Wednesday, November 11, 2009

கலக்கல் - 4

************************************************************************************
நீங்களே சொல்லுங்க.. சரியா? தப்பா?

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 4,000 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு ஏஐஜியில பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 3,500 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு லேமென் பிரதர்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 0,000 ரூபாய்!

ஆனா 1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு டின்-பீர் மொத்தமா வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு குடிச்சிட்டு பாக்கி உள்ள அலுமினிய டின்னை எடைக்கு போட்டா.. அதோட மதிப்பு 5,200 ரூபாய்! பீருக்கு பீரும் கிடைச்சுது.. காசுக்கு காசும் கிடைச்சுது!! எப்பூடி???

(என்னாது? ... ரைட்டு!... சரி விடு... அட! ஓரமா துப்புறறறது...?)

************************************************************************************
கேனத்தனமானதுதான்... ஆனா, உண்மை!

இதை
படிக்கிற எல்லாரும் கண்டிப்பா இதை செஞ்சு பாக்கணும்! சொன்னா நம்புங்க.. இது நா ஆபீஸ்ல சும்மா இருந்த நேரத்துல கண்டுபுடிச்சது இல்ல! இல்ல!! இல்ல!!!

நீங்க செய்ய வேண்டியது.. ஒரு நாற்காலியில உக்காருங்க. வலது பக்க காலை தூக்குங்கள். அப்படியே கிளாக்வைஸ் (Clockwise) பக்கமாக சுத்துங்க! அதே நேரம் உங்க வலது கைய்யால அப்படியே காத்துல நம்பர் 6 எழுத முயற்சி செய்யுங்க! இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!! (இதெல்லாம் ஒரு பொழப்பு...)

************************************************************************************
ரிவீட் மேலாண்மை

ஒருகா.. கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ் மூணு பேரும் ஆட்டோவுல போயிகின்னு இருக்க சொல்லோ... ஆட்டோ கன்டமாகி... கமன்டலம் பொளந்து மூணு பேரும் மேல பூட்டாங்கோ!!

அங்க நம்ம "டெர்மினேட்டர் எமன்" ரெடியா இருந்தாரு. மூணு பேரையும் கூப்பிட்டு... ராமதாசையும், ஜெவையும் சொர்க்கத்துக்கு போங்கன்னு சொல்லிட்டு, அவரு முன்னாடியே முடிவு செஞ்ச மாதிரி கலைஞரை நரகத்துக்கு போக சொல்லிட்டாரு!

க.மு.க வுக்கு இதுல உடன்பாடு இல்ல.. உடனே அவரு எமனை பார்த்து "ஏன்யா.. இந்த பாரபட்சம் உனக்கு? நாங்க மூணு பேருமே அரசியல்வாதி.. மூணு பேருமே ஊழல் பண்ணியிருக்கோம்.. மூணு பேருமே பொதுமக்களை ஏமாத்தியிருக்கோம்! இதுல.. ஏன் என்னா மயி... க்கு என்னை மட்டும் நரகத்துக்கு அனுப்புற?" அப்டின்னு எகிற ஆரம்பிச்சு மூணு பேருக்குமே பரீட்சை வைய்யி.. யாரு பாஸ் ஆகுறாங்கலோ அவங்க சொர்கத்துக்கும், ஃபெயில் ஆகுறவங்க நரகத்துக்கும் போகட்டும் ன்னு ஆட்சியில இருந்த தெனாவட்டுல கருத்து சொன்னாரு!


உடனே எமனும் ஒத்துகிட்டு முதல்ல இங்கலீஷ் டெஸ்ட்டு வச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "இந்தியாவுக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவரும் கரைக்டா சொல்லிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு் "இங்லாந்துக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவங்களும் கரைக்டா சொல்லிட்டாங்க! மூணாவது நம்மாளை கூப்பிட்டு """செக்காஸ்லோவியாவுக்கு""" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு... அதுக்கு நம்மாளு "செல்லாது.. செல்லாது.. ஒரு தமிழனை பார்த்து இங்கலிஷ்ல கேள்வி கேட்டு அவமானப்படுத்துறீங்களா? ம்.ம்..அடுத்த டெஸ்ட்டுக்கு போங்க ன்னாரு!

