காட்சி 1 : காலை 9.00 மணி.
யப்பா.. தோ வர்றாரு, தா வர்றாருன்னு.. அண்ணாச்சி ராகவன் நைஜீரியா ஒரு வழியா 21-06-2009 அன்று காலை 9.00 மணியலவில் குடும்ப சகிதமாய் துபாய் என்ட்ரி குடுத்தாரு! வந்து கொஞ்ச நேரத்துல அண்ணாச்சி குசும்பனுக்கு போன் செய்து தகவல் சொல்ல.. நம்ம தான தலைவரு உடனே கிளம்பி, அவர்களுக்கு காலை உணவை வாங்கிகிட்டு, அவரு ஆபீஸ்ல ஹி ஹீ ஹி ன்னு இளிச்சு பர்மிஷன் வாங்கிட்டும், வாங்கிகட்டிகிட்டும்.. உடனே போய் அவரு தங்கியிருந்த 'Pearl Residence' க்கு போய், குசலம் விசாரிச்சாரு நம்மாளு. அப்புறம், அவங்களை கூப்பிட்டுகிட்டு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு திரும்பி ஹோட்டல்ல விட்டுட்டு, நல்லா ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டு நம்மாளு எஸ் ஆயிட்டாரு!
நீ என்னடா பன்ன வென்றுன்னு கேக்குறது புரியுது.. நா என்ன பெருசா பண்ணிடபோறேன்? வழக்கம் போல எல்லாருக்கும் போன் போட்டு பாஸூ.. கரிகட்டா ராவுல 7 மணிக்கு ஆஜாராயிடனுமுன்னு அரசியல்வாதி போல தாழ்மையுடன்(?) கேட்டுக்கிட்டேன்! நல்லவேள அதுபோலவே, எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்து, அண்ணன் என்னை அடிக்கறத்துக்கு முன்னாடியே காப்பாத்திட்டாங்க!!
காட்சி 2 : மாலை 6.00 மணி.
நீ என்னடா பன்ன வென்றுன்னு கேக்குறது புரியுது.. நா என்ன பெருசா பண்ணிடபோறேன்? வழக்கம் போல எல்லாருக்கும் போன் போட்டு பாஸூ.. கரிகட்டா ராவுல 7 மணிக்கு ஆஜாராயிடனுமுன்னு அரசியல்வாதி போல தாழ்மையுடன்(?) கேட்டுக்கிட்டேன்! நல்லவேள அதுபோலவே, எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்து, அண்ணன் என்னை அடிக்கறத்துக்கு முன்னாடியே காப்பாத்திட்டாங்க!!
காட்சி 2 : மாலை 6.00 மணி.
எனக்கு எப்போதுமே இப்படிதான்.. நான் ஒன்னு நினைப்பேன், அது ஒன்னு நடக்கும்! என்னன்னா.. சாய்ந்தரம் 5.30 மேல கிளம்பினா டிராபிக்ல மாட்டிபேன் சொல்லிட்டு, முன்னாடியே கிளம்பி, ரெரராம்ம்ம்பப முன்னாடி 6 மணி்க்கே போயிட்டேன்! நல்லவேள.. குசும்பரும், சுந்தர்ராமன் சாரும் உடனே 6.15 க்கு வந்துட்டாங்க. (அந்த 15 நிமிடம்... கலர் கலரா... கார்தாங்க பாத்துகிட்டுயிருந்தேன்!)
காட்சி 3 : மாலை 6.20 மணி.
மூன்று பேரும் சேர்ந்து (107) ரூமுக்கு சென்றோம். கதவை திறந்து ஆச்சிரியப்படுத்தி, பின்னர் அறிகப்படுத்தி கொன்டார் ராகவன் அண்ணாச்சி, அப்புறம் அண்ணியின் அறிமுகம், அடுத்து அருமை கண்ணா அரவிந்தின் அறிமுகமென்று அட்டகாசமான ஓப்பனிங் முடிச்சு அடக்கமாய் அமர்ந்தோம். சிறிது நேரம் கிரிக்கெட் பார்த்துகொண்டும், அரவிந்திடம் பேசிகொண்டும் இருந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக ராகவன் அவர்கள் கேமராவும், ஒரு சட்டை வாங்கி வரலாமா என்று கேட்க, நாங்கள் நான்கு பேரும்.. துபாயையே துண்டு போட போற மாதிரி துள்ளலுடன் கிளம்பினோம்.
