Tuesday, June 9, 2009

கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)
கருப்பு வர்ணத்தை பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா ? நமக்கு பல வர்ணங்களின் பரிட்சயம் இருந்தும், கருப்புதான் பெரும்பாலோருக்கு பிடிக்க காரணம்? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கருப்பு என்பது ஒரு வர்ணமே அல்ல!. கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. பதிவர்கள் பலரது பதில்களில் கருப்பு வர்ணத்தை பிடிக்கும் என எழுதியிருந்தார்கள் . எனது பதிலும் அதுதான், அதனால் தானோ என்னவோ நான் இந்த பதிவிட காரணமாயிருக்கலாம்!

கருப்பின் குணம்
நாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம். வாழும் அறைகளில் கருப்பு வர்ணம் அடித்தால், நல்ல அகலமான அறைகள் கூட குறுகியது போல தென்படும் நம் கண்களுக்கு. கருப்பு வர்ணம் அடித்தத் பெட்டி, வெள்ளை வர்ணம் அடிதத பெட்டியை விட எடை அதிகமானதாக தோன்றும். கருப்பு வர்ணத்தினூடே எந்த ஒரு வர்ணம் சேர்ந்தாலும், பிரகாசமாய் ஜெலிக்கும்!.


கருப்பும், உலகமும்!

  • சீனாவில் கருப்பு வர்ணத்தை தண்ணீரை குறிப்பதற்க்கும், பணிகாலத்தை குறிப்பதற்க்கும், மேற்கு திசையை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • ஐரோப்பிய நாடுகளில் கருப்பு வர்ணத்தை, அஞ்சலி செலுத்தும் போது அணிவதற்க்கும், இறந்தவர்க்கு அணிவிக்கவும், அலட்சியமாக எடுத்துகொள்வதற்க்கும், கண்டனம் தெரிவிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • தாய்லாந்தில் கருப்பு வர்ணத்தை, தீயசக்திகளின் குறியீடாகவும், மகிழ்ச்சியின்மையின் வர்ணமாகவும், துரதர்ஷ்டத்தை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
  • மெக்சிகோ, ஸ்பெயின், போர்த்துகீஸ், இட்டாலி, கிரீஸ் போன்ற நாடுகளில், கணவனை இழந்த பெண்கள் வாழ்வின் பிற்பகுதியை கருப்பு வர்ண உடையணிந்துதான் கழிக்கவேண்டும், அதுமட்டுமல்லாது முற்காலத்தில் மதத்தை குறிக்கும் ஒரு குறியீடாகவும், மதகுருக்கள் கருப்பு அங்கியை தவிர வேறெதயும் அணிய கூடாது என்ற சட்டமும் இருந்தது.
  • இங்கிலாந்தில் கருப்பு வர்ணத்தில் மட்டுமே பேருந்தும், வாடகை வாகனங்களும் காணகிடைக்கும், அதுபோல் கருப்பு வர்ணம் என்பது ஒரு அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது!


கருப்பும், சில நம்பிக்கைகளும்!


கருப்பு பூனை குறுக்கே சென்றால், போகும் காரியம் வெற்றி அடையாது என்பது நம்பிக்கை. (இங்கிலாந்தை தவிர்த்து. அவர்களுக்கு அது அதி்ர்ஷ்டம்!)


கருப்பு உடையில் இறந்தவர்களை புதைத்தால், அவர்கள் மறுபடியும் ஆவியாக வருவார்கள் என்பது!


கருப்பு வர்ண நாய் கனவில் வந்தால், உங்களுக்கு நெருங்கியவர்கள் யாரோ இறந்துவிடுவார்கள் என்பது!


கல்யாணத்தின் போது கருப்பு வர்ணம் கொண்ட விலங்குகள் நுழைந்தாலோ, குறுக்கே சென்றாலோ, கண் னில் தென்பட்டாலோ துரதர்ஷ்டம் என்பது!

