Sunday, June 7, 2009

நடந்தது என்ன? துபாய் பதிவர் சந்திப்புஅமீரக பதிவர் சந்திப்பு : 05.06.௨009
இடம்: கராமா பார்க் (சிம்ரன் ஆப்பக்கடைக்கு முன்பு)
நேரம்: மாலை 6.00 - 8.00

1. மாலை 6.00 முதல் 8.30 வரை கராமா பார்க் புல்வெளியில்
2. பார்க்குக்கு வெளியில் (அவ்வளவு சீக்கிரம் போயிடுவோமா?) (8.30 முதல் 9.00 வரை
3. அஞ்சப்பர் உணவகம் (9:00 முதல் 09:45 வரை)

நீண்ட, வட்ட, முக்கோண இடைவெளிக்குப் பின் துபாயில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது என்பதை ஆழ்ந்த(?!) மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்! (ஒ.கே, கை தட்டி முடிச்சிட்டீங்களா?) . ஏற்கனவே கொட்டையை தின்னு பழத்தை கீழே போட்ட பதிவர்களோடு, புதிய பல்பு பதிவர்கள் பலரும் சந்திப்பில் கலந்துகொண்டு விழித்தார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்! (மறுபடியும், ஜோரா ஒருகா கை தட்டுங்க..)

மாலை 6.00 மணிக்கு நடக்கவிருக்கும் சந்திப்புக்கு 5.00 மணிகே கிளம்பினால்தான் சரியாக இருக்குமுன்னு நினைச்சிக்கிட்டு (நாம நினைச்சது என்னக்கி கரைக்டா நடந்துருக்கு!) கிளம்பி, டாக்சி பிடித்து, பார்கில் நுழைந்தால்... மீ த பர்ஸ்ட்டு! (பின்னூட்ட வியாதி!). சரி, வந்ததது வந்தாச்சு.. பொழுது போக வேண்டாமா? அதனால, ஒவ்வருத்தருக்கா போன் போட்டேன். பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா?, பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா? ன்னு கருணாஸ் ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிட்டேன்!

5.45 க்கு இரண்டாவது வந்து என் வயிற்றில் தேன், பால், தயிர் வார்த்தார்கள் கண்ணாவும் வினோத் கெளதமும். அதன் பின் மூன்றாவதாக சுந்தர்ராமன் அண்ணன் வந்தாரு, அவரு வந்ததை விட அவர் கையில் இருந்த வடை பாக்ஸை பார்த்ததும் மகிழ்ச்சி! (சீ.. வட சாப்பிடதான் போனீயான்னு கேட்டா, மறந்துபோய் ஆமான்னு உண்மையை சொல்லிடுவேன்!) வடை சுட்டு கொடுத்த அவரது துணைவியாருக்கு, பதிவர்கள் சார்பா ஒரு ஸ்பெசல் நன்றி! (ப்பா.. டோக்கன் போட்டாச்சு! அடுத்த தடவை வட நிச்சயம்!)

6:10.. குழுமியிருந்த பதிவர்களிடம் இருந்தும் லேசான சலசலப்பு.. "ஏய்.. குசுப்பன் சரவணன் மாதியில்ல இருக்கு" என்ற கும்மியடிச்சி நாங்கள் முடிவுக்கு வரும் முன்பே.. பதிவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து அனுமதி இல்லாமல் அமர்ந்து கொண்டார்..

