Sunday, November 1, 2009

'கலை ரிட்டர்ன்ஸ்!'


10 நாள் லீவ் எடுத்துக்கொண்டு டபுள் ஷாட் (தீபாவளி + புதுமணை புகுவிழா) கொண்டாட்டதோடு தமிழகம் வந்து கொண்டாடியது.. மனதை விட்டு அகல மறுக்கிறது, நான்கு நாட்கள் ஆகியும்! வழக்கமாக வெளிநாடு வந்தபிறகு கடந்த மூணு வருஷமா தீபாவளி சைலண்டா ரூமோடு இல்லனா ஆபீசோடு போய்விடும். இந்த வருஷம் தாய்நாட்டில் கொண்டாட வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு சந்தோஷம்.

தீபாவளி முதல் நாள் சென்னை ஏர்போர்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே கொண்டு வந்து சேர்த்துவிட்டது (அதிசயமா இருக்குல்ல?) ஏர்அரேபியா என்கிற தெய்வம்! லேட்டா வந்திருந்தா கூவமே காரித்துப்புற மாதிரி திட்டியிருப்பங்குறது வேற விசயம்.. அடுத்த அதியசம் என்னன்னா, சென்னையில் இருந்து வடலூர் வரும் ரோடு குண்டும் குழியுமா நாலரை மணி நேரம் எடுக்கும் பயணம், மூன்றே மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தது மற்றொரு ஆச்சரியம். ரோடு எல்லாம் நீட் அண்ட் க்ளீன்! Hatts off to highway department!!

வந்ததும் வராததுமா பத்திரிக்கையை தூக்கிட்டு கிளம்பிவிட்டேன். அம்மாவுக்கு முடியாமல் போனதாலும், விஷேசத்திற்க்கு மூன்றே நாட்கள் பாக்கியிருந்ததாலும், நைட் 10 பத்து மணி வரையில் வேட்டையை தொடர்ந்தேன். நண்பர்கள் எல்லாம் "டேய் இந்த நேரத்துல போய் பேய்க்கா பத்திரிக்கை வைக்கபோற? மூடிக்கிட்டு போய் படுடா!"ன்னு அன்பா கேட்டுகிட்டதால அடக்கி வாசிச்சேன். சரி.. சரி கிரகபிரவேசத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்... (அடுத்த பதிவுக்கு மேட்டர் வேணுமில்ல மக்கா?) இப்ப ஓவர் டு தீபாவளி சீன்ஸ்!!


விடியகாலையில் எட்டு மணிக்கு செவிட்டுல யாரோ அரைஞ்ச மாதிரி ஒரு பீலிங்ஸ்சு.. அட! நிஜமாவே என் தம்பி பொண்ணுதான் செவுட்டுல இரண்டு வச்சிருக்கு! ரைட்டுன்னு எந்திரிச்சு வந்து ஹால்ல உக்காந்தா, எங்க அம்மா அவங்க கடமைக்கு தலையில இரண்டு வச்சாங்க. அதாங்க.. தலையில அடிச்சு எண்ணை தேச்சி விட்டாங்க! தீபாவளி அன்னைக்காவது குளி குளின்னு திட்டின ஆத்மாக்களை சாந்தியடை வைக்க அப்படியே போயி குளிச்சிட்டு வந்து பார்த்தா... சுட சுட இட்லி, தோசை, மட்டன் குருமா, வடை, சுழியன்னு சும்மா கும்முன்னு சாப்பிட்டுவிட்டு ஜம்முன்னு வெளியே கிளம்பினேன். இதுல நம்ப முடியாத விஷயம் என்னன்னா.. எங்க வீட்டுல யாரும் 10 மணி வரைக்கும் டி.வியை ஆன் பண்ணவேயில்ல, அதே மாதிரி நான் சென்ற நண்பர்கள் வீட்டுலையும் யாரும் டி.வியை பார்க்கல! என்னாங்கடா இது? (நல்லா விசாரிச்சிட்டேன்.. கரண்ட்டு, கேபிளு எல்லாம் இருக்குங்க. ஒருவேளை நம்ம பதிவர்கள் எழுதுறதை படிச்சிட்டு திருந்தியிருப்பாங்களோ? யேய்.. யேய்.. அப்படி எல்லாம் சிரிக்ககூடாது!)