கருப்பில் நல்லவை சில

கருப்பு டை - நீதிபதி அணிவது
கருப்பு அங்கி - பாதிரியார்கள் அணிவது
கருப்பு பெட்டி - ரகசியம் காக்கும் பெட்டி
கருப்பு பெல்ட் - கைதேர்ந்தவன் (சண்டை பயிர்சியில்)
கருப்பு பூனைபடை - பாதுகாவலர்கள்

கருப்பில் தீயவை சில

கருப்பு ஆடு - உளவாளி (கூட இருந்து குழி பறிப்பவன்)
கருப்பு சந்தை - திருட்டு பொருள்களை விற்பது
கருப்பு பட்டியல் - தேச துரோகிகளின் பட்டியல்
கருப்பு நகைச்சுவை - நம் நம்பிகைகளை, நமக்கு பிடித்தவர்களை வைத்து நைய்யான்டி செய்வது
கருப்பு பந்து - ஓட்டு போடாமல் ஒருவரை நிராகரித்தல்

கறுப்புத் தோல் உடையவர்களுக்கு, தோல் கான்சர் வராதாம். கருப்புத் தோலில் பிக்மெண்ட் அடத்தியாக இருப்பதால், புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் கேன்சர் உண்டாவதில்லை என்று சொல்லுகின்றார்கள். கருப்பை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளது கடலில் ஒரு துளிதான். கருப்பு நிறம் என்பது நல்லது என்று ஒரு சாராரும், தீமை என்று மறுசாராரும் வாதிக்கலாம் ஆனால், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத வர்ணம் ஆகிவிட்டது கருப்பு!!.

35 comments:

Kanna said...

கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாடுன மாளவிகாவை பற்றி குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்....

Kanna said...

யோவ் ஓட்டும் போட்டாச்சு....நானும் ஒன்னு பப்ளிஷ் பண்ணிருக்கேன்....ஓழுங்கா ரூமுக்கு போன உடனே ஓட்டு போட்றனும்..ஆமா

குசும்பன் said...

என்னை பார்த்த பிறகு என் கருப்பு அழகில் சொக்கியதன் விளைவாக இந்த பதிவா?:)))

போட்டோஸ் எங்கய்யா?அனுப்பும் அதை முதலில்!

அது ஒரு கனாக் காலம் said...

கண்ணா கருமை நிற வண்ணா......

தண்டோரா said...

எவ்வளவு சிகப்பா இருந்தாலும்..ஒரு இடம் மட்டும் கறுப்பாத்தான் இருக்கும்.இது எல்லாருக்கும் பொது.

ஷண்முகப்ரியன் said...

கறுப்பு வண்ணத்தைப் பற்றி ஓஷோவின் கவித்துவமான கருத்துக்களை எனது பதிவினில் படித்தீர்களா,வடலூரான்?

http://shanmughapriyan.blogspot.com/2009/05/blog-post_14.html

tamilcinema said...

கருப்பு தெம்ளட் அருமையா இருக்கு தலைவா.

சுரேஷ் குமார் said...

ஹையா.. எனக்கு புடிச்சத பத்தி ஒரு இடுகையா..
இதுக்காகவே ஒரு நல்ல வோட்டு + சில பல கள்ளவோட்டு போட்டிருக்கேன் மச்சி..

malar said...

ungkal patilukku nanri ....

mudinthaal kalanthukolveen ...

ithee maathiri en thalathileeye therivithaal meelum oru nanri.....

கலையரசன் said...

//Kanna said... கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாடுன மாளவிகாவை//
தலைவியை ஒருமையில் அழைத்த காண்டு கண்ணாவை வண்மையாக கண்டிக்கிறேன்!

//ஓழுங்கா ரூமுக்கு போன உடனே ஓட்டு போட்றனும்..ஆமா//
மக்களே.. பாத்துகோங்க.. எப்டிஎல்லாம் மிரட்டி ஓட்டு கேக்குறான்னு!!

