Monday, October 12, 2009

ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்!!


ரொம்ப
சீரியசா எல்லாம் எழுத கூடாதுன்னு எங்க ஆயா சத்தியம் வாங்கிட்டு அப்பீட் ஆகிட்டாங்க என்பதால, சீரியசா எழுதுனா ஒரு பயபுள்ளையும் கமெண்ட் போடமாடேங்குது என்பதால, ஆப்பீஸ்ல இன்னைக்ககு வேலை இல்லை என்பதால, இந்த இடுகை வருங்கால் நகுக! (என்னைக்கிடா உனக்கு வேலை இருந்துதுன்னு எல்லாம் என் மேனேஜர் மாதிரி கேட்ககூடாது!)

தலைவரு 'ராஜாதிராஜா' படத்துல பாடியிருப்பாரு, "உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்" ன்னு. ஆனா அதை மாத்தி இப்படி பாடியிருக்கனும்!
"ஆபீஸ் வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்..
அதில் உலவும் பேரெல்லாம் ஒரு கைதி போலதான்!"


* ஜெயில்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை பத்துக்கு பத்து ரூம்ல கழிப்பீங்க!
* ஆபீஸ்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை எட்டுக்கு எட்டு பொட்டியில முழிப்பீங்க!!

* ஜெயில்ல மணியடிச்சா மூணு வேளை சோறு போடுவாங்க ஓசியில!
* ஆபீஸ்ல ஒரு வேளை சாப்பாட்டுதான் நேரமே கிடைக்கும்!! (அதுவும் காசு குடுத்து சாப்பிடுறது, இன்னொரு வயித்தெரிச்சலு!)

* ஜெயில்ல நன்னடத்தைக்கு தண்டனை காலத்தை குறைப்பாங்க!
* ஆபீஸ்ல நன்னடத்தைக்கு இன்னம் கொஞ்சம் வேலையை குடுத்து பென்டை நிமுத்துவாங்க!!

* ஜெயில்ல உங்க ரூமுக்கு போகனுமன்னா போலீஸ்காரனே கதவை திறந்து விடுவாங்க!
* ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!

* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!

* ஜெயில்ல உங்களுக்கு சொந்தமா, தனியா டாய்லெட் இருக்கும் உங்க ரூம்ல!
* ஆபீஸ்ல பப்ளிக் டாய்லெட் போல எல்லாரும் யூஸ் பண்றதைதான் நாமும் யூஸ் பண்ணணும்!! (அதுல சிலபேரு.. உக்காருற இடத்துலதான் ஒன்னுக்கு அடிச்சி வைப்பான்!)

* ஜெயில்ல பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள்-ன்னு எல்லாரும் வந்து பார்க்கலாம்!
* ஆபீஸ்ல நண்பர்கள் வந்திருந்து பேசுனா கூட, ஆப்பீஸ் டைம்ல வேலையை பாருடா வென்றுன்னு ரிசப்ஷன்ல உள்ள புவரான ரிச்சா கூட ரிவீட் அடிப்பா!!

* ஜெயில்ல ஒன்னியும் வேலை செய்ய வோணாம். செலவை எல்லாம் வரி கட்ரவனுங்கோ துட்டு!
* ஆபீஸ்ல வேலை செஞ்ச சம்பளத்துல வரியை கழிச்சிட்டு குடுப்பானுங்கோ. ஜெயில்ல உள்ளவங்களுக்கு செலவு செய்ய!! (இந்த இடத்துலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. ஜெயிலுக்கே பூடலாமான்னு!!)

* ஜெயில்ல உள்ள ஒரே கஷ்டம் அங்க உள்ள கொடூரமான வார்டனை சமாளிக்கிறதுதான்!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!

(ஓகே.. ஓகே.. அந்த டீசன்டான ஆளு வர்றாரு! நான் எஸ்சாயிக்கிறேன்.. நீங்க கீழ உள்ள வீடியோவை பாத்து என்ஜாய் பண்ணுங்க!!)


47 comments:

jackiesekar said...

ரொம்ப நொந்து நுடுல்ஸ் ஆனா மாதிரி தெரியும் தம்பி

சென்ஷி said...

