Saturday, November 7, 2009

மூணுல.. நீ ஒன்ன தொடு மாமா!

ஏ ஃபார் ஆயா.... பி ஃபார் பாயா... எழுத கூப்பிட்ட அறிவை தேடும் கார்த்திகேயனுக்கும், பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் பற்றி செந்தில்வேலனுக்கும் மற்றும் நான் ஆதவனுக்கும், தேவதையும்.. பத்து வரங்களும் எழுத கூப்பிட்ட கீத் குமாரசாமிக்கும் மற்றும் கிரி அவர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிச்சிக்கறேன்! இரண்டாவதா.. இதை எல்லாம் தனி தனியா எழுதி உங்க பொன்னான, வெள்ளியான, பித்தளையான நேரத்தை சுரன்டி சுண்ணாம்பாக்காமல்... மொத்தமா த்ரீயின் ஒன்னா எழுதி உங்க அன்பை அள்ளிகிறேன்!!


ஏ.பி.சி.டி. உங்கொப்பன் தாடி!
1. A- Available – இந்த கேள்வி ஹோட்டல்காரன்கிட்ட கேட்க வேண்டியாது! பாஸ்.. பாஸ்..

2. B - Best friend – எம்மாம் பேரு இருக்காய்ங்க...?

3. C- Cake or pie – ஸ்வீட் நோ இஷ்டம்!

4. D - Drink of choice – ஃபிளாக் டாக் (எந்த தண்ணின்னு சொல்லலியேப்பா...!)

5.E - Essential items you use everyday – ஜ ஆரம்பிச்சி டி யில முடியும்.

6. F- Favorite colour - உங்க மயிரு... கலர்னு சொல்ல வந்தேங்க!!

7. G - Gummy bears or worms – டேய்.. இப்படியெல்லாம் கேள்வி கேக்கசொல்லி யாருடா சொல்லிகொடுத்தது?

8. H - Hometown – அப்படியே மேல போயி (மேமமமமலலலலல இல்ல..) ஹெட்டரை படிங்க!

9. I - Indulgence – பாவமான புள்ளய பார்த்து... என்ன கேள்வி இது?

10. J - January/February – மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர். (12 மாசம் கரைக்டா இருக்கான்னு என்னிக்கோங்க!)

11. K - Kids and their names – பெரியவீட்டோடதா? சின்னவீட்டோடதா?

12. L - Life is incomplete with out – மரணம்!

13. M - Marriage date – அததான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன் அவ வீட்டுல..

14. N - Numberof siblings – ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு! (தம்பி)

15. O - Oranges or Apples – கடிக்கவா? குடிக்கவா?

16. P - Phobias/ Fears – கடன்காரன்களை பார்த்தா படபடப்பா இருக்கு! இதுக்கு பேரு ஃபோபியாவா? இல்ல.. பயமா??

17. Q - Quotes for today – சிரித்து வாழவேண்டும்!

18. R - Reason to smile – வாயிருக்குல்ல...

19. S - Season – கலக்கப்போவது யாரு? Season 1,2,3,4

20. T- TAG 4 PEOPLE – 'அன்னை' தெரசா, காந்தி 'தாத்தா', நேரு 'மாமா', 'ஆயா' மனோரமா. (எல்லாம் சொந்தக்காரய்ங்கதான்!!)

21. U- Unknown fact about me – ரொம்ப நல்லவன்

22. V - vegetables you dont like – உருளைக்'கிழ'ங்கு (ஏன்னா.. நம்ம யூத் இல்ல..?)

23. W - Worst habbit - கிர்ர்ர்... உர்ர்ர்... (வெறிநாயி எப்படி கத்துதுபாரு அம்மா சொல்லுவாங்க)

24. X - Xrays you had – அந்த கண்ணாடிய வாங்கதான் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன். (தலைவரு 'நெற்றிகண்' படத்துல யூஸ் பண்ற கண்ணாடிதான்!)

25. Y - Your favourite food – சாம்பார் சாதம் 'வித்' டைகர் ப்ரான்ஸ்

26. Z - Zodiac sign – தமிழில் 'சொம்பு', ஆங்கிலத்தில் 'சிங்கம்'!


டேட்டிங் வித் தேவதை :

முதல் வரம்: என் அப்பா எனக்கு மீண்டும் வேண்டும்!

