Saturday, October 3, 2009

ஸ்டிரிக்ட்லி... "லவ்வர்ஸ் ஒன்லி"

நம்ம கிஷோரு ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்ணிகிட்டு இருந்தாரு! (அவன் லவ் எல்லாம் பண்றானா?, அவனுக்கு லவ்வு ஒரு கேடா?-ன்னு அவனை டிசைன், டிசைனா திட்டனுமுன்னு நினைக்கிறவங்க.. கமெண்ட் மேடைக்கு வந்து ஆசை தீர திட்டலாம்!!) இது அவங்க வீட்டுல அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சி போயி பொண்ணை, வீட்டுலேயே அடைச்சி வச்சிட்டாரு. நம்ம ஹீரோ கிசோரு சேரன் ரேஞ்சிக்கு ஃபீல் பண்ணி ஒரு லெட்டர் எழுத எனகிட்ட ஐடியா கேட்டாரு.. அதாவது, அவ அப்பா பார்த்தாலும் பிரியாத ரகசிய கடிதம் எழுத சொல்லி... அந்த லெட்டர்தாங்கண்ணா இது! நீங்க முடிச்சா இதுல உள்ள உள்குத்தை கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல திட்டு.. சாரி! சொல்லுங்க பாப்போம்!!!

நான் உன்மேல வச்சியிருந்த உண்மையான காதல்
போயிடுச்சு! அப்புறம், உன் மேல உள்ள வெறுப்பு
ஒவ்வொறு நாளும் வளர்ந்துகிட்டேதான் இருக்கு. உன்னைய சந்திக்கும்போது,
எனக்கு உன் மூஞ்ச கூட பார்க்க புடிக்கலை!
ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,
வேற நல்ல ஃபிகரை பாக்கலாமுன்னு இருக்கேன். எனக்கு விருப்பமில்ல
உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப
நீ அறிவுகெட்டதனமா பேசுனதும், அதுவே என்னை
உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,
தூண்டல. உனக்கு எப்போதுமே, உன்னைய பத்திய நினைப்புதான்.
நாம இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? எனக்கு
தெரியும் வாழ்கையில நா கஷ்டப்படுவேன்னு! எனக்கு எப்பவுமே இல்லை
ஆசை உன்கூட வாழனுமுன்னு. என்கிட்ட நல்லமனசு இருக்கு
சாரி! இருந்துச்சு.. ஆனா, அது இப்பயில்ல
நான் உன்கிட்ட கொடுக்குறதுக்கு. உன்னபோல உலகத்துல யாரும் இல்ல
சுயநலமாவும், முட்டாளாவும். உன்னால முடியாது
என்மேல அன்பு காட்டுறத்துக்கு, உதவி செய்யறத்துக்கு.
ஓப்பனா சொல்லுனுமுன்னா.. நீ நல்லா புரிஞ்சிக்கோ,
நான் உண்மையதான் சொல்றேன். எனக்கு ஒரு உதவி செய்,
இதுதான் முடிவுன்னு நீ நினைச்சா.. திரும்ப முயற்சி பண்ணாத
பதில் எழுத. நீ எழுதின லெட்டர்கள் எல்லாம்
கிழிச்சி போட்டுட்டேன். உனக்கு எப்பவுமே இருந்ததில்ல
என்மேல உண்மையான அன்பு காட்டுதல். குட் பை! சத்தியமா சொல்றேன்
திரும்ப என்னை தொல்ல பண்ணாத. தயவுசெஞ்சு, நினைக்காத
இன்னமும் நான் உன் லவ்வர்ன்னு!!

ஷகிலா: நான் லெட்டர் அனுப்ப மாட்டனே.. ஈ-மெயில் பண்ணுவேன், எஃப் மெயில் பண்ணுவேன், எஸ்.எம்.எஸ். பண்ணுவேன் கார்த்திகேயன் மாதிரி அறிவுத்தேடலோட கேள்வி கேட்காதீங்க!!
---------------------------------------------------------------------------------------------------------------

55 comments:

ரெட்மகி said...

