ஏன் தெரியுமா 10 வயசுக்குள்ளாற குழந்தைகள் இருக்குற நண்பர்கள் வீட்டுக்கு போன் பண்ணக்கூடாது? அந்த கொடுமைய சொல்றேன் கேளுங்க..
நான் சமீபத்துல, என் நண்பிக்கு போன் செஞ்சியிருந்தேன். அவங்க பிரசவம் முடிஞ்சி கொஞ்சம் பிஸியாகிட்டதால, 1 வருஷத்துக்கு மேல அவங்ககிட்ட பேச முடியலை. திடீர்னு ஞாபகம் வந்த மாதிரி ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க! (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது!). சரின்னு.. நானும் என்னமோ, ஏதோன்னு போனை போட்டங்க...
வழக்கம்போல நலம் விசாரிச்சிட்டு, தெரியாத தானமா ஒன்னு கேட்டுடங்க.. என்னான்னா? அந்த டயலாக் டெலிவரிங்களை நீங்களே கீழ படிங்க தெய்வங்களா..
நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான்? என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..?
நண்பி : ஆமா.. இப்பெல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டான் யா! என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்..! இரு, அவன்கிட்ட தரேன்!
நானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...
நானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...
(போன் புடுங்கப்படுகிறது. கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும்..)
நண்பி (தூரத்திலிருந்து): எப்டி மாமா இருக்கீங்கன்னு கேளு!
பையன் : (சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): கேளுடா!
பையன் : (சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): கேளுடா!
(என் மனசு: "கொய்யால.. கேட்டு தொலடா! இல்லனா.. உடமாட்டா போலருக்கே!")
நண்பி (தூரத்திலிருந்து): கேளு செல்லலோம்.. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): கேளு செல்லலோம்.. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு!
பையன் : ..கா.. கொள.. க..
நானு : (இப்ப நான் சத்தமே போடல)
நண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு கலை!
நானு : டாய் குட்டி.. சாப்டியாபா? (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..
நண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு கலை!
நானு : டாய் குட்டி.. சாப்டியாபா? (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..
(இந்த வசனத்தை சொல்லி 5 நிமிஷம் கழிச்சி நண்பி வந்தாங்க லையனுக்கு)
நண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..
நண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..
நானு : இதுமாதிரி பேசிகிட்டு இருந்தா சீக்கிரமா வார்தைகளை கத்துபான்!
நண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.
நண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.
(திரும்ப என்னைய கேக்காமலேயே, அந்த பெரிய மனுஷன்கிட்ட போனை கொடுதுடுச்சு)
பையன் : (சத்தமே போடல)
நண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
பையன் : (சத்தமே போடல)
நண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்!!
அப்பாடா நல்வேளை.. இசட் வரைக்கும் போகாம ஒரு வழியா போனை வாங்கி, அவங்க வீட்டுகாரருக்கு வேலை விஷயமா கேக்க ஆரம்பிச்சி, நான் அடுத்த வாரம் இன்ஃபாரம் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்.
ஒரு பத்து நாள் கழித்து, அவளுடைய வீட்டுகாரர் வேலை சம்பந்தமான சர்ட்டிபிகேட் அட்டஷ்டேசன் குறித்து போன் பண்ணலாமுன்னு நினைச்சேன். அய்யோ.. உடனே அந்த நினைப்பை எச்சி தொட்டு அழிச்சிட்டு, chat பண்ணா தப்பிசி்டலாமுன்னு அறிவா(?) கணக்கு போட்டு, சாட்ங்குல அவளை பிடித்தேன்.
நானு : Hai
நண்பி : Hang on, my son is all over the laptop
நானு : ok
நண்பி : He wants to say something to you
நண்பி : .z..,zxcnv..a.,x
நண்பி : Hang on, my son is all over the laptop
நானு : ok
நண்பி : He wants to say something to you
நண்பி : .z..,zxcnv..a.,x
இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?
51 comments:
தலைப்பு எங்கயோ போகுதே கலை
\\"கொய்யால.."\\
இதில் பொர்ட்பிழை உள்ளது புலவரே...!
கொய்யால என்று சொல்வதை விட ங்கொய்யால என்று சொவதே உச்சிதம்.
எங்க சொல்லுங்க பாக்கலாம்...
ங்
கொ
ய்
யா
ல..
"ங்கொய்யால.."
//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?//
அடுத்த பதிவ போட்டு தாக்குங்க :=))
ங்கொய்யால.. நீங்க காண்டானது இல்லாம எங்களையும்......