அவருடன், பதிவர் சிவராமன் வந்திருந்தார். அடுத்த சில மணிதுளிகளில் என்பக்கம் பிரதீப், ஆசாத் அண்ணாச்சி, அஷோக் அவர்களும் ஆஜார்! வந்தவர்களும், வந்திருந்தவர்களும் அறிமுக படலம் முடிந்து, அவரவர் இடத்தில் அமர்ந்தனர். வடை சாப்பிட்டதாலும், குசும்பன் சரவணன் கொண்டு வந்த கடலயை (நிஜ கடலை) சாப்பிட்டதாலும், அயர்சியாகி (சாப்பிட்டத்துகேவா?) அக்காவ பத்தி தப்பா பேசாத (ஆக்வுவாஃபினா) பாட்டில் வாங்க நானும் பிரதீபும் சென்றோம்!. வாங்கிவிட்டு பிரதீப் "நான்தான் காசு கொடுபேன்" என்று அடம்பிடித்ததும், நான் திரும்ப ஓடிபோய் ஆப்பிள் ஜூசும், ஆரஞ்ச் ஜூசும், வாங்கி வந்தேன்.

திரும்பி வருவதற்குள் மாவீரன் அய்யணாரும், அவரது நண்பரான ஜெயக்குமார் வந்து வட்டத்தை பெரியதாக்கியிருந்தார்கள். அப்பா, ஒருவழியா எல்லோரும் வந்தாச்சுன்னு சிமெண்ட் போடாமல் செட் ஆகும் போது வந்து செட் ஆனாங்க நம்ம செந்திலும், லியோ சுரேசும். நல்லவேளையாக 7.30 மணிக்கு மேலும் வெளிச்சம் குறையாமல் இருந்து முகத்தை நோக்கி விவாதம் செய்ய ஏதுவாய் இருந்த தி.மு.க விற்கு (சூரியனுக்கு) நன்றி!!

அதன்பின் ஒவ்வொருவராக கடலையை ஆரம்பிக்க முதலில் பேசிய ஆசாத் அண்ணன், எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டு.. இலக்கியம், வரலாறு, கவிதை, என பேசி அனைவரையும் கவர்ந்தார். பின்னர், அய்யணார் அருமையாய் அவரை கையமர்த்தி முதலில் எல்லோரும் வரிசையாக தங்களை அறிமுகப்படித்திக் கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அறிமுகங்கள் முடிந்தபின் அவர்ரவர்களின் வலைப்பூ முகவரியும், அலைபேசியின் எண்களையும் கண்ணா சேகரித்து வைத்துகொண்டார். (அத வாங்கி வச்சிகிட்டு என்ன பண்றாருன்னு, யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!)

இடையில் அய்யணார் உலகசினிமா பற்றியும், ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பது பற்றியும் உரையாற்றினார். இடையில் வந்த வாசிப்பாளர்(!) பின்னூட்ட புயல் தியாகு என்கிற நாகா பல கேள்விகளை கேட்டும், சுந்தர்ராமன் பல கொக்கிகளை போட்டும் திக்குமுக்காட செய்தார்கள். வழக்கம்போல் குசும்பன் சரவணன் இடையிடையே பல பிட்டுகளை அள்ளிவிட்டு கொன்டிருந்தார் (ஷக்கீலா பிட்டுகள் அல்ல!). நாங்கள் (புதிய பதிவர்கள்) அவர்கள் வாயை பார்த்துகொண்டிருந்தோம் என்று தனியாக சொல்ல தேவையில்லை!

வினோத் கொளதம் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும், நேரமின்மையாலும், சந்திப்பை 8.30 மணிக்கு முடிக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது. இருப்பினும் பதிவர் சந்திப்பு அற்புதமாக அமைந்ததில் எனக்கும், சக புதிய பதிவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் சந்திப்பிலாவது நீண்டநேரம் கலந்துகொள்ள முயலவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

கலந்துகொண்ட பதிவர்கள் -

1. குசும்பன்
2. அய்யணார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. விநோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன் (அடியேன்தான்!)

கலந்துகொண்ட பின்னூட்ட பிஸ்தாக்கள்:
1. லியோ சுரேஷ்
2. அஷோக் குமார்
3. தியாகு என்கிற நாகா
4. ஜெயக்குமார்

வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
மேலும் படங்களுக்கு கண்ணா பதிவை பார்க்கவும்!

49 comments:

குசும்பன் said...