காட்சி 4 : மாலை 6.40 மணி.
குசும்பன் சரவணனின் வழிகாட்டுதலிலும், சுந்தர்ராமனின் வாகன "சர்ர்ர்" ரிலும், கடையை வந்தடைந்தோம். கடையில் நுழையும் போது ராகவன் "கலை! நீதான் எலக்ட்ரானிக் எலியாமே, ஒழுங்கா நல்ல மாடலா வாங்கிகொடு" என்று அன்பு (அடிச்சுதான்!) கட்டளையிட்டார் (இந்தமாதிரி புரளிய கிளப்பனவன் மட்டும் என் கையில கிடைச்சா...). ஒரு கேமரா வாங்க போயிட்டு, அதே பணத்திற்க்கு வீடியோ கேமரா தனியாகவும், டிஜிட்டல் ஸ்டில் கேமரா தனியாகவும் வாங்கலாம் என்று கூடிபேசி கும்மியடிச்சி, சேல்ஸ்மேனை பம்படிச்சி, அரைமணிநேரத்துல பேரம்படிஞ்சி, டிஜிட்டல் ஸ்டில் கேமரா வாங்கினோம். இரண்டாவது வீடியோ கேமரா SONY வாங்கலாமா.. இல்ல JVC வாங்கலாமா என்று யோசிக்கும்போது JVC வாங்கலாம் என்று நா சொன்னவுடன் அதையே வாங்கிவிட்டார் ராகவன். (டேய் கலையரசா!.... இன்னுமாடா இந்த ஊரு உன்ன நம்புது?)
காட்சி 5 : மாலை 7.10 மணி.
காட்சி 6 : மாலை 7.30 மணி.
அவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே நானும், கண்ணாவும் வெளியேறி ஓட்டமும் நடையுமாக, கார்மெண்ட்ஸ் கடையை கண்டுபிடித்து... ராகவன் அண்ணாச்சிக்கு சட்டை ஒன்றை வாங்கிவந்தோம்! நாங்கள் வருவதற்க்குள் அபுஅப்சரும், ராகவனின் நண்பரும் வந்து டேரா போட்டு கதைத்துகொண்டிருந்தனர். வெறும் கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு தவிர்த்து , சில முக்கிய நாட்டுநடப்புகளையும், தமிழ்மன்றங்கள் குறித்தும் ஆசாத்தும், ராகவனும் விவாதித்தார்கள்.
காட்சி 7 : மாலை 8.30 மணி.
காட்சி 7 : மாலை 8.30 மணி.
பின்னர் அவர்கள் விமான பயனத்திற்க்கு நேரமாகிவிட்டதால், நாங்களும் டீசன்டாக(!) சுந்தர்ராமன் வாங்கி வந்த வடையையும், இட்லியையும் சாப்பிட்டுவிட்டு விடைபெறமனமில்லாமல் விடைபெற்றோம்! ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு, சீக்கிரமாக முடிந்ததில் சிறிது ஏமாற்றம். ஆனால், எந்த விதமான எதிர்பார்பும் இல்லாத பதிவுலகில் ஏற்பட்ட புதிய நட்புகள், ஊரில் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை ஞாயபகப்படுத்தியது.
நன்றி வந்த அண்ணன்மார்களுக்கும்! தோழர்களுக்கும்!!
இச்சந்திப்பு குறித்து நாகாவின் பார்வையில் (போட்டோகளுடன்)
58 comments:
கலை எல்லோரையும் கூப்பிடுகிறீர்கள்,என்னை கூப்பிட வில்லையே ?ஏன்?ஏன் நம்பர் தெரியும் தானே?
hmmmmmm.. jollya irukinga...
nadakatum nadakatum
பகிர்தலுக்கு நன்றி..
