பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலக்கண்ணாடி!! அந்த கண்ணாடியை என்னை திரும்பி பார்க்க வைத்த என் நண்பர் / கிராஃபிக்ஸ் மன்னர் சுகுமார் சுவாமிநாதன் னுக்கு என் நன்றிகள்!!
பள்ளிகூட நினைவுகளை பற்றி எழுதசொன்னவுடன்.. எதை எழுதுவது, எதை விடுவதுன்னு தெரியலை. ஆனா ஆறாப்பு (அ) ஆறாம் வகுப்பு (அ) சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் வரைக்கும் எழுதுனா போதுமுன்னு சொன்னவுடனேதான், கொஞ்சம் நம்மதியாச்சு. இனி ஸ்டார்ட் மியூஜிக்...
என் பள்ளி
"க்ளுனி" என்ற பள்ளியில்தான் 7 வது வரை படித்தேன்! (தம்பி, பெரிய படிபெல்லாம் படிச்சிருக்கு!!) அந்த ஸ்குலு என் அப்பா வேலை செய்த கம்பெனி, அவர்களின் தொழிலாளர்களுக்காக வைத்து நடத்தியது. (அப்ப காசு? புடுங்குனாங்க... புடுங்குனாங்க...) அது முழுக்க முழுக்க கிருஸ்த்துவ மெட்ரிகுலசன் என்பதாலோ என்னவோ.. பக்கா நீட்டாக கிளாஸ் ரூம், நீட்டாக கார்டன், நீட்டாக பிளே கிரவுன்ட், அப்புறம் முக்கியமா நீட்டான டீச்சர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ் (உடனே பின்னூட்டதில கிளம்பிடாதிங்க! நீட்டுன்னா? பக்கவாட்டுலையா.. இல்ல, செங்குத்தாகவா? ன்னு. நீட்டுன்னா, சுத்தம்! சுத்தம்!!) அந்த பள்ளியை இப்ப இடிச்சிட்டாலும், அந்த இடத்தை கடக்கும்போது, என் மனக்கண்களில் இப்பொழுதும் என் பள்ளிகூடம் அங்கு இருப்பதுபோலதான் தோன்றும்!!
முதல் நாள் பள்ளியில்
பள்ளி நாட்களில் என் தம்பி!
என் பள்ளிநாட்களில் என் நண்பர்களை விட ரொம்ப பிடிச்சது என் தம்பி 'ஆடல்'! என் பெற்றோரின் இரண்டாவது பிள்ளை. ஆனால் எனக்கென்று ஒரே சகோதரன் இந்த ஆடலரசன்!! (கலையரசன் & ஆடலரசன் ஆகா.. என்னா ஒரு ரைமிங்கு!) நாங்கள் இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்ததால், ஒன்றாகவே செல்வோம், திரும்புவோம், படிபோம், விளையாடுவோம், உண்போம், உறங்குவோம். இப்படி பல "வோம்" கள் இருந்ததால, பள்ளி நாட்களில் நண்பர்களை விட என் தம்பிதான் ரெரரராம்ம்பப பிடிக்கும்!
பள்ளி நாட்களில் நாங்கள் ஆடாத ஆட்டமேயில்லை. அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது. விளையாட்டெல்லாம் வீட்டிலும், ரோட்டிலும்தான். அப்பா இருக்கும்போது கேரம்போர்ட், செஸ், டிரேட் ன்னு விளையாடி விட்டு, அவர் அந்த பக்கம் போனவுடன் நாங்க இரண்டு பேரும் இந்த பக்கம் 'எஸ்' ஆகி, தெருவில் உள்ள நண்பர்களுடன் ஆட்டம்தான்.
பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் எதாவது பிரச்சனை செய்து சண்டை போட்டுகொள்வோம், சண்டை என்றால்.. தலையனை, சோஃபா, புக்ஸ் ன்னு எல்லாத்தையும் வைச்சி அடிச்சிபோம். எங்கம்மா வந்து "சனியன்களா, வந்த உடனே ஆரம்பிச்சிட்டீங்களா?" என்று ஆளுக்கு ஒன்னு போட்டு ஒழுங்காக இருக்கனுமுன்னு சொல்லிட்டு போவாங்க. பின்னர் கொஞ்சநேரம் ரொம்பவும் அன்பாகப் பழகிவிட்டு, திரும்பவும் அடித்துகொள்ள ஆரம்பிப்போம். நானும் 'அம்மா... தம்பி என்னை அடிக்கிறான்' என்று ஒரே கூச்சல்தான். இப்படி அடித்த தம்பிதான் இப்போது இத்தனை அன்பா? வயதும், வளர்ச்சியும் அவனை எப்படிப் பக்குவப்படுத்தியுள்ளது!!
போதும்.. போதும் நான் விட்டா பேசிகிட்டே அருப்ப.. சே!, இருப்பேன்! அதனால, விடு ஜூட்!!
அடுத்து நான் கொசுவத்தி சுத்த கூப்பிடுற என் அன்பர்கள்...
1. குசும்பன்
3. சுந்தர்ராமன்
தோழர்களே! எழுதுனா நல்லது.. இல்லனா, வெள்ளிகிழமை அவங்க, அவங்க ரூமுக்கு வந்துடுவேன்!!
நாடுவிட்டு நாடுவந்த போதும் கூடவே வரும் நினைவுகள்...
நெஞ்சுக்குள் அடிக்கடி வரும் இந்த மலரும் நினைவுகளே,
இன்றைய என் இருப்பின் அஸ்த்திவாரம்!
44 comments:
தோழர்களே! எழுதுனா நல்லது.. இல்லனா, வெள்ளிகிழமை அவங்க, அவங்க ரூமுக்கு வந்துடுவேன்!!//////////////////////////
இதுக்காகவே கட்டாயம் எழுதுவாங்க
arampictangaya alparaya!!!!!:)
ஓஹோ..ஸ்கூல் படிக்கிறப்ப பசங்க கூட மட்டும் தான் விளையாடுவிங்க அது சரி..
என்னை அழைத்தமைக்கு நன்றி..
நான் கொஞ்சம் பிஸி இருந்தாலும் நீங்க சொன்னதால பதிவு போட ட்ரை பண்ணுறேன் ..
அந்த நாலாம் கிளாஸ்..
பம்ப்செட் அறை..
சரோஜா தேவி புத்தகம்..
இந்த விஷயம் மறந்துதிங்க போல..இதை பற்றி கூட கொஞ்சம் விலாவரியா எழுதி இருக்கலாம்..
நாடுவிட்டு நாடுவந்த போதும் கூடவே வரும் நினைவுகள்...
நெஞ்சுக்குள் அடிக்கடி வரும் இந்த மலரும் நினைவுகளே,
இன்றைய என் இருப்பின் அஸ்த்திவாரம்!
கவிதை அழகு
பிளாஷ் பேக் அருமைங்கோ..
என்னமா பீல் பண்றீங்க ஆவ்....
நல்லா இருக்கு உங்க கொசுவத்தி..
பள்ளி மற்றும் டீச்சர் மேல் உல்ல பாசம், தம்பி மேல் உள்ள பாசம் அதை வி\ளக்கிய கொசுவர்த்தி அருமை
//தோழர்களே! எழுதுனா நல்லது.. இல்லனா, வெள்ளிகிழமை அவங்க, அவங்க ரூமுக்கு வந்துடுவேன்!!
//
மிரட்டல் பலமா இருக்கு... அப்போ என்னா அனுபவப்பட்டிருப்பாங்களோ கஷ்டம்தான்....
:) :) :) :) nice one.
பின்னிட்டீங்க தலைவா...
ரொம்ப சுவரஸ்யமா எழுதி இருக்கீங்க....
இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்க கூடாதா...
அருமையான தொகுப்பு!
மலரும் நினைவுகள் அருமை, கலை.
ரொம்ப நல்லா எழுதியிருக்கே. ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லியிருக்கலாம்.
Good style of writing,
Really admiring.
Keep it up.
இப்படி எல்லாம் இருக்கு என்று சொல்லவே இல்ல....
