Thursday, July 23, 2009

என் ஃபிளாகில் எனக்கு பிடிக்காத- 10



1. ஒரு பயலுவலும் படிக்க மாட்றாங்க..

நானும் தலையை பிச்சிகிட்டு, ஏதேதோ ஆராய்ச்சி பண்ணி, உருட்டி பெறட்டி, முக்கி மொனரி, பிச்சி பிராஞ்சி, மக்கி மண்னாகி எதாவது எழுதும்போது ஒருத்தரும் வரலையின்னா... யாருமே இல்லாத கடைக்கு யாருக்குங்க டீயாத்தனும்? ("இதுல வர்ர ஆளுங்க மட்டும் அப்படியேயய படிச்சிடுறாங்களா?" ன்னு நீங்க கொலம்பஸ் ஆகிடாதிங்க!)

2. பத்து பைசாவுக்கு புண்ணியம் இல்ல..

பாதிநேரம் வேலைய செய்யறமோ இல்லியோ, பதிவ எப்படி போட்டு ஹிட்ஸ் வாங்குறதுன்னு யோசிச்சே பசி பயங்கரமா எடுக்குது. விளம்பரம் வச்சா காசு பாக்கலாமுன்னு பல பேரு கூவுனாலும், வச்சா மட்டும் அதுமேல களிக் பன்னிட்டுதான் மறுவேலை பாப்பாங்க நம்ம மக்களு! இதுல தனியா வேற சொல்லனுமா, இந்த பிளேக்குனால ஒட்ட காலணா கூட கிடைக்காதுன்னு..

3. கூகிளான்டவர் பக்கத்துல முதல்ல வர்லயே...

நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க (நாட்டுக்கு ரெரரராம்ம்பபப முக்கியம்). அப்படி காமிக்கலனா என்ன மாதிரி நல்லவ.. (மூட்ரா..!) எப்படிங்க மக்கள் கவனிப்பாங்க?

4. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...

சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா? இல்ல.. வந்து படிச்சுட்டு, இந்த மொன்னைக்கு எதுக்கு பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணாக்கிகிட்டுன்னு நினைச்சு ஓடி போயிடுறாங்களான்னு பிரியல மக்கா!!


5. பழைய டெம்பிளேட்டையே இன்னமும் வச்சிகிட்டு அழுவறது..

அவங்கவங்க புத்தம் புதுசா, கண்ணுக்கு குளிர்ச்சியா, பாக்குறத்துக்கு ஆசையா, ஓசியில குடுக்கற டெம்பிளேட்டை.. டெம்டே இல்லாம மாத்திட்டாங்க! நா மட்டும் "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு"ன்னு பழைய டெம்பிளேட்டை பவுசே குறையாம பத்திரமா வச்சிருக்கேன்! (மாத்துறத்துக்கு டைம் இல்லன்னு 'டீசான்டா'(!) சொல்லியிருக்கலாமோ?)

6. பதிவு போடுறதுக்கு மேட்டர் இல்லாம முக்குறது..

ஆயிரம்தான் நா வாய் கிழிய பேசினாலும், எழுதசொன்னா நான் கொஞ்சம் ஆவணிதான் போயிடுவேன்! இருந்தாலும் ஆசை யாரை உட்டுது?. இதுதான் எழுதனுமுன்னு இல்லாம, எதையாவது ஆபீஸ் டேபிளுக்கு அடியில உக்காந்து யோசிச்சு எழுதிடுவேன் ங்கறது வேற விசயம்! (மச்சி.. நீ எழுதேன்! நீ எழுதேன்!! என்ற ரேஞ்சிக்கு போகாம இருந்தா சரி..)

7. நான் எழுத நினைகிறத எழுதாம, ஏதேதோ கிறுகுறது..

நாம எழுதற தகவல்கள் யாருக்காவது உபயோகமா இருக்கனுன்னு நினைச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன். ஆனா, அது முடியாம.. நான் கிறுக்கியது எல்லாம் மொத்தமா மொக்கயாக்கியது! (என்னுடைய நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்குமே?)

8. அருமையா எழுதும் பதிவர்களுக்கு லிங்கு கொடுக்காதது..