நல்லா பட்டிருப்பீங்க போல :))
ஒன்னு கவனிசீங்களா.. உங்க தோழி "எ பி சி" சொல்லி கொடுத்தாலும் குழந்தை "க கோ கௌ" சொல்றத :))
//தலைப்பு எங்கயோ போகுதே கலை//
ரிப்பீட்ட்டேய்
ஹா ஹா ஹா.. நல்ல பதிவு ...
ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கீங்க போல
என்ன நண்பா.. இப்படி சொல்லிட்டே.... அடுத்த வாரம் நான் உனக்கு போன் போட்டு, எனக்கு பொறக்க போற பிள்ளைகிட்டே பேச வைக்கலாம்னு நெனச்சேன்...
நல்லாத்தான் பல்பு வாங்கறீங்க.சாமார்த்தியம் பத்தலை உங்களுக்கு :)
//ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க! //
எந்த பொண்ணு போன் செஞ்சு பேசி இருக்கு ராசா? அது மேனிபேக்ச்சரிங் செட்டிங்ஸ்:)
she want to share with his son.
like me....
Me too get same blood some time but now I'm doing the same
:-))
Revenge
உங்க புள்ளகிட்ட
போன் கொடுத்து உங்க நண்பி கிட்ட பேச சொல்லுங்க....
ஹா ஹா
கேர்ள் பிரென்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடிதான் படுதுராங்கன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் இது போலயா..... நீங்க கலக்குங்க கலை....
//ரெட்மகி said...
Revenge
உங்க புள்ளகிட்ட
போன் கொடுத்து உங்க நண்பி கிட்ட பேச சொல்லுங்க....//
ரிபீட்ட்ட்ட்
டேய் மாப்பி
அதுதான் அழகான பொண்ணா பொறக்கனும்னு சொல்றது.
நிறைய std isd கால்.(மணிக்கணக்கில்) கிரீடிங் கார்ட்ஸ்
வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் வந்து குவியும் gifts.
நம்ம பசங்க ரொம்ப நல்லவங்கடா மாப்பி
நான் இதுபோல பொன்னுங்களுக்கோ , எப்போதும் பிசியாய் காட்டிக்கொள்ளும் பிஸ்து ப்ரெண்டு களுக்கோ போன் செய்யறதை விட்டுவிட்டு
இப்போ ப்ளாக் தொடங்கி ஒரு நாளைக்கு 4 பதிவு போடுறேன்னா பாரேன்.
ஒட்டு போட்டுட்டேன்,எனுக்கும் போட்டுடு.
உன் அருமையான் கருத்தயும் போடுடா
ங்கொய்யால..
ங்கொய்யால..
ங்கொய்யால..
ங்கொய்யால..
ங்கொய்யால..
//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?//
இப்படி கேக்கும் போது மாதவன் மாதிரியே இருக்கடா ... என்ன ஒன்னு ரைமிங் அண்ட் டைமிங் தான் தான் மாறுது... சரி விடு... அடுத்த தடவ போன் பண்றதுக்கு முன்னாடி .. அய்யனாருக்கு ஆடு வெட்டுறேன்னு வேண்டிக்கோ .. எல்லாம் சரி ஆகிடும்
சாட்லயுமா!?
முடியாது தல
முடியவே முடியாது!
//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?//
என்ன கேள்வி இது? அவுங்களுக்கு தங்கச்சி யாரும் இல்லையா?
போன் பண்ண பொதுவ பிரச்ச்னை வரும் இப்படியெல்லாம் கூட வருமா? உசாரு
கேர்ள் ஃபிரண்ட் புள்ளா.. போன் பண்ணா தொல்ல.. ஹூம்.. எங்கியோ போய்ட்டே.... (ஏய் இரு...இருடா.. வேணாம்.. அப்பிடி எங்கதான் போய்ட்டான்னு யாரும் கேட்கப்படாது)
உங்களோட அந்த பிரண்டும் இத படிப்பாங்களா? ஹி..ஹி..
,khfk ;;;;
k;ggj9tv gbii
juglf kkkkkk
aww
.
.
.
.
.
.
.
.
ஒண்டுமில்லை, பையன் இப்ப பின்னூட்டம் போட பழகிட்டான்.
-கேர்ள் ஃபிரண்ட்-
ஹிஹிஹி :))
Suresh Kumar -க்கு
தலைப்பு எங்க போகுது பாஸ்? புடிங்க அதை!!
டக்ளஸ் -க்கு
//இதில் பொர்ட்பிழை உள்ளது புலவரே...!//
பொருட்பிழையையே பிழையாய் எழுதியுள்ளீர்கள் தலைவரே...!!
:-)
RAD MADHAV -க்கு
அதுகுள்ளேயே அடுத்த பதிவா? டைம் குடு மச்சி!!