//மிஸ்சு", மறுநாள் காலையில் என் அம்மாவிடம் "பையன் தெளிவா இருக்கானா?" ன்னு கேட்டுயிருக்காங்க!//
ஹா ஹா ஹா
கைநாட்டு ஆளான என்னை போய் எழுதசொன்னா என்னா செய்வது:)
ரைட்டு விதி வலியது!
கலை கலக்குங்க ...ரொம்ப சுவையாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் நீங்க சொல்லி இருக்கலாமோ ???? அப்படின்னு தோனுது . நீங்கள் அழைத்ததற்கு நன்றி ... ஏதோ என்னால் ஆனதை எழுதுகிறேன் கூடிய சீக்கிரம் ...( எப்ப வேணுமானாலும் வீட்டுக்கு வரலாம் ... அதாவது கராமாவில் வசிக்கும் வீட்டை சொன்னேன்
நல்லாருக்கு உங்க அனுபவம்.
கலை ரொம்ப சுவாரஸ்யமாக எழுதினீர்கள்.
அந்த வருடம் தான் நானும் பள்ளியில் சேர்ந்தேன்.
same pinch
இன்னும் புகைப்படங்கள் போட்டிருக்கலாமே
அதுவும் சிறு வயது ஜடை வைத்து ,மை வைத்து பீப்பீ ஷூ போட்டு.வயர் சேரில் அமர்ந்து எடுத்த போட்டோக்கள்.
கல்லூரியை எல்லாம் விட்டு விட்டீர்களே?
வாளுத்தனத்தை மறைத்து எழுதிஉள்ளீர்கள்.
அடுத்து வினோத் கவ்தம் கலக்குவார் பாருங்க.
ஒட்டு போட்டாச்சி.
ஆஹா... மறுபடியும் ஆரம்பிச்சிடிங்களாடா ... இருந்தாலும் அழகான நினைவுகளின் அழகான தொகுப்பு..
சின்ன வயசுல நடந்தது இதுவரைக்கு ஞாபகம் 'இருக்கா'ன்னு? நீங்க மறக்காம ஞாபகமா கேட்டா... என் பதிலு: "அம்மா சொன்னாங்க" //
ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க.
அண்ணன் தம்பியை விட சிறந்த நண்பர்கள் யாருமில்லை என அழகா சொல்லிட்டீங்க.
ஃப்ளாஷ்
ஃப்ளாஷ்ன்னு
ஃப்ளாஷ்பேக் சூப்பரா சொல்லிட்ட? அப்பிடீன்னு சொல்லலாம்ன்னு பாத்தேன் ஆனா நீங்க 1982 ஸ்கூல் போனேன்னு சொன்னீங்களா அப்படி பாத்தாக்கா உங்களுக்கு என்னவிட 5வயசு ஜாஸ்தீன்னு நினைக்கிறேன்
அதனால இனிமே வாங்க போங்க தான் வயசானவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்ல.......
சுமார் 31வயசு இருக்குமா உங்களுக்கு?
(படம் போட்டு பின்னூட்டம் போடுவது எப்படின்னு யாராச்சும் சொன்னீங்கன்னா
இதுக்கு கொசுவத்தி படம் போடலாம்)
நல்ல நினைவோட்டம் கலை!
அது என்ன நாங்களா யோசிக்கறதுக்கு முன்னாடி நீங்க உங்க கான்வெண்ட் டீச்சர்ஸ் பத்தி சொல்றீங்க.."கிச்சா வயது 16" மாதிரி ஏதாவது சேட்டை பண்ணீங்களா?
Suresh Kumar -க்கு
வாங்க சுரேஷ்.. அப்படியா சொல்றீங்க?
biskothupayal -க்கு
பின்னே ஆரம்பிக்காம? எவ்வளவோ செய்யறோம்,
இதையும் செய்வோம்! நன்றி முதல் வருகைக்கு!!
வினோத்கெளதம் -க்கு
தம்பி.. உன்னை மாதிரி
ஆன்டிங்க கூடவும், பாட்டிங்க கூடவும்,
விளையாட சொல்றீயா?
//கொஞ்சம் பிஸி//
டேய்.. டேய்...
நாயிக்கு வேலையில்ல..