நான் உன்மேல வச்சியிருந்த உண்மையான காதல்

ஒவ்வொறு நாளும் வளர்ந்துகிட்டேதான் இருக்கு. உன்னைய சந்திக்கும்போது,

ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,

உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப

உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,

நாம இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? எனக்கு

ஆசை உன்கூட வாழனுமுன்னு. என்கிட்ட நல்லமனசு இருக்கு

நான் உன்கிட்ட கொடுக்குறதுக்கு. உன்னபோல உலகத்துல யாரும் இல்ல

என்மேல அன்பு காட்டுறத்துக்கு, உதவி செய்யறத்துக்கு.

நான் உண்மையதான் சொல்றேன். எனக்கு ஒரு உதவி செய்,

பதில் எழுத. நீ எழுதின லெட்டர்கள் எல்லாம்

என்மேல உண்மையான அன்பு காட்டுதல். குட் பை! சத்தியமா சொல்றேன்

இன்னமும் நான் உன் லவ்வர்ன்னு!!

எப்பூடி..!

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

ரெட்மகி said...

இவர் சொன்னது தான் காதலிக்கான கடிதம். அருமையா இருக்கு.. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்

தொடருங்கள்

geethappriyan said...

டேய் மாப்பி
ரொம்ப அருமையான காதல் கடிதம்.
கிஷோரை இப்படியா ஓட்டுறது?
நான் என்ன அப்புடியா? கேள்வி கேக்கேன்?
இப்படி வித்யாசமாக எழுதுவதில் நீ வல்லவன்
ஓட்டுக்கள் போட்டாச்சு

சந்தனமுல்லை said...

:)))))

"டிசைன், டிசைனா " திட்டுறதை இப்போதான் கேள்விபடறேன்!!!

☀நான் ஆதவன்☀ said...

பார்த்துய்யா அந்த பொண்ணோட அப்பனும் ப்ளாக்கரா இருக்க போறான். :)

உன்கிட்ட போய் ஐடியா கேட்டுருக்காங்களேன்னு நினைச்சா தான் கஷ்டமா இருக்கு

☀நான் ஆதவன்☀ said...

மொத்தமா லெட்டரை படிச்சப்ப தெலுங்குல எழுதின லெட்டரை “டப்” பண்ணி வெளியிட்ட மாதிரி இருந்துச்சு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆனா அந்தக் கிஷோரை நீங்களும் அல அய்ன் அஜித்தும் இப்படி வாரக்கூடாதுப்பா :) முதல்ல அவருன்னு ஆரம்பிச்சு, அவன் இவன் திட்டறது நியாயமா..

உங்கள் வார்த்தை விளையாட்டு மாதிரி இங்க வரிகள் விளையாடுதா? மெய்யாலுமே கலக்கல் தாம்பா :)

Prathap Kumar S. said...

கிஷோரு பண்ண பெரிய தப்பு லவ் பண்ணது இல்லை.. லவ் லெட்டர் எழுத உங்ககிட்ட ஐடியா கேட்டாரு பாருங்க அதான்.

இந்த மாதிரில்லாம் லெட்டர் கொடுத்தா லவ்வு வராது...போலீஸ்தான் வரும் பின்ன..
லவ் லெட்டர் எழுத ஐடியா கேட்டா தீவிரவாதி பாம் வைக்க பிளான் பண்ற மாதிரி ஐடியா கொடுக்கீறீங்க...

வினோத் கெளதம் said...

என்ன எழுதி இருக்கிங்ககனே ஒன்னும் புரிஞ்சிக்க முடியலையே..


இருந்தாலும் நல்லா தமாசா இருக்கு...சேட்டு பையன் லவ் லெட்டர் எழுதுன மாதிரி..
வோட்டு வீட்டுல போய் போடுறேன்..

