Monday, November 23, 2009

யப்பா... சாமி! முடியலை....

2003ல் இருந்து 2009 வரையில்.. நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பதிவர்கள் என எனக்கு ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி எனக்கு எச்சரிக்கை செய்து என்னை பல்வேறு சிக்கலான மற்றும் பயங்கரமான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிய அனைவருக்கும் இந்நாளில் நன்றியை தெரிவித்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!

உங்களால்தான் இது சாத்தியமாயிற்று....

* கோக் குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேனுங்கோ... அது டாய்லேட் அழுக்கை கிளீன் பண்ணும்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* குட்டையில ஊறுன பன்றி மாத்திரியே அலையிறங்கண்ணா... அது டியோடரண்ட் அடிச்சா கேன்சர் வரும்முன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன் ராசாக்களா... அது எப்ப நீங்க தியேட்டர் நார்காலியில எச்.ஐ.வி. ஊசியை சில சைக்கோஸ் சொருகியிருப்பாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* தனியா பஸ்சுலயோ, டிரைன்லயோ, ஃப்ளைட்லயோ போகும்போது பக்கதிலிருக்கறவனை திருடன் மாதிரியே பாக்குறேங்க நானு. அது எப்பொழுது இருந்துன்னா... நீங்க மயக்க ஸ்பிரே அடிச்சு நம்ம பொருள்களை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! (மால்ஸ்ல பொண்ணுங்க டெஸ்டிங் ஸ்பிரே அடிக்க வந்தா கூட பயந்து வருது!)

* தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க! அது எப்பொழுது இருந்துன்னா... தெரியாத போன் ஏதாவது வந்து அட்டன்ட் பண்ணா நம்ம சிம் கார்டை ஹேக் பண்ணி காசை கட் பண்ணிடுவாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* கேன்ல வர்ற தயிரோ, மோரோ, ஜுஸோ எதையுமே குடிக்கிறது இல்லை மக்கா! இதுவும் நீங்க எலி கேன் மேல யூரின் போயிருக்கும்.. எச்சி துப்பி வச்சிருக்குமுன்னு.. என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* பார்ட்டிக்கு போனாலோ, கிளப்புக்கு போனாலோ.. எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க! இதுகூட நீங்க அவளுங்க நம்மள மயக்கி, ஹோட்டலுக்கு கொண்டுபோயி, நமக்கு தெரியாம போதை மருந்து குடுத்து... கிட்னியை களவான்டு போறாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* 49 மெயிலை 1025 பேருக்கு இதுவரைக்கும் அனுப்பி இருக்கேங்க.. நீங்க சொன்னது போல... ஏங்க, இன்னம் எனக்கு நோக்கியா மொபைலை அவனுங்க அனுப்பவேயில்லை? அந்த மாடலே மார்கேட்டை விட்டு போயிடுச்சு பாசுங்களா!! (ஓசியில குடுத்தா பினாயிலையே குடிப்பியேன்னு பழைய பின்னுாட்டம் போடாம... புதுசா ஏதுனா யோசிச்சு திட்டுங்க!)

* முருகன், ஏசு, அல்லா படங்கள் போட்ட மெயிலை... மனசுல எதாவது ஆசையை நினைச்சிகிட்டே பார்வேர்ட் பண்ணா... நினைச்சது நடக்குமுன்னு சொன்னீங்க! கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!! (இன்னம் கொஞ்சம் வேற மாதிரி டிரை பண்ணணும் நீங்க!)

எது எப்படியோ ........ இதை படிச்சிட்டு 10 நிமிஷத்துல " 11,345 " பேருக்கு நீங்க இந்த இடுகையை பார்வேர்ட் பண்ணலைன்னா... நாளைக்கு காலையில 6.00 மணிக்கு "காக்கா" உங்க தலையில "கக்கா" போயிடும்!!

51 comments:

நையாண்டி நைனா said...

same blood

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ் தம்பி தினமும் குளிச்சே ஆகனும்னு நான் ஒரு மெயில் அனுப்பினேன்னே அதை நீ ஃபாலோ செய்யவே இல்லையா?

☀நான் ஆதவன்☀ said...

//நையாண்டி நைனா said...

same blood//

என்னது உங்க ரெண்டு பேரும் ஒரே ப்ளட் குரூப்பா....... சொல்லவே இல்ல..

Thirumathi JayaSeelan said...

பீதிய மதிக்கிற முதல் ஆள் நீங்க போல இருக்கே.

பிரியமுடன்...வசந்த் said...

//மொயில் //

வாயில நல்லா வருது...

உனக்கு..

பிரியமுடன்...வசந்த் said...

//தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க! அது எப்பொழுது இருந்துன்னா... தெரியாத போன் ஏதாவது வந்து அட்டன்ட் பண்ணா நம்ம சிம் கார்டை ஹேக் பண்ணி காசை கட் பண்ணிடுவாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!//

இப்டியெல்லாம் நீ மட்டும்தான் மொயில் பண்ணுவ...

பிரியமுடன்...வசந்த் said...

//கேன்ல வர்ற தயிரோ, மோரோ, ஜுஸோ எதையுமே குடிக்கிறது இல்லை மக்கா! இதுவும் நீங்க எலி கேன் மேல யூரின் போயிருக்கும்.. எச்சி துப்பி வச்சிருக்குமுன்னு.. என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!//

முடியலடா சாமி...

க.பாலாசி said...

//* தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன் ராசாக்களா... அது எப்ப நீங்க தியேட்டர் நார்காலியில எச்.ஐ.வி. ஊசியை சில சைக்கோஸ் சொருகியிருப்பாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!//

இப்டில்லாம் வேற தியேட்டர்ல நடக்குதா??..
அய்யோ....

ஜீவன்பென்னி said...

:-)

இதுக்கு மேல என்ன சொல்லுறது?

பிரியமுடன்...வசந்த் said...

// பார்ட்டிக்கு போனாலோ, கிளப்புக்கு போனாலோ.. எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க! //

யார்ர் நீய்ய்..நாங்க நம்பணும்..

பிரியமுடன்...வசந்த் said...

//49 மெயிலை 1025 பேருக்கு இதுவரைக்கும் அனுப்பி இருக்கேங்க.. நீங்க சொன்னது போல... ஏங்க, இன்னம் எனக்கு நோக்கியா மொபைலை அவனுங்க அனுப்பவேயில்லை? அந்த மாடலே மார்கேட்டை விட்டு போயிடுச்சு பாசுங்களா!! (ஓசியில குடுத்தா பினாயிலையே குடிப்பியேன்னு பழைய பின்னுாட்டம் போடாம... புதுசா ஏதுனா யோசிச்சு திட்டுங்க!)//

இன்னும் ஒன்னு அனுப்பி 50 அடிச்சுடு மாப்பி..

சென்ஷி said...

கொடுத்து வச்சவன்ய்யா நீ.. எனக்கு வர்ற மெயிலைல்லாம் எடுத்து எழுதற அளவுல இல்லை :-(

பிரியமுடன்...வசந்த் said...

//முருகன், ஏசு, அல்லா படங்கள் போட்ட மெயிலை... மனசுல எதாவது ஆசையை நினைச்சிகிட்டே பார்வேர்ட் பண்ணா... நினைச்சது நடக்குமுன்னு சொன்னீங்க! கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!!//

புரியுது மாப்பி இதுல இருந்து இன்னும் உனக்கு மேரேஜ் ஆவலைன்னு சொல்ல வர்ற அதான...

D.R.Ashok said...

:))))

நையாண்டி நைனா said...

/*☀நான் ஆதவன்☀ said...
//நையாண்டி நைனா said...

same blood//

என்னது உங்க ரெண்டு பேரும் ஒரே ப்ளட் குரூப்பா....... சொல்லவே இல்ல..
*/
என்ன சொல்லவே இல்லே?
அதான் சொல்லி, நீங்களும் படிச்சி பின்னூட்டம் வேற போட்டுபுட்டீக... அப்புறம் என்ன சொல்லவே இல்லேன்னு ஒரு பீதி...

அது ஒரு கனாக் காலம் said...

அம்பி , ஒவ்வொண்னும் ...ரொம்ப நன்னா இருக்கு, சிரிச்சு சிரிச்சு ....... அவுந்து விழுந்துடுத்தூடா !!!!

சுசி said...

பாவம் என்
//நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பதிவர்கள் // எல்லாத்துக்கும் மேல என் கண்ணாளன்.
சிரிச்சா ஆயுள் கூடுமாமே... இன்னைக்கு அவ்ளோ சிரிச்சிட்டேன்.

சுசி said...

//(மால்ஸ்ல பொண்ணுங்க டெஸ்டிங் ஸ்பிரே அடிக்க வந்தா கூட பயந்து வருது!//

பயந்து வருதா??? இப்டி உங்களுக்கு மட்டும்தான் எழுத வருது :))))

சுசி said...

//எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க! //

இது பொ.....ய்....... கழுகுப் பார்வை கட்டாயம் பாப்பீங்க.

Subankan said...

பெரிய விசயத்தை இப்படி கலகலப்பா சொல்லிட்டீங்களே!