//நா என்ன பெருசா பண்ணிடபோறேன்? வழக்கம் போல எல்லாருக்கும் போன் போட்டு பாஸூ.. கரிகட்டா ராவுல 7 மணிக்கு ஆஜாராயிடனுமுன்னு அரசியல்வாதி போல தாழ்மையுடன்(?) கேட்டுக்கிட்டேன்!///
அண்ணாத்தே ராகவன்கூப்புட்டுதானே நா வந்தேன்.. ஹி ஹி
இருந்தாலும் வருவோம்லே
கலை ரொம்ப கலையா எழுதிருந்தீங்க நன்னாயிருந்தது
ஆசாத் அண்ணன் சொன்ன அந்த சங்கம் பற்றி சொல்லவே இல்லியே
//இடுப்பு புடிப்பாம்! என்ன நடந்திருக்குமுன்னு நீங்களே அவரவர் கற்பனைக்கேற்ப யோசிச்சுகோங்க/
எனக்கு இன்னும் சந்தேகம் தான்...? குசும்பர் விளக்குவாரா? ஹி ஹி
ராகவன் அண்ணாத்தெ தன் இளமையின் ரகசியம் பற்றி பதிவு போடுறேன்னு சொன்னார்.. விரைவில் எதிர்பார்க்கிறோம்
கலை எழுதியிருக்கிறதா படிக்கும் போதே கலக்கலா இருக்கு . அப்படியென்றால் உண்மையாகவே கலக்கியிருக்கீங்க .
ஒரு வழிய போஸ்ட் பண்ணிடிங்க..
ம்ம்..நல்லா தான் போய் இருக்கு..
அப்புறம் நீயும் கண்ணாவும் சுந்தர் சார் தலையுல மிளகாய் அரைத்த கதையை மிஸ் பண்ணிடியே..
அப்பு சூப்பரப்பு
பகிர்ந்தமைக்கு நன்றி கலை
அருமையான சந்திப்பு உங்களுக்கு அமைத்திருக்கிறது!
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
இராகவன் அண்ணாவோட போட்டோ இன்னும் இருந்தால் போட்டிருக்கலாமே (இதுல ஒரு போட்டோதான் இருக்கு, அதுவும் சைடு எபெக்ட்)
// வினோத்கெளதம் said...
ஒரு வழிய போஸ்ட் பண்ணிடிங்க..
ம்ம்..நல்லா தான் போய் இருக்கு..
அப்புறம் நீயும் கண்ணாவும் சுந்தர் சார் தலையுல மிளகாய் அரைத்த கதையை மிஸ் பண்ணிடியே..//
யோவ் யாருய்யா அது....
ம்.. சபைக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை பத்தி பேசுறது...
படம் பிடித்த போட்டு விட்டீர் மனதில் இடம் பிடித்த நட்புக்களை...என்றும் வாழட்டும் உங்கள் நேசம்...வாழ்த்துக்கள்....
யோவ், நீ டை கட்டுன போட்டோவ காணோம்?
சாப்பாடு பைகளை நானும் சுந்தரும் தூக்கிட்டு வந்த பொழுது அப்படியே திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க வந்ததும் என்னமோ அப்பதான் எங்களை கவனிச்ச மாதிரி வேக வேகமா வரமாதிரி ஓடி வந்து கரீட்டா வடை பைய மட்டும் வாங்கிக்கிட்டு எங்க பின்னாடி மெதுவா வந்தப்பயே நான் கொஞ்சம் உசார் ஆயிருக்கனும்...ம்ம்ம் இனி என்ன பேசி என்ன பயன்.
இப்படிக்கு
வடை கிடைக்காத அப்பாவி
குசும்பன் said...
சாப்பாடு பைகளை நானும் சுந்தரும் தூக்கிட்டு வந்த பொழுது அப்படியே திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க வந்ததும் என்னமோ அப்பதான் எங்களை கவனிச்ச மாதிரி வேக வேகமா வரமாதிரி ஓடி வந்து கரீட்டா வடை பைய மட்டும் வாங்கிக்கிட்டு எங்க பின்னாடி மெதுவா வந்தப்பயே நான் கொஞ்சம் உசார் ஆயிருக்கனும்...ம்ம்ம் இனி என்ன பேசி என்ன பயன்.
இப்படிக்கு
வடை கிடைக்காத அப்பாவி
ரெண்டு இட்லி ஒரு வடைல வடையும் மிஸ் ஆச்சா. அடப்பாவமே
மாப்பு நீ சட்டைகுள்ள ஒளிச்சு வச்சு நாலு வடையை ஆட்டய போட்டத நான் குசும்பன்கிட்ட சொல்லவே இல்ல...
ஒரு கேமரா வாங்க போயிட்டு, அதே பணத்திற்க்கு வீடியோ கேமரா தனியாகவும், டிஜிட்டல் ஸ்டில் கேமரா தனியாகவும் வாங்கலாம் என்று கூடிபேசி கும்மியடிச்சி, சேல்ஸ்மேனை பம்படிச்சி, அரைமணிநேரத்துல பேரம்படிஞ்சி, டிஜிட்டல் ஸ்டில் கேமரா வாங்கினோம்.