//குசும்பன் said... என் கருப்பு அழகில் சொக்கியதன் விளைவாக இந்த பதிவா?:)))//
யாரு சொன்ன? நீங்க கருப்புன்னு.. கருப்பு கோவிச்சிக்க போகுதுண்ணே!!

//அது ஒரு கனாக் காலம் said... கண்ணா கருமை நிற வண்ணா......//
கண்ணா சிகப்பாதானே இருக்கான்?

கலையரசன் said...

//தண்டோரா said... ஒரு இடம் மட்டும் கறுப்பாத்தான் இருக்கும்.//
உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி! அச்சில் ஏத்தமுடியாததற்க்கு வருந்துகிறேன் பாஸ்!!

//ஷண்முகப்ரியன் said... எனது பதிவினில் படித்தீர்களா,வடலூரான்?//
சுட்டிக்கும், தங்கள் வருகைக்கும் நன்றியண்ணே! படித்தேன்.. ஓஷோவின் கருமையை பற்றிய கருத்துக்கள் ஆச்சரியம் அளிக்கிறது!!

//tamilcinema said... கருப்பு தெம்ளட் அருமையா இருக்கு தலைவா//
நன்றி தமிழ்திரைப்படமே!!

பித்தன் said...

கண்டிப்பாக கருப்பை பற்றி கூரிருப்பது ஒரு துளி தான்...

கருப்பை பற்றி அடுக்கடுக்காக கூறிய நமது கலைக்கு
"கருப்பு கலை" என்ற பட்டத்தை வழங்குகின்றோம்.

KISHORE said...

எவ்ளவு நேக்கா ஓட்டு கேக்குறான்யா ...

நசரேயன் said...

நானும் கருப்பு

வினோத்கெளதம் said...

கருப்ப பத்தி அலசி ஆராய்ஞ்சு ஒரு பதிவு போட்டுதான்யா..

//நாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம்.//

அதான் அன்னிக்கு கருப்பு கலர் ட்ரெஸ்ஸா..

கலையரசன் said...

//malar said... mudinthaal kalanthukolveen ...//

கண்டிப்பா வரனும்! பதிவுக்கு வந்ததற்க்கு நன்றி!!

//சுரேஷ் குமார் said... ஹையா.. எனக்கு புடிச்சத பத்தி ஒரு இடுகையா..//

ஹையா.. உங்களுக்கும் பிடிக்குமா? நன்றி வந்ததற்க்கு!

//பித்தன் said... "கருப்பு கலை" என்ற பட்டத்தை வழங்குகின்றோம்.//

வாய்யா, வாத்தியாரு! இருக்கறவனுங்க பத்தாதுன்னு..
நீ வேற அவனுங்க கூட சேர்ந்து கும்முற!
நல்லா இருங்க.. வேற என்ன சொல்ல?

கலையரசன் said...

//KISHORE said... எவ்ளவு நேக்கா ஓட்டு கேக்குறான்யா ... //

எவ்வளவு நேக்கா ஓட்டு போடாம போறன் பாருங்கய்யா....

//நசரேயன் said... நானும் கருப்பு//

வாங்க அண்ணாச்சி!, நீங்களும் நம்ம லிஸ்டா? நன்றி!!

//வினோத்கெளதம் said... அதான் அன்னிக்கு கருப்பு கலர் ட்ரெஸ்ஸா..//

மாப்பு! நீ ஆக்சுவலா.. ஜேம்ஸ் பாண்டு க்கு பாண்டு தூக்க போகவேண்டியவன்.
தப்பிதவறி துஃபாய் வந்துட்ட.. (கண்டுபிடிச்சிட்டான்யாயயய!!)

சரவனண் said...

விளக்கம் கொடுகாவிட்டாலும் எனக்கு கருப்பு தான் பிடிக்கும்.
நம்ம ஊர் காரர் வேர வோட்டு போடாச்சி.......

இராகவன் நைஜிரியா said...

காந்தலே ருசி, கறுப்பே அழகு என்று சொல் உண்டு தெரியுங்களா...