நிக்க நேரமில்ல..
sakthi -க்கு
ஆகா! கவிதை ராணியே, எனக்கு பட்டம் கொடுத்துட்டாங்களே!!
ரெட்மகி -க்கு
முதல் வருகைக்கும், அவ்வ்வ் க்கும் நன்றிகள்!!
நாகா -க்கு
நீங்களும் கொசுவத்தி ரெடி பன்னிக்குங்க.. அழைப்பு விரைவில்!!
அபுஅஃப்ஸர் -க்கு
அப்ப இடுகையை முழுவதுமா படிச்சிருக்கீங்க போல?
உங்க பாராட்டுக்கு நன்றி அபு!!
ஒரு தடவை உங்க ரூமுக்கு வரட்டா?..
மௌனமான நேரம் -க்கு
Thanks 4 ur congenial comment!!
Sukumar Swaminathan -க்கு
வாங்க தல.. இன்னம் கொஞ்சமா?
ஆளை விடுங்கடா சாமிகளா...
ஆனா உங்கள மாதிரி எழுத முடியலைன்னு கொஞ்சம் வருத்தம்தான்!
வால்பையன் -க்கு
டெம்பிளேட் பின்னூட்டம் இல்லையே? :-)
Joe -க்கு
நன்றி மச்சி!
//ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லியிருக்கலாம்//
டேய்! ஒழுங்கா எல்லாதையும் படிச்சியா?
நான்தான் எழுதியிருகேனே.. மிஸ்சுங்க பேரை, அப்புறம் என்ன ஆசியர்கள் பேரு வேற.. பெங்களூர்ல குளிர் ஜாஸ்தியோ? சாமி..
நீயும் ரெடியாகிக்கோ! லிஸ்டில் நீயும் இருக்க!!
நல்லாயிருக்கு :))))
Ranjitha -க்கு
I deem this is not a derogatory comment?
Just 4 flippant…
Thank u for frequent coming!
சந்ரு -க்கு
அதான் இப்ப சொல்லிட்டோமுல்ல?
காசு கொடுங்க.. :-)
குசும்பன் -க்கு
//கைநாட்டு ஆளான என்னை போய் எழுதசொன்னா என்னா செய்வது//
அதான் செக்ரட்டரி வச்சிருக்கீங்க இல்ல?
அவங்கள எழுத சொல்றது..
//ரைட்டு விதி வலியது!//
இல்லணே! விதி கொடியது!!
சுந்தர்ராமன் -க்கு
ரொம்ப மகிழ்ச்சி சார், உங்க பாராட்டுக்கு..
எப்ப நேரம் இருக்கோ, அப்ப எழுதுங்க போதும்!
கண்டிப்பாக, ஒரு நாள் வருகிறேன் பாஸ்!!
அக்பர் -க்கு
மகிழ்சியா இருக்கு உங்க வருகை!!
கார்த்திக்கேயன் -க்கு
நன்றி கார்த்தி! அந்த போட்டோஸ்
எல்லாம் இந்தியாவில் இருக்கு.
எல்லாவற்றையும் ஸ்கேன் செய்யனும்,
இந்த தடவை போகும்போது செய்கிறேன்!
நன்றி ஞயாபக படுத்தியமைக்கு..
KISHORE -க்கு
நன்றி மாமு!
ஹய்.. நீ கூப்பிடும்போது?
உனக்கும் இருக்குடி ஆப்பு!
விக்னேஷ்வரி -க்கு
நன்றிகோ.. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
பிரியமுடன் வசந்த் -க்கு
நன்றி வசந்த்..
எனக்கு கன்டபடி வாயில வந்துடும் ஆமா..
உன்னை யாராச்சும் கேட்டாங்களாய்யா?
ஒக்காந்து என்னி என் வயச போட்டுருக்க.
படம் போட்டு பின்னூட்டமா?
இங்க வந்தும் ஆரம்பிச்சிட்டான்யா..
ச.செந்தில்வேலன் -க்கு
பாராட்டுக்கு நன்றி செந்தில்!
"கிச்சா வயசு 16" படமெல்லாம்
பாக்கறீயா ? ம்ம்ம்...