புரிஞ்சிக்கிட்டேன்..புரிஞ்சிக்கிட்டேன்..
(Eureka..Eureka)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நம்ம கோட்லர் எழுதிய புத்தகங்களைப் படித்திருப்பீர்களோ?

உங்கள் இடுகைகளின் பெயர்களில் அப்படி ஒரு வசீகரம் :)

வினோத் கெளதம் said...

கிஷோர்க்கு லவ் லெட்டர் எழுதி கொடுக்க உனக்கு மலையாளம் எழுத தெரிஞ்சு இருக்கணும்..உன்னால முடியுமா இல்ல உன்னால முடியுமான்னு தெரியமா தான் கேக்குறேன்..(நாராயன..நாராயன..)

வினோத் கெளதம் said...

//நம்ம கோட்லர் எழுதிய புத்தகங்களைப் படித்திருப்பீர்களோ? //

இன்ன இன்னமோ பேசுறிங்க..எனக்கு தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது..

Raju said...

அறீவுஜீவி கலைவாழ்க..!
அறீவுஜீவி கலைவாழ்க..!
அறீவுஜீவி கலைவாழ்க..!
அறீவுஜீவி கலைவாழ்க..!
அறீவுஜீவி கலைவாழ்க..!

சுதந்திரன் said...

ஒரு வரி விட்டுட்டு ஒரு வரி படிச்சா ஏதோ அர்த்தம் வர்ற மாதிரி இருக்கு...

Raju said...

\\வினோத்கெளதம் said...
கிஷோர்க்கு லவ் லெட்டர் எழுதி கொடுக்க உனக்கு மலையாளம் எழுத தெரிஞ்சு இருக்கணும்..உன்னால முடியுமா இல்ல உன்னால முடியுமான்னு தெரியமா தான் கேக்குறேன்..(நாராயன..நாராயன..)\\

ரைட்டு.. அப்போ கிஷோரு கேரளத்து பைங்கிளனா..?

நாணல் said...

:)))

ஷாஜ் said...

ஒரு லைன் விட்டு ஒரு லைன் படிக்கணும்.. இது போல் ஒரு மேனேஜர் தன்னுடய staff க்கு appraisal எழுதும் போது அந்த staff மேனேஜர் பின்பு நின்று பார்த்துகிட்டு இருப்பது போல் ஒரு mail வந்தது அதன் பாதிப்பா இது ....

உங்கள் ராட் மாதவ் said...

இன்னாபா...நடக்குது இங்க.....!!!!!

சுசி said...

கிஷோர் தாரளமா லவ் பண்ணட்டும். பாவம் நல்லாருக்கட்டும். ஆனா உங்க கிட்ட ஐடியா கேட்டாரு பாருங்க... அதுதான் என்ன கமன்ட் மேடைக்கு வர வச்சிருக்கு!!!

அப்துல்மாலிக் said...

காதல் கோட்டை படத்துலே மணிவண்ணன் காதலுக்கு உதவி செய்ய டெலிஃபோன் பூத் வைத்தது மாதிரி நீங்க ஒரு காதல் கடிதம் எழுதி தற ஒரு பூத் தொறக்கலாம், இது ஒரு பொது தொண்டுதான்...

முழுதும் ரசித்தேன்

kishore said...

மகா ஜனங்களே.. கலை கூட சேர்ந்து ஒரு அப்பாவி ஜீவன பிரியாணி போட்டுக்கிட்டு இருகிங்கலே.. அந்த ஜீவன் நான் தான்... என்னத்த சொல்றது.. இன்னைக்கு இவன் ஹோட்டல்ல நான் தான் கொத்து பரோட்டா போல இருக்கு.. நடத்து நண்பா..

kishore said...

உண்மையாவே நல்ல இருக்குடா.
(இது வினோத் மனசாட்சி மாதிரி இல்ல )

kishore said...