ஜெயிலுக்கு போயிட்டு வந்த அனுபவம் இருக்குதா தம்பி :)

☀நான் ஆதவன்☀ said...

ஓய்ய்ய்ய்ய்..... எந்த ஜெயில்ல ஒரே கேபின்ல பொண்ணையும் பையனையும் வச்சிருப்பாங்கன்னு சொல்லுப்பா?

☀நான் ஆதவன்☀ said...

எந்த ஜெயில்ல ப்ளாக் படிக்கவும் எழுதவும் விடுவாங்கன்னு தெரியலேப்பா...

☀நான் ஆதவன்☀ said...

பட் இருந்தாலும் சில பல விசயங்கள் ஒத்து போறதுனால இத்தோட விடுறேன் தம்பி :)

தண்டோரா ...... said...

ஊருக்கு எப்ப வர்ற தம்பி?

வினோத்கெளதம் said...

ஜெயில்ல எத்தனை வருஷம் இருந்த அனுபவம் தம்பி..
ஓஹோ..அதான் அன்னிக்கு ரூம்ல மணி அடிக்கிற சத்தம் கேட்டதும் தட்டை தூக்கிட்டு ஒடுனியா ..:)

ஷாகுல் said...

ஜெய்ல்ல மாசாமாசம் சம்பளம் தரமாட்டாங்க. இத சொல்லல.

துபாய் ஜெய்ல்ல முனு வேலையும் Chef Al Khaleej தம் பிரியானி போடுறாங்களாம். முயற்சி பன்னுங்க கிடைக்கும்.

//ஜெயில்ல உள்ள ஒரே கஷ்டம் அங்க உள்ள கொடூரமான வார்டனை சமாளிக்கிறதுதான்!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!//

உங்க மேனேஜர் மெயில் ID கிடைக்குமா?

நையாண்டி நைனா said...

same blood here

Suresh Kumar said...

இதுக்கு ஜெயில் பரவாயில்ல அங்கேயே இருந்திருக்கலாம்னு பீல் பண்ணுறீங்களா ? நல்ல ஒரு ஒற்றுமை

D.R.Ashok said...

கலை, கரக்ட்டுன்னு கமெண்டு போட வந்தா... நான் ஆதவன் 2 நல்ல விஷயத்தையும் சொல்லியிருக்கறார்.

வால்பையன் said...

நல்லா பாத்துகோங்க!

நான் ஜெலிலுக்கு போறேன்
நான் ஜெலிலுக்கு போறேன்
நான் ஜெலிலுக்கு போறேன்

ரவுடி ஆகாமயே ஜெயிலுக்கு போகும் முதல் ஆள்!

கோபிநாத் said...

ரொம்ப வேலையே இல்லையோ!!!

வேந்தன் said...

:)))))

pappu said...

செம்ம வீடியோங்க! படம் மாதிரியே இருந்தது...

ஜெயில் போனா பொண்டாட்டி தொல்லை இல்ல. கிரெடி கார்ட் பில்லில்ல! இதெல்லாம் சொல்லவே இல்லையே!

விக்னேஷ்வரி said...

என்னைக்கிடா உனக்கு வேலை இருந்துதுன்னு எல்லாம் என் மேனேஜர் மாதிரி கேட்ககூடாது! //

ரைட்டு. நடத்துங்க.

நல்லா இருக்கு உங்க ஆதங்கங்களும், வீடியோவும்

நாணல் said...

:))

Subankan said...

ம்.. வாழ்க வழமுடன், அதே ஆபீசில்

பின்னோக்கி said...

உங்க ஆபீஸ் ரொம்ப பயங்கரமா இருக்கும் போல :)

கிரி said...

வீடியோ கலக்கல் :-))))

அபுஅஃப்ஸர் said...

ரொம்பா கரீக்கிட்டு தல‌

மாசா மாசம் சம்பளம் தாராங்க, அங்கெ விடுதலையாகும்போது கொஞ்சம் பணம் தருவாங்க இல்லியா

ஜெயில்லே மட்டும் இன்டெர்நெட் கனெக்ஷன் இருந்தா???

ஷண்முகப்ரியன் said...