என்னைவிட (நீயெல்லாம் ஒரு ஆளு?) அருமையா, அட்டகாசமா, அறிவா, அழகா, அம்சமா (போதும்.. போதும்.) எழுதுற சக மற்றும் மூத்த பதிவர்களோட "லிங்"கை இன்னமும் என்னுடைய வலைப்பூவில் இனைக்காம, சோம்பேறி சொம்பா திரியிறது.

9. அட்சென்சை சேர்த்தும் அதை காமிக்காதது..

ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்த அட்சென்சை, ஒவ்வொரு இடுகைக்கு கீழே காண்பிக்குமுன்னு பார்த்தா... அது 'பாப்பரபபபான்னு' பல்ல இளிச்சிகிட்டு நிக்குறது! வர்ற ஆளுங்க எல்லாம் ஏதோ சூனியம் வச்ச ஃபளாக்கு போலன்னு தலைதெறிக்க ஓடுறாங்க பாஸ்!!

10. என் நேரத்தை முழுங்கி.. என்னை, அதுக்கு அடிமையாக்கியது..

(10வது பாயிண்ட், "எனக்கு நானே சுண்ணாம்பு" திட்டத்தில் இணைத்துகொண்டது!)

63 comments:

Tech Shankar said...

Aha... s u p e r

Joe said...

ஒரு இடுகைக்கு நாலரை வோட்டு, அஞ்சே கால் வாசகர்கள் (பார்வையாளர்கள்?!?) மட்டுமே வந்தால் கூட, நானெல்லாம் எழுதலையா?

ஒரு தேர்ந்த இலக்கியவாதி, வாசகர் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல், எழுதிக் கொண்டே இருப்பான்! ;-)

கார்க்கிபவா said...

சூப்பரப்பு..

//ஒரு தேர்ந்த இலக்கியவாதி, வாசகர் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல், எழுதிக் கொண்டே இருப்பான்! ;//

சகா, உஙக்ள ஏதோ அசிங்கமா திட்டறாரு பாருங்க.. :))))))

நையாண்டி நைனா said...

nallaa irukkudaa raasaa.

iniyavan said...

சூப்பரா எழுதியிருக்கீங்க.

ஒவ்வொரு புது பதிவரின் மன நிலையும் அப்டியே இந்த பதிவில்.

iniyavan said...

டெம்ப்ளேட்ட மாத்துங்க கலை.

கண்ண வலிக்குது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அக்க.. இந்தப் பதிவு சூப்பர் டூப்பர் ஹிட் போங்க.. :))
பத்துக்கு பத்தும் எல்லாரும் யோசிக்கறது தான்... கலக்கல் கலை

//10. என் நேரத்தை முழுங்கி.. என்னை, அதுக்கு அடிமையாக்கியது..
(10வது பாயிண்ட், "எனக்கு நானே சுண்ணாம்பு" திட்டத்தில் இணைத்துகொண்டது!)
//
:))

//
4. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...
சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா?
//
கலை.. இது தான் ஹை-லைட்டே... :)) இதுல இன்னோன்ன சேர்த்திருக்கலாம்.

நான் இத்தனை பேருக்கு பின்னூட்டம் போடறேன் எனக்கு யாரும் போட மாட்டேன்றாங்களே??

நான் இத்தன பேர FOLLOW பண்றேன்.. ஆனா நம்ம பக்கம் ?? ;)

குசும்பன் said...

நாங்க சொல்ல ஆரம்பிச்சா அது பத்துக்குள்ள முடியாதே!!!

1) வயசுக்கு வந்த புள்ள எடிப்பார்பது போல் ஹெட்டரில் நீ எட்டிப்பார்பது:)

Raju said...

சான்ஸே இல்ல கலை...
டாப் க்ளாஸ்...! அசத்திட்டீங்க.

(டிஸ்கி: இது உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ரகம் இல..!)

jothi said...

கலக்கல் பதிவு கலை. மொக்கை மொக்கைன்னு சொல்லிட்டு எல்லாம் இப்படி பக்காவா போடுறது இப்ப பேசனாப்போச்சு

இனியவன் சொன்ன மாதிரி டெம்ப்ளெட்டை கொஞ்சம் மாத்துங்க,. கண்ணு வலிக்குது,..

Suresh Kumar said...

பிடிக்காததையே கலக்கலா எழுதீட்டீங்களே கலை பத்து பத்து சீசன் இன்னும் முடியலியா ?

geethappriyan said...