ரெண்டாவது வரம்: உலகத்துல உள்ள எல்லா மனிதர்களுக்கும் ஜாதி,மதம் மறந்து போகனும்!

மூணாவது வரம்: பெண் குழந்தை!!

நாலாவது வரம்: எப்பொழுதும் நண்பர்களோடான ஒற்றுமை!

ஐந்தாவது வரம்: சன் பிக்சர்ஸ் படமெடுத்தாலும் பரவாயில்லைங்க தேவ்ஸ்.. இந்த டிரைலர் போடறதை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க.. இல்லனா, கொல்லுங்க!.

ஆறாவது வரம்: டி.வி.யில வர்ற மெகா தொடர், மொக்க தொடர்ல நடிக்கிறவங்களுக்கு 1 வருஷத்துக்கு பேதி புடுங்கனும்!

ஏழாவது வரம்: தூங்கும்போது, யாரும் எனக்கு போன் பண்ணகூடாது!

எட்டாவது வரம்: குடிக்கக் குடிக்க வற்றாத ஒரு சரக்கு பாட்டில், மிக்சிங்கோட வேணும்.

ஒன்பதாவது வரம்: எவ்வளவு சரக்கடிச்சாலும் வாசனை வரக்கூடாது.. அப்டி வந்தாலும்.. அடி வாங்க உடம்புல தெம்பு இருக்கனும்!!

பத்தாவது வரம்: இன்னொரு பத்து வரம் பார்சல்!!

[Thumbs+Up+Down.jpg]


(பிடி)த்த, டிக்காத பத்து!!

தொழில்அதிபர் :
பிடித்தவர் : சுனில் மிட்டல்
பிடிக்காதவர்கள் : அம்பானி பிரதர்ஸ்

விஞ்ஞானி
பிடித்தவர்: சிவேஷ்வர் ஷர்மா (புதிய இன்டர்நெட் டெக்னாலஜிக்காக..)
பிடிக்காதவர் : புலிக்கல் அஜயன்

தமிழக கல்வியாளர்
பிடித்தவர்: டாக்டர் இரா.விஜயராகவன்
பிடிக்காதவர்: யாருமில்லைங்கண்ணா

எழுத்தாளர்
பிடித்தவர் : பாமரன்
பிடிக்காதவர் : சாணி (ஞானி என்று வாசிக்கவும்!)

இயக்குனர்
பிடித்தவர் : பாலுமகேந்திரா
பிடிக்காதவர் : மணிரத்னம்

நடிகர்:
பிடித்தவர் : சூஸ்
பிடிக்காதவர் : பஞ்ச் பேசும் அனைத்து கபோதிகளும்

நடிகை:
பிடித்தவர் : பூஜா
பிடிக்காதவர் : பெரிய லிஸ்டு இருக்கு! (எ.கா. ரேவதி,ராதிகா,சுகாசினி,ஊர்வசி )

இசையமைப்பாளர்:
பிடித்தவர் : யூத்கிங்
பிடிக்காதவர் : சப்பி சாரி.. சிற்பி!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிடித்தவர்: நீயா நானா கோபிநாத்
பிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!)

வானொலி பண்பலை தொகுப்பாளர்
பிடித்தாவர், பிடிக்காதவர்: பலவருஷம் ஆச்சி வானொலி, கடலொலி, தரவொலி எல்லாம் கேட்டு..

அரசியல்வாதி:
பிடித்தவர்: ராமதாஸ் (நோ கமெண்ட்ஸ்)
பிடிக்காதவர்: சுசு (??????)

தொடர் பதிவு எழுத கூப்பிட்டாலே ஏதோ சாணி கையோட, கைக்குலுக்குன மாதிரி நம்ம பதிவருங்க மூஞ்சி போற போக்கை பாக்கனுமே... அதனால, நா யாரகிட்டயும் கை குலுக்க விரும்பல!!

54 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் 3 இன் 1 கலை :)

உங்க ஸ்டைல் பதில்கள் கலகலப்பு :)

சென்ஷி said...