யோய் கலை விட்டா நான் பிட்டு காட்டினேன் என்று சொல்லிவிடுவீங்க போலயே:))

ஆமா நாம டிஸ்கஸ் செஞ்சமாதிரி இந்த பதிவுக்கு சோக ஸ்மைலி போடுவதா? இல்லை சிரிப்பான் போடுவதா?

எதுக்கும் இரண்டையுமே போட்டு வைக்கிறேன்!

:))

:((

Kanna said...

மாப்பு அஞ்சப்பர்லயும் முந்திகிட்டு காசு கொடுத்த கடையெழு வள்ளல் வரிசைல எட்டாவது வள்ளல் நம்ம பிரதீப்பை பத்தி சொல்லாம விட்டதுக்காக...உனக்கு அடுத்த தடவை வட கிடையாது..

இதுதான் தீர்ப்பு

இராகவன் நைஜிரியா said...

துபாய் பதிவர் சந்திப்பு நன்கு நடந்தது பற்றி கேட்க மிக்க மகிழ்ச்சி.

இராகவன் நைஜிரியா said...

// பொழுது போக வேண்டாமா? அதனால, ஒவ்வருத்தருக்கா போன் போட்டேன். பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா?, பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா? ன்னு கருணாஸ் ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிட்டேன்!//

இஃகி...இஃகி...

போன் பில் எகிறிச்சா?

கலையரசன் said...

//குசும்பன் said...
எதுக்கும் இரண்டையுமே போட்டு வைக்கிறேன்!

:))

:((//

நன்றிங்கணோவ்! கடைய தொறந்ததும், முதல்ல வந்து உங்க குசும்ப ஆரம்பிச்சதுக்கு!

ஜோசப் பால்ராஜ் said...

//6:10.. குழுமியிருந்த பதிவர்களிடம் இருந்தும் லேசான சலசலப்பு.. "ஏய்.. குசுப்பன் சரவணன் மாதியில்ல இருக்கு" என்ற கும்மியடிச்சி நாங்கள் முடிவுக்கு வரும் முன்பே.. பதிவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து அனுமதி இல்லாமல் அமர்ந்து கொண்டார்.. //

குசும்பன் வந்தபோது அங்கே பெரும் ஆரவாரம் எழுந்ததாகவும், அதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டதாகவும் செய்திகள் வந்த போதும், சிறிய சலசலப்பு மட்டுமே ஏற்பட்டதாக செய்தியில் இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்

கலையரசன் said...

Kanna said...
//உனக்கு அடுத்த தடவை வட கிடையாது..//

இப்ப மட்டும் வட கிடைச்சுதா என்ன? போடா டேய்..
:-)

கீழை ராஸா said...

ஒண்ணு கூடிட்டிங்களாய்யா...

கலையரசன் said...

//துபாய் பதிவர் சந்திப்பு நன்கு நடந்தது பற்றி கேட்க மிக்க மகிழ்ச்சி.//
நன்றி ராகவன்.. முதல்முறையாக வந்ததற்க்கும், வாழ்த்துக்கும்! உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம்!!..

//போன் பில் எகிறிச்சா?//
லோக்கல் கால்தான் பாஸ்!, இல்லண்ணா "செல்" ல வெளிய எடுப்பமா?

கலையரசன் said...

ஜோசப் பால்ராஜ் said...
//சிறிய சலசலப்பு மட்டுமே ஏற்பட்டதாக செய்தியில்
இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்//

என்ன பாஸ் பன்னறது? நாங்க லோக்கல் சேனல்..
நீங்க பி.பி.சி ல பாத்துருப்பிங்க! அதனால அஜீஸ் பன்னிக்கோங்க!

கீழை ராஸா said...
//ஒண்ணு கூடிட்டிங்களாய்யா...//

யப்பா ராஸா! உங்கள கூப்பிட்டதுக்கு தான் நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டடீங்களே!

அது ஒரு கனாக் காலம் said...

