Sunday, September 6, 2009

கலக்கல் - 3

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அரட்டை குறித்து பரட்டை:

பின்னூட்டம்
போடும்போதோ, சாட்டிங்கில அரட்ட அடிக்கும்போதோ ASL,LOL,ROTFL,A3,PRT போல நிறைய ஷாட் கட் வார்த்தை வச்சியிருக்காங்க நம்ம பயபுள்ளங்கோ.. இவங்க திங்க் பண்ணி இங்க் பண்ணதுல எனக்கு சில டவுட்டுங்க!

ASL - Age, Sex, Location
இதுதான் அதிகமா சாட்ல யூஸ் பண்ற வார்த்தைங்க.. அதாவது உள்ள பூத்தவுடனே கேட்டுடுவானுங்க ASL பிலீஸ்சுன்னு. எனக்கு என்ன டவுட்டுன்னா... முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா? அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க...

LOL - Laughing Out Loud
இத 3 வரிக்கு ஒரு தடவை டைப் அடிப்பாங்க. மொக்க ஜோக் சொன்னாலும் இதேதான்.. ஜோக்கு சொல்ல டிரை பண்ணாலும் இதேதான்!. இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இதையே ஆபீஸ்ல, வீட்டுல, பஸ்சுல செஞ்சா.. கூட இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க?

ROTFL - Rolling On The Floor Laughing
இத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க! (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல!) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு!? (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை!)

[ROTFL.jpg]

A3 - Anytime, Anywhere, Anyplace
எனக்கு தெரிஞ்ச A3-ன்னா.. பேப்பர் சைஸ்சுதான்! இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. எங்க வேணுனாலும், எந்த இடத்துல வேனாலும், எந்த நேரத்துல வேனாலும்.. என்ன சண்ட போட கூப்பிடுறானுங்கலோ?

PRT - பார்ட்டி
பள்ளு விளக்குனிங்களா? உடனே கேட்பாங்க PRT. ஏன்பா சாமிகளா.. அங்கதான் தொல்ல தாங்கலன்னு இங்க வந்தா இங்கேயுமாப்பா? ரைட்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்

ஒரு நாள் ஒருவன் ஆட்டோவுக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அவனிடம் பிச்சைகேட்கிறான். இந்த ஆளும் அவனை எப்படியல்லாமோ துரத்தி பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. உடனே ஐடியா செஞ்சி "தோபாரு.. நான் பைசா எல்லாம் தரமாட்டேன்.. உனக்கு என்ன வேணுமுன்னு கேளு, நான் அத வாங்கி தரேன்" ன்னு சொல்ல, "எனக்கு ஒரு கப் டீ வாங்கி குடுங்க போதும் சார்" ன்னு திரும்பி பதில் சொன்னான்.

உடனே நம்மாளு "இங்க டீ கடை எதுவும் இல்லியே.. சரி, இந்தா இதை பிடி" ன்னு சிகிரெட்டை எடுத்து கொடுக்க, "ஐய்யய்யோ! சிகிரெட் உடம்புக்கு கேடு" ன்னு சொன்னான் பிச்சை.

அப்படியான்னு நம்மாளு அதுக்கு அப்புறம் பாக்கேட்ல இருந்த குவாட்டரை எடுத்து "இதை குடிச்சி என்ஜாய் பண்ணு, போ!" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை "ஐய்யய்யோ! சரக்கடிச்சா.. மூளைக்கும், லிவருக்கும் பாதிப்பு வரும். எனக்கு வேனாம்" ன்னு சொன்னான்.

கடுப்பான நம்மாளு " சரி.. சரி.. நான் குதிரை ரேசுக்குதான் போறேன். அங்கவா! உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்" ன்னான். திரும்ப பிச்சை "வேண்டாம்! வேண்டாம்!! சூதாடரது தப்பு!!" ன்னு தம்புடிச்சு நின்னான்.

கடைசியா நம்மாளு "ஐயா சாமி! தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி "என்ன பாஸ்? என்னை போய் வீட்டுகெல்லாம்.. ஹி..ஹி..ஹி" ன்னு நெளிய.. நம்மாளு சொன்னானாம்...

"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தத்து பித்து:

௧. எப்பொழுது எல்லாம் வெற்றியின் சாவி என் கைகளில் கிடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பூட்டை யாராவது மாத்திடுறாங்க!

௨. பிழை செய்வது மனித இயல்பு, மன்னிக்கப்படுவது கம்பெனி பாலிசி இல்லை!!

௩. மது அருந்துவது பிரச்சனைக்கான தீர்வு இல்லை, பால் குடிச்சா மட்டும் மாறிடவா போகுது?

௪. ஒருவனுக்கு அவன் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய்! திரும்ப அவனுக்கு பிரச்சனை வரும்போது அவன் உன்னையே நினைப்பான்!!

௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
படிச்சதில் பிடிச்சது:

என் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்குள்ள கழிப்பறையில் எழுதியுள்ள வாக்கியங்களை படித்ததும் சிரித்துவிட்டேன். உங்களுக்காக தமிழில்..