எல்லாம் சரி.. பீல் பண்றதுக்கு "சேரன்" ரேஞ்சி தானா கிடைச்சிது.
சேரன் கூட கம்பர் பண்ணி லெட்டர் எழுதி தந்ததுக்கு.. பேசாம நீ "மீடியேடர்" ஆ இருக்கலாம்..

ஊடகன் said...

//
ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,

உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப

உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,

//
அருமை தோழா........!
தொடருங்கள் நண்பரே..........!

kishore said...

அட போடா.. நானும் வலிக்காத மாதிரயே எவ்ளோ நேரம் தான் நடிக்கிறது.. ?

Prabhu said...

நல்ல பொழப்பு!


\\வினோத்கெளதம் said...
கிஷோர்க்கு லவ் லெட்டர் எழுதி கொடுக்க உனக்கு மலையாளம் எழுத தெரிஞ்சு இருக்கணும்..உன்னால முடியுமா இல்ல உன்னால முடியுமான்னு தெரியமா தான் கேக்குறேன்..(நாராயன..நாராயன..)\\///

மலையாளமா? நான் கூட இங்கிட்டு தஞ்சா.... சாரி கிஷோரண்ணே உளறிட்டேன்!

அக்னி பார்வை said...

Good Work, but I found it ..:)))

வினோத் கெளதம் said...

@ Pappu..

//மலையாளமா? நான் கூட இங்கிட்டு தஞ்சா.... சாரி கிஷோரண்ணே உளறிட்டேன்!//

ஏன் தஞ்ச..ல மலை...பெண்கள் இருக்கக்கூடாத..
அந்த கோணத்தில் யோசி பப்பு..

உங்கள் ராட் மாதவ் said...

//கிஷோர்க்கு லவ் லெட்டர் எழுதி கொடுக்க உனக்கு மலையாளம் எழுத தெரிஞ்சு இருக்கணும்..உன்னால முடியுமா இல்ல உன்னால முடியுமான்னு தெரியமா தான் கேக்குறேன்..(நாராயன..நாராயன..)\\/////

കല,,, നിങ്ങള്‍ക്ക് ഇന്നമും മലയാളം അറിയില്ല ഇല്ലേ?????

Suresh Kumar said...

காதல் கடிதம் எழுதி அந்த பொண்ணையும் மயக்கி வீட்ட விட்டு ஓடி வர பண்ணீட்டீங்களே கலை

நாகா said...

:))

அது ஒரு கனாக் காலம் said...

கலை ...கலக்குறே !!!!!

Ranjitha said...

ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது கலை..
அப்புறம் திரும்பவும் படித்தேன்..நல்ல முயற்சி..

Eddenburs's ..The buried desires படிச்சு இருக்கிங்களா அதுல காதலர்கள் இடையில் சில Conversations இதே போல் அமைந்து இருக்கும்..

கோபிநாத் said...

33 பின்னூட்டம்...கலக்குறிங்க ;))

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்கு
தெரியும் வாழ்கையில நா கஷ்டப்படுவேன்னு!//

கிஷோர் இவன என்ன பண்ணலாம்

துபாய்லயே ஆபீஸ்குள்ள வச்சு அடிக்க ஆள் அனுப்பிடலாமா?

ப்ரியமுடன் வசந்த் said...

அட சூப்பர் மச்சான்

ஒருவரிவிட்டு ஒருவரி கலக்கல் கலைதாண்டா நீ வாழ்க.

ரெண்டு சோம பானம் பார்சல்

RAGUNATHAN said...

கலக்கல் :)

kishore said...

//கிஷோர் இவன என்ன பண்ணலாம்

துபாய்லயே ஆபீஸ்குள்ள வச்சு அடிக்க ஆள் அனுப்பிடலாமா?//

அட நீங்க வேற இவனுக்கெல்லாம் பெரிய லெவெல்ல யோசிச்சிகிட்டு.. இவன் காமடி பீஸ் வசந்த்..

கலையரசன் said...