ஆமாம் நாம பேசகூடத்தெல்லாம், பேசியது பற்றி ஒன்றும் காணோமே, ... நானே அது பற்றி எழுதி அடி வாங்கிகறேன் ( வழக்கம் போல ) ... கொஞ்சம் டைம் வேணும் , உடம்பை தேத்திக்கணும்

அபுஅஃப்ஸர் said...

தல

நம்மளை அழைக்க மறந்துட்டீங்களே

அருமையான சந்திப்பு தவறவிட்டுட்டேன்

சந்திப்போம் விரைவில்

கலையரசன் said...

அது ஒரு கனாக் காலம் said...
//ஆமாம் நாம பேசகூடத்தெல்லாம், பேசியது பற்றி ஒன்றும் காணோமே//

அண்ணாச்சி... நீங்களாச்சி! அவங்களாச்சி!! ஹி ஹி
நீங்க எழுதுனா அருமையா, அம்சமா, அழகா இருக்குமுன்னு
அத விட்டுடோம்! (ம்ஹம்..எப்டிலாம் சமாளிக்கவேன்டியதா இருக்கு!)


அபுஅஃப்ஸர் said...
//தல நம்மளை அழைக்க மறந்துட்டீங்களே//

பிரச்சனயில்ல தல.. 21ந் தேதி சந்திச்சிடுவோம்!

என் பக்கம் said...

:((

ஓகேவா.................

வேத்தியன் said...

வாழ்த்துகள்...

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்

கலையரசன் said...

//என் பக்கம் said...
ஓகேவா...........//

டிரிபிள் ஒ.கே பிரதீப்!

//வேத்தியன் said...
வாழ்த்துகள்...//

நன்றிகள்!!

//தீப்பெட்டி said...
வாழ்த்துகள்//

நன்றிகள்

பித்தன் said...

அடுத்த சந்திப்பு நடக்குறப்ப கண்டிப்பா என்ன கூப்பிடுங்க... அப்படியே ப்ளைட் டிகேட் சேத்து அனுப்பிடுங்க :)

Suresh Kumar said...

மொத்ததில கலக்கியிருக்கீங்க

ஆ.ஞானசேகரன் said...

மகிழ்ச்சியும்
வாழ்த்துகளும்

Joe said...

சென்னையில் எப்போது அடுத்த பதிவர் சந்திப்பு நடக்கும்?

பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் இங்கே இருப்பதால் நாம போயி பேச முடியுமான்னும் கொஞ்சம் பயமா இருக்கு.


உங்க பதிவு நல்லாயிருந்துச்சு (இந்த மாதிரி பொய்யைச் சொன்னாத் தான் போக விடுவாயிங்க)

vinoth gowtham said...

யோவ்..ஆப்பம் வாங்கி தரேனு கடைசி வரைக்கும் ஏமாத்திபுட்டியே..

பித்தன் said...

//vinoth gowtham said...
யோவ்..ஆப்பம் வாங்கி தரேனு கடைசி வரைக்கும் ஏமாத்திபுட்டியே..
//

இங்கன வா நான் வாங்கி தரேன்

கலையரசன் said...

//பித்தன் said...
அப்படியே ப்ளைட் டிகேட் சேத்து அனுப்பிடுங்க :)//

உங்க ஊருக்கு ப்ளைட் இல்லைங்கோ!
அதனால, அடுத்த தடவை ஓலை அனுப்பும் போது
பொடிநடையா வந்து சேரு!

//Suresh Kumar said...
மொத்ததில கலக்கியிருக்கீங்க//

அப்புறமா தனி தனியா கலக்குவோம்!!

//ஆ.ஞானசேகரன் said...
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் //

நன்றியும், வணக்கமும்!!

கலையரசன் said...