மாப்ள
ஏன் ...?
சரக்கு ஓவரா போட்டியா?
இவ்ளோ உண்மைய சொல்லியிருக்க?
உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
உனக்கு கழுகு முகமுடிய எங்கு பாத்தாலும் வாங்கி பர்சன்ட் பண்றேன்.
மின்ட்ள வச்சிக்கறேன்.
தயவுசெஞ்சு இத tஎன்னைய தொடர்பதிவாக்கி எழுத கூப்டாத...
இந்த பத்தையும் முழுசா படிச்சேன் என சத்தியம் செய்கிறேன்.
உனக்கு ஓட்டும் போட்டிருக்கேன்.
வர்ட்டா..
(மாப்ள நாஎதான் அந்த ஆப்பரசனா?கடைசியா சுண்ணாம்புன்னு முடிசியே ?அதான் கேட்டேன்)

ப்ரியமுடன் வசந்த் said...

மச்சான் பேனர்ல அந்த லெஃப்ட் கார்னர்ல இருக்குற போட்டோவ வுட்டுட்டியே மச்சான் ?

ஒருவேளை மக்கள் பின்னூட்டம் போடாம போறதுக்கு அதுவும் ஒரு காரணமோ!

Anonymous said...

எலே மக்கா!!

டெம்ப்ளேட்டு மாத்தாததெல்லாம் ஒரு பெரும் குறையாடே? அஞ்சு வருசமா பதிவெழுதிக் கிழிக்கிறம்லா! நானே இன்னமும் அதே டெம்ப்ளேட்டுதான் வச்சிருக்கேன். ஒரே ஒரு தடவை ந்ம்ம கேவியாரு இருக்காம்லா, அவன் தான் 'என்னவே இன்னமும் டெம்ப்ளேட்டை மாத்தலியா'ன்னு சத்தம் போட்டு அவனா மாத்திக் கொடுத்தான். ( இப்பல்லாம் பயபுள்ள நம்மளைக் கண்டுக்குறதே இல்ல ) அதனால அதப் பத்தில்லாம் கவலைப்படாம நல்லா எழுதுடே!!

ஊர்சுற்றி said...

Joe வின் பதிலே என்பதிலும்.

தொடர்ந்து எழுதிக் குவியுங்கள். :)

Anonymous said...

nallaa irukkudaa raasaa.

ரமேஷ் said...

nallaa irukkudaa raasaa.

நான் said...

kalakkal....

அது ஒரு கனாக் காலம் said...

கலக்கறியே சந்துரு...ச்சே..கலை... சும்மா பூந்து விளையாடு

சுசி said...

உங்க நேர்மைய நான் பாராட்டுகிறேன் கலையரசன். நீங்க பத்தோட நிறுத்திக் கிட்டத சொன்னேன்.
ச்சூப்பருங்க.

மௌனமான நேரம் said...

சான்ஸ் எ இல்லை. சூப்பர்.

Suresh said...

Super machan sema ;) nakkal machan

Admin said...

எல்லாமே சரியாத்தான் இருக்கு போல....

Anonymous said...

முடியல....முடியல

---
இருபத்தி மூன்றாம் புலிகேசி.

Unknown said...

நல்லாருக்கு... ஓட்டு குத்திட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

WHY BLOOD SAME BLOOD

Sukumar said...

மச்சி நீயும் பத்துக்கு பத்து ஆரம்பிச்சிட்டியா......
நல்ல இருக்கு கலக்கு கலக்கு கலை....

வெற்றி-[க்]-கதிரவன் said...

எல்லா போட்டோலயும் அப்பாவி மாதரி நீ முகத்த வச்சிக்கிறது எனக்கு சுத்தமா புடிக்கல

-:)

*****
//. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...
சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா?
//

நல்லா சிரிப்பு வந்தது -:)

கலையரசன் said...

தமிழ்நெஞ்சம் -க்கு
நன்றி பாஸ்... ரொம்பநாள் கழித்து வந்தமைக்கு!

Joe -வுக்கு
நாலரை வோட்டு, அஞ்சேகால் வாசகர்கள் (இதுபேருதான் தன்னடக்கமாம்!!)

நானும் இலக்கியவாதிதான், வாதிதான், வாதிதான்..
பிரபல பதிவர் ஜோவே சொல்லிட்டாரு.. டாரு.. டாரு!!