//சுசு (??????)//

நல்லவேளை இதையாவது விரல் தடுமாறாம டைப்படிச்சு வச்சிருக்கியே

அது ஒரு கனாக் காலம் said...

:-)

Raju said...

செம நக்கல் புடிச்ச ஆளுங்க நீங்க...!

கோபிநாத் said...

என்னாமேப்பா...நீ எப்படி எழுதினாலும் உன்னோட குத்து டான்ஸ் தான் ஞாபகம் வருது..;))))

அதுல ஒன்னு போடுப்பா...;))

சந்தனமுல்லை said...

கலக்கல்!! :))

நாகா said...

:-)
என்னடா இது எல்லாரும் ஸ்மைலியே போடுறாங்களே அதுனால நானும்.

கிளியனூர் இஸ்மத் said...

....தூள் கலப்பிட்டீங்க...........

☀நான் ஆதவன்☀ said...

ங்கொய்யால மாசத்துக்கு எல்லா தொடர்பதிவையும் சேர்த்து வச்சு இப்படி ஒரே பதிவா போடலாம் போலயே :)

☀நான் ஆதவன்☀ said...

//அரசியல்வாதி:
பிடித்தவர்: ராமதாஸ் (நோ கமெண்ட்ஸ்)//

என்னா வில்லத்தனம்! :)

Prathap Kumar S. said...

ஹஹஹஹ. கலை கலக்கல்...நான் மூணையும் தொட்டுட்டேன்...

மணிஜி said...

ஏன்? யார் ஆம்ர்ஸ்டிராங்குன்னு கண்டுபிடிக்கப்போறீயா கலை

geethappriyan said...

என்னாமேப்பா...நீ எப்படி எழுதினாலும் உன்னோட குத்து டான்ஸ் தான் ஞாபகம் வருது..;))))

அதுல ஒன்னு போடுப்பா...;))
aniyayaththukku repeatu

geethappriyan said...

//அரசியல்வாதி:
பிடித்தவர்: ராமதாஸ் (நோ கமெண்ட்ஸ்)//

enakku theriyum mappi
unakku pidikkatti than athisayam

புலவன் புலிகேசி said...

//சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!)//

சூப்பர்னே.........

Ashok D said...

கலை, கேள்வி பதில்கள் நல்லாயிருந்தது கடைசி ஒன்ன தவிர.

துளசி said...

//பத்தாவது வரம்: இன்னொரு பத்து வரம் பார்சல்!!//

தேவதை கலையிடம் கேட்கும் ஒரே வரம்...

இந்த பார்சல் வாங்கர பழக்கத்த இதோட விட்டுரும்மா, நல்ல புள்ள இல்ல.

கபிலன் said...

கும்ம்ன்னு இருக்கு...கலை : )

" L - Life is incomplete with out – மரணம்!"

அடா அடா....எப்படி இதெல்லாம் ?

kishore said...

ஒன்னு விளையாடவே கடுப்பா இருக்கு.. இதுல மொத்தமா மூனா..?
நல்லவேளை ஆயா பாயணு எழுதல.. அப்படி எழுதி இருந்தா O for?

நாஸியா said...

\\\ உருளைக்'கிழ'ங்கு (ஏன்னா.. நம்ம யூத் இல்ல..?)\\
என்ன மொக்கை! எப்படி?

அப்துல்மாலிக் said...

3 என்று சொல்லி நிறைய தொட வெச்சிட்டியே நண்பா

கலக்கல்

geethappriyan said...

ஆகா மாப்பி ரொம்ப அருமையா
த்ரீ இன் ஒன் எழுதி கலக்கிட்டடா மாப்பீ
வயிறு வலிக்க சிரித்தோம்,அலுவலகம் என்றும் பாராமல்.
அந்த சாணி மேட்டர் அருமை.:))))))))))))))))))))))))))))))))))
சாணி கையோட கைகுலக்க‌:))))))))))))))))))))))))))))))))))
அருமையோ அருமை.:))))))))))))))))))))))))))))))))))
என்னிக்கும் நீ காமெடியில டாப்புடா மாப்பி.
இங்க வேலை விட்டு விட்டுவருவதால்
நானும் விட்டு விட்டு வரவேன்டியதா போச்சுடா மாப்பி
ஓட்டுக்கள் போட்டாச்சி.

geethappriyan said...