வழக்கம் போலக் கலகலப்பு,கலை.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கலை.. என்னாதீது.. ஊருக்குப் போகும் போது ஜெயிலு கியிலுன்னுட்டு... இத அப்புடியே உங்க மேனேஜரு பாத்தா எப்புடி இருக்கும்?

KISHORE said...

உங்க ஆபிஸ் விட ஜெயில் எவ்ளோ தேவலாம் போல இருக்கே..

ரகுநாதன் said...

//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு//

ஹி ஹி ஹி.... நல்ல நகைச்சுவை ... :)

பிரியமுடன்...வசந்த் said...

//ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!//

ஹ ஹ ஹா..
மச்சான் ஒற்றுக்கொண்டாயா?

அதென்ன உங்க நம்மன்னு சொல்லுடி.

பிரியமுடன்...வசந்த் said...

ஆபிஸ் பக்கமாவது வாலை சுருட்டி வச்சுருக்கியா இல்ல அங்கயும் படமா?

ஆ.ஞானசேகரன் said...

அம்புட்டு கஸ்டமா நண்பா!!!

சஹானா beautiful raga said...

பயபுய்ள எப்படி எல்லாம் யோசிக்குது

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

very good post
"humourous guy"
voted in tamilish and tamilmanam aswell

கலையரசன் said...

jackiesekar -க்கு
ஆமாண்ணே! இப்ப நூடுல்ஸ்சு.. அடுத்தது கொத்து பரோட்டா!

சென்ஷி -க்கு
ஏன்பா? நம்ம போனதை அதுகுள்ள மறந்துட்டீயா?

☀நான் ஆதவன்☀ -க்கு
ஏன்னாது? உங்க கேபின்ல உங்க கூட பொண்ணு இருக்கா?
இருந்துமா இன்னம் கல்யாணம், கல்யாணம்ன்னு அலையுற?

பிளாக் எழுத ஆப்பீஸ் ஜெயில்லதான் தலைவா விடுவாங்க..

R.Gopi said...

கலை

ஆஃபீஸும், ஜெயுலும் ஒண்ணுதேன்...

நல்லா எழுதி இருக்கீங்க "தல"

அப்படியே என்னோட "தீபாவளி ஸ்பெஷல் பதிவு" பக்கம் வாங்க.. உங்களுக்கு ஒரு "ஸ்பெஷல் தீபாவளி கிஃப்ட்" இருக்கு... மறுக்காம / மறக்காம வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

கலையரசன் said...

தண்டோரா -க்கு
வந்துகிட்டே இருக்கேன் உடன்பிறப்பே!

வினோத்கெளதம் -க்கு
என்னது தம்பியா? எல்லாம் கூப்பிடுறாங்கன்னு நீயும் ஒரு ஃபுலோவுல சொல்றியா? பிச்சிடுவன் பிச்சி!! அது எந்த மணி அடிக்கிற சத்தமுன்னு அப்புறமாதானே தெரிஞ்சது!

ஷாகுல் -க்கு
உங்களுக்கு சம்பளம் வேற தருவாங்களாடி?
அந்த ஹோட்டல் பிரியானி எல்லாம் பிரியானியா? செட்டிநாட்டு பிரியானி தந்தா போகலாம் சாகுல்!!

நையாண்டி நைனா -க்கு
தொடச்சிகோ நைனா..

நாஸியா said...

அடடா. எனக்கு ஜெயில்னு சொன்னா குரு சிஷ்யன் படம் தான் நெனவுக்கு வருது. அதே மாதிரி ஒரு பில்ட் அப்பு

கலையரசன் said...

Suresh Kumar -க்கு
உங்களுக்கும் அதே எண்ணமா?

D.R.Ashok -க்கு
நன்றி அசோக்! ஆதவன் எப்பவுமே அப்படிதான்.. அடுத்தவங்கள பேசவே விடமாட்டான்!!

வால்பையன் -க்கு
என்னாதிது தல? அனுப்பி வச்சிட்டுதான் மறுவேலை பாப்பீங்க போல..?

கோபிநாத் -க்கு
ஹி.. ஹி.. ஹி..
வேட்டிய அவுத்துட்டீயே!!

கலையரசன் said...