கார்க்கி -க்கு
அடிக்கா இருந்தா சரிதான் சகா! :-)

நையாண்டி நைனா -க்கு
நன்றி ராசா...

கலையரசன் said...

'இனியவன்' என். உலகநாதன் -க்கு
நன்றி இனியவரே.. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்!

கண்டிப்பாக மாற்ற முயற்சிசெய்கிறேன் தோழா!!

செந்தில்வேலன் -க்கு
அக்க.. தமிழே பாராட்டிடுச்சு!
அடுத்த இடுகையில போட்டு தாக்கிடுவோம்!!

குசும்பன் -க்கு
10 சொல்றேன்னு.. ஒன்னு சொல்றீங்க?
அதுவும் ஏற்கனவே சொன்னது..
புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்! :-)

டக்ளஸ் -க்கு
வாங்க டக்ஸ்.. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்கோ!

கலையரசன் said...

D.R.Ashok -க்கு
இந்த ஸ்மைலி போட்டு தப்பிக்கிற குரூப்புக்கு இருக்கு ஒரு நாளு.. :-)

jothi -க்கு
அப்படியா சொல்றீங்க ஜோதி.. மாத்திடுவோம்!
இது மொக்க இல்ல.. உண்மைன்னு சொல்றீங்களா? அவ்வவ்வ்வ்வ்..

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்.. தொடர் வருகைக்கும், ஊக்கத்துக்கும்!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
இல்ல மச்சி.. உண்மையை ஒத்துகிறவன்தான் வீரன்ன்னு, விருகம்பாக்கம் வீரவிக்ரகாளியம்ன் ஜோசியரு சொன்னாரு! ஓ.. ஆப்பரசன் நீதானாடா? ரைட்டு..

கலையரசன் said...

பிரியமுடன் வசந்த் -க்கு
மாப்பி, நீயுமா..?
எனக்கு தெரியும், எனக்கு தெரியும்.. பொறாமை!! :-)

ஆசிப் மீரான் -க்கு
வாங்க அண்ணாச்சி! முதல் வருகைக்கு நன்றி..
நீங்க வந்தா மட்டும் போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்..
நல்லா எழுதுடே ன்னு ஒரு உள்குத்தை வச்சிடீகளே!!

ஊர்சுற்றி -க்கு
நன்றி பாஸ்.. எழுதி குவிச்சிடுறேன்!
ஆனா நீங்க மட்டும்தான் படிப்பீங்க.

ramesh kumar -க்கு
நன்றி ராசா! நீதானே அந்த அனானி?

நான் said kalakkal -க்கு
நானே எனக்கு சொல்லிகிட்ட மாதிரி இருக்கு..
நன்றி நான்!!

நான் said...

நம்ம கதையும் அதே ...ஆனா நல்லா எழிதியிருகீங்க..

THANGAMANI said...

'நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க'

கூகில் முதல் பக்கத்தில் காமிக்க http://kalakalkalai.blogspot.com என்று டைப் செய்து Search ஐ அழுத்தவும்.நாங்க பல பேர் அப்படித்தான் செய்கிறோம்.

kishore said...

30 கமென்ட்க்கு மேல வர நீயே இப்படி சொன்ன நான் எப்படி சொல்றது?

கலையரசன் said...

அது ஒரு கனாக் காலம் -க்கு
சந்துருவா? அது யாரு உங்க புது ஃபிரண்டா? :-)
நன்றி சார்..

நாணல் -க்கு
சிரிப்புக்கு நன்றி!!

சுசி -க்கு
வாங்க சுசி.. இதுக்கு பேருதான சொ.கா.சூ
நீங்க சொன்னா நேர்மை!!

மௌனமான நேரம் -க்கு
நன்றிங்க உங்கள் பாராட்டுக்கு..

Suresh said...
வா மாப்பி.. எங்கடா இருந்த இவ்வளவு நாளா?
ஆணி புடுங்குற வேலை ஜாஸ்த்தியோ?
சீக்கிரம் பதிவ போடு சொல்லிபுடேன், ஆமா!

வால்பையன் said...

ஹாஹாஹா

சூப்பர் மேட்டர் தல!

ஆனா பாருங்க இது எல்லோருக்கும் பொருந்துது!

கலையரசன் said...

நன்றி இருபத்தி மூன்றாம் புலிகேசி
- இப்படிக்கு இருபத்தி மூணேமுக்கால் நரிகேசி.