அடுத்தது தமிழ்ல பரீட்சை வச்சாரு டெர்மினேட்டரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "நாய் எப்டி குரைக்கும்"?ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'ளொள்.. ளொள்'ன்னு குரைக்கும்ன்னு கரைக்டா எழுதிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு "பூணை எப்டி கத்தும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'மியாவ்.. மியாவ்'ன்னு கத்துமுன்னு கரைக்டா எழுதிட்டாங்க.. மூணாவது நம்மாளை கூப்பிட்டு "யானை எப்டி பிளிரும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு.. ''''அடங்கொன்னியா''''..ன்னு முழிச்சிட்டு பெயிலா பூட்டாரு!!

கடுப்பான க.மு.க.. "யோவ் நான் வரலாறு பாடத்துல புலி.. அதுல வைய்யிய்யா டெஸ்டைன்னாரு"!! உடனே எமனும் வரலாறு பாடத்துல பரீட்சையை ஆரம்பிச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு 'இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைச்சிது?' ன்னு கேட்க, அவரு "1947" ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாரு! இரண்டாவது ஜெவை கூப்பிட்டு 'இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க எத்தனை பேரு உயிரை தியாகம் செஞ்சாங்க?'ன்னு கேட்க, அவங்களும் "2 லட்சம் பேரு"ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாங்க! அடுத்து நம்மாளு முறை.. எமன் அப்படியே திரும்பி.. "அந்த 2 லட்சம் பேரோட அட்ரசையும் சொல்லு" ன்னு கேட்டாரு! நம்மாளு "ரைட்டு.. வழிய சொல்லு கிளம்புறேன், நரகத்துக்கு" ன்னு து தூக்கி தோ போட்டுட்டு கிளம்பிட்டாரு..!

.க.- உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!
************************************************************************************
வளர்ச்சியால் வீழ்ச்சி

வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!
************************************************************************************

57 comments:

geethappriyan said...

very good laughter post
i liked every section
keep it up machi,
after a long time good laughter
voted in tamilish and tamilmanam aswell,ur brother's daughter picture are cute man

சென்ஷி said...

டேய் மச்சான்.. சாகடிச்சுட்டே போ :))

கடைசி மேட்டரை படிச்சுட்டு சிரிச்சு மாளலை.. கலக்குறேடா கலை!

நன்மனம் said...

tooooo good imagination ! ! !

:-))

சென்ஷி said...

/இடுகைத்தலைப்பு:
கலக்கல் - 4

மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

சன்னலை மூடு//

என்னக் கொடுமைடா இது.. இப்பத்தான் உன் பதிவுக்கே வர்றேன். அதுக்குள்ள என் ஓட்டை வேற எவண்டா போட்டது.. இதுலயுமா கள்ள ஓட்டு போடுறீங்க. நல்லாருங்கடா :(

Prathap Kumar S. said...

ஏன் ஏன் இந்த கொலைவெறி...?

க்க்க்ககககக... ஒதுங்குங்க துப்பட்டும்...

tamiluthayam said...

எல்லாம் சரி தான். பிறர் தவறுகளை சிலர் சிரிச்சிட்டே சொல்வாங்க. சிலர் சிடுசிடுத்துகிட்டே சொல்வாங்க. நீங்க முதல் ரகம்.

Aachi said...

அதென்ன மு.க. வுக்கு மட்டும் அப்படி ஒரு கொலை வெறி கேள்வி

Aachi said...

அதென்ன மு.க. வுக்கு மட்டும் அப்படி ஒரு கொலை வெறி கேள்வி

இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்.

அதுவும் அந்த பீர் விஷ(ய)ம் இருக்கு பாருங்க...

கலக்கிட்டீங்க தம்பி.

இராகவன் நைஜிரியா said...

//
பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))
//

நம்பிட்டோமில்ல...

இராகவன் நைஜிரியா said...

// வளர்ச்சியால் வீழ்ச்சி

வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!! //

நெத்தியடி...

சங்கர் said...

ஆட்டோ அமீரகம் வராதுன்னு தைரியமா?

கலைஞர் ஏர்லைன்ஸ்ல (எப்படியும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சிருவாங்கல்ல) ஆள் வரும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

id...
ஆட்டோ அமீரகம் வராதுன்னு தைரியமா?

கலைஞர் ஏர்லைன்ஸ்ல (எப்படியும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சிருவாங்கல்ல) ஆள் //

:))

Subankan said...

ஆகா, என்னா ஒரு வில்லத்தனம்.

☀நான் ஆதவன்☀ said...

பீர் டின்னை விட ‘பாட்டிலுக்கு’ காசு அதிகமா வருமா கலை?