குதிரை போல வாங்க!
திருடன் போல் உட்காருங்கள்!!
முடிந்ததும் ராஜநடை போடுங்கள்!!!

முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

43 comments:

நாஞ்சில் நாதம் said...

கலக்கிபுட்டீக

சந்தனமுல்லை said...

:-)) மிகவும் ரசித்தேன்! கலக்கல்ஸ் - செம!!

//முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா? அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க//

நினைச்சுப் பார்த்தேன்....தாங்க முடியல!! :))))

சென்ஷி said...

செம்ம கலக்கல் :-))

அது ஒரு கனாக் காலம் said...

semai kalakkal macchi

வானம்பாடிகள் said...

ரவுசு அசத்தல்.

KISHORE said...

கலக்கல் காக்டைல் மச்சி..

குசும்பன் said...

பாஸ் பேசிக்கிட்டே இருக்கும் பொழுது bfn ன்னு சொல்லிப்புட்டு ஓடி போய்டுறானுங்க பாஸ் எங்க பாஸ் போறாங்க bf பார்க்க போறேன்னு சொல்லிட்டுபோறானுங்களா?

குசும்பன் said...

//எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"
//

ங்கொய்யால இத யார மனசுல வெச்சுக்கிட்டு எழுதி இருப்பன்னு தெரியுதுடீ, அதான் என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கே!

உன் கூட இருக்கும் நட்பைவிட வேற என்ன வேண்டும்!!!

குசும்பன் said...

முதலில் நீ மொபைலை ஆன் பன்னு அப்புறம் எங்க வந்து குத்துவதுன்னு அட்ரஸ் கேட்டுக்கிறேன்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தூள்.

rotfl :)

சுசி said...

கலை உங்க பதிவை இனிமே ஆபீஸ்ல இருந்து படிக்கிரதில்லேன்னு முடிவு பண்ணிட்டேன்.
வேற என்ன? LOL தான்.
உங்கூருக்கு இங்க இருந்து பஸ் கிடையாதாம். ஃப்ளைட் டிக்கட் புக் செஞ்சுட்டேன் :))

அகல் விளக்கு said...

//ROTFL - Rolling On The Floor Laughing
இத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க! (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல!) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு!? (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை!)//

சம்ம்ம்ம்ம்பந்தம்ம்ம்ம்
இல்லையா?????

☀நான் ஆதவன்☀ said...

அசத்திட்ட கலை :)

ROTFL-o-ROTFL
LOL-o-LOL

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ROFTL DOG - கலக்கல்

BRB, HRU?, RUT?

TOILET - LOL-O-LOL :)

//குதிரை போல வாங்க!
திருடன் போல் உட்காருங்கள்!!
முடிந்ததும் ராஜநடை போடுங்கள்!!!//

நீங்க இப்படித்தான்னு சொல்லுங்க... :D

பித்தன் said...

கலக்கல் கலை

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!!!!

Mãstän said...

<<<
வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!
>>>

தத்துவம் மச்சி தத்துவம்... :)

ச்சூப்பருரூ

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

கலை மாப்பி..கலக்கிட்டடா காப்பி..
சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்கிது.
ஒரே கலக்கல்டா ....
அதுவும் அந்த பிச்சைக்காரன் பிட் சூபர்டா...
ஒட்டு போட்டாச்சு
:)))))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

உன் புதிய டெம்பிளேட்டும் மிகவும் அழகாக உள்ளது..
எங்கே டவுன்லோடு செய்தாய்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!///
டேய் மாப்பி உன் ஏரியாவுக்கு பஸ் இல்லைங்கற தைரியமா?

கோபிநாத் said...

ROTFL-o-ROTFL
LOL-o-LOL

Suresh Kumar said...

கலை கலக்கல் திரி கலக்கல் . arattai குறித்த பரட்டை sooppar

பிரியமுடன்...வசந்த் said...

மச்சான் பிச்சைக்காரன் கதை படிச்சி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மச்சான்

முக்காததும் கலக்கல் காமெடி நீ ஏன் நிறைய எழுத மாட்டேன்ற....

எப்பிடிப்பா துபாய்க்கு பஸ் ஏறி வாறது பஸ் நம்பர் குடுக்க முடியுமா கத்தார்ல இருந்து வாரதுக்கு......

Kiruthikan Kumarasamy said...

நல்லாயிருக்கு கலை...

அப்புறம் அந்த மேட்டர் தினேஷ் அண்ணாகிட்ட கேட்டீங்களா? (கலைக்கு அந்த மேட்டர் வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் ஒன்றுதான் என்று அவர் சொல்றார்)

மகேஷ் said...

LOL :)

ஷண்முகப்ரியன் said...

உண்மையில் கலக்கல் பதிவு,கலை.

கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்//

இந்தக் கதையை நெட்டில் படித்து விட்டு நானே பதிவிட வேண்டுமென நினைத்தேன்.
நீங்கள் அதைச் செய்து விட்டீர்கள். நன்றியும்,மகிழ்ச்சியும்,கலை.

கலையரசன் said...

