Tuesday, September 29, 2009

ரெண்டையும் யூஸ் பண்ணுங்க!! (-18)

--------------------------------------------------------------------------------------------------------------
நம்ம பல பேரு வாழ்க்கையில அவங்களுக்கு எல்லாம் செயல்பாடும் சரியா நடக்குதான்னு கவலை பட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா, இவங்க கவலை படுறதுனால.. என்னா ஆக போகுது? உன்னை போல் ஒருவன் பட தொடர் விளையாட்டை பதிவருங்க நிறுத்திட போறாங்களா?

அதுக்குதான் ஒரு தடவ தலைவர் ஒரு குட்டி கதை சொன்னாரு.. கத தெரிஞ்சவங்க இங்கயே பனாலாயிடுங்க! இல்லைங்ரவங்க ஸ்டெப் பார்வேர்ட்...

ஒரு ஊருல வயசான தாத்தா ஒருத்தவரு, துடுப்பு பயணப்படகு வச்சி ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு ஆட்களை விட்டு பொழப்பு நடத்திகிட்டு இருந்தாரு. அப்ப ஒரு பயணி, ஒரு துடப்புல "வேலை"ன்னு எழுதியிருக்கறதையும்.. மற்றொரு துடுப்புல "நம்பிக்கை"ன்னு எழுதியிருக்கிறதையும் பார்த்தான். அத பார்த்தவன் சும்மா இருப்பானா? உடனே தாத்தா... தாத்தா... விளக்கம் ப்ளீஸ்ன்னான்.

உடனே தாத்தா விளக்கம் கொடுக்குறதவிட செயல்முறை விளக்கம் கொடுக்கறேன் பாருன்னு சொல்லிட்டு... வேலைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, நம்பிக்கைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. படகு உடனே செக்கு மாட்டை போல ஒரே இடத்துல சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

அடுத்த கட்டமா நம்பிக்கைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, வேலைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. இப்பவும் படகு சுத்துச்சு, ஆனா எதிர்மறையான திசையில சுத்த ஆரம்பிச்சுடுச்சு. இப்பவும், அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

இதுலயிருந்து இன்னா தெரியுது? (உனக்கு வேலையில்லன் தெரியுதுன்னு இங்க சொல்லாதீங்க.. எங்க சொல்லனுமுன்னு உங்களுக்கே தெரியும்!)

என்னதான் கோயிலுக்கோ, சர்ச்சுகோ, மாஸ்குக்கோ போயி கடவுள்கிட்ட அழுது, உழுந்து புரண்டு, குனிஞ்சி வேண்டிகிட்டு வீட்டுக்கு வந்து நம்பிகையோட உக்காந்திருந்தா முன்னேறமுடியுமா? இல்லனா... மாடுபோல மாங்கு, மாங்குன்னு நம்பிகையில்லாம வேலையை மட்டும் முன்னேறமுடியுமா?? ரெண்டுமே ஒரு துடுப்பை வச்சி துடுப்பு போட்ட கதைதான்.

அதனால க.க.* (எ) ப.பெ.ப** என்ன சொல்றாருன்னா... வேலை செய்யாம நம்பிக்கையை வச்சிகிட்டு மட்டும் வாழ்க்கையில முன்னேற முடியாது! அதனால.. பெரியோர்களே, தாய்மார்களே கவலப்படுறத விட்டுட்டு... இரண்டு துடுப்புகளையும் வாழ்கைங்குற கடல்ல போட்டு வெற்றிகரமாக முன்னேறுங்கள்!!!!
--------------------------------------------------------------------------------------------------------------

* - கருத்கந்ததாமி
** - பஞ்சாயத்து பெரிய பன்னி

45 comments:

☀நான் ஆதவன்☀ said...

வந்துட்டாருய்யா நாட்டாமை சொம்பை தூக்கிகிட்டு :)

☀நான் ஆதவன்☀ said...

ஆமா தாத்தான்னு கதையில சொல்லிட்டு ஒரு பாப்பா படத்தை போட்டிருக்குற? நல்லாதான் இருக்கு(நான் கதையச் சொன்னேன்)

கிளியனூர் இஸ்மத் said...