நீ சொன்னேன்னு நாற்காலிய திருப்பி காலை தூக்கினேன் பாரு என்னைய சொல்லனும். சேட்டன் ஒரு மாதிரியா பாக்குறான்

☀நான் ஆதவன்☀ said...

//உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!//

ஆபிஸ்ல உன் நிலைமை எனக்கு புரியுது :)

அப்துல்மாலிக் said...

கல கல கலை...

ஆஃபீஸ்லே கும்மியடிக்கப்போறானுங்கனு சிம்பாளிக்கா சொல்லிட்டீர் ஆனா அதற்காக சொல்லப்பட்ட சிறு(?) கதை செம செம‌

ஸ்ரீராம். said...

கலைஞர் காமெடி கலக்கல். அதில் உள்ள மெஸ்ஸெஜும் சூப்பர்.

Unknown said...

///இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!!///
யோவ்... நிஜமாயே மாறுதய்யா....

///உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!///

ம்ம்

கோபிநாத் said...

\வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!\\

ஐயா...எப்படிய்யா எப்பூடி...இந்த மாதிரி எல்லாம் ;)))

ஆ.ஞானசேகரன் said...

என்னமோ போங்க.... என்னமோ சொல்லுரீங்க

சுசி said...

//காசுக்கு காசும் கிடைச்சுது!! எப்பூடி??? //
என்ன எப்பூடி??? அப்போ தொப்பை??????

//இதை படிக்கிற எல்லாரும் கண்டிப்பா இதை செஞ்சு பாக்கணும்!//
ஜூப்பரு கலை... கம்பேனி விளங்கும். ஆ.கோ நானும் செஞ்சு பாத்துட்டேன்...

சுசி said...

//ஒருகா.. கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ் மூணு பேரும் ஆட்டோவுல போயிகின்னு இருக்க சொல்லோ... ஆட்டோ கன்டமாகி... கமன்டலம் பொளந்து மூணு பேரும் மேல பூட்டாங்கோ!! //

என்ன சொல்ல.... அதான் சிரிச்சுட்டே இருக்கேனே....

சுசி said...

//வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!//

அவ்வ்வ்வ்..........அவ்வ்வ்வ்...........
ஆவ்வ்வ்வ்...............

சுசி said...

தங்க மகள்.... தம்பி மகள்......
ச்சோ.... ச்வீட்.....

அநியாயத்துக்கு அவங்க செவுட்டுல ஒண்ணு விட்டது ஞாபகம் வந்திடுச்சு... :))))

பாலா said...

க்க்க்க்க்க்க்க்க்க்க்கலக்கல்! :) :)

வினோத் கெளதம் said...

//ஆனா 1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு டின்-பீர் மொத்தமா வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு குடிச்சிட்டு பாக்கி உள்ள அலுமினிய டின்னை எடைக்கு போட்டா.. அதோட மதிப்பு 5,200 ரூபாய்! பீருக்கு பீரும் கிடைச்சுது.. காசுக்கு காசும் கிடைச்சுது!! எப்பூடி???.//

பாட்டில்லா இருந்தா ரேட் இன்னும் எகிறுமே..ஆமாம் இந்த கணக்கு எல்லாம் ஆபீஸ் டைம்லா போடுவிங்களா..இல்லை ரூம்ல உக்கார்ந்து போடுவிங்களா..(அப்புறம் ஏன்யா மேனேஜர் கேக்கமாட்டன்..)

//இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!! //

கால் திசை மட்டும் தானா..I mean கை திசையும் மாறுமானு கேக்க வந்தேன்..

தமாசு தமாசா தான்கீது..(கருணா மேல என்ன அப்படி ஒரு காண்டு)

//வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!//

ஏன் திடிர்னு வண்டி ஒழுங்கா தானே போய்க்கிட்டு இருந்தச்சு.

நாகா said...

ஹேய்... ஹேய்... பக்.. பக்.. :)

Ashok D said...

sex sorry six matteru supperappu...

உசுரோட இருக்கற 3 பேர மேல அனும்ச்சிட்டியேப்பா....
(தெரிஞ்ச ஜொக்குதான் நல்லா திறிக்கறப்பா)

4காவது வரி

வந்தது வியாதியும் தேய்ந்து உடல்நலமும் ;)

Ashok D said...

பீர் மேட்டரும் ஷேர் மேட்டரும் again சூப்பரப்பு.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

க.மு.க..