" L - Life is incomplete with out – மரணம்!"

thaththuvam no 1118

Subankan said...

இந்த அப்றோச் எனக்குப் பிடிச்சிருக்கு

ஜீவன்பென்னி said...

படிக்கும் போது நல்லா கலகலப்பா இருந்துச்சு.

சுசி said...

//1. A- Available – இந்த கேள்வி ஹோட்டல்காரன்கிட்ட கேட்க வேண்டியாது! //

என்னா மளுப்பலு...

//டேட்டிங் வித் தேவதை ://

அடப்பாவி... இப்டி ஒரு தலைப்பை நான் எதிர்பார்க்கல.

சுசி said...

//என் அப்பா எனக்கு மீண்டும் வேண்டும்! //
//எப்பொழுதும் நண்பர்களோடான ஒற்றுமை!//

சீரியஸ் கலை டச்சிங்கு....

//பெண் குழந்தை!! //

சூப்பர்....

சுசி said...

//மொத்தமா த்ரீயின் ஒன்னா எழுதி உங்க அன்பை அள்ளிகிறேன்!! //

ஒத்துக்கிறேன்....
ஒத்துக்கிறேன்....
ஒத்துக்கிறேன்....

கீழை ராஸா said...

தொடர் பதிவுகளின் தொகுப்பு அருமையாக இருக்கிறது...எல்லோரையும் ஆம்ஸ்ட்ராங்க் ஆக்கிட்டீங்களே...?

ப்ரியமுடன் வசந்த் said...

// இதை எல்லாம் தனி தனியா எழுதி உங்க பொன்னான, வெள்ளியான, பித்தளையான நேரத்தை சுரன்டி சுண்ணாம்பாக்காமல்...//

முடியலைடா முடியலை இன்னும் சிரிப்ப அடக்க முடியலை...

உன்னையெல்லாம்..

ப்ரியமுடன் வசந்த் said...

//5.E - Essential items you use everyday – ஜ ஆரம்பிச்சி டி யில முடியும்.//

வெட்கம் கெட்டவனே...

ப்ரியமுடன் வசந்த் said...

//13. M - Marriage date – அததான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன் அவ வீட்டுல..//

எப்போடா மேரேஜ்?

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

சொல்லியனுப்பு மாப்பு...

பிப்ரவரியில் பாத்து வை மேரேஜ நானும் வருவேன்ல...

ப்ரியமுடன் வசந்த் said...

//நடிகர்:
பிடித்தவர் : சூஸ்//

சூப்பர் ஸ்டார்

சூப்பர்டா இதுதான் உன்னோட ஸ்டைல்

வினோத் கெளதம் said...

//K - Kids and their names – பெரியவீட்டோடதா? சின்னவீட்டோடதா?//

நடு வீட்டோட..

//ஜ ஆரம்பிச்சி டி யில முடியும்.//

ஜாடியா..

//அததான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன் அவ வீட்டுல..//

யோவ்..எத்தனை வருஷமா தான்யா கேப்ப உன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு சொல்லிப்புட்டேன்..

//இன்னொரு பத்து வரம் பார்சல்!!//

இதான் என் தலைவன் டச்..தலைவன் தலைவன் தான்யா..

//பிடித்தவர்: ராமதாஸ் (நோ கமெண்ட்ஸ்)//

ஏன்..எதுக்கு எப்படி..எப்படி எப்படி...

பாலா said...

அந்த கடேசி வரிதாங்க.. எனக்கு பிடிச்சிருக்கு! :)

Admin said...

ஒரே கல்லில் மூன்று மாங்காய். நீங்க கடும் கில்லாடியா இருக்கிங்க.

பித்தன் said...

//ஐந்தாவது வரம்: சன் பிக்சர்ஸ் படமெடுத்தாலும் பரவாயில்லைங்க தேவ்ஸ்.. இந்த டிரைலர் போடறதை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க.. இல்லனா, கொல்லுங்க!. //

ரைட்டு.... விடு....

//எட்டாவது வரம்: குடிக்கக் குடிக்க வற்றாத ஒரு சரக்கு பாட்டில், மிக்சிங்கோட வேணும். //

நானும் வருவேனுங்கோ....