கீத் குமாரசாமி -க்கு
நன்றி கீத்! ஓட்டுக்கும், பாராட்டுக்கும்!!

sgramesh -க்கு
நம் இனமடா நீ!

Sukumar Swaminathan -க்கு
அம்மணமா திரியிற ஊருல,
கோமணம் கட்டுனவன் கோமாளியாடுவான்.
அதனால, நானும் எழுதிபுட்டோம்ல!!
:-))

கோபிநாத் said...

\\"என் ஃபிளாகில் எனக்கு பிடிக்காத- 10"\\

இப்படி பட்டியல் போடுற அளவுக்கு வந்துட்டிங்களா தல..அப்போ நீங்க பிரபல பதிவர் ஆகா போறிங்கன்னு அர்த்தம் இல்லைன்னா இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு முத்திடுச்சி ;))

எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள் தல...;)

கலையரசன் said...

பித்தன் -க்கு
மச்சி.. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு, டெரர் போட்டோ எல்லாம் இருக்கு ஒன்னு ஒன்னா ரிலீஸ் பண்றேன்!
:-)

கிறுக்கன் -க்கு
நன்றி பாஸ்.. இனி, நீதான் என் போர்' படை தளபதி!

THANGAMANI -க்கு
நன்றிங்கண்ணா உங்க கண்டுபிடிப்புக்கு!
ஒரு குரூப்பாதான் திரியிறீங்க போல..

KISHORE -க்கு
கண்ணு வக்காதடா..

அப்துல்மாலிக் said...

புலம்பல் கேக்குது தல‌

ஒரு சிலர் போல பதிவு போட்டவுடன் "ஆகையால் சொல்ல வருவது என்னவென்றால்" என்று எல்லோருக்கும் மெயில் போட்டுடுங்கோ அப்புறம் தானா பின்னூட்டம் வந்து குமியுமுலே

அட இதை சொல்லியே பின்னூட்டம் வாங்கும் உங்க திறமைக்கு ஒரு சல்யூட்..

வினோத் கெளதம் said...

நான் நாளைக்கு சொல்றேன்..

நாகா said...

உன் பிளாக்குல எனக்குப் பிடிக்காத பத்து எதுன்னா?????? சாரி மச்சான் நேத்து கொஞ்சம் சாணி அதிகம் அதான் லேட்டாயிருச்சு..

dubai said...

Kalai Nice Top Ten, Keep on going and sure you will reach you achievement.

நிகழ்காலத்தில்... said...

THANGAMANI said...

\\\'நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க'

கூகில் முதல் பக்கத்தில் காமிக்க http://kalakalkalai.blogspot.com என்று டைப் செய்து Search ஐ அழுத்தவும்.நாங்க பல பேர் அப்படித்தான் செய்கிறோம்.\\


உங்க இடுகைய தூக்கி சாப்பிட்டுடுச்சு:)))

கிரி said...

//நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க//

அதுக்கு நீம்க இடுகை எழுதினா மட்டும் பத்தாது..அதை சரியா ப்ரொமோட் பண்ணனும்

கூகிள் Webmaster Tool ல போயிட்டு உங்க தளத்தை இணைத்து crawl செய்ய வேண்டும்

நல்லா எழுதறீங்க.. அப்புறம் ஏன் உங்கள் எழுத்தில் சந்தேகம்..கலக்குங்க

சம்பத் said...

கலக்கல் பதிவு நண்பா....அனைத்து பாய்ண்டுகளும் ரசிக்க வைத்தது...இன்று முதல் நானு துரத்த போறேன்....ஜாக்கிரதை...

பாலா said...

hahahahaha

பாலா said...

adichenla 50

வினோத் கெளதம் said...

ஹா ஹா ஹா..விழுந்து விழுந்து சிரிச்சேன்..ஒவ்வொரு கருத்தும் ச்சும்மா நச்சின்னு இருந்துச்சு..
சாமி முடியுல..கலக்குறிங்க நடத்துங்க.

கலையரசன் said...

வால்பையன் -க்கு
நன்றி தல.. அதுசரி.. உங்களுக்குமா பொருந்து இது?

கோபிநாத் -க்கு
நன்றி நண்பா.. சுருக்கமா உங்களை மாதிரி ஆகபோறேன்னு சொல்றீங்க!