Joe said...
//(இந்த மாதிரி பொய்யைச் சொன்னாத் தான் போக விடுவாயிங்க)//
இல்லனா இங்கயே உக்காரவச்சி, சோரு ஊட்டி உடுவோமா? :-)


//vinoth gowtham said...
யோவ்..ஆப்பம் வாங்கி தரேனு கடைசி வரைக்கும் ஏமாத்திபுட்டியே.. //
யோவ்..கடைசி வரைக்கும் எந்த ஆப்பம் வேனுமுன்னு சொல்லாம பூட்டியே..

பித்தன் said...
//இங்கன வா நான் வாங்கி தரேன்//
யோவ்.. அவன் எந்த ஆப்பத்தை கேக்குறான்னு தெரியுமா?

குப்பன்_யாஹூ said...

happy to hear and read the Dubai(UAE) bloggers meet.

malar said...

adutha thadavai entha park ?ethanai manikkku?

மின்னுது மின்னல் said...

கடைசியா அய்யனார் கட்டுடைச்சாரா இல்லையா..?


அய்யனார் பேசியதை கேட்டதும் பாதி பேருக்கு அடிவயித்துல கிலி வந்துருக்குமே :)


நீங்க எழுதுரது எல்லாம் மொக்கை உங்களால தான் தமிழ்மணம் "வீசம்" அடிக்குது னு அய்யனார் சொல்லிருப்பாரே :)

அக்னி பார்வை said...

அப்பா, அடி தடி இல்லாமமுடிச்சிட்டிங்கா..அப்புறம்.. சரக்கெல்லாம் சந்திப்பில் உண்டா?

Suresh said...

மச்சான் வாழ்த்துகள்

இப்போ தான் வினோத் பதிவும், கண்ணா பதிவும் பார்த்தேன் ஒரு வடைக்கு நீ முதலில் போய் ஆஜர் ஆனது பத்தி சொல்லவே இல்லை ;)

மீத பர்ஸ்ட் :-) ஹா ஹா

நீ ரொம்ப நல்லவன் மச்சான் ஆனா போட்டோவில் வாண்டட் மாதிரி முறைச்சு லுக் வேற..


//நீண்ட, வட்ட, முக்கோண இடைவெளிக்குப் பின் துபாயில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது என்பதை ஆழ்ந்த(?!) மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்! (ஒ.கே, கை தட்டி முடிச்சிட்டீங்களா?) . //


:-) கை வேற தட்டனுமா எனக்கு எங்க்யா என் பங்கு வடை அதை கொடுங்க முதல அப்புறம் தட்டுவோம் :-)

//ஏற்கனவே கொட்டையை தின்னு பழத்தை கீழே போட்ட பதிவர்களோடு, புதிய பல்பு பதிவர்கள் பலரும் சந்திப்பில் கலந்துகொண்டு விழித்தார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்! (மறுபடியும், ஜோரா ஒருகா கை தட்டுங்க..)//

என்ன குரங்கு வித்தையா காமிச்சா அந்த பழகத்தில் பதிவு வேறையா ;) ஹீ

விழித்தார்கள் ஏன்பா வடை தரவில்லையா என்ன ஆச்சு சரி கண்ணா தான் பிரபல பதிவர் ..

Suresh said...

// மீ த பர்ஸ்ட்டு! (பின்னூட்ட வியாதி!). சரி, வந்ததது வந்தாச்சு.. பொழுது போக வேண்டாமா? அதனால, ஒவ்வருத்தருக்கா போன் போட்டேன். பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா?, பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா? ன்னு கருணாஸ் ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிட்டேன்!// :-) ஹீ ஹீ

//5.45 க்கு இரண்டாவது வந்து என் வயிற்றில் தேன், பால், தயிர் வார்த்தார்கள் கண்ணாவும் வினோத் கெளதமும். அதன் பின் மூன்றாவதாக சுந்தர்ராமன் அண்ணன் வந்தாரு, அவரு வந்ததை விட அவர் கையில் இருந்த வடை பாக்ஸை பார்த்ததும் மகிழ்ச்சி! (சீ.. வட சாப்பிடதான் போனீயான்னு கேட்டா, மறந்துபோய் ஆமான்னு உண்மையை சொல்லிடுவேன்!) வடை சுட்டு கொடுத்த அவரது துணைவியாருக்கு, பதிவர்கள் சார்பா ஒரு ஸ்பெசல் நன்றி! (ப்பா.. டோக்கன் போட்டாச்சு! அடுத்த தடவை வட நிச்சயம்!) //