Apdi Endha kadaila Thalaiva vangineenga.. Naangalum Vaanga thaan..
//மாப்பு நீ சட்டைகுள்ள ஒளிச்சு வச்சு நாலு வடையை ஆட்டய போட்டத நான் குசும்பன்கிட்ட சொல்லவே இல்ல...//
அடப்பாவி அன்னிக்கும் அப்படியே தான் பண்ணாரா..
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
உங்க நம்பர் தெரியும் கார்த்தி.. ஆனா, சார்ஜாவில் இருந்து நீங்க வர லேட் ஆகிடுமுன்னுதான் கூப்பிடல..
அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் நீங்க உண்டு.
KISHORE -க்கு
ஜாலியா இருக்கோமா? வந்து பாரு தெரியும்... ஏதோ இந்த மாதிரி அப்பப்ப சின்ன சின்ன சந்தோஷங்கள்!!
தீப்பெட்டி -க்கு
வந்தமைக்கு நன்றி பாஸூ..
அபுஅஃப்ஸர் -க்கு
யப்பா... உன் போன் குடுத்தபாரு என்கிட்ட..
இதுவரைக்கும் போன் நம்பர் குடுத்தியா பாஸூ?
ஏன் குடுக்கல? எதுக்கு குடுக்கல? என்னாத்துக்கு குடுக்கல?
ஆனா.. ராகவன் வந்தவுடனே எங்கிருந்துதான் மூக்குல வேர்த்துச்சோ?
வந்ததற்க்கு நன்றிங்கோ...
Suresh Kumar -க்கு
நல்லா பின்னு விக்குறீங்களே.. நன்றி வருகைக்கு!
வினோத்கெளதம் -க்கு
ஆமாம் ஒருவழியா செஞ்சிட்டாரு கண்ணா..
தம்பி வினோ, தப்பிச்சிட்டோமுன்னு
தெனாவட்டுல போசுறியா?
மகனே ஒரு நாள் எங்ககிட்ட
மாட்டுவடி மக்கா.. அன்னகி
இருக்குடி, உனக்கு தீபா"வலி"!
சுந்தர்ராமன் சாரு-க்கு
அப்பு சூப்பரப்புன்னு சொல்லுறிங்களா..
இல்ல சூப்பர் ஆப்பு ன்னு சொல்லுறீங்களா?
எதுவும் உள்குத்து இல்லையே!
sakthi -க்கு
வந்தமைக்கு நன்றி சக்தி.. மீண்டும் வருக!
வால்பையன் -க்கு
..ண்ணா! வங்கண்ணா!!
உங்களுக்கும் அமைஞ்சிருங்கண்ணா..
அவரு சென்னையிலதான் இருக்காரு.
S.A. நவாஸுதீன் -க்கு
நன்றி முதல் வருகைக்கு..
இராகவன் அண்ணாவோட போட்டோ
இன்னும் நாகா எழுதிய இடுகையில்
உள்ளது. சுட்டியை சேர்த்துள்ளேன்!!
கண்ணா -க்கு
//யோவ் யாருய்யா அது....சபைக்கு
சம்பந்தமில்லாத விஷயத்தை பத்தி பேசுறது//
அதானே.. யாருய்யா அது?
கண்ணா.. யாகிட்டயும் சொல்லலயில்ல?
தமிழரசி -க்கு
வாங்க தமிழ்! அது என் கடமை..
நல்லாயிந்தா சரிதான்!!
நாகா -க்கு
//யோவ், நீ டை கட்டுன போட்டோவ காணோம்?//
ஹி.. ஹி என் போட்டாவை, நானே எப்புடி.. ஹி.. ஹி
(கொய்யால.. என் போட்டாவை போடாம ஏமாத்திட்டு
எப்டி கேக்குதுபாரு கேள்வி..)
குசும்பன் -க்கு
//வடை கிடைக்காத அப்பாவி//
அய்யா.. அப்பாவி! அந்த மொகத்தை
கொஞ்சம் காட்டு்ங்க..
ஏங்கிருந்து கத்துகிட்ட, இந்த முகத்தை
மாத்துற வித்தையை?
கண்ணா -க்கு
கடைசியில, என்தலையில
பழியை போட்டுடீங்களாடா..