அப்புறம் மதியமா யூத் எல்லாம் என்ன செய்வாங்களோ அதையே 'அடி'யேனும் செய்தேன். அப்புறம் என்ன பண்றதுங்க.. டூட்டி ஃப்ரீ கடையில் வாங்குன "பிளாக் டாக்"கை தூக்கியா போட முடியும்? அது உள்ளாற போயி குரைக்க ஆரம்பிச்சதும் பாதிபேரு நண்பனின் லாட்ஜில் மோட்சம் வாங்கிட்டாங்க. பாக்கி நாங்க ஒரு 6 பேரு விடாம "சொ.கா.சூ" வச்சிக்க கிளம்புனோம்! அதவேற சபீனா போட்டு விளக்கனுமா? அதாங்க.. ஆதவன் படத்துக்கு கிளம்பினோம். (துப்பாதீங்க.. துப்பாதீங்க.. முதல் நாள் பார்த்ததால, விமர்சனம் எதுவும் படிக்காம.. தெரியாம... செப்டிக் டேங்கில் இறங்கிட்டோம்!) சூர்யா + ஆதவன்னு சொல்லும் போதே தக்காளி.... மொக்கைன்னு விளங்கியிருக்கனும். சுருக்கமா சொல்லனுமுன்னா.. வெட்டி _____ நித்திரைக்கு கேடு!

இப்படிக்கா... தீபாவளி.. ருசியா, பசியா, கிக்கா, பெக்கா, 'மக்'கா, சிட்டா போயிடுச்சு! அழகான மறக்க முடியாத மகிழ்ச்சியான தீபாவளி!! லைட்டா ஏதோ கருகுற வாசனை அடிக்குது! அமீரக உடன்பிறப்புகள் என் செலவுல லெபன் அப் வாங்கி குடிங்க!! (அழுவக்கூடாது வினோத்.. அடுத்த தீபாவளிக்கு மாமா உன்னையும் கூப்பிடுட்டு போறேன்.. சரியா?)

வாலாட்டல் : நான் வந்தது தெரிந்து, போன் நம்பர் கண்டுபிடித்து, எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன பதிவுலக நண்பர்கள் மற்றும் அண்ணன்கள்.. ஷண்முகப்பிரியன் ஐயா, ஜாக்கி சேகர், தண்டோரா (எ) மணி, குசும்பன், கிஷோர், கார்த்திகேயன், வினோத் ஆகியோர்களுக்கு நன்றி, மெர்சி, அரிகட்டோ, சுக்ரன் லக்!!

28 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் கலை!! அடுத்த பதிவுல வரப்போற விசயத்துக்கு.. கலக்கலா இருந்திருக்கு உங்க தீபாவளி :)

Raju said...

எல்லாரும் ஓடுங்க...! அது நம்மள நோக்கிதான் வருது..எல்லாரும் ஓடுங்க...!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரெ

ஷண்முகப்ரியன் said...

அடுத்தவருட தீபாவளி இதைவிட ரெட்டிப்பு சந்தோஷத்துடன் தலை தீபாவளியாக இருக்கட்டும்,கலை.
வாழ்த்துக்கள்.

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் கலை எப்படியோ திவாவளி கலக்கியிருக்கீங்க

நாகா said...

வெல்கம் பேக்...

சென்ஷி said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்.. அடுத்த ஜமா 13ந்தேதி கூட்டிடலாமா :)

☀நான் ஆதவன்☀ said...