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு! கண்டுபுடிச்சிட்டடீங்களே பாய்..

வினோத்கெளதம் -க்கு
இன்னைக்கு வாயில சுலுக்கா?

கலையரசன் said...

நாகா -க்கு
நன்றி மச்சி! சாணியை அள்ளிட்டு கையை கழுவிட்டு வந்தியா?

dubai -க்கு
நன்றி ஆடல்!!

நிகழ்காலத்தில் -க்கு
நன்றி பாஸ்! அப்படியே சாப்பிட்டுச்சா.. இல்ல, குழம்பு ஊத்தி சாப்பிட்டுச்சா.? :-)

கிரி -க்கு
நன்றி தலைவா.. உங்க அட்வைசுக்கும், முதல் வருகை மற்றும் பின்னூட்ட ஊட்டத்திற்க்கும்!

கலையரசன் said...

சம்பத் -க்கு
நன்றி பாஸ்! நானு துரத்த போறேன் சொல்லிட்டு.. செய்யவேயில்ல?

பாலா -க்கு
நன்றிங்கண்ணா.. சிரிப்புக்கும், 50க்கும்!

வினோத்கெளதம் -க்கு
அடிபட்டுடுச்சா?
கருத்தா?
முடியலியா?

Veera said...

//அது 'பாப்பரபபபான்னு' பல்ல இளிச்சிகிட்டு நிக்குறது! வர்ற ஆளுங்க எல்லாம் ஏதோ சூனியம் வச்ச ஃபளாக்கு போலன்னு தலைதெறிக்க ஓடுறாங்க பாஸ்!//

ஹி.ஹி.ஹி.

ஆட்சென்ஸ் இன்னிக்கு வரைக்கும் இங்கிலிபிசதான் சப்போர்ட் பண்ணுது (என்ன கொடுமை இது? ராமதாஸ் அய்யா இத கேட்க மாட்டேங்கறாரே!?)

Nathanjagk said...

கலையரசரே... ​பொளந்து காட்டீடிங்க பலாப்பழத்தை!!! வாழ்த்துக்கள்!

Jawahar said...

அம்பத்தேழு காமெண்ட் வந்திருக்கே...
ஐநூத்தி எழுபது பேராவது படிச்சிருக்க மாட்டாங்க? லே அவுட் பிரமாதமா இருக்கு. எழுதறதும் சுவாரஸ்யமா இருக்கு. உங்கள் ரசிகர் கூட்டத்தை நீங்கள் அறியவில்லை-அவ்வளவே.

ஒரே ஒரு பரிந்துரை.. ப்ளாக்கின் பெயர் தமிழில் வருகிறாற்போல் மாற்றுங்கள்.

http://kgjawarlal.wordpress.com

சம்பத் said...

////கலையரசன் said...

சம்பத் -க்கு
நன்றி பாஸ்! நானு துரத்த போறேன் சொல்லிட்டு.. செய்யவேயில்ல?
/////

சாரி கலை..தூக்கத்துல மறந்துட்டேன்...

Prasanna Rajan said...

நல்ல பதிவு. யோசித்து, உருட்டி, திரட்டி ஒரு இலக்கியப் பதிவு போட்டால், பதிவுலகத்தில் சீந்துவார் இல்லை. இதே ஒரு ‘பலான படத்தைப்’ பற்றி பதிவு போட்டால் ஒரே நாளில் 1000 ஹிட்ஸ். இது ஒரு நண்பரின் அனுபவம், எனது அனுபவமும் கூட. எனது வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்.
http://oliyudayon.blogspot.com/

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

please take it machan

நாஞ்சில் நாதம் said...

:)))

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

நன்றி செந்தில் உங்கள் வலைப் பூவை இவ்வளவு பேர் பின்பற்றுவது மகிழ்வளிக்கிறது. உங்கள் ஆலோசனைப்படி வர்த்தை சரிபார்ப்பை நீக்கி விடுகிறேன்.

Admin said...

தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..

உங்கள் கருத்துக்களுக்கு இங்கே http://shanthru.blogspot.com/2009/07/blog-post_29.html அழைக்கப்படுகிறீர்கள்..

nila said...

//
4. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...
சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா?
//
என் மைண்டு வாய்சு சொல்ற மாதிரியே இருக்கு

Blog Widget by LinkWithin