கணினி தேசம் said...

அவ்வ்வ்வ்வ...........!!

நிஜமா நல்லவன் said...

:))

நாகா said...

என்ன கொடும கலையரசா இது? :)

தேவன்மாயம் said...

☀நான் ஆதவன்☀ said...
அவ்வ்வ்வ்வ் தம்பி தினமும் குளிச்சே ஆகனும்னு நான் ஒரு மெயில் அனுப்பினேன்னே அதை நீ ஃபாலோ செய்யவே இல்லையா?

November 24, 2009 4:08 AM//

அதுவும் சேர்ந்து குளிக்கசொன்னனே ராசா!!!

அகல்விளக்கு said...

//எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நீங்களுமா....

இராகவன் நைஜிரியா said...

அய்யோ சாமி தாங்க முடியலடா...

நான் உங்க இடுகையைச் சொல்லவில்லை...

இது மாதிரி வரும் இ-மெயில்களைச் சொன்னேன்..

குசும்பன் said...

//அந்த மாடலே மார்கேட்டை விட்டு போயிடுச்சு பாசுங்களா!!//

அந்த மாடலுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து இப்ப அது மாடலா ஆகிட்டாம் பாஸ்!

குசும்பன் said...

//அது டாய்லேட் அழுக்கை கிளீன் பண்ணும்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
//

செஞ்சுக்கிட்டு இருந்தது சரிதானே அதை ஏன் நிறுத்துனீங்க பாஸ்:)

குசும்பன் said...

// நீங்க மயக்க ஸ்பிரே அடிச்சு நம்ம பொருள்களை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! //

அது ஏதும் பர்சிஸ் பணம் வெச்சு இருக்கிறவங்களுக்கு பாஸ், நம்ம பர்ஸில் எல்லாம் எட்டுகா பூச்சி கூடு கட்டி புள்ளை குட்டிங்களோட வாழ்ந்துக்கிட்டு இருக்கு! நம்மை எல்லாம் ஸ்ப்ரே அடிச்சா, அந்த திருடனுங்களுக்கு கேவலம்!

குசும்பன் said...

//தெரியாத போன் ஏதாவது வந்து அட்டன்ட் பண்ணா நம்ம சிம் கார்டை ஹேக் பண்ணி காசை கட் பண்ணிடுவாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ//

ஓ சீரோ பேலன்ஸ் இருந்தாலும் கட் செஞ்சு -வில் போவுதா பாஸ்!

ஒருவருசம் ஆவுது ரீஜார்ஜ் செஞ்சு இதுல பேச்சை பாரு...லோள்ளை பாரு..

குசும்பன் said...

//இதுகூட நீங்க அவளுங்க நம்மள மயக்கி, ஹோட்டலுக்கு கொண்டுபோயி, நமக்கு தெரியாம போதை மருந்து குடுத்து//

யாரை? உன்னை? அவளுங்க? மயக்கி? அவ்வ்வ்வ் வெளங்கிடும்....

அப்படி அசம்பாவிதம் நடந்தாலும் ஹோட்டலுக்கு போகும் முன்பு ஒரே ஒரு முத்தம் அவளுக்கு கொடு.. ஆள் அவுட்:) அவ மட்டையாகிடுவா?

பித்தன் said...

//* முருகன், ஏசு, அல்லா படங்கள் போட்ட மெயிலை... மனசுல எதாவது ஆசையை நினைச்சிகிட்டே பார்வேர்ட் பண்ணா... நினைச்சது நடக்குமுன்னு சொன்னீங்க! கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!! (இன்னம் கொஞ்சம் வேற மாதிரி டிரை பண்ணணும் நீங்க!)//


ரசிச்சேன் அருமையான வரிகள்...... நா வேணா இந்த பதிவ தூக்கிட்டு ஒடட்டா..... அப்படி ஓடினால் என்ன நன்மை...?

KISHORE said...

அப்போ நீ நிம்மதியா இருக்குற இடம் ஒன்னே ஒன்னு தான்..

सुREஷ் कुMAர் said...

நல்லா பின்பற்றுரிங்க ஃபார்வேர்ட் மெயில்சை..
நெசமாவே, யப்பா... சாமி! முடியலை கலையரசரே..

வினோத்கெளதம் said...

//கோக் குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேனுங்கோ...//

அதுசரி கெட்ட பழக்கம்ன்னு யாரவது சொன்னா உடனே பயந்துபோய் அதை விடுறது தானே நம்ம பழக்கம்..

//அது டியோடரண்ட் அடிச்சா கேன்சர் வரும்முன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ//

அப்ப சிகரெட் அடிச்ச வராதா..

//தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன் ராசாக்களா..//

அதான் ரூம்லயே எல்லா படத்தையும் பார்த்துறிங்லே அப்புறம் எதுக்கு தியேட்டர்..

//தனியா பஸ்சுலயோ, டிரைன்லயோ, ஃப்ளைட்லயோ போகும்போது பக்கதிலிருக்கறவனை திருடன் மாதிரியே பாக்குறேங்க நானு.//

அது எப்படி நீங்க தான் அவளோ பெரிய ஃப்ளைட்ல தனியா போறிங்களே அப்புறம் எப்படி பக்கத்துல ஆளு..

//தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க!//

நம்பரெ தான் தெரிய மாட்டுதே அப்புறம் எதுக்கு போன்..

//கேன்ல வர்ற தயிரோ, மோரோ, ஜுஸோ எதையுமே குடிக்கிறது இல்லை மக்கா!//

அப்ப பீர்..

//பார்ட்டிக்கு போனாலோ, கிளப்புக்கு போனாலோ.. எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க!//

ஒஹோ அந்த அளவுக்கு வேகமா செயல்ப்படுவிங்க..

//49 மெயிலை 1025 பேருக்கு இதுவரைக்கும் அனுப்பி இருக்கேங்க..//

1025 பேருக்கு அனுப்பினியே எனக்கு அனுப்பினியா..

//கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!!//

அந்த அறுபதாம் கல்யானத்தையும் சேர்த்து தானே..

கோபிநாத் said...

மச்சி காலையில நல்லா தானே இருந்தே!!!..திடிரென்னு என்ன ஆச்சு மேன்!?

அப்புறம் பதிவை படிச்சிட்டு செம சிரிப்பு அது எதுக்குன்னு உனக்கு தெரியும் ;))))

pappu said...

எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!! ////

இங்க தான் டச்சு!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

:)

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

என்னையும் ஆட்டையில சேத்துக்குங்க. நானும் உங்க கட்சிதான்...

ஆ.ஞானசேகரன் said...

//எது எப்படியோ ........ இதை படிச்சிட்டு 10 நிமிஷத்துல " 11,345 " பேருக்கு நீங்க இந்த இடுகையை பார்வேர்ட் பண்ணலைன்னா... நாளைக்கு காலையில 6.00 மணிக்கு "காக்கா" உங்க தலையில "கக்கா" போயிடும்!!//

அது சரி.... நல்லாயிருக்கே

ravi said...

remba vivaramaana aalunganna neenga,kaai kariyilellaam poochimarunthu adikkiraainga appa sappidatheenga adhai,nellilum koodathaan

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//இதுகூட நீங்க அவளுங்க நம்மள மயக்கி, ஹோட்டலுக்கு கொண்டுபோயி, நமக்கு தெரியாம போதை மருந்து குடுத்து//
எப்புடிடா மனசாட்சியே இல்லாமே?
அவ்வ்வ்வ்வ் தம்பி தினமும் குளிச்சே ஆகனும்னு நான் ஒரு மெயில் அனுப்பினேன்னே அதை நீ ஃபாலோ செய்யவே இல்லையா?//
ஏன் ஃபாலோ செய்யலை?ஏன் ஃபாலோ செய்யலை?ஏன் ஃபாலோ செய்யலை?

//கொடுத்து வச்சவன்ய்யா நீ.. எனக்கு வர்ற மெயிலைல்லாம் எடுத்து எழுதற அளவுல இல்லை :-(//
@சென்ஷி
மாப்பி உனக்கு வேணும்னா சொல்லுடா, இனிமே ஃபார்வர்டு போடுறேன்

கலையரசன் said...

வந்து ஃபார்வேர்ட்டு மெயில் அனுப்புறவங்களை கும்ம சொன்னா... அதைவிட்டுட்டு...
என்னை டேமேஜ் பண்ண அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தனி தனியாக நன்றி சொல்ல முடியாததினால் மொத்தமாக... நன்றி! நன்றி!! நன்றி!!!

நிலாமதி said...

படிக்க நல்லாயிருக்குங்க. செம காமடிங்க.

நசரேயன் said...

கலக்கல்

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha.. good one

ஹுஸைனம்மா said...

:-D

ஸ்ரீமதி said...

:)))))))))))))

Chitra said...

அப்பா, சாமி........ சிரிச்சி முடியல...... சூப்பர் காமெடி!

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஅ....இப்பவே கண்ணைக் கட்டுதே...

http://writer-saran.blogspot.com/

ரிஷபன் said...

One of the best humour.. ரொம்ப நல்லா இருக்கு..

Blog Widget by LinkWithin