ரெட்மகி -க்கு
நன்றி தல.. கரைக்டா கண்டுபிடிச்சதுக்கு ஒரு சபாஷ்! அப்ப புரியுரமாதிரி எழுதிட்டனோ?

ஜோ.சம்யுக்தா கீர்த்தி -க்கு
நன்றி கீர்த்தி.. முதல் வருகைக்கும்! பாராட்டுக்கும்!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மாப்பி! நீயா கேள்வி கேட்க மாட்ட..?
டெய்லி கேள்வி கேட்டு என்னை கொல்றியேடா!!

சந்தனமுல்லை -க்கு
நன்றி! அப்படியா? கேள்விபட்டதில்லை?

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
நன்றி சூரி! அப்பன் பிளாக்கரா இருந்த நிச்சயம் கிஷோருக்கு அடி உண்டுன்னனு சொல்ற..?
அந்த தெலுங்குல மேட்டரை படிச்சதும் சரிச்சேன்! ஏன்னா.. நானே திரும்ப படிக்கும்போது அப்படிதான் இருந்துச்சு!

ச.செந்தில்வேலன்-க்கு
நன்றி செந்தில், உங்க பாராட்டுக்கு! என்ன பண்றதுங்க.. இது மாதிரி எழுதுனாதான் மனுசனா மதிக்கிறாங்க!

நாஞ்சில் பிரதாப் -க்கு
நன்றி நாஞ்சில் நாடார் அவர்களே! நீங்க ராட் மாதவ்க்கு லெட்டர் எழுதி கொடுக்காம இருந்தா சரிதான்..

வினோத்கெளதம் -க்கு
நன்றி வினோ!
அதுகெல்லாம்... ஞானம் வேணும்! ஞானம் வேணும்!! ஞானம் வேணும் டோய்..

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
என்னுடை இடுகைகளின் பெயர் மட்டும்தான் வசீகரம் :)
உங்களுடைய இடுகையே வசீகரம் :)

வினோத்கெளதம் -க்கு
பத்த வச்சிட்டியே பரட்டை...! உன் கமெண்டை காப்பி பேஸ்ட் பண்ணிதான் விளையான்டு இருக்காங்க பசங்க கீழ..

♠ ராஜு ♠ -க்கு
வாழ்க சொன்ன அறீவுஓளி ராஜூக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
ஏன் சினிமாவுல நம்ம ஹீரோ மட்டுதான் கே.பி. லவ்சுனுமா?
நம்ம கா.பீ. லவ் பண்ணா ஒத்துக்க மாட்டீங்களோ?

தமிழன் -க்கு
நன்றி தமிழன்! அதே.. அதே..

கலையரசன் said...

நாணல் -க்கு
நன்றி சிரிப்புக்கு!!

ஷாஜ் -க்கு
குட் மெமரி பவர் உங்களுக்கு.. நன்றி!

RAD MADHAV -க்கு
மாதவ், அக்காங்பா.. என்கும் ஒன்னியும் பிரியில!

சுசி -க்கு
வாங்க போ.டா.! அவனா பாவம்? செய்யறது எல்லாம் சேட்டை.. அடிச்சா குத்தமாம்!!

கலையரசன் said...

அபுஅஃப்ஸர் -க்கு
வாங்க அபு! ஏஞ்சாமி.. நான் நல்லாயிருக்குறது புடிக்கலையா? போற போக்குல கொளுத்தி போட்டுட்டு போற..

KISHORE -க்கு
நன்றி நண்பா!
மகா ஜனங்களே! கிஷோரு ரொம்ப வருத்தபடுறான் பாருங்க..
அவனை கொத்து பரோட்டா மாதிரி கொத்தாம, பிரியாணி மாதிரி சுவையாக்கிட்டீங்களாம்!!
அதனால, இனிமே வரும் பின்னூட்ட பிதாக்கள்...
அவனை ரத்தம் வரும் அளவுக்கு கொத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்!!

