Monday, August 24, 2009

சில கேள்விகளும்.. கோலிவுட்டின் பதில்களும்!!



கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனை திரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்க வைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்கு வரவழைக்க என்ன செய்யனும்?


பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் "அம்மா சீரியஸ்! உடனே வா!!". தந்திய பார்த்து வந்தவுடனே, "டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என் உயிர் போகாதுடா" ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்ம ஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டு குத்துபாட்டு... சண்டை.. சுபம்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..


பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்.. நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. "கருப்பு கூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சி விட்டுட்டீங்கன்னா" உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? " மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்" உங்க டைரக்டர்ராலையே கண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
அன்புள்ள கோலி,
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்பு கடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?


பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது, திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தை எடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமான மலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்! இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறி வந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்ப ஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?

கேள்வி:
அன்புள்ள கோலி,
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..


கேள்வி:
அன்புள்ள கோலி,
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது... ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், "ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்"ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. "திருந்தனும்" இல்லன்னா.. "செத்துபோகனும்". அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

61 comments:

சந்தனமுல்லை said...

LOL!

Raju said...

நல்லாத்தான்யா நோட் பண்றீங்க..?
கோலிவுட் டயாடக்கர்ஸ் உஷார் மேன் உஷார்.
கலை IS வாட்சிங்,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலை.. கலக்கல்.

மாறு வேஷம் போட.. ஆறாவது விரல் வச்சுக்கலாம்.. முகத்துல மச்சம் வச்சிட்டா போலீஸாலயே கண்டு பிடிக்க முடியாது.. :))

எல்லா பதில்களுமே அக்மார்க் கோலி வாசம்.. :))

இன்னிக்கு உங்க கடையில கூட்டம் அலைமோதப் போகுது.

kishore said...

டேய் நல்ல தாண்டா யோசிக்கிற... இருந்தாலும் ஹீரோஇன் குளிக்கிற சீன் பத்தி இன்னும் கொஞ்சம் விளக்கி சொல்லி இருக்கலாம்...

சுசி said...

எப்பூடி கலையரசன்...
உங்களுக்கு சிரிப்பரசன்னு பேர மாத்தணும்.
இல்லை கோலி ஸ்டைல்ல பட்டம் குடுக்கணும்..

geethappriyan said...

MACHAN VERY GOOD POST
REALLY SUPERB
EVENING I WILL WRITE IN TAMIL
IN OFFICE TAMIL WRITE NOT WORKING
VERY INNOVATIVE COLLECTIONS FROM ALL SORTS OF INDIAN CINEMA.
GREAT JOB.KEEP IT UP

தினேஷ் said...

சூப்பர் தல ..

குசும்பன் said...

//மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா? //

சூப்பர் எல்லா ஜீவ ராசிகளையும் உங்களை போலவே நினைக்கும் உங்கள் பெருந்தன்மை எனக்கு புடிச்சு இருக்கு:)

Unknown said...

ROFL :)))

வழிப்போக்கன் said...

நல்ல கற்பனை...

Anonymous said...

கலக்கல். சூப்பர்.

35வயசு கதாநாயகனுக்கு 50 வயசுல பிரண்ட்ஸ் இருப்பாங்களே அதச் சொல்லுங்க.

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ் கலை!
எல்லாமே செம கலக்கல் :)

அது ஒரு கனாக் காலம் said...

அப்பு ...சூப்பர்... பூந்து பீராஞ்சிட்டீங்க ... நல்ல டைம் பாஸ்

நாகா said...

Nice :)

வினோத் கெளதம் said...

Nice :)

ப்ரியா said...

கலை அரசன் நல்லாவே யோசிக்கிறீங்க....... இன்னும் நெறையா யோசிச்சு எழுதுங்க......

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல்கலை மச்சான்

கலக்கல்கலை மச்சான்

sakthi said...

:)))

geethappriyan said...
This comment has been removed by the author.
sakthi said...

நிறைய எழுதுங்கள் கலை
கலக்கல் தொடரட்டும்

geethappriyan said...