நல்லாயிருங்க!
ஆனா, அதுலையும்
ஒரு கொடுமை என்னன்னா.. மக்களே,
நான் அரை வடதான் சாப்பிட்டேன்!
பாக்கி எங்கன்னு கண்ணாகிட்ட
கேக்காதிங்க.. ஏன்னா, எப்டியா
இருந்தாலும் கண்ணா பொய்தான் சொல்லுவான்!
எழுத்து நடை கலக்கல்.
:)
வாழ்த்துகள்....
வணக்கம், நான் ஷார்ஜாவில் வசிக்கிறேன். தங்களின் பதிவை இன்று தான் படிக்க நேர்ந்தது.
(நன்றி - விகடன்) மிகவும் நன்றாக இருந்தது. தொடர்கிறேன்.
நன்றி
பித்தன் -க்கு
நன்றி மாப்புளே.. நிரை, குறைகளை சொல்லு!!
வழிப்போக்கன் -க்கு
வாழ்த்து சொன்னத்துக்கு நன்றி பாஸ்!!
Muthiah -க்கு
நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்!
உங்க Profile, error காட்டுது.. கொஞ்சம் பாருங்க!
(அந்த 15 நிமிடம்... கலர் கலரா... கார்தாங்க பாத்துகிட்டுயிருந்தேன்!)
நம்பியாச்சு கலை
நல்ல சந்திப்பு உருப்படியா நடந்துருக்கு கலை
இதுல ராகவன் சார் படத்துல யாரு?
வாவ்.. பதிவுலக நண்பர்களின் சந்திப்பை ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க கலையரசன்..
பகிர்தலுக்கு நன்றி..
ராகவன் அண்ணா.. கேமிரா வாங்கியாச்சா..?
அண்ணிக்கு வளையல் என்னாச்சு..?
முதலில் "குடும்ப சகதியாய்"ன்னு போட்டிருந்திங்களா..?
மாலையில் அப்படித்தான் பார்த்தாமாதிரி நியாபகம்..
இப்போது "குடும்ப சகிதமாய்"ன்னு சரியா இருக்கு..
//கலையரசன் said...
அபுஅஃப்ஸர் -க்கு
யப்பா... உன் போன் குடுத்தபாரு என்கிட்ட..
இதுவரைக்கும் போன் நம்பர் குடுத்தியா பாஸூ?
ஏன் குடுக்கல? எதுக்கு குடுக்கல? என்னாத்துக்கு குடுக்கல?
ஆனா.. ராகவன் வந்தவுடனே எங்கிருந்துதான் மூக்குல வேர்த்துச்சோ?
வந்ததற்க்கு நன்றிங்கோ...
//
என் கான்டாக்ட் கண்ணாகிட்டே இருக்கு தல, வருகைக்கு நன்றி சொல்லி உங்கவீட்டு ஃபக்ஷனா மாத்திட்டியேலே, இது நம்மவீட்டு ஃபக்ஷன் தல சந்தோஷமா இருந்தது....
கலக்கல் சந்திப்பா இருந்திருக்கும் போல?
நான் கூட அடுத்த வருஷம் துபாய்க்கு வந்து உங்களையெல்லாம் பாத்திட்டு போய்டுறேன் ;-)
நல்ல தொகுப்பு கலை.. இந்த சந்திப்பை தவறவிட்டது எனக்கு இழப்பு தான்..
உங்கள் இனிய சந்திப்பைப் படிக்கும் போதே எவ்வளவு இதமாக இருக்கிறது.
உங்கள் நட்புக்கு வாழ்த்துகள்,கலை.
njoy v r away from you
என்னையும் உங்க ஆட்டைக்கி சேர்த்துக்கொங்கோ
கலக்கல் சந்திப்பு கலக்கலா இருக்கே
பிரியமுடன் வசந்த் -க்கு
நன்றி நம்புனத்துக்கும், வாழ்த்துக்கும்!
சுரேஷ் குமார் -க்கு
கேமராவும், வளையலும் வாங்கியாச்சு சகா!
"குடும்ப சகிதமாய்" என்பதுதான் முதலில் இருந்தே இருந்தது.
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!!
Joe -க்கு
கண்டிப்பா வா.. ஜோ, இதைவிட கலக்கலா கொண்டாடிடுவோம்!