அண்ணாத்த...........இது உங்க பதிவா..?.....துடுப்பு போடலைன்னா...அடுப்பு எரியாது கலை....

geethappriyan said...

மாப்பி ,ரொம்ப நல்லா சொன்ன .
நான் உ போ ஒ .பற்றி பதிவு போடலை ப்பா .
தென்கச்சி போல நறுக்கென வந்த வார்த்தை வீச்சு
கீப் இட் அப்
ஒட்டு போட்டாச்சு

சிம்ம‌பார‌தி said...

//வேலை செய்யாம நம்பிக்கையை வச்சிகிட்டு மட்டும் வாழ்க்கையில முன்னேற முடியாது!//

நாங்க நம்பிக்கையோட வேலை பார்க்க தயார்... ஆனா... பார்க்கற வேலை நம்பிக்கையானதானுதான் தெரியல....

சிம்மபாரதி

வினோத் கெளதம் said...

Maasathuka 5 kanaku Kaatanum thaan athukaaga ippadiyaa "karuthu kanthasaamy" mathiri maaridirathu:)

உங்கள் ராட் மாதவ் said...

நல்ல பதிவு கலை..

ஏதாவது வேலை கொடுத்தேங்கனா...நம்பிக்கையோடு வேல பார்ப்போம்... :‍‍‍‍‍))))

Raju said...

சொம்பு ரொம்ப அடி வாங்கிருக்கு போலயே..!

அகல்விளக்கு said...

கதைய விட கதைல வர்ர தாத்தா ஜீப்பரு...

ஆமா எங்க அந்த கேள்வி கேட்ட பயணி??
அவரு படத்தயும் போடலாமுல்ல.!

Subankan said...

பதிவில இருக்கிற தாத்தா படம் சூப்பராயிருக்கு!

kishore said...

படத்துல இருக்குற மாதிரி ஒரு பொண்ணு கூட படகுல போனா.. எவன் துடுப்ப பாக்குறது அப்புறம் கேள்வி கேக்குறது ?

kishore said...
This comment has been removed by the author.
அக்னி பார்வை said...

avvvvv... super kalai

அப்துல்மாலிக் said...

ஒரு துடுப்பை வெச்சிக்கிட்டு பெரிய அடுப்பு பத்தவெச்சிட்டீங்க‌

நீங்க ரொம்ப நல்லவருங்கோ ஆஅவ்வ்வ்வ்வ்வ்

வினோத் கெளதம் said...

// Subankan said...

பதிவில இருக்கிற தாத்தா படம் சூப்பராயிருக்கு!//

பதிவுக்கு மேல இருக்கிற தாத்தா படம் தான் சூப்பரு..:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இன்னா நைனா ரூட்டு புதுசாக்கீது? ஆனா சோக்காக்கீதுப்பா :)

Ranjitha said...

நல்ல கருத்துள்ள பதிவு..

//படத்துல இருக்குற பொண்ணு கிட்ட இருக்குறது கூட ச்சும்மா... சரியான " துடுப்பு" மாதிரி தெரியுது..//

ஒரு பொது தளத்தில் இதே மாதிரி கருத்துக்கள் தேவையா ..:(
கொஞ்சம் குறைந்தப்பட்ச நாகரிகத்தை கடைப்பிடித்தால் நல்லா இருக்கும் நண்பரே..

சந்தனமுல்லை said...

ஆகா..நல்ல கதை!! :-) க.க மற்றும் ப.பெ.ப - அவ்வ்வ்..ரொம்ப அனுபவம் போல!!


அப்புறம் நான் ஆதவன் கமெண்டை அவரோட அப்பாவுக்கு பார்சல் பண்ணனுமே!! :))

கரவைக்குரல் said...

நம்பிக்கை வாழ்க்கையில் வெற்றிதரும்
ஆனால் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு முயற்சியே இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் ஒன்றுமே கிட்டாது
உண்மைதான்

சரியான சிந்தனைக்கு இடமான பதிவு
கலக்குறீங்க கலை

சுசி said...