50வயசு கதாநாயகனுக்கு 35 வயசுல பிரண்ட்ஸ் இருப்பாங்களே அதச் சொல்லுங்க.
இதுதான் சரியா இருக்கும் பாஸ்

மீண்டும் ஒரு கலக்கல் பதிவுடா மாமு..
சரியானா வாரல் தான் தான் போ.
4/4 ஒட்டு போட்டு தமிழ்மணத்தில ஏத்தியாச்சு.

வால்பையன் said...

கலக்கல் பதிவு தல!

என் பங்கு ஓட்டும் போட்டாச்சு!

சென்ஷி said...

சூப்பர்.. ரசிச்சு சிரிச்சேன்.

அதுவும் அந்த ஹைவேயில கார் ரிப்பேர் ஆகற சீன்.. LOL :)))

அப்துல்மாலிக் said...

கலக்கல் கலை

தினமலர்லே வாரமலர் கேள்விபதில் படிப்பீங்களோ

அந்த பாம்பு விஷ முறிவு சூப்பரோ சூப்பர்

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்....

பித்தன் said...

annachchi alli udureengale, kulikkira matter super, naa venaa villanaaa nadikka redy eppadiyum namkku oru rape scene irukkumilla.... athu....

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குசும்பன் said...
//மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா? //

சூப்பர் எல்லா ஜீவ ராசிகளையும் உங்களை போலவே நினைக்கும் உங்கள் பெருந்தன்மை எனக்கு புடிச்சு இருக்கு:)
//

-:)

கோபிநாத் said...

அட்டகாசம் தல்ல ;)))

அமுதா கிருஷ்ணா said...

பின்னிட்டீ்ங்க...

சங்கர் said...

:P

Anonymous said...

பின்னீட்டிங்க, இது கேள்வி பதில்

ஆ.ஞானசேகரன் said...

கலக்கலா இருக்கு நண்பா

லோகு said...

அருமையான பதிவுங்க...

Cable சங்கர் said...

/பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது, திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தை எடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமான மலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்! இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறி வந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்ப ஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?//

வடிவேலுக்கான் அருமையான காமெடி ட்ராக்..

Anonymous said...

சிரிச்சுட்டே இருக்கேன்...:)))))))))))

ஷண்முகப்ரியன் said...

முதல் வரி முதல் கடைசி வரி வரை சிரித்தேன்.சூப்பர்,கலை.

Anonymous said...

Super...

expecting part-2, part-3...

உங்கள் ராட் மாதவ் said...

சூப்பர் கலையரசன்... லொள்ளு தாங்க முடியல.... :-)

நாஞ்சில் நாதம் said...

கலக்கலா இருக்கு

கபிலன் said...

"ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும்"

சூப்பர் கலையரசன்!

♫சோம்பேறி♫ said...

ROTFL :-))))))))

Excellent.. Waiting for the Second part..

கலையரசன் said...

சந்தனமுல்லை -க்கு
நன்றியக்கோவ்.. பார்த்து சிரிங்க!

டக்ளஸ் -க்கு
வாங்க டக்கு.. அவனுங்க அப்டியே, உஷாராகிட்டாலும்..

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்... நீயும் நல்லாதான்யா கோலிய வாட்ச் பண்ணியிருக்க..

KISHORE -க்கு
வா மச்சி.. எங்க ஆளையே கானாம்?
எதை விளக்கி சொல்லி சொல்ல சொல்லுற?

கலையரசன் said...

சுசி -க்கு
நன்றி சுசி...
யப்பா! பாராட்டுனீங்களே...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி கார்த்தி.. நீ பொறுமையா ரூமுக்கு போய் பின்னூட்டம் போடு!
Office டைம்ல ஏன் போடுற?

சூரியன் -க்கு
நன்றி தல.. வருகைக்கும் ஆதரவுக்கும்!

குசும்பன் -க்கு
வாங்க H.O.D.. நல்லவேளை! 8வது கேள்வி உங்களை மனசுல வச்சு எழுதினதுன்னு.. கண்டுபிடிக்கலை!