ச.செந்தில்வேலன் -க்கு
அடுத்த சந்தி்ப்பில் நிச்சயமாக, சந்திபோம் செந்தில்!
ஷண்முகப்ரியன் -க்கு
உங்கள் வாழத்துக்கள், எங்களுக்கு ஊக்கம் ஜயா!
Niyaz -க்கு
உங்களை ஆல்ரெடி ஆட்டைக்கி சேர்த்துகிட்டாச்சி பாஸூ..
முதல் வருகைக்கு நன்றி!
ஆ.ஞானசேகரன் -க்கு
ஆமாம் பாஸ்! நிறைவான சந்திப்பாக அமைந்தது.
ராகவன் அண்ணாச்சி பிளாகை வைரஸ் மூலம் சேதப்படுத்தி விட்டார்கள்
நன்றி கலை. வாழ்வின் உன்னதமான நிமிடங்கள் உங்கள் அனைவருடனும் இருந்தது.
அரவிந்தும், அண்ணியும் தங்கள் அன்புகளை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
வர்றதைப் பத்தி ஒண்ணுமில்ல, ஆனா வடை இட்லி-ன்னு பேசுறீங்க, அதான் யோசிக்கிறேன்!
என்னையும் மனுஷனா மதிச்சு ஒருத்தன் கூப்பிடுறான், அவன் எவ்வளவு நல்லவன்? ஹ்ம்ம்ம்ம்.....
உங்களின் வாழ்த்துக்கு எந்தன் மனமார்ந்த நன்றி....
பதிவர்கள் சந்திப்பு அருமையான நினைவுகள். உலகத் தமிழர்களை இணைக்கும் அன்னை தமிழுக்கும் நன்றி...
நல்லம் நீங்க மட்டும் போங்கோ
கருத்துரைக்கு நன்றி
அத்துடன்
செட்டிங்க்ஸ் செய்தும் விட்டேன்
நான்தான் ஐம்பதாவது..
துபாய் அதிர்ந்துருக்கும் ல.. அனுபவத்தையே கதை மாதிரி சொல்லி இருக்கீங்க..
பகிர்தலுக்கு நன்றி
தங்களை 'பள்ளிக்கூடம் போகலாமா ?' தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நன்றி.....!
இராகவன் நைஜிரியா -க்கு
நன்றிண்ணா! அரவிந்திர்க்கும்,
அண்ணிக்கும் எனது விடுமுறை
வாழ்த்துகளை தெரியபடுத்தவும்
Joe -க்கு
இட்லி,வட வேண்டாமுன்னா,
தோசை, போன்டா கொடுத்துடுவோம்!!
Thamizhan -க்கு
உங்களுக்கும், தமிழுக்கும் நன்றி...
sanngawww -க்கு
அடுத்த தடவை நீங்ககளும் வாங்கோ
லோகு -க்கு
முதல் வருகைக்கு நன்றி
thevanmayam -க்கு
முதல் வருகைக்கும், தொடர்வதற்க்கும் நன்றி
Sukumar Swaminathan -க்கு
வருகைக்கும்,
அழைத்தமைக்கும் நன்றி
சொல்ல வந்ததை மறந்து விட்டேன், இனிமேல் யாரும் கலையை கூட்டிட்டு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போகாதீங்க.
யாருமே வாங்காத ஜெவிசி டப்பாக்களை நம்ம தலையில கட்டிருவான் (ர்?!?)!
நல்ல நடை. ஒரு நடை உங்க ஊருக்கு வரலாம் போலிருக்கே!
சிறப்பான சந்திப்பு. அதுபற்றிய சுவையான பதிவு.
நன்றி கலை.
குசும்பன் said... சாப்பாடு பைகளை நானும் சுந்தரும் தூக்கிட்டு வந்த பொழுது அப்படியே திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க வந்ததும் என்னமோ அப்பதான் எங்களை கவனிச்ச மாதிரி வேக வேகமா வரமாதிரி ஓடி வந்து கரீட்டா வடை பைய மட்டும் வாங்கிக்கிட்டு எங்க பின்னாடி மெதுவா வந்தப்பயே நான் கொஞ்சம் உசார் ஆயிருக்கனும்...ம்ம்ம் இனி என்ன பேசி என்ன பயன். இப்படிக்கு வடை கிடைக்காத அப்பாவி ரெண்டு இட்லி ஒரு வடைல வடையும் மிஸ் ஆச்சா. அடப்பாவமே
Post a Comment