சில கார்கள் கறுப்புக் கலரில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். செவர்லே கறுப்புக்கலர் கார் ரொம்ப அழகா இருக்குங்க..

கறுப்புப் பணம் என்பதை விட்டு விட்டீர்கள்.

கறுப்புத் தோல் உடையவர்களுக்கு, தோல் கான்சர் வராதாம். கருப்புத் தோலில் பிக்மெண்ட் அடத்தியாக இருப்பதால், புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் கேன்சர் உண்டாவதில்லை என்று சொல்லுகின்றார்கள்.

Subash said...

அருமை

Suresh Kumar said...

கருப்பை பற்றி ஒரு கலக்கலான கட்டுரையே எழுதியிருக்கீங்களே கலக்கீட்டீங்க கலை

வேழாம்பல் said...

எனது பதிவு விகடனில் வெளிவந்தது எனக்கே தெரியாது. நீங்கள்தான் முதல் முதலில் எனக்கு தெரிவித்து உள்ளீர்கள்.. நன்றி.. உங்கள் பதிவையும் படித்தேன்.. நல்ல பதிவுகள்.. தொடருங்கள்..வாழ்த்துகள்

VISA said...

காலம் காலமாய் கருப்பு என்னும் அழகான நிறத்தை அபச்சாரமாய் எண்ணி பழகிவிட்டோம். தவறான எதற்கும் நாம் சம்மந்தப்படுத்தி பார்ப்பது கருப்பு. இரங்கள் பத்திரிகைக்கு உகந்த நிறம் கருப்பு என தீர்மனித்துவிட்டோம். ஆனால் கருப்பு மிகவும் அருமையான நிறம். உங்கள் படைப்பில் அதிக தகவல்கள். அருமையான திரட்டி. வாழ்த்துக்கள்

கலையரசன் said...

//இராகவன் நைஜிரியா said... கறுப்புப் பணம் என்பதை விட்டு விட்டீர்கள்.//
நன்றி பாஸ்! உங்கள் தகவலுக்கு.. அதையும் மேல
சேர்த்துவிட்டேன்!. சுருக்கமாக சொல்லாம் என்றுதான்
கறுப்பு பணத்தை விட்டுவிட்டேன்..

//Subash said... அருமை//
நன்றி!!
என்ன சுபாஷ்? எங்க ஆளையே காணாம்?

//Suresh Kumar said... கருப்பை பற்றி ஒரு கலக்கலான கட்டுரை//
வந்து வாசித்தமைக்கு வந்தனமுங்கோ!!

கலையரசன் said...

//வேழாம்பல் said... நல்ல பதிவுகள்.. தொடருங்கள்..வாழ்த்துகள்//
நன்றி, வேழாம்பல்! அடிக்கடி வாங்க!!

//VISA said...காலம் காலமாய் கருப்பு என்னும் அழகான நிறத்தை
அபச்சாரமாய் எண்ணி பழகிவிட்டோம்//

ஆம் நன்பரே. வருகைக்கு நன்றி! கருத்துக்கள் அருமை!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