பித்தன் -க்கு
ஆக்குவோமுல்ல.. ஆக்குவோமுல்ல.. ஆக்குவோமுல்ல..
ச.செந்தில்வேலன் -க்கு
ஆகா.. கொளம்பிட்டாருய்யா, தமிழ் புலவரு!!
குறை ஒன்றும் இல்லை -க்கு
நான் காண்டானது உங்களுக்கு சிரிப்பா இருக்கு.. ம்?
நன்றி பாஸ் வந்தமைக்கு..
என் பக்கம் -க்கு
அனுபவிச்ச கொடுமையில எழுதி இருக்கேன் பிரதீப்பு...
நையாண்டி நைனா -க்கு
இனி அந்த கொடுமை வேறையா நைய்னா? ரைட்டு!
சின்ன அம்மிணி -க்கு
நன்றி அம்மணி.. முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்!
சாமார்த்தியம் எங்க அம்மிணி கிடைக்கும்?
குசும்பன் -க்கு
அனுபவம் பேசுதோ?
யாசவி -க்கு
நன்றி யாசவி முதல் வருகைக்கு!
எத்தினி பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?
ரெட்மகி -க்கு
ஜடியாவா? அப்பயும் என் காச கரியாக்கதான் நிக்குற..
புதுசா பதிவு எல்லாம் போட்டுருக்க, கலர் கலரா இபான்ட் எல்லாம் வச்சிருக்க என்ன புதுசா கட்சி ஏதாவது ஆரம்பிசிருகியா ? சாக்ளைட்டு கொடுங்க சார்
(seems one more pithan is there thats why i changed my display name to [பி]-[த்]-[த]-[ன்])
Sukumar Swaminathan -க்கு
நல்லவேளைய்யா.. கரைக்டா படிச்சேன் உன் பின்னூட்டத்தை.
'பக்'குன்னு ஆகிடுச்சு ஒரு நிமிஷம்!
ஆ.ஞானசேகரன் -க்கு
அவருக்கு சொன்னதே உங்களுக்கும் "ரிபீட்ட்ட்டே"
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நீ பொண்ணா பொறந்திருந்தா எனக்கு வசதியா போயிருக்கும்..
சே!.. தப்பா நெனைக்காத. அருமையான நண்பி கிடைசிருக்குமுன்னு சொல்ல வந்தேன்!
SUBBU -க்கு
காப்பி, போஸ்ட் கரைக்டாதான் ஒர்க் ஆகுது!
KISHORE -க்கு
என்னை வர்ணிக்க அந்த சொம்பு பேருதான் கிடச்சுதாடா?
அய்யணார் வெஜிட்டேரியனுக்கு மாறி ரொம்ப காலம் ஆச்சே!
நீ இன்னம் கொஞ்சம் வளர்ந்தவுடனே வந்து, கமெண்ட் போடுப்பா!!
வால்பையன் -க்கு
ஆமா வால்!
எவ்வளவோ டிரை பண்ணேன்... முடியல!!
நான் ஆதவன் -க்கு
வாங்க தல.. இருந்திருந்தா, ஏன் இந்த பஞ்சாயத்து இங்க வருது?
அக்னி பார்வை -க்கு
வந்துடுச்சேண்ணே.. வந்துடுச்சேண்ணே..
கீத் குமாரசாமி -க்கு
ஒரு 20 கிலோ மீட்டர் போயிருப்பேனா? :-)
Thamizhan -க்கு
தமிழன்னு பேரை வச்சிகிட்டு.. நீங்களே மாட்டி உட்டுடுவீங்க போல...
வேந்தன் -க்கு
அய்யய்யோ... இங்கேயுமா? :-)
[பி]-[த்]-[த]-[ன்] -க்கு
நாட்டுல பல பித்தனுங்க இருக்கானுங்கடா...
நீ போசாம உன் நிஜ பேரு "முனியாடி" யையே வச்சிக்கோ!!
//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய?
//
மறுபடியும் ஒரு ஃபோனைப்போட்டு காண்டுலே இன்னோரு பதிவை போடுங்க தல....
எல்லாம் நேரம்டா..!
நல்ல நகைச்சுவை,கலை.ரசித்துப் படித்தேன்.
///நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான்? என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..? ////
ஆரம்பிச்சது நீங்க தானே கலை....அப்ப அனுபவிச்சுத்தான் ஆகனும்.. :-))
சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது...
உங்க முகம் போன போக்கை பார்க்க எங்களுக்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை...
வழிய தேடிப்போய் அனுபவித்துள்ளீர்கள்...
