம் அந்த ஒரு பாக்கெட் பாரின் சிகரெட்டுக்கு...தான் அந்த பன்னாடைக்கு தெரிய மாட்டேங்குது...........

வால்பையன் said...

//Anonymous said...

dai, ventru, moodu da. ippadi pasi, pasi-ya urpudaporathilai.//


யாரோ நம்ம பழமைபேசியால் ரொம்ப பட்டுருப்பார் போல!

Aravazhi said...

Hai kalai,

Fantastic man.Me also in the beginning did some thing like that but i will change my self when i saw so many FOREIGN RETURN ALAPARIES.

Nice keep it up..

[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

Nurse-2020 said...

Hi Folks
I understand what you mean. I am a Senior Lecturer in Neurosciences at London University....reading these blogs is a hobby for me when i get time.

I think you are trying to exaggarte the NRI people behaviours..It is common...we call conditional learning....for example, last 10 years i am here....automatically we acculturated into these behaviours...Please dont hurt others...when they be normal...for themselves.
I know..if any english people do...you will amaze...not our people...
By he way...this is my first response in blogs...

dubai said...

Nice Allaparai, laughed and enjoyed a lot. keep on posting like this. Good humor thoughts and its real as well.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. தம்பி கலை... சூப்பரப்பு... கிழிச்சுட்டீங்க...

பர்மா பஜாரில் செண்ட் வாங்கி நண்பர்களிடத்தில், துபாயி ஏர்போரிட்டில் உனக்காகவே வாங்கினேன் என்று பீத்திக் கொள்வதில்லையா?

இராகவன் நைஜிரியா said...

நான் இந்த தடவை எல்லோரிடமும் சொன்னது இது...

இந்த இரண்டு காமிராவும் துபையில் வாங்கியது.

தம்பி கலையரசன் தான் கூட வந்து, அண்ணே இது நல்லா இருக்கும், இத வாங்குங்கன்னு சொன்னார் சொல்லிட்டேங்க..

இராகவன் நைஜிரியா said...

// இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)//

ஆமாம் படு சீரியஸ் பதிவுதாங்க... தாங்க முடியலை ... சிரிப்பைச் சொன்னேன்...

இராகவன் நைஜிரியா said...

மீ த 75த்..

இராகவன் நைஜிரியா said...

// 8 கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)//

இல்லாட்டி... ஐ டிரிங் மினரல் வாட்டர் ஒன்லி.... அப்படின்னு சொல்லிப்பாங்கன்னு தெரியாதுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// 8 வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)//

தப்பு... தப்பு... அடுத்த டூர் போகும் போது, செக்கின் கவுண்டரில் அவங்க கிழிச்சுப் போட்டுவிட்டு, புதுசா போடற வரைக்கும் அது இருக்கும்....

இராகவன் நைஜிரியா said...

// 8 கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)//

சரியா சொன்னீங்க... காரா... சைக்கிள் ஓட்டுவதை ரொம்ப சிரமமா இருக்குங்க...

இராகவன் நைஜிரியா said...

// 8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!) //

அப்ப டாஸ்மார்க்கில நீட்டலாமா... (மப்புலதான்...!!!)

இராகவன் நைஜிரியா said...

// 8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)//

வீ ஈட் பிட்சா ஒன்லி அப்படின்னு சொல்றது... அதை உட்டுடீங்களே?

மகேஷ் said...

அசத்தல்

வினோத்கெளதம் said...

Plz call me

Anonymous said...

//Anonymous -க்கு
வாங்க அனானி.. எப்புடி கண்டுபுடிச்சீங்க, இது மெயில் வந்ததுன்னு?
கண்டிப்பா நீங்க RAW அமைப்பை சேர்ந்தவராதான் இருக்கனும்!!
அப்புறம்.. அது kali kalam இல்ல.. kalai kalam!!
//

yappa sami. thangalai. onnu mattum nalla teriyuthu, yithulla comment podura 95% makkal software industry kku sampandham mee yillathavangannu.. thambi kali (oh kalai) puthusa ethavathu try pannupa..

Gaandu!

jothi said...

கலக்கல் கலை,..

இந்தியாவிலும் இப்படி ஒரு கூட்டம் இருக்கு அதை யாரும் கண்டுக்க மாட்டிறிங்களே உதாரணமா மஞ்சப்பை கிராமத்தான் என நக்கலடிப்பான். வடக்கே மெதராசி என நக்கலடிப்பான்,..இப்படி நிறைய,..