கலை ,
கருப்பு ஒரு ரம்மியமான வண்ணம்.
நாம் இந்தியர் தான் அதனை புறக்கணிக்கிறோம்,(உள்ளுக்குள் அதீத ஆசை இருந்தாலும் கூட)
ஷன்முகப்ரியன் அய்யா சொன்னது போல சிகப்பான பெண்கள் அழகிகள் என்றால் கருப்பில் களையும் சேர்ந்து விட்டால் அவள் கண்டிப்பாக அபூர்வமான பேரழகி.என் நண்பர்கள் கருப்பு என்றாலும் கலையாக பேரழகனாக இருப்பார்கள்,அதில் என் நண்பன் சரவணன் சிரித்தால் போதும்.
(விபத்தில் இறந்து விட்டான்)
மேலும்
நம் இசைஞானி-கருப்பு
ரமணர் -கருப்பு
காந்தி -கருப்பு
காமராசர்-கருப்பு
இன்னும் சொல்லிக்கொண்டே போவேன்
அனால் முடிக்க முடியாது.கருப்பு சட்டை போட்டு நாத்திகத்தை பரப்பியதால் தான் அதை இந்துக்கள் நாம் வெறுக்கிறோமோ?இருந்தும் சநீஸ்வரனுக்கும் ,ஐயப்பனுக்கும் சேர்க்கிறோமே ...
நான் இங்கு ரசித்து சைட் அடிப்பது கருப்பழகிகளே.
என்ன ஒரு நேர்த்தி யான ஒரு blend..(அதுவும் ஏமன் நாட்டு அரபு அழகிகள் இருக்கிறார்களே)
நம்மூர் .வெள்ளை அழகிகள் பிச்சை வாங்க வேண்டும்.ஒரு patch இருக்காது.
என் கருப்பு அழகிகள் பட்டியல்
பழைய சரிதா.
என் பழைய ஜூட்டுகள்(ஆறாவது இருக்கும்)
பிபாஷா பாசு.
திவ்யா (பொல்லாதவன்)
ஸ்ரேயா(திமிரு)
அபர்ணா(புதுக் கோட்டையிலிருந்து சரவணன்)
மிகவும் அபூர்வமான படைப்பு.( இன்னும் பல பெயர்கள் விட்டுவிட்டன)

யூர்கன் க்ருகியர்..... said...

"விடாது கருப்பு" அப்படின்னா என்ன ?
கரிமேட்டு கருவாயன் - பெயர்காரணம் தெரியுமா ?
காத்து "கருப்பு" அடிச்சிருக்கும் அப்படின்றான்களே ஏன் ... எப்படி ?

விஷ்ணு. said...

கருப்பு கலருக்கு கருத்துக்கள் சேர்த்த கலையரசனுக்கு கன்னாபின்னான்னு பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Joe said...

கறுப்பு நிறத்தைப் பற்றிய நீண்ட சுவாரஸ்யமான பதிவு!

கலக்குறீங்க!

ரஸ்ஸல் பீட்டர்ஸ் என்ற நகைச்சுவை நடிகரின் வீடியோ பார்த்ததுண்டா?
அவர் கூறியது "இந்தியர்கள் கருப்பர்களை ஏன் தாழ்வாக நினைக்கிறார்கள், கறுப்பு என்றால் ஏன் கேவலமாக பார்க்கிறார்கள்? நம்மாளுங்களே பல பேரு ஆப்ரிக்கா-காரர்களை விட கருப்பாகத் தானே இருக்கோம்?"

Anonymous said...

Good Post Boss..
Black is my favourite colour.

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

வலசு - வேலணை said...

கறுப்பைப் பற்றி இவ்வளவு தகவல்களா?

வியப்பளிக்கிறது. தகவல்களுக்கு நன்றி.

பட்டிக்காட்டான்.. said...

கருப்பு பணத்தை பற்றி யாருமே சொல்லலே, நம்ம கண்டுபிடிப்புனு நினைச்சுகிட்டே வந்தா, இராகவன் நைஜிரியா சொல்லிட்டாரு..

வேறென்ன சொல்ல..
நல்ல பதிவு..

புதுகைத் தென்றல் said...

நம்ம சனீஷ்வரருக்கு பிடித்த நிறம் கருப்புதான். அதனால்தான் இருப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிந்து மலைக்கு வந்தால் சனி தொல்லை இல்லாமல் இருக்க அருள் பாலித்ததாகச் சொல்வார்கள்.

எனக்கும் கருப்புதான் பிடிக்கும். கருப்பு நிறம் பிடித்தவர்களுக்கு மனதின் ஆழத்தில் வருத்தம் இருக்கும் என உளவியலாலர்கள் கூறியிருக்கிறார்களாம்.

Anonymous said...

nandri nabare, thodarndha yogam patriya niraya padhivugal veliyida pokirom
by
udhayakumar

http://maharishipathanjali.blogspot.com/

Blog Widget by LinkWithin