ஹா ஹா வந்த வேளை முடிந்து போச்சு வடை வந்தாச்சு.. அண்ணிக்கு ரொம்ப நன்றி சொல்லனும், துபாயில் காய்ந்து நொந்து போன நமக்கு அந்த வடை தேவாமிர்தம் தான்..

சரி சரி அடுத்தவர் வருவதற்க்கு வடை முடிச்சு போச்சா

//6:10.. குழுமியிருந்த பதிவர்களிடம் இருந்தும் லேசான சலசலப்பு.. "ஏய்.. குசுப்பன் சரவணன் மாதியில்ல இருக்கு" என்ற கும்மியடிச்சி நாங்கள் முடிவுக்கு வரும் முன்பே.. பதிவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து அனுமதி இல்லாமல் அமர்ந்து கொண்டார்..//

குசும்பு :-)

//அவருடன், பதிவர் சிவராமன் வந்திருந்தார். அடுத்த சில மணிதுளிகளில் என்பக்கம் பிரதீப், ஆசாத் அண்ணாச்சி, அஷோக் அவர்களும் ஆஜார்! வந்தவர்களும், வந்திருந்தவர்களும் அறிமுக படலம் முடிந்து, அவரவர் இடத்தில் அமர்ந்தனர். வடை சாப்பிட்டதாலும், குசும்பன் சரவணன் கொண்டு வந்த கடலயை (நிஜ கடலை) சாப்பிட்டதாலும், அயர்சியாகி (சாப்பிட்டத்துகேவா?) அக்காவ பத்தி தப்பா பேசாத (ஆக்வுவாஃபினா) பாட்டில் வாங்க நானும் பிரதீபும் சென்றோம்!. வாங்கிவிட்டு பிரதீப் "நான்தான் காசு கொடுபேன்" என்று அடம்பிடித்ததும், நான் திரும்ப ஓடிபோய் ஆப்பிள் ஜூசும், ஆரஞ்ச் ஜூசும், வாங்கி வந்தேன்.//

வாங்கி மட்டும் வரது காசு ;) வேற கொடுக்கனுமா ..

ஆமா இது என்ன ஒரு மினி லஞ்சே முடிஞ்சு இருக்கு..

இதுக்கு தான் நீ ரெண்டு நாளா விரதம் இருந்து ;) சீக்கிரமா போனதாய் சொன்னியோ...

//திரும்பி வருவதற்குள் மாவீரன் அய்யணாரும், அவரது நண்பரான ஜெயக்குமார் வந்து வட்டத்தை பெரியதாக்கியிருந்தார்கள்.//

இது தான் அந்த பதிவர் வட்டம்னு சொல்லுறாங்களோ

Suresh said...

// அப்பா, ஒருவழியா எல்லோரும் வந்தாச்சுன்னு சிமெண்ட் போடாமல் செட் ஆகும் போது வந்து செட் ஆனாங்க நம்ம செந்திலும், லியோ சுரேசும். நல்லவேளையாக 7.30 மணிக்கு மேலும் வெளிச்சம் குறையாமல் இருந்து முகத்தை நோக்கி விவாதம் செய்ய ஏதுவாய் இருந்த தி.மு.க விற்கு (சூரியனுக்கு) நன்றி!!//

நம்ம கலராய் இருந்தா சீக்கிரம் வரனும், அவ்ங்க எல்லாம் கலர் பாஸ் ;)