//நடிகர்:
பிடித்தவர் : சூஸ்
பிடிக்காதவர் : பஞ்ச் பேசும் அனைத்து கபோதிகளும்//

இது கூட பஞ்சு தானுங்கண்ணா.....

//தொடர் பதிவு எழுத கூப்பிட்டாலே ஏதோ சாணி கையோட, கைக்குலுக்குன மாதிரி நம்ம பதிவருங்க மூஞ்சி போற போக்கை பாக்கனுமே... அதனால, நா யாரகிட்டயும் கை குலுக்க விரும்பல!!//

அது.......!

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்! குட் ஸ்டார்ட் குடுத்ததுக்கு..

சென்ஷி -க்கு
நெக்கலு..? ம்ம்..
டேய்! உனக்கே தடுமாறாதபோது எனக்கு தடுமாறுமா?

அது ஒரு கனாக் காலம் -க்கு
உங்க இடைவிடா பணியிலும், சிரித்தமைக்கு நன்றி சார்!!

♠ ராஜு ♠ -க்கு
அசிங்கமா பேசாத ராஜூ! :-)

கலையரசன் said...

கோபிநாத் -க்கு
அதுலையே குறியா இரு! ரூமூக்கு வா... போடுறேன்!!

சந்தனமுல்லை -க்கு
நன்றியக்கா..

நாகா -க்கு
எல்லாரும் போட்டா நீயும் போடுவியா?

கிளியனூர் இஸ்மத் -க்கு
நன்றி பிரியாணி பாய்!!

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
ஆமாண்ணே! ஐடியா குடுத்த எனக்கு வரும்போது டிபன் பார்சல்..
புடிக்கும்ன்னு சொன்னா.. வில்லத்தனமமமமா? ரைட்டு!

நாஞ்சில் பிரதாப் -க்கு
தோடா.. ஆம்ஸ்ட்ராங்கு!

தண்டோரா -க்கு
கண்டுபுடிச்சிட்டேண்ணே! மேல உள்ள பிரதாப்தான் அது..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
டேய் ரிப்பீட்டு போட இது என்ன தலைவரோட முதல் ஷோ படமா?
டேய் அப்படி பார்த்தா.. சரி, வுடு!!

கலையரசன் said...

புலவன் புலிகேசி -க்கு
நன்றி பாஸ்.. சூப்பர் ரொம்ப பாஸ்ட்டா வருது? ரொம்ப பாதிப்போ..?

D.R.Ashok -க்கு
நன்றி அசோக்!

துளசி -க்கு
நன்றி துளசி! அது எப்படி விட முடியும்? கல்யாணத்து போனாலும், மதியத்துக்கு பார்சல் கட்டுறது எங்க பரம்பர வழக்கமில்லலல..?

கபிலன் -க்கு
நன்றி கபில்! அதுவா பிளிருதுங்க...

கலையரசன் said...

KISHORE -க்கு
இருக்குமுடா.. இருக்கும்! ஏபிசிடியில.. ஓ வருமா மச்சி?

நாஸியா -க்கு
நன்றி நாஸியா.. இதுவே மொக்கையா?

அபுஅஃப்ஸர் -க்கு
மகிழ்ச்சி நண்பா! எதையாவது தொட்டா சரிதான்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
என்னடா மழை மாதிரி விட்டு விட்டு.. கமெண்ட் போடுற?
ஆபீஸ்ல கடப்பாரை புடுங்குறியோ? (ஆணி சின்னது மாமு!)

என்னோட தத்துவத்தையும் மதிச்சு நம்பர் போடுற
உன் நட்பை நினைச்சா எனக்குகுகு....

கலையரசன் said...

Subankan -க்கு
உங்க கமெண்ட் எனக்குப் பிடிச்சிருக்கு!

ஜீவன்பென்னி -க்கு
நன்றி ஜீவன்! எப்டியோ சிரிச்சா சரிதான்..

சுசி -க்கு
உங்க கும்மிக்கு நன்றி.. போடா!
அட, திட்டலையக்கா.. போலி டாக்குடரை சுருக்கி போடான்னு சொன்னேன். எப்பூடி?