வேந்தன் -க்கு
சிரிப்பு? ம்?

pappu -க்கு
அதுகுள்ள நல்லவரு வந்துட்டதுனால.. எழுத முடியல பப்பு!
நீ நிறைய பாயின்ஸ் வச்சியிருப்ப போலையே.. நீ ஏன் பார்ட் 2 எழுதக்கூடாது?

விக்னேஷ்வரி -க்கு
ரைட்டு விக்கி மேடம்! என்னது நல்லாயிருக்கா?

நாணல் -க்கு
இன்னம் கொஞ்சம் பலமான சரிப்பை எதிர்பார்த்தேன்!!

கலையரசன் said...

Subankan -க்கு
அடப்பாவி! நீ வாழ்த்துறியா? சாபம் விடுறியா?

பின்னோக்கி -க்கு
ஆமா பாஸ்! அரக்கர்கள் எல்லாம் இருக்காங்க...

கிரி -க்கு
நன்றி தலைவா!

அபுஅஃப்ஸர் -க்கு
என்ன அபு.. ஆளையே கானும்?
ஜெயில்லே மட்டும் இன்டெர்நெட் கனெக்ஷன் இருந்தா நான் ஜெயில்ல விட்டு வரமாட்டேன்!!

கலையரசன் said...

ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!

ச.செந்தில்வேலன் -க்கு
நல்ல எண்ணம் செந்தில்! மேனேஜர் பார்த்தா ஆணி அதிகமாகும்!

KISHORE -க்கு
ஏன்.. உன் ஆபீஸ்ல உன்னை ஆரத்தி எடுத்து சாமி கும்பிடுவாங்களா பாஸ்?

ரகுநாதன் -க்கு
ஹா ஹா ஹா நன்றி!

கலையரசன் said...

பிரியமுடன்...வசந்த் -க்கு
அப்பா.. நீயாவது வந்து எங்கூட சேர்ந்தியே..
எல்லாருமே நல்லவனுங்க மாதிரியே நடிக்கிறாங்கப்பா!!

ஆ.ஞானசேகரன் -க்கு
கஷ்டமா? வேதனை நண்பா!!!

சஹானா beautiful raga -க்கு
நன்றி!! பயபுள்ளி எப்படி எல்லாம் கமெண்ட் போடுது..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நல்லவேளை மச்சான் "humourous gay"ன்னு போடாம விட்டியே...
அதுவரைக்கும் சந்தோஷம்!

கலையரசன் said...

R.Gopi said...
நன்றி கோபி! பார்த்தேன்.. பெற்றுக்கொண்டேன்!!
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள் கோபி...

நாஸியா -க்கு
நன்றி நாஸி! முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்!!

சுசி said...

அய்யகோ... மீ த லாஷ்டா???? இருந்தாலும் விடப்போறதில்ல...

சுசி said...

//* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!//

இதோட கலை பதிவ நீங்க ஆபீஸ்ல படிச்சீங்க உங்க மேஜை மேல ஆணிகள் குவிக்கப்படும் அபாயம் இருக்குங்கரதையும் சொல்லிக்கிறேன்.

சுசி said...

//ரொம்ப சீரியசா எல்லாம்//
கமன்ட்
//எழுத கூடாதுன்னு எங்க ஆயா// என்கிட்டயும்
//சத்தியம் வாங்கிட்டு//
ஃபோன வச்சிட்டாங்க...

நசரேயன் said...

உண்மைதான்

Anonymous said...

thambi eluthartha nirutha mattiya?

r.selvakkumar said...

அட்டகாசம் . . எழுத்தும், வீடியோவும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஓய்ய்ய்ய்ய்..... எந்த ஜெயில்ல ஒரே கேபின்ல பொண்ணையும் பையனையும் வச்சிருப்பாங்கன்னு சொல்லுப்பா? repeatu

ஜெயில்ல எத்தனை வருஷம் இருந்த அனுபவம் தம்பி..
ஓஹோ..அதான் அன்னிக்கு ரூம்ல மணி அடிக்கிற சத்தம் கேட்டதும் தட்டை தூக்கிட்டு ஒடுனியா ..:)
haahahahahahahaha
thoppi thoppi

ரொம்ப வேலையே இல்லையோ!!!
this is my doubt also

Blog Widget by LinkWithin