கலையரசன் said...

கோவி.கண்ணன் -க்கு
நன்றிணே.. நீங்க வந்ததே பெரிய விஷயம்! பாராட்டு வேறையா..

தண்டோரா இனி... மணிஜி.. -க்கு
ஊருக்கு வரும்போது கண்டிப்பா சொல்றண்ணே!

KISHORE -க்கு
இங்க என் ரூமுக்கு வரும்போதும் அப்படிதான் செஞ்சான்டா மாப்பி அவன்!

jackiesekar -க்கு
வாங்க பாஸ்.. நன்றி பாஸ்!

வால்பையன் -க்கு
u see.. & u know வையும் சேர்த்து குலுக்குவாங்க வால்..

கலையரசன் said...

Mr_Adore -க்கு
நன்றி முதல் வருகைக்கு..
பேருலையே மிஸ்டர் போட்டு எல்லாரையும் மரியாதையா கூப்பிட வச்சிட்டீங்க!!
கடைசியில பாக்கெட் பாரின் சிகரெட்டுக்கு மானம் போச்சே!!

வால்பையன் -க்கு
ஆமா வால்.. சொம்பு ரொம்ப நசிங்கிருமுன்னு நினைகிறேன்!

Aravazhi -க்கு
நன்றி அறவாழி தொடர் ஊக்கத்திற்க்கு...

[பி]-[த்]-[த]-[ன்] -க்கு
எப்போதும் சரக்கடிச்ச மாதிரியே ஸ்மலிய போடு!

Nurse-2020 -க்கு
R u appraisal me that I am annoying to overstress
the NRI peoples deeds? No, utterly not….
Acquire it frolicsome mam!!

கலையரசன் said...

dubai -க்கு
நன்றி ஆடல்.. தொடர் ஊக்கத்திற்க்கு!!

இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. அண்ணே!!
என் புகழை தமிழ்நாடு மற்றும்
ஈரோப் நாடுகள்ல பரப்பிய
உங்க உள்ளத்தை நினைச்சா..
அதைவிட, எனக்கும் மீ த 75ன்னு
போட்டீங்க பாருங்க...
அப்படியே பொங்குதுண்ணே!!

பல பாய்ண்டுகளை அள்ளி விடுறீங்களே..
பேசாம நீங்க இந்த இடுகையை போடுயிருக்கலாம் போலையே!

மகேஷ் -க்கு
நன்றி மகேஷ்!!

Anonymous -க்கு
//yithulla comment podura 95%
makkal software industry kku
sampandham mee yillathavangannu..//

நீ RAW அமைப்பை சேர்ந்தவன்னு
மறுபடியும் ஒருதடவை ப்ரூவ் பண்ணிட்டியேப்பா..
சீ... ப!

jothi -க்கு
நல்ல ஐடியா ஜோதி! அடுத்தது அது டிரை பண்ணுறேன்!

ஷண்முகப்ரியன் said...

அருமையான நகைச்சுவை,க்லை.கலக்கல்.

ஷாகுல் said...

// கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)//

ஐயோ பாட்டில் மட்டும் தான் Aquafina. தன்னி பம்பு தண்ணிதாங்கோ.

//வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)//

நான் இதுவரை பயணம் செய்த Bording Pass ஐ வைத்திருக்கிறேன்.

இப்படி தான் துபாயில் இருக்கும் போது recharge பன்னுன prepaid card வைத்திருந்தேன்.

ஏதுனா தப்புங்களா?

ஸ்ரீமதி said...

:)))))))

ravi said...

roomla paduthukkittu yosippeengala alladhu nindukkittu yosippeengala? eppadiyo ennaippatri ezhudhinathukku nandri

ravi said...

roomla paduthukkittu yosippeengala alladhu nindukkittu yosippeengala? eppadiyo ennaippatri ezhudhinathukku nandri

Vinod said...

Mr vadalooran....analum unga alaaparai thannga mudiyalappa...."IPPA VE KANNA KAATUTHEY""...........BUT GOOD VERY INTRESTING..........

Anonymous said...

dei,

yinime yevanavathu super, good nnu sonnenga.. mandaila kottiduven.. chi pa

Mãstän said...

<<<

(சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

>>>

ஹஹஹ.... சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துடும் போல... இப்படித்தான் நாங்க துபாய்ல இருக்கும் போது... இப்படிதான் சிரிப்போம் :D

sa said...

very ggod

கிரி said...

நல்லா இருக்கு :-)

Blog Widget by LinkWithin