கீழை ராஸா -க்கு
ஆனாலும் தல.. உங்க ஆர்ம் டபுள் ஸ்ராங்கு!!

கலையரசன் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]-க்கு
அப்பா.. சாமி... முடியலடா!
எதாவது பேசி தொல..

பிரியமுடன்...வசந்த் -க்கு
வெக்கம் கெட்டவனா? அப்ப நீ டெய்லி போடலையா..?
நன்றி மச்சி.. உன்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கு!
கண்டிப்பா பிப்ரவரியில்தான் நடக்குமுன்னு நினைக்கிறேன்.
உன் வாய் ராசி எப்படியிருக்குன்னு பார்ப்போம்!!

வினோத்கெளதம் -க்கு

1. தம்பிரீ.. சின்னதா பெருசான்னு கேட்டா.. மீடியம் வீட்டோடதுன்னு நீ கேக்கனும்!. அது இல்லாம.. அது என்ன நடு வீடு?

2. ஜாடியா? ஜ-வை சொன்னா... நீ ஜாாாாாாவை சொல்லியிருக்க? போயி தமிழை ஒழுங்கா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடு!

//உன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு சொல்லிப்புட்டேன்//
அப்பா... இதுலையாவது சப்போட்டுக்கு வந்தியே!!

கலையரசன் said...

ஹாலிவுட் பாலா -க்கு
உங்கள கூப்பிடல சொன்னவுடனே... உங்க கிட்னியில பால் வார்த்த மாதிரி இருக்கா? ரைட்டு பாசு..

சந்ரு -க்கு
நன்றி சந்ரு.. இன்னம் இரண்டு பேரு கூப்பிட்டா, ஐஞ்சாயிருக்கும்!

பித்தன் -க்கு
நன்றி நியாஸ் உன் கும்மிக்கு!
நீ இல்லாமலா? கண்டிப்பா நான் பிப்ரவரியில தமிழகம் வரும்போது ஓப்பன் பண்ணிடுவோம்..

ஆ.ஞானசேகரன் said...

கலகிட்டீங்க போங்க

Thenammai Lakshmanan said...

//20. T- TAG 4 PEOPLE – 'அன்னை' தெரசா, காந்தி 'தாத்தா', நேரு 'மாமா', 'ஆயா' மனோரமா. (எல்லாம் சொந்தக்காரய்ங்கதான்!!) //

ஹாஹாஹா

கலையரசன் ..

உங்க அழும்புக்கு ஒரு அளவே இல்லையா.. லாப்டாப்பை தட்டி தட்டி சிரிச்சதுல ஸிஸ்டமே ஆடிப் போயிருச்சு... உருண்டு பெரண்டு நிஜமாவே சிரிச்சேன்

Thenammai Lakshmanan said...

அரசியல்வாதி-- பிடித்தவர் --ராமதாஸா ....

ஓஒஹோ வடலூர்காரராச்சே நீங்க அதுதான்..

மகேஷ் : ரசிகன் said...

// F- Favorite colour - உங்க மயிரு... கலர்னு சொல்ல வந்தேங்க!! //

:)))))))))))

Unknown said...

யோவ்.... குசும்பு புடிச்சவன்யா நீயி

மலரகம்(நாகங்குயில்) said...

சார் உங்கள் 3 in 1 சூப்பரா இருக்கு.
மற்றபடி என் வலைப்பக்கத்துக்கு வந்து கமெண்ட்ஸ் கொடுத்ததுக்கு நன்றி.
முக்கியமா word verification ,எனக்கு தெரியாது உங்கள் பின்னோட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி
அதை சரி செய்துட்டேங்க. மிக்க நன்றி

ARV Loshan said...

கலக்கல்.. மூணுமே முத்துக்கள்.. உங்கள் ஜாலி கடிகளை தாரளமாக அள்ளி தெளித்தீர்கள்..
இன்றைய நாளை மேலும் மகிழ்ச்சியாக்கி உள்ளீர்கள்.. நன்றி.

இத்தனை நாள் கழித்து தான் பார்த்தேன் என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்..

CS. Mohan Kumar said...

செம comedy-ங்கோ. Nice writing style

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Blog Widget by LinkWithin