து.தூ .தோவும் உன்னாலதன் மச்சி யோசிக்கமுடியும் சூப்பர்டா...

ரோஸ்விக் said...

ஐயா....உன்னைப் போல் ஒருவன் அங்க எமனா இருந்திருப்பான்னு நினைக்கிறேன்... ஆமா, கடைசியா மு.க. எதுவும் கவிதை எழுதலையா? :-)

கலக்கல் மிக அருமை நண்பா...வாழ்த்துக்கள்.

உங்கள் ராட் மாதவ் said...

சூப்பர் ...கலக்குங்க ராசா கலக்குங்க.... :-)

Suresh Kumar said...

கலக்கல் நல்லா இருக்கு ............. மூணு பேருமே நரகத்திற்கு போக வேண்டியவங்க தான் ............. ஆனால் எமன் கலைஞர மட்டும் குறி பார்த்து அடிக்கிறார்

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மையிலேயே கலக்கல் தான் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

அரசியல் நகைச்சுவை அருமை..

kishore said...

//ஒரு நாற்காலியில உக்காருங்க. வலது பக்க காலை தூக்குங்கள். அப்படியே கிளாக்வைஸ் (Clockwise) பக்கமாக சுத்துங்க! அதே நேரம் உங்க வலது கைய்யால அப்படியே காத்துல நம்பர் 6 எழுத முயற்சி செய்யுங்க! இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!!//

அட ஆமா மச்சி.. நெசமாத்தான் இருக்கு... என்ன ஒன்னு எல்லோரும் எனக்கு முத்தி போய்டிசினு நெனசிட்டங்க..

Raju said...

Super Mails...!
:-)

கலையரசன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலு -க்கு
நன்றி மச்சி! எல்லா பதிவுக்குமே இதே கமெண்ட் போடுற மாதிரி இருக்கு?

சென்ஷி -க்கு
நன்றி மச்சான்.. சிரிக்காத நீயே சிரிச்சிட்டியா?
கமெண்ட் போட்ட நேரத்துக்கு.... நீ ஓட்டே போட்டுயிருக்கலாம்!!

நன்மனம் -க்கு
நன்றிங்க!!

நாஞ்சில் பிரதாப் -க்கு
நன்றி தம்ப்ரீரீரீ... ரெடியாதான் இருக்க போல..?

கலையரசன் said...

tamiluthayam -க்கு
நன்றி தமிழ்உதயம்! பேரை தமிழில் மாத்தலாமே..

Aachi -க்கு
நன்றி ஆச்சி! அவருதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு!!

இராகவன் நைஜிரியா -க்கு
நன்றிண்ணே உங்க கும்மிக்கு...

சங்கர் -க்கு
நன்றி பாஸ்... (அடப்பாவிகளா! அவைங்களே சும்மாயிருந்தாலும்... இவங்க கிளப்பிவிடுவாங்க போலயிருக்கேககக!!)

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி நட்சத்திர செந்தில்..

Subankan -க்கு
நன்றி சுபா.. நம்மல எப்பதான் ஹீரோவாக்க போறீங்களோ?

☀நான் ஆதவன்☀ -க்கு
வராது சூர்யா... ஏன் உனக்கு தெரியாதா? தெரியாத மாதிரியே கேக்குற?
சேட்டன் பார்ததோட விட்டானே!!

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு! என்ன.. ஆளையே கானும்? புது இடுகை எப்போ?

கலையரசன் said...

ஸ்ரீராம். -க்கு
நன்றி ராம்! மெசேஜஜஜஜா?

Kiruthikan Kumarasamy -க்கு
நன்றி கீத்! விடாம செஞ்சி பாத்துருக்க அதையும்.. ரைட்டு!!

கோபிநாத் -க்கு
நன்றி ஐயா... நீங்க கத்துகொடுத்ததுதான்!! (தன்னடக்கமமமாம்..)

ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி தல...!!

கலையரசன் said...

சுசி -க்கு
நன்றியக்கா.. உங்க தொடர் கும்மிக்கு!
அப்போ தொப்பை இலவச இணைப்பு...
//அநியாயத்துக்கு அவங்க செவுட்டுல ஒண்ணு விட்டது ஞாபகம் வந்திடுச்சு... :))))//
அதையெல்லாம் கரைக்டா ஞாபகம் வச்சிக்கங்க.. ஆனா, ஞாபகம் வச்சிகவேண்டியதை விட்டுடுங்க!!