//என்னா ஆக போகுது? //

படிக்கிறவங்களுக்கு கொலைவெறி ஆகப் போகுது!!!

//இதுலயிருந்து இன்னா தெரியுது?//

படிச்சு முடிச்சதும் ஓடிப் போயி கடல்ல குதிச்சிடனும்னு தெரியுது (ரெண்டு துடுப்போட)

கோபிநாத் said...

படிச்சிட்டேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய் உனக்கு தலைவர் படம் நல்ல படம் கிடைக்கலியா?

ப்ரியமுடன் வசந்த் said...

உன்னோட துடுப்பு டீலு ரொம்ப நல்லாயிருக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

அடிக்கடி இதுமாதிரி கொசு மாதிரி கடிச்சுக்கிட்டே இருக்கணும் சரியா?

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன மாசத்துக்கு 5 அப்பிடின்னு கணக்கு பண்ணி எழுதுறீகளோ?

கணக்கு கொஞ்சம் கூட்டு மாப்பி....

Unknown said...

கதை நல்லாருக்குங்க..

kishore said...

@ ரஞ்சிதா
// தளத்தில் இதே மாதிரி கருத்துக்கள் தேவையா ..:(
கொஞ்சம் குறைந்தப்பட்ச நாகரிகத்தை கடைப்பிடித்தால் நல்லா இருக்கும் நண்பரே..//
மன்னிக்கவும் தோழி.. உங்களின் விருப்பப்படி கருத்துரை தணிக்கை செய்யபட்டு நீக்க பட்டு விட்டது.. உங்கள் கருத்துகளுக்கு நன்றி..

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி பாஸ்! அடுத்த தடவை ஈயம்போன பாத்திரத்த தூக்கிகிட்டு வர்றேன்.

கிளியனூர் இஸ்மத் -க்கு
நன்றி அண்ணாத்த!
கரைகிட்டு, அடுப்பு எரியலைன்னா பிரியாணி செய்ய முடியாது!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மாப்பி ,உ.போ.ஒ பற்றி பதிவு போடுற அளவுக்கு நான் இன்னம் வளரலை!

சிம்ம‌பார‌தி -க்கு
நன்றி தல! எனக்கு சேம் டவுட்டுதான் தலைவா அதுல...

கலையரசன் said...

சென்ஷி -க்கு
நன்றி சிரிப்புக்கு! நல்லதா நாலு வார்த்தை பேசி பழகு!!

வினோத்கெளதம் -க்கு
நன்றி வினோ! மாசத்துக்கு ஐந்தா? எத சொல்லுறப்பா நீயி..

RAD MADHAV -க்கு
நன்றி மாதவ்! வேலை குடுத்துட்டடடடடாலும்......
அத நீ செஞ்சிட்டடடடடாலும்......

♠ ராஜு ♠
நன்றி ராஜூ! கரைக்டா தடவி பார்த்து கண்டுபுடிச்சுட்டியே!!

கலையரசன் said...

அகல் விளக்கு -க்கு
நன்றிங்க வருகைக்கு! அடுத்த தடவ அவரு படத்தையும் போட்டுடலாம்!!

Subankan -க்கு
நன்றி சுபா! உன் தாத்தா படத்தை எங்கேயும் போடலியே..

KISHORE -க்கு
நன்றி மச்சி! அப்படியே போயிட்டாலும்... பல்லு உள்ளவன் பட்டானி திங்குறான்!
நீ பல்லு செட்ட வச்சிகிட்டு, உனக்கு ஏன் இந்த ஆச..?

அக்னி பார்வை -க்கு
நன்றி பெங்களூர் பி.ப.!

கலையரசன் said...

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு! பத்தவச்சாச்சு.. இனி சட்டிய வைக்கனும்!

ஞானப்-[பி]-[த்]-[த]-[ன்] -க்கு
நன்றி கோன பித்தன் அவர்களே!

வினோத்கெளதம் -க்கு
ஒரு தாத்தா, தாத்தாவை பார்த்து, தாத்தா என்று சொல்லுகிறதே!!

ச.செந்தில்வேலன்-க்கு
செந்திலு...ரொம்ப தாங்கிஸ்சுபா!!

