நம்ம கிஷோரு ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்ணிகிட்டு இருந்தாரு! (அவன் லவ் எல்லாம் பண்றானா?, அவனுக்கு லவ்வு ஒரு கேடா?-ன்னு அவனை டிசைன், டிசைனா திட்டனுமுன்னு நினைக்கிறவங்க.. கமெண்ட் மேடைக்கு வந்து ஆசை தீர திட்டலாம்!!) இது அவங்க வீட்டுல அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சி போயி பொண்ணை, வீட்டுலேயே அடைச்சி வச்சிட்டாரு. நம்ம ஹீரோ கிசோரு சேரன் ரேஞ்சிக்கு ஃபீல் பண்ணி ஒரு லெட்டர் எழுத எனகிட்ட ஐடியா கேட்டாரு.. அதாவது, அவ அப்பா பார்த்தாலும் பிரியாத ரகசிய கடிதம் எழுத சொல்லி... அந்த லெட்டர்தாங்கண்ணா இது! நீங்க முடிச்சா இதுல உள்ள உள்குத்தை கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல திட்டு.. சாரி! சொல்லுங்க பாப்போம்!!!
நான் உன்மேல வச்சியிருந்த உண்மையான காதல்
போயிடுச்சு! அப்புறம், உன் மேல உள்ள வெறுப்பு
ஒவ்வொறு நாளும் வளர்ந்துகிட்டேதான் இருக்கு. உன்னைய சந்திக்கும்போது,
எனக்கு உன் மூஞ்ச கூட பார்க்க புடிக்கலை!
ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,
வேற நல்ல ஃபிகரை பாக்கலாமுன்னு இருக்கேன். எனக்கு விருப்பமில்ல
உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப
நீ அறிவுகெட்டதனமா பேசுனதும், அதுவே என்னை
உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,
தூண்டல. உனக்கு எப்போதுமே, உன்னைய பத்திய நினைப்புதான்.
நாம இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? எனக்கு
தெரியும் வாழ்கையில நா கஷ்டப்படுவேன்னு! எனக்கு எப்பவுமே இல்லை
ஆசை உன்கூட வாழனுமுன்னு. என்கிட்ட நல்லமனசு இருக்கு
சாரி! இருந்துச்சு.. ஆனா, அது இப்பயில்ல
நான் உன்கிட்ட கொடுக்குறதுக்கு. உன்னபோல உலகத்துல யாரும் இல்ல
சுயநலமாவும், முட்டாளாவும். உன்னால முடியாது
என்மேல அன்பு காட்டுறத்துக்கு, உதவி செய்யறத்துக்கு.
ஓப்பனா சொல்லுனுமுன்னா.. நீ நல்லா புரிஞ்சிக்கோ,
நான் உண்மையதான் சொல்றேன். எனக்கு ஒரு உதவி செய்,
இதுதான் முடிவுன்னு நீ நினைச்சா.. திரும்ப முயற்சி பண்ணாத
பதில் எழுத. நீ எழுதின லெட்டர்கள் எல்லாம்
கிழிச்சி போட்டுட்டேன். உனக்கு எப்பவுமே இருந்ததில்ல
என்மேல உண்மையான அன்பு காட்டுதல். குட் பை! சத்தியமா சொல்றேன்
திரும்ப என்னை தொல்ல பண்ணாத. தயவுசெஞ்சு, நினைக்காத
இன்னமும் நான் உன் லவ்வர்ன்னு!!
ஷகிலா: நான் லெட்டர் அனுப்ப மாட்டனே.. ஈ-மெயில் பண்ணுவேன், எஃப் மெயில் பண்ணுவேன், எஸ்.எம்.எஸ். பண்ணுவேன் கார்த்திகேயன் மாதிரி அறிவுத்தேடலோட கேள்வி கேட்காதீங்க!!
---------------------------------------------------------------------------------------------------------------