நாஞ்சில் நாதம் -க்கு
நன்றி தலைவா!

சந்தனமுல்லை -க்கு
நன்றி + வாங்க ஆச்சி!
தாங்க முடியலையா? கீழ இறக்கிவைச்சிடுங்க!!

சென்ஷி -க்கு
இரண்டு நன்றி மாப்பி..
ரெண்டு ஸ்மைலி போட்டுயிருக்கியே!!

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி மச்சி.. சாரி! நன்றி சுந்தர் சார்!!

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்....

கலையரசன் said...

வானம்பாடிகள் -க்கு
நன்றி தலைவரே! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்!!

KISHORE -க்கு
நன்றி மாப்பு!
டேய்.. ஒழுங்கா சீக்கிரம் எழுத ஆரம்பி.. கும்மியடிக்கனும்!

குசும்பன் -க்கு
BF means "Best Friend"
பாஸ்! BFன்னா Boyfriendன்னு சொல்லுவன்னு பாத்தீங்களா?
ஏமாதீங்களளளளா... செப்டடடடம்பர் Fool!!

குசும்பன் -க்கு
//ங்கொய்யால இத யார மனசுல வெச்சுக்கிட்டு எழுதி இருப்பன்னு தெரியுதுடீ//

விடுண்ணே.. எல்லாத்துக்கும் உங்க பேரை போட முடியுமா?
போனை Switch Off பண்ணும் போது, கரைக்ட்டா போன் பண்றீங்களே எப்டி?

கலையரசன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் -க்கு
வாங்க தலைவா! முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மனமார்ந்த நன்றிகள்!!
ஒரு டவுட்டு... நெசமாவே நீங்கதானா?

சுசி -க்கு
நன்றி சுசி..
நீங்களுமா? ரைட்டு, தயார் செஞ்சிகறேன்!!

அகல் விளக்கு -க்கு
நன்றிங்கோ.. வருகைக்கும், ஊக்கதிற்க்கும்!
சம்ம்ம்ம்ம்பந்தம்ம்ம்ம் இல்லைலலங்கோ...

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி BF சூர்யா..

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்!
கரைக்ட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே தலைவா..

பித்தன் -க்கு
நன்றி நியாஸ்!

அன்புடன் அருணா -க்கு
நன்றிறிறிஸ் அருணா!!!!

Mãstän -க்கு
வாங்க மோடி மஸ்தான் :-)
சூப்பருக்கு, நன்றி மச்சி நன்றி!!

கலையரசன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மச்சி! எல்லாம் உன் புண்ணித்துலதான்
டெம்ப்லேட் மாத்தினேன்.. நல்லாயிரு சாமி!

யேய்.. பஸ் இல்லன்னா என்ன? நடந்து வந்து குத்து..

கோபிநாத் -க்கு
தல.. என்னாதிது?

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்..
எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும்?
பிசியா இருக்கீங்களா?

கலையரசன் said...

பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி மச்சி... கண்டிப்பா எழுத டிரை பண்ணுறேன்!
ஏன்டா பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்து, சொந்த காசுல சூனியம் வச்சிக்க சொல்றியா?

Kiruthikan Kumarasamy -க்கு
நன்றி கீத்! ஒன்னும் புரியல..
தினேஷ் என்ன சொன்னாரு அப்படி?
ஓ.. அந்த ஜ.. மேட்டரா?
கண்டுபுடிச்சிட்டாரே மனுசன்..ம்ம்?

மகேஷ் -க்கு
உன் ளொள்ளுக்கு..
என் வள்ளு..

கலையரசன் said...

ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா!
அப்படியா தலைவா.. மிக்க மகிழ்ச்சி எனக்கும்!!

ஆ.ஞானசேகரன் -க்கு
தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணதுக்கு நன்றி பாஸ்!!
:-)

ஜெரி ஈசானந்தா. said...

அப்பு, தாளிப்பு கொஞ்சம் ஓவரு.

ஸ்ரீமதி said...

ROTFL ;)))))))

ஜெஸ்வந்தி said...

எல்லாம் கலக்கல். சிரிக்க வைத்ததற்கு மிக நன்றி.

கீழை ராஸா said...

//"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"//

:-)))))))))))

உங்களுக்கு எல்லா பழக்கமும் இருக்கா...?

யாழினி said...

:) ரெம்ப நல்லாயிருக்கே!//௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!//

கலக்கல்...:)

கிரி said...

கலையரசன் இங்க வாங்க உங்க விருப்பப்படி தொடருங்க :-)

Anonymous said...

adangg

page load aaha romba late aaguthu.. koncham enna ethunnu gavanikka koodatha?

SanjaiGandhi said...

சூப்பர்.. :)

பின் நிறத்தை வெள்ளைக்கு மாற்றிப் பாருங்களேன்.. பதிவில் எழுத்துகளுக்கு கொடுக்கும் நிறமும் பின்புற கருப்பும் ஒட்டவில்லை..

Boopalan said...

mathavangal sirika vekiringa anna..... evlo santhosama iruku padikumpothu.......

Blog Widget by LinkWithin