கலையரசன் said...

Kiruthikan Kumarasamy -க்கு
வாங்க கீத்! பார்த்து சட்டை அழுக்காகிட போகுது!

வழிப்போக்கன் -க்கு
நன்றி பாஸ்..

வடகரை வேலன் -க்கு
வாங்க.. வாங்க.. அண்ணாச்சி!
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றியண்ணாச்சி!!
நல்லவேளை 35ஆவது சொன்னீங்க..

நான் ஆதவன்☀ -க்கு
நன்றி சூரியா..
அப்டின்னா சொல்ற?

கலையரசன் said...

jackiesekar -க்கு
நன்றியண்ணே.. உங்க சூப்பருக்கு!

அது ஒரு கனாக் காலம் -க்கு
வாங்க சுந்தர் சார்..
என்னது பீராஞ்சிட்டனா? ரத்தம் எதுவும் வரலையே?

நாகா -க்கு
நன்றி மச்சி! உன் இடுகைக்காக காத்திருக்கிறேன்..
சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வா..

வினோத்கெளதம் -க்கு
நன்றி காப்பி பேஸ்ட்!!

கலையரசன் said...

எதிர் வீட்டு ஜன்னல் -க்கு
வாங்க சீதா.. (எதிர் வீட்டு ஜன்னல்னா அவங்கதானே?)
நிறைய எழுதிடுவோம்.. அடிக்கடி வாங்க!!

பிரியமுடன்...வசந்த் said...
நன்றி மாப்புள.. கலக்கலைன்னு சொல்றியா? அடுத்த தடவை நல்லா எழுதிடுவோம் :-)

sakthi said...
நன்றி சக்தி... நிச்சியமாக!!
தொடர் வருகைக்கும் ஆதரவிற்க்கும் மறுபடியும் நன்றி!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. -க்கு
நன்றி மச்சி.. உனக்கு பிடிக்குமன்னு தெரியும்! நீதான் மொக்கை ரசிகனாச்சே!!

கலையரசன் said...

Thamizhan -க்கு
நன்றி தமிழா.. உங்கள் விருதை ஏற்றுகொண்டேன்!
விரைவில் என் பதிவில் ஓட்டுகிறேன்!!

வால்பையன் -க்கு
அப்டிங்கறீங்க தல? நன்றி தல...
ஓட்டு போட்டத்துக்கு இன்னொரு நன்றி தல..

சென்ஷி -க்கு
வாய்யா.. வா! நன்றியய்யா..
ஸ்பெஷல் நன்றி.. எதுக்கா? உனக்கே தெரியும்..

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு.. எதிர்பார்பை பூர்த்தி செய்துவிடுகிறேன்..
ஏன் நீங்கள் அதிகமாக எழுதுவதில்லை?

கலையரசன் said...

பித்தன் -க்கு
நன்றி நியாஸ்!
ஆகா.. எத்தினிபேரு ராசா இப்படி கிளம்பியிருக்கீங்க?
நீ போய் கேபிள் சங்கர் அண்ணாச்சிய பாரு!!

[பி]-[த்]-[த]-[ன்] -க்கு
வா மச்சி.. இரண்டு பித்தனுங்களும் சொல்லி வச்சிகிட்டு வருவீங்களோ?

கோபிநாத் -க்கு
நன்றி கோபி! எதை தல்ல?

அமுதா கிருஷ்ணா -க்கு
வாங்க அமுதா மேடம்..
அடுத்த தடவை பிரிச்சிடுவோம்!!

கலையரசன் said...

சங்கர் -க்கு
வாங்க சங்கர்.. ஏங்க வாய் கோனிகிச்சு?

சின்ன அம்மிணி -க்கு
வாங்க அம்மிணி...
பாராட்டுக்கு நன்றியம்மணி!!

ஆ.ஞானசேகரன் -க்கு
அப்படியா நண்பா? ரொம்ப நன்றி நண்பா!!

லோகு -க்கு
நன்றி பாஸ்..

கலையரசன் said...