//சூர்யா + ஆதவன்னு சொல்லும் போதே தக்காளி.... மொக்கைன்னு விளங்கியிருக்கனும். சுருக்கமா சொல்லனுமுன்னா.. வெட்டி _____ நித்திரைக்கு கேடு! //

தீபாவளிக்கு ஊருக்கு போனதை வச்சு வெறுப்பேத்தினதும் இல்லாம இது வேறயா? உனக்கு இருக்கு தம்பி நேர்ல......

வால்பையன் said...

மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி டெர்ரராவுல இருக்கு!

வாங்க கலை!

kishore said...

எல்லாம் நல்லா தான் இருக்கு நண்பா.. ஆனா இப்படி சொல்லாம போயிட்ட .. இது நியாயமா?

geethappriyan said...

GOOD POST
VOTED IN TAMILISH AND TAMILMANAM ASWELL

அப்துல்மாலிக் said...

மறுக்கா மறுக்கா மறக்கமுடியாத தீபாவளி சந்தோஷமான விசயம். நல்லாயிருங்க மக்கா

அக்னி பார்வை said...

vazhthukal

Unknown said...

பராக் பராக்

சுசி said...

//கூவமே காரித்துப்புற மாதிரி திட்டியிருப்பங்குறது //
ஹாஹாஹா... இது தான் கலை டச்.

//தம்பி பொண்ணுதான் செவுட்டுல இரண்டு வச்சிருக்கு! //
குட்டிம்மாவால முடிஞ்சுது.. நம்மளால.... ஹூம்....

//தீபாவளி அன்னைக்காவது குளி //
இனி அடுத்த தீபாவளிக்கா...

//லைட்டா ஏதோ கருகுற வாசனை அடிக்குது!//
இங்கேயும்...

//அழுவக்கூடாது வினோத்.. அடுத்த தீபாவளிக்கு மாமா உன்னையும் கூப்பிடுட்டு போறேன்.. //
அழுகை என்ன வேண்டிக்கிடக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் அவர் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம். அப்போ அடுத்த தீபாவளி தலைதீபாவளியா?

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் மச்சி

என்ன இம்புட்டு சீக்கிரமா திரும்பிட்ட?

உனக்கு வடலூர் அமிர்தலிங்கம் தெரியுமா?

வினோத் கெளதம் said...

நல்லா இருப்பா நல்லா வருவ நீ..
அடுத்த பொங்கல் வேற இருக்கே இந்த கொசு தொல்லை தாங்க முடியாதே..

//அழுகை என்ன வேண்டிக்கிடக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் அவர் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம். //

அது எல்லாம் உயிரோட தான் இருக்கேன்..:))

//உனக்கு வடலூர் அமிர்தலிங்கம் தெரியுமா?//

ஆமாம் நான் கூட கேக்கனும்னு நினைச்சேன் உனக்கு வடலூர் ராமலிங்கம் தெரியுமா..?

கோபிநாத் said...

\\கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
GOOD POST
VOTED IN TAMILISH AND TAMILMANAM ASWELL
\\

இப்போ இதை கேட்டாரா அவரு!!?? ;;)

போதும் போதும் ரொம்ப சீன் போட்டது. இங்க நம்ம லாட்ஜ் 13 பீரியா அதை சொல்லுங்க முதல்ல ;)

கலையரசன் said...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்! உங்க தீபாவளி எப்படி போச்சி?

♠ ராஜு ♠ -க்கு
அது அழகானது! அது ஒன்னும் செய்யாது!!

ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி நன்பரே!

ஷண்முகப்ரியன் -க்கு
கண்டிப்பாக ஐயா! உங்கள் ஆசீர்வாதமும், வாழ்த்தும் வேண்டும்!!

கலையரசன் said...

D.R.Ashok -க்கு
அவ்வளவுதானா?

Suresh Kumar -க்கு
ஆமாம் சுரேஷ்! நன்றி!!

நாகா -க்கு
என்னா மச்சி! பேனர் வைக்கவே இல்ல?