ஹாலிவுட் பாலா -க்கு
நன்றிறிறிறிறிறி தல!!

வினோத்கெளதம் -க்கு
/(அப்புறம் ஏன்யா மேனேஜர் கேக்கமாட்டன்..)//
ஆகா! உன்கிட்ட சொன்னது தப்பாபோச்சே..

//(கருணா மேல என்ன அப்படி ஒரு காண்டு)//
உம்.. சொத்து பிரிக்கிறதுல சண்டை பாஸ்.. அதான்!!

நாகா -க்கு
ஹேய்... ஹேய்... ச்சூ.. ச்சூ..!!

கலையரசன் said...

D.R.Ashok -க்கு
நன்றி அஷோக்!! அதுவா வருதுங்க பாஸ்..
உங்க நான்காவது வரி சேர்ப்பு பிரமாதம்ங்க!!

பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி மச்சி!! எல்லாம் உன்கிட்ட கத்துகிட்டதுதான் மாமு..

ரோஸ்விக் -க்கு
நன்றி ரோஸ்! என்னது.. அங்கேயும் கவிதையா? எமன் என்னை சட்டியில் போட்டுயிருப்பான்!!

RAD MADHAV -க்கு
நன்றிங்க ராசா நன்றிங்க....

கலையரசன் said...

Suresh Kumar -க்கு
நன்றி தல.. எங்க பாஸ் பதிவு பக்கமே ஆளை கானாமே?? ஆணி அதிகமோ???

முனைவர்.இரா.குணசீலன் -க்கு
நன்றி ஐயா! நீங்களே பாரட்டிட்டீங்க.. இரட்டிப்பு மகிழ்ச்சி!!

KISHORE -க்கு
என்னமோ புதுசா நினைக்கிற மாதிரி அலுத்துக்குற?

♠ ராஜு ♠ -க்கு
நன்றி ராஜூண்ணா...

sultangulam@blogspot.com said...

கால்... கலக்கல் கலை.

Thenammai Lakshmanan said...

//வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!//

very nice KALAIYARASAN

Prabhu said...

எல்லாமே ஆபிஸ்லயே யோசிக்கிற மேட்டரா இருக்கே. அப்படி வேலை இல்லாத எந்த ஆபீஸ்ல இருக்கீங்க? வேலை வாங்கி கொடுங்க.

CS. Mohan Kumar said...

நிஜமாவே கலக்குறீங்க என்னமா காமெடி எழுதுறீங்க? நீங்க நம்ம ப்ளாக் பக்கம் வந்ததால் தான் உங்களை அறிந்தேன். இனி அவ்வபோது வருகிறேன். இயலுமானால் உங்கள் மெயில் எனக்கு அனுப்பவும். mohan.kumar@allsectech.com என்ற முகவரிக்கு

கலையரசன் said...

சுல்தான் -க்கு
நன்றி அண்ணாச்சி முதல் வருகைக்கு!

thenammailakshmanan -க்கு
நல்லதுங்க...

pappu -க்கு
வாங்கிகுடுத்துடுவோம்!! பெரிய விஷயமா என்ன?
ஆனா... அதுக்கு நீ ரொம்பபபப நல்லவனா இருக்கனும்!!

Mohan Kumar -க்கு
நன்றி மோகன்! கண்டிப்பாக தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்!!

அன்புடன் மலிக்கா said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிப்போச்சி

கலை கலகலன்னு கலக்குறீங்க..

Unknown said...

// உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!//

உண்மை தலைவா...

Unknown said...

கலக்கல் :)))))))))

ARV Loshan said...

ஆகா.. கலக்கிட்டீங்க.. முதலாவது சாதாரணம்..
இரண்டாவது முன்பே வாசித்தது.. கடைசி கதை கொன்னுட்டீங்க.. மூணு பேரையும் தான்.. ஹா ஹா..

அதுவும் கருத்து சொன்னீங்க.. முடியல..
கலக்கல் கலை.. :)

உங்கள் ராட் மாதவ் said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{//உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!//

ஆபிஸ்ல உன் நிலைமை எனக்கு புரியுது :)}

வழிமொழிகிறேன்ன்ன்ன்!

ผลิตภัณฑ์เสริมอาหาร said...

I was very pleased to visit your site; I was definitely a wonderful site. The post was worth reading. I enjoyed each bit of your post. Thanks for such excellent post.

Blog Widget by LinkWithin