//அதன்பின் ஒவ்வொருவராக கடலையை ஆரம்பிக்க முதலில் பேசிய ஆசாத் அண்ணன், எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டு.. இலக்கியம், வரலாறு, கவிதை, என பேசி அனைவரையும் கவர்ந்தார். பின்னர், அய்யணார் அருமையாய் அவரை கையமர்த்தி முதலில் எல்லோரும் வரிசையாக தங்களை அறிமுகப்படித்திக் கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அறிமுகங்கள் முடிந்தபின் அவர்ரவர்களின் வலைப்பூ முகவரியும், அலைபேசியின் எண்களையும் கண்ணா சேகரித்து வைத்துகொண்டார். (அத வாங்கி வச்சிகிட்டு என்ன பண்றாருன்னு, யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!)//

வட சாப்பிட்ட கணக்கை யாரும் போடவில்லை பதிவாய் ஏன் இந்த தப்பு கண்டிக்கிறோம்

//இடையில் அய்யணார் உலகசினிமா பற்றியும், ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பது பற்றியும் உரையாற்றினார். இடையில் வந்த வாசிப்பாளர்(!) பின்னூட்ட புயல் தியாகு என்கிற நாகா பல கேள்விகளை கேட்டும், சுந்தர்ராமன் பல கொக்கிகளை போட்டும் திக்குமுக்காட செய்தார்கள். வழக்கம்போல் குசும்பன் சரவணன் இடையிடையே பல பிட்டுகளை அள்ளிவிட்டு கொன்டிருந்தார் (ஷக்கீலா பிட்டுகள் அல்ல!). நாங்கள் (புதிய பதிவர்கள்) அவர்கள் வாயை பார்த்துகொண்டிருந்தோம் என்று தனியாக சொல்ல தேவையில்லை!//

ஹா ஹா ;)

//வினோத் கொளதம் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும், நேரமின்மையாலும், சந்திப்பை 8.30 மணிக்கு முடிக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது. இருப்பினும் பதிவர் சந்திப்பு அற்புதமாக அமைந்ததில் எனக்கும், சக புதிய பதிவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் சந்திப்பிலாவது நீண்டநேரம் கலந்துகொள்ள முயலவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். //

ரொமப சந்தோசம் நண்பா


//கலந்துகொண்ட பதிவர்கள் -

1. குசும்பன்
2. அய்யணார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. விநோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன் (அடியேன்தான்!)

கலந்துகொண்ட பின்னூட்ட பிஸ்தாக்கள்:
1. லியோ சுரேஷ்
2. அஷோக் குமார்
3. தியாகு என்கிற நாகா
4. ஜெயக்குமார்//

வாழ்த்துகள் நண்பர்களே இது சூப்பரா இருக்கு மேலும் பல பதிவர்களை அறிமுக படுத்தியது

//வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
மேலும் படங்களுக்கு கண்ணா பதிவை பார்க்கவும்!//

அத பார்த்து தெரிச்சு போய் தான் உன்னை பார்க்க வந்தேன்

Suresh said...

கழுகு பார்வைனு இந்த வடையை நீ பார்த்த்வுடன் கண்பார்ம் ஆச்சு ;)

Suresh Kumar said...

//Suresh Kumar said...
மொத்ததில கலக்கியிருக்கீங்க//

அப்புறமா தனி தனியா கலக்குவோம்!! /////////

ஆகஸ்ட் மாதத்தில இந்தியாவில இப்படி ஏதாவது சந்திப்பு இருந்தா சொல்லுங்கப்பா

ஷண்முகப்ரியன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

விஷ்ணு. said...

//அவரு வந்ததை விட அவர் கையில் இருந்த வடை பாக்ஸை பார்த்ததும் மகிழ்ச்சி!//

அட நம்ம கோஷ்டிதானா நீங்களும்.

நாகா said...

இப்படியெல்லாம் பட்டம் கொடுத்தா நாங்க பின்னூட்டம் போட்டுருவோம்னு நெனச்சீங்களா? சரி பொழச்சுப் போங்க.. :)

மூணு வருஷத்துல இது என்னோட மூணாவது பின்னூட்டம் :) ஹூம் சும்மா இருக்கலாம்னா விட மாட்டீங்களே ..:)

-நாகா

கலையரசன் said...