சென்ஷி -க்கு
இதெல்லாம் ஒரு கேள்வியா மாமா? பப்பரபான்னு தொறந்துதான் இருக்கு.. கதவு!

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
என்னங்கண்ணா இருக்கு? பிரியாணியும், சிக்கன் டிக்காவுமா?

வால்பையன் -க்கு
அப்படி நாமலே பில்ட்அப் குடுத்துகிட்டாதான் உண்டு.. வாலு!

KISHORE -க்கு
டேய் வென்று! நீ எங்கடா போன? போன் பண்ணி பார்த்து டயர்ட் ஆகிட்டேன்..!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
கோபிநாத் கமெண்ட்டை படிச்சிக்கோ!

கலையரசன் said...

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி மக்கா! எங்க ஆளையே கானாமே? ஊருல இருக்கியளா?

அக்னி பார்வை -க்கு நன்றிகள்

Kiruthikan Kumarasamy -க்கு ரைட்டு! ரைட்டு!!

சுசி -க்கு
//குட்டிம்மாவால முடிஞ்சுது.. நம்மளால?//
பல பேரு ரெடியா இருக்கீங்க போல...? மண்டையில போட!

//இனி அடுத்த தீபாவளிக்கா...//
தீபாவளிக்கு மட்டும் இல்ல.. பொங்கலுக்கும் உண்டு!!

//இத படிச்சதுக்கு அப்புறம் அவர் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம். அப்போ அடுத்த தீபாவளி தலைதீபாவளியா?//
அதெல்லாம் வளர்த்தவனுக்குதான்... இவன் கொயந்த..!
உங்க ஆசீர்வாதத்தோட.. பிப்ரவரி மாசம்!!

கலையரசன் said...

பிரியமுடன்...வசந்த் -க்கு
அவ்வளவு லீவுதான் குடுத்தாங்க மச்சி!
//உனக்கு வடலூர் அமிர்தலிங்கம் தெரியுமா?//
ம்.. அவங்க ஆயா குப்பாயிதான் தெரியும்!

வினோத்கெளதம் -க்கு
பொங்கலுக்கு நீ ஊருக்கு வர்ல..?
வர்ல..?
வர்ல..?
வர்ல..?
சரிவுடு.. வரமுடியாத வருத்தத்துல நிறைய சாப்பிட்டு வயித்த கெடுத்துக்காத!!

//உனக்கு வடலூர் ராமலிங்கம் தெரியுமா..?//
தெரியுமுன்னு சொன்னா முத்தம் குடுக்கபோறியா?

கோபிநாத் -க்கு
அப்பா.. கார்த்திக்கு பதில் மிச்சம்!
டேய்.. இது லாட்ஜாகிட்டீங்களா?
கார்த்தி டிபனும், சென்ஷி சைட் டிஷ்சும், நீ சரக்கும் எடுத்துட்டு வந்துடு...
பாக்கி எல்லாம் ப்ரீதான்!!

kishore said...

//டேய் வென்று! நீ எங்கடா போன? போன் பண்ணி பார்த்து டயர்ட் ஆகிட்டேன்..!//

ஆமா மச்சி.. போர் அடிச்சிதுனு நிலாவுக்கு பொய் ரெஸ்ட் எடுத்தேன்.. ங்கொய்யால .. போடுறயே பிட்டு.. நான் புதன் கிழமை தான் விசாகபட்டினம் போனேன்.. அப்போவும் என்னோட மொபைல் ஆன் ல தான் இருந்துச்சி..

Thenammai Lakshmanan said...

kalakal deepavali

nalla irukku

pavam vinodh
avarai mattum vitrunga
thirumba een nyabakap paduthuriinga

home sick

அது ஒரு கனாக் காலம் said...

congrats...Kalai.... for the house warming ....

கடைக்குட்டி said...

கங்கிராட்ஸ் தல.. :-)

பித்தன் said...

சும்மா அதிருதுல்ல..... கலக்கல் கலை பேக்.....

Blog Widget by LinkWithin