Monday, July 20, 2009

பத்தரமா வச்சிகோங்க! தொலசிபுடாதிங்க!!

[Inter_award.jpg]

செந்தழல் ரவி ஆரம்பித்த விருது வழங்குதல் மெகா தொடர், அங்க இங்க சுத்தி, ஸ்க்ரூ டிரைவர், கடப்பாரை அடிச்சு நம்ம தளத்திற்கும் (?) விருது வந்து சேர்ந்துடுச்சு! அதை கொடுத்த தோழர் கீத் குமாரசாமிக்கு நன்றி!!

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விருது இல்லாத தளமே நல்ல தளம், என்கிற ரேஞ்சிக்கு இந்தவிருது அனைனனவருருருருக்குகும் அளிக்கப்பட்டு வருகிறது. இத பார்க்கும்போது ஃபீல் ஆகி, மானாவரிய கண்ணீர் கழலுதுங்கோ!!

இந்த விருது கிடைச்சு 1 வாரமா ஆகிடுச்சு.. ஆணி புடுங்குற வேலை அதிகமானதால பங்கு பிரிக்கமுடியல.(திட்டாதிங்கப்பா.. எல்லாரும் சொல்றாங்ளேன்னு ஒரு ஃபுலோவுல சொல்லிட்டேன்!) இப்படியே போனா நான் விருது கொடுக்க ஆள் கூகுள்ல தேடினாலும் கிடைக்க மாட்டாங்கன்னு உண்மையை புரிஞ்சு(!) இடுகையை இட்டுடோமுல்ல!!

இந்தவிருதை ஆறு பேருக்கு பகிர்ந்து கொடுக்கனுமுன்னு ரவியார், நின்னுகிட்டே யோசிச்சி ரூல்ஸ் போட்டதால, நான் நிமிந்து படுத்து யோசிச்சு ஆறுபேருக்கு குகுடுடுகிகிறேறேன்ன் (பயம்தான்! வாங்குறவங்க என்ன சொல்லபோறாங்கலோ?). பாராட்டனுமுன்னா என்ன பாராட்டுங்க.. திட்டனுமுன்னா வழக்கம்போல் ரவியை திட்டிடுங்க!

ஓ.கே. எல்லாரும் ஜோரா ஒருகா கை தட்டுங்க...

1. ஆசிப் மீரான் அதிரடி அண்ணாச்சி - பதிவுலக ரஜினிக்கு அறிமுகம் வேனுமா?

2. குசும்பன் - குசும்பு + குறும்பான நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தகாரர். அவரை அறிமுகப்படுத்தி எழுத தேவையில்லை என்றாலும், எழுதுலனா.. 'சங்கு'தான்டி ன்னு சொன்னதுனால எழுதுறேன்!. சுருக்கமா, சுருக்கமில்லாம சொன்னா... பாஸ்தான் பதிவுலக நகைச்சுவைக்கு H.O.D. (o.k வா பாஸ்?)

3. ஜோ - ஜப்பான் ஜோன்னு நாங்க செல்லமா கூப்பிடுற நண்பன். அவரு குரு கவுண்டமணி மாதிரி ரவுண்டு கட்டி கலாய்கிற ஆளு. காக்டெய்ல் மேக்கிங், அனுபவம், நகைச்சுவை, கவிதை, கதைன்னு பூந்து விளையாடுவாரு. அதைவிட அவரிடம் கவர்ந்தது, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அவராற்றும் தன்னார்வத் தொண்டு. நான் சொல்வதைவிட அவர் வலைப்பூவை ஒருமுறை படித்தால் உங்களுக்கும் அவரை பிடிக்கும்!

4. சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை என்ற தளம் வைத்து கிராஃபிக்சில் கலக்குபவர். நகைச்சுவையான போட்டோ கமெண்ட்ஸ் போட்டு எல்லோரையும் சிரிக்க வைப்பவர். உலககோப்பை, ஐ.பி.எல் 20/20, எலக்க்ஷன் என்று எல்லாவற்றையும் கலாய்ப்பவர்.

5. சுந்தர்ராமன் - இவர்தாங்க.. "வடைஎழு வள்ளல்" என்று அமீரக பதிவர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்போல் தோற்றம் இருந்தாலும், அழியாத நினைவுகள் பற்றி அருமையாக எழுதுகிற ஒரு அமைதியான பதிவர் இவர். இவரிடமிருந்து நிறைய இடுகைகளை எதிர்பார்கிறேன்!!

6. நாகா - எழுத வந்து சில நாட்களே ஆனாலும்.. அவருடைய பதிவுகளில் தமிழ்வீரியமும், வார்த்தை பிரையோகமும் நீண்ட நாள் எழுதும் பதிவர் கூட ஆச்சரியபடும்படி எழுதுகிறார். இளமை மற்றும் நகைச்சுவை இழையோடும் இடுகையினாலே வந்த கொஞ்ச நாட்களிலேயே, பல பதிவர்களை திரும்பி பார்க்