;-)))
மச்சி இப்போ கூட சாட்ல கடலதான் போட்டுட்டு இருக்கியா? மகன் பேர சொல்லி.......
அடிச்சு ஆடியிருக்கீங்க கலை...மனசும் சேர்ந்து சிரித்தது...fantaastic!
// (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா!
பையன் : ..கா.. கொள.. க..
நண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்!!//
படா தமாஷாக் கீது போ !! இந்த மேரி அல்சாமா குல்சா , ஆளுக் கிட்ட நீங்க மாட்டிக் கிட்டத,ரவ ரோசன பண்ணி, இப்பக் கூட சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணா போச்சி !!
(அல்சாமா குல்சா = பீட்டரு உடுற ஆளு)
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
இணையதள முகவரி:www.findindia.net
Alaghiya kavithai nu en mazha type panatha podalam nu irunthaen .. he he athu malalai sol unaku puriyathu kalyanam seithu uncle agu appo therium he he nangalum unnai mathiri kalacha theriyum... ha ha ha
en maga mail ellam type siehtu anupi irukanga a uuu nu sound than varum athu ellam kavithai ;) machi ha ha ha
eppadi love panum pothu sappa petchai ellam aa super nu sonnom athu mathiri than iethuvum
சும்மா ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க ஐயா!
வாழ்த்துக்கள்
போன் பேசறதுக்கு முன்னாடியே எப்டி பேசினா என்ன நடக்கும்னு யோசிக்கர்த்தில்லையா கலை?
ஏன் கலை உங்க ப்ரெண்டு போர் அடிக்கறத ரசிச்சிக்கிட்டு இருந்தேகலாக்கும்?
போனை கட் பண்ணிட்டு சிக்னல் இல்லைன்னு சொல்றத விட்டுட்டு பொலம்பர்த பாரு!!!
அன்புடன்,
அம்மு.
//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய? //
இப்போ, ஒண்ணும் செய்யாம இருக்கறது நல்லதுன்னு நெனக்கறேன்....
//டக்ளஸ் said......
கொய்யால என்று சொல்வதை விட ங்கொய்யால என்று சொவதே உச்சிதம்.
எங்க சொல்லுங்க பாக்கலாம்...
ங்
கொ
ய்
யா
ல..
"ங்கொய்யால.."
------------------
டக்ளஸ் புலவரே...... சூப்பர் டியுஷன்...... நான் தமிழ சொன்னேன்.....
அபுஅஃப்ஸர் -க்கு
வருகைக்கு நன்றி! மறுபடியும் சொ.கா.சூ வா? முடியல...
நாகா -க்கு
நன்றி! யாரோட நேரம்டா?
ஷண்முகப்ரியன் -க்கு
தலைவா! எங்க போயிருந்தீங்க இத்தனை நாளா?
நீங்களே பாராட்டிடீங்களே ஐயா.. நன்றி!!
சம்பத் -க்கு
நன்றி பாஸ்.. ஆமா சம்பத், தெரியாம வாய கொடுத்துடேன்!
nila -க்கு
வாங்க நிலா! அம்புட்டு நல்லெண்மா உங்களுக்கு.. நல்லாயிருங்க!
கோபிநாத் -க்கு
கடமை?
பிரியமுடன் வசந்த் -க்கு
நீ சி.பி.சி.ஐ.டி யா போக வேண்டியவன்டா...
கரைக்டா கண்டுபுடுச்சிட்டியே!
பா.ராஜாராம் -க்கு
நன்றி ராஜா... பாராட்டுக்கும், முதல் வருகைக்கும்!!
டவுசர் பாண்டி -க்கு
வாங்க பாண்டி... நம்க்கு வேதனை, டவுசருக்கு காமெடி..ம்?
Suresh -க்கு
ஆமான்டா சுரேசு.. நீயாவது நான் போன் பண்ணா உன் குழந்தைகிட்ட குடுத்துடாத..
வலசு - வேலணை -க்கு
வருகைக்கு நன்றி... எதை கலக்கினேன்? வவுத்தையா?
Ammu Madhu -க்கு
மனசு கேக்கலையே.. மனசு கேக்கலையே..
வருகைக்கு நன்றி அம்மு அவர்களே!!
R.Gopi -க்கு
நன்றி கோபி வருகைக்கு...
ஒன்னும் செய்யவேணாமா? அப்ப சொரிய வேண்டாமா?
நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..
அட மடப்பையன் மவனே நீ சிக்கிகிட்டது போதாதுன்னு ப்லாக்ல எழுதி போட்டு என்னையும் எ பி சி டி கத்துக்க வெச்சுட்டியே......
SUPER
Post a Comment