குப்பன்_யாஹூ -க்கு
ரொம்ப நன்றி குப்பன்!

malar -க்கு
ஏன்? நீங்க கலந்துக்க போறீங்களா?
21ஆம் தேதி. ஹேட்டல் இன்னும் முடிவாகவில்லை!!

மின்னுது மின்னல் -க்கு

கிலி இல்ல புலியே பிராண்டுச்சி..
அனுபவம் பேசுதோ? நல்ல வேலை உங்களோட அந்த "வீசம்" போச்!
நாங்க தப்பிச்சிட்டோம் பாஸூ!!

அக்னி பார்வை -க்கு
எந்த சரக்குன்னு தெளிவா கேளுங்கண்ணே!!

கலையரசன் said...

டேய் சுரேசு... உன்ன பதிவுல எழுதியிருக்கற,
எல்லா வரியையும் எடுத்து பின்னுட்டத்துல்ல
போட சொன்னேனா? எப்டிடா.. ஒரு ஒரு
வரிக்கும் விளக்கம் கொடுக்கற?
யப்பா.. நீதான்டா பின்னூட்ட பிசாசு!!

உன் வருகைக்கு நன்றியய்யா!

கலையரசன் said...

ஷண்முகப்ரியன் -க்கு
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!!

விஷ்ணு -க்கு
ஆமாணே.. நாமெல்லாம், ஒரே கரகாட்ட கோஷ்டிதான்!

நாகா -க்கு
அட பாவி! மூணு வருஷத்துல மூணு பின்னூட்டம் தான் போட்டுருக்கியா?
அதுல இது ஒன்னா? உனக்கு பின்னூட்ட பிஸ்தா ன்னு பட்டம் வேற..
குடுத்தவன உதைக்கனும்!!

நாகா said...

உன்ன மாதிரி ஆளுங்க குடுக்கற பட்டப்பேருக்கு பயந்தே, நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுட்டேன். (இன்னும் ரெண்டு மூணு நாள்ள வாசம் வீசும், எல்லோரும் இப்பவே மூக்க பொத்திக்குங்க..)

ஐயோ.. இது நாலாவது பின்னூட்டம்... ஒரே நாளுல ரெண்டு தடவ என்ன எழுத வெச்சுட்ட, இதுக்கு நீ சரியான தண்டனை அனுபவிக்கப்போற ( வேற என்ன? என்னோட வலைப்பூவ மோந்து பாக்கறதுதான்)..
-நாகா

Anonymous said...

அன்பு நண்பர்களே,
உங்களை நம்பி தான் மறுபடயும் uae வந்து உள்ளேன். இன்ஜினியரிங் படிப்புக்கு வேலை இருந்த சொல்லுங்க புண்ணியமா போகும்.At least helper வேலை இருந்த கூட சரி..... உடனே சொல்லுங்க........ ஒரு மாதம் விசா தான்.....என்னை தொடர்பு கொள்ள +971552414071(devaragul@gmail.com).. நன்றி

jackiesekar said...

கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

KISHORE said...

வாழ்த்துக்கள் மச்சி...

தண்டோரா said...

கலை..நான் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் 8/9 வது படித்தேன்

THANGA MANI said...
This comment has been removed by the author.
THANGA MANI said...

"இடம்: கராமா பார்க் (சிம்ரன் ஆப்பக்கடைக்கு முன்பு)"அங்கேயும் சிம்ரனா

siva said...

சூப்பர் கலை! நன்றாக விவரித்திருக்கிறீர்கள்.

கடைசி பின்னூட்டம் என்னுடையதாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன்.:)

Anonymous said...

Just want to say what a great blog you got here!
I've been around for quite a lot of time, but finally decided to show my appreciation of your work!

Thumbs up, and keep it going!

Cheers
Christian, iwspo.net

Blog Widget by LinkWithin