இது 6 வது வரைக்குதான்
எழுதனுமுன்னு சொன்னதுனால,
என் ராசலீலையை எழுதமுடியல..
க்ளூனி நெய்வேலியில இருக்கில்ல ? ஆனா அது லேடீஸ் ஸ்கூலாச்சே?
thank you remembering my childhood days...
நினைவுகளை அசைபோடுவது, எல்லோருக்குமே பிடித்தமான சோகம் மற்றும் சந்தோஷம் போல:-))
நல்லா கொசுவர்த்தி சுத்தியிருக்கீங்க!
அருமையான நினவுகள்! வாழ்த்து(க்கள்)!
ரொம்ப peel pannitinga போல....
Good posting .........
Feel free to visit my blogspots
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
I am working in Dubai and is writing about Middle East in www.edakumadaku.blogspot.com
கலை,
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது தந்திருக்கிறேன். இங்கே வந்து பாருங்கள்
http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_14.html
Best wishes for today's meeting.
சூப்பரா எழுதி இருக்கீங்க கலையரசன்.
//மும்தாஜ் மிஸ் என்று //
மெய்யாலுமா.... அப்புறம் புள்ள எங்கேன்னு படிக்கும், பாவம்.
/ /அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது//
அது யாரோட நல்லகாலமோ...
//எங்கம்மா வந்து "சனியன்களா, வந்த உடனே ஆரம்பிச்சிட்டீங்களா?"//
மம்மீல்ல, அதான் கரீட்டா சொல்லி இருக்காங்க.
//போதும்.. போதும் நான் விட்டா பேசிகிட்டே அருப்ப.. //
உண்மைய ஒத்துக்கிட்ட நல்லவரு நீங்க.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். கூட ஒரு பொண்ணு போகுதே! அது யாரு? சொல்லலேன்னா நீங்க என்ன மாதிரி பாதி இல்ல முழுசாவே கெட்டவர்.
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
செந்தழல் ரவி -க்கு
க்ளூனி கோ-எட் வடலூரில் இருந்தது ரவி
க்ளூனிஸ்கூலை பற்றி தெரியுதே உங்களுக்கு..
உங்க சொந்த ஊர் எதுங்க ரவியாரே?
Thamizhan -க்கு
Thanks for 1st attempt :-)
கிருஷ்ணமூர்த்தி -க்கு
உண்மை மூர்த்தி.. நன்றி முதல் வருகைக்கு..
மகேஷ் -க்கு
நன்றி மகேஷ்!
Niyaz -க்கு
ரெரரரராம்ம்பபப...
நன்றி நியாஸ்!
R.Gopi -க்கு
|Thanks 4 coming|
I have readed ur posts,
its mind blowing.. keep posting!
Keith Kumarasamy -க்கு
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு
நன்றி கீத்!!
RAD MADHAV -க்கு
Thanks 4 ur wishes!!
சுசி -க்கு
கூல் டவுன் சுசி..
என் இந்த கொலவெறி?
வந்ததுக்கும், என்னை
நல்லவன்னு சொன்னதுக்கும்
நன்றியம்மமமா!!
சூப்பரா எழுதி இருக்கீங்க கலையரசன். //மும்தாஜ் மிஸ் என்று // மெய்யாலுமா.... அப்புறம் புள்ள எங்கேன்னு படிக்கும், பாவம். / /அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டரோ, டி.வியோ ஏன் டிரான்ஸிஸ்டர் கூடக் கிடையாது// அது யாரோட நல்லகாலமோ... //எங்கம்மா வந்து "சனியன்களா, வந்த உடனே ஆரம்பிச்சிட்டீங்களா?"// மம்மீல்ல, அதான் கரீட்டா சொல்லி இருக்காங்க. //போதும்.. போதும் நான் விட்டா பேசிகிட்டே அருப்ப.. // உண்மைய ஒத்துக்கிட்ட நல்லவரு நீங்க. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். கூட ஒரு பொண்ணு போகுதே! அது யாரு? சொல்லலேன்னா நீங்க என்ன மாதிரி பாதி இல்ல முழுசாவே கெட்டவர்.
Post a Comment