Cable Sankar -க்கு
முதல் முறையா என் பதிவுக்கு வந்ததற்க்கு நன்றியண்ணே..
அதைவிட, காமெடி டிராக்கா யூஸ் பண்ணலாமுன்னு நீங்க சொன்னது இரட்டிப்பு மகிழ்ச்சியண்ணே!!

mayil -க்கு
வாங்க மயில்.. எப்ப முடிப்பீங்க?

Anonymous -க்கு
வாங்க அனானி.. வெயிட் பண்ணுங்க!

ஷண்முகப்ரியன் -க்கு
வாங்க ஐயா.. உங்கள் பாராட்டு, எனது உந்துதல் + உத்வேகம்!
நன்றி ஐயா.. உங்கள் தொடர் ஊக்கத்திற்க்கு..

கலையரசன் said...

RAD MADHAV -க்கு
வாங்க மாதவ்..
யாரோடைய லொள்ளு தாங்க முடியல?

நாஞ்சில் நாதம் -க்கு
நன்றி உங்கள் தொடர் வருகைக்கும்.. ஊக்குவித்தலுக்கும்!!

கபிலன் -க்கு
நன்றி கபிலன்.. பின்ன என்னங்க? அதைத்தவிர வேற சீன் ஏதாவது எடுக்கறானுங்களா பாருங்க?

♫சோம்பேறி♫ -க்கு
முதல்வருகைக்கு நன்றி பாஸ்..
நான் உங்கள் ரசிகன்.. நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

Anonymous said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

Unknown said...

Super :)))))))))))))

வழிப்போக்கன் said...

இந்த அப்ரோச் எனக்கு ர்ர்ர்ர்ர்ரொம்ப புடிச்சிருக்கு...

:)))

Anonymous said...

ada makka, thaangalai. yappa sami baldu thanga mudiyillai. eppudi da ellarum supernnu comment poduranuga. ada makka comedy seththa sokka..

makka ethu kalai kalam ellai - kalutharukkira kalam.

blog aa oothi mooduna thagaval sollupa, appan muruganukku vendikiren.

VUna Thana..

பழூர் கார்த்தி said...

வெடித்து சிரித்தேன் :-)

Jazeela said...

அக்மார்க் தமிழ் திரைப்பட இரசிகன் என்று நிரூபிச்சிட்டீங்க. வாழ்த்துகள்.

Unknown said...

<<<
குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. "திருந்தனும்" இல்லன்னா.. "செத்துபோகனும்". அவ்வளவுதான் பாஸ்!!
>>>

ஹ ஹ ஹ....

சூப்பரு :)

ரெம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சு :D

ஷங்கி said...

நல்லா எழுதியிருக்கீங்க!

Anonymous said...

Glean influence the beast with two backs casinos? pass upon this young [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and wing it demarcate online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also repair during the way of our blooming [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] advert at http://freecasinogames2010.webs.com and broaden the overcharge the plausibility existent folding spondulix !
another late-model [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] rank is www.ttittancasino.com , because german gamblers, weakening upon during well-wishing online casino bonus.

Anonymous said...

top [url=http://www.xgambling.org/]001[/url] hinder the latest [url=http://www.casinolasvegass.com/]las vegas casino[/url] unshackled no set aside bonus at the leading [url=http://www.baywatchcasino.com/]baywatchcasino
[/url].

Anonymous said...

[url=http://www.casino-online.gd]casinos online[/url], also known as accepted casinos or Internet casinos, are online versions of signal ("chunk and mortar") casinos. Online casinos assist gamblers to feign and wager on casino games middle of the Internet.
Online casinos habitually forth odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos assert on higher payback percentages in the function of space automobile games, and some impel known payout match audits on their websites. Assuming that the online casino is using an fittingly programmed unspecific region a recapitulate up generator, proffer games like blackjack preoccupy an established admit edge. The payout combined go out after of these games are established sooner than the rules of the game.
Innumerable online casinos farm out not at composed or saunter into the hold of their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Cosmopolitan Encounter Technology and CryptoLogic Inc.

Blog Widget by LinkWithin