ஊடகன் -க்கு
நன்றி தோழா!!

pappu -க்கு
நன்றி பப்பு! என்னது நீயுமா?
ரைட்டு அடுத்த பதிவு உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலாம்!

கலையரசன் said...

அக்னி பார்வை -க்கு
எனக்கு தெரியுமுண்ணே! நீங்க கண்டுபுடிச்சிடுவீங்கன்னு...

வினோத்கெளதம் -க்கு
ஆமா இவரு பெரிய பாரதிராஜா..
அந்த கோணத்தில் யோசிக்க சொல்றாரு!

RAD MADHAV -க்கு
நோ! பேட் வேர்ட்ஸ் ப்லீஸ்..

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்! அது வரலைங்க.. தப்பிசிடுச்சு!

கலையரசன் said...

நாகா -க்கு
உன் சிரிப்புக்கு நன்றி ராசா!

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சார்.. எங்க ஆளையே காணும்?

Ranjitha -க்கு
நன்றி தோழி!
Eddenburs's ..The buried desires படிச்சது இல்லை! படிக்க முயற்சி செய்கிறேன். அறிமுகத்திற்க்கு மற்றொறு நன்றி!!

கோபிநாத் -க்கு
நன்றி தல.. பின்னூட்டம் போட சொன்னா, உக்காந்து என்னிகிட்டு இருக்கியா நீ!!

கலையரசன் said...

பிரியமுடன்...வசந்த் -க்கு
நன்றி மச்சி! சரக்கடிக்க அடிக்க ஆள் குறையுதுன்னு அனுப்ப போறியா? அப்படியே சோம பானத்தை 4 பார்சலா சொல்லு..

ரகுநாதன் -க்கு
நன்றி நண்பரே!

KISHORE -க்கு
ஆமா.. நாங்க காமெடி பீசு..
இவரு லெக் பீசு!
போடாங்..!!

வால்பையன் said...

இது உண்மையிலேயே கிஷோர் காதலா இல்ல உங்க காதலா தல!

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா நல்லா இருக்கே.

RAGUNATHAN said...

நாங்களும் போடுவோம்ல ஓட்டு...

1, 3, 5 ,7
2, 4, 6, 8

அடடா என்ன ஒரு டெக்னிக்கு...பின்னிடீங்க...நல்ல இருக்கு... :)

பின்னோக்கி said...

பஸ்ட்டு ஒன்னும் பிரியல..அப்பால...பிரிஞ்சிடுச்சுங்கோவ்...

வெண்ணிற இரவுகள்....! said...

என்ன தல ரொம்ப பீல் பண்ணி லவ் பண்றார்......இப்படி எழுதிருகிங்க

துளசி said...

என்ன கலையரசன் பயங்கரமா யோசிப்பீங்க போல தெரியுது.

ஏன் இந்த கொலவெறி...

யாழினி said...

:))

கலையரசன் said...

வால்பையன் -க்கு
நன்றி தல... கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காதீங்க!

விக்னேஷ்வரி -க்கு
நன்றி விக்! அப்படியா?

ரகுநாதன்
நன்றி ரகு! ரைட்டு.. ஒத்துகறேன்..

பின்னோக்கி -க்கு
நன்றி பாஸ்! பிரிஞ்சா சரிதான்..

வெண்ணிற இரவுகள் -க்கு
நன்றிங்க! யாரு பீல் பண்ணி லவ் பண்றான்னு சொன்னது உங்களுக்கு?

துளசி said...
நன்றி! சும்மாதான்.. அப்படியே ஜெயிலுக்கு போகலாம்ன்னு இந்த கொலவெறி!

யாழினி -க்கு
நன்றி!

Vishnu - விஷ்ணு said...

இதுல இருந்து என்ன தெரியுது. லவ் லெட்டர் எழுதறதுக்கு உங்க கிட்ட யோசனை கேக்க கூடாதுன்னு தெரியுது.

அருமை.

Blog Widget by LinkWithin