கலையரசன் said...

Ranjitha -க்கு
நன்றி தோழி! நண்பர் கிஷோர் நகைச்சுவையாக பின்னூட்டம் இட கூடியவர். மற்றப்படி அதில் ஒன்றும் தவறில்லை என்பதே என் கருத்து.

சந்தனமுல்லை
நன்றி முல்லை! ஆதவன் அப்பாவுக்கு போன் பண்ணி முதல்ல பொண்ணு பார்க்க சொல்லுங்க அவருக்கு.. இம்ச தாங்கல!!

கரவைக்குரல் -க்கு
நன்றி தினேஷ்! உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்க்கு நன்றி தோழா..

சுசி -க்கு
நன்றி டாக்டரம்மா!! நீங்க கடல்ல குதிச்சிட்டா எங்களுக்கு யாரு ஊசி போடுறது? (ஊக்க மருந்து ஊசி)

கலையரசன் said...

கோபிநாத் -க்கு
நன்றி! படிச்சிட்டியா? கெளம்பு.. கெளம்பு..

பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி உன் கும்மிக்கு!
அடுத்த தடவ நல்ல படமா போட்டுடுவோம்.
இனி மாசத்துல 7 தடவ உன்னைய கடிக்கிறேன்!!

பட்டிக்காட்டான் -க்கு
உங்க பாராட்டுக்கு நன்றி தலைவா!

KISHORE -க்கு
அடப்பாவி! அம்மமமமாம் நல்லவனாடா நீயியியியியிியி?

kishore said...

//நன்றி மச்சி! அப்படியே போயிட்டாலும்... பல்லு உள்ளவன் பட்டானி திங்குறான்!
நீ பல்லு செட்ட வச்சிகிட்டு, உனக்கு ஏன் இந்த ஆச..?//

உரல்ல குடுத்து அரச்சாவது திம்போம்ல..

Suresh Kumar said...

நல்ல கதை நம்பிக்கை இருந்தால் இரண்டு கைகளும் துடுப்புகளாக மாறுமல்லவா ?

Ashok D said...

சொல்லும் விதம் இனிமை... கலை.

அன்புடன் மலிக்கா said...

நல்ல கருதுள்ள கருத்துக்கள்
வாழ்த்துக்கள் கலையரசன்

பித்தன் said...

anne sombu nasungaamaa paaththukkoongoooo

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லி இருந்தாலும் நல்ல கருத்து,கலை.பாராட்டுக்கள்.

Unknown said...

உண்மையாகவே நல்ல ஒரு தத்துவத்தை நகைச்சுவை மொழியில் சாதாரணமாக சொல்லியிருக்கிறீர்கள்...

வாழ்த்துமளவிற்கு வயது போதாது...
என்றாலும் வாழ்த்துக்கள்...

கலையரசன் said...

Suresh Kumar -க்கு
ஆமாம்.. நன்றி சுரேஷ்!

D.R.Ashok -க்கு
நன்றி தல...

அன்புடன் மலிக்கா -க்கு
நன்றி மல்லிகா! முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்!!

பித்தன் -க்கு
நீங்க எல்லாம் தாங்கி பிடிக்க இருக்குறப்ப.. எனக்கு என்ன கவலை உடன்பிறப்பே!!

கலையரசன் said...

ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா! ஊருக்கு போயிட்டு எப்ப வந்தீங்க?

கனககோபி -க்கு
நன்றி கோபி! என்னைய வாழ்த்த வயசில்லையா?
அப்ப நீங்க 10 வயசுகுள்ளையா இருக்கீங்க...?

பின்னோக்கி said...

எனக்கு ரஜினிய பார்த்தாலே..அவரு சொன்ன “யானைக்கு ஊறுகாய்” போலன்னு ஒரு பழமொழி சொன்னாரு பாருங்க அது தான் நியாபகத்துக்கு வருது.

ISR Selvakumar said...

நல்ல கதையா இருக்கே. . .

kovai sathish said...

Nalla irukku innum thodaravum.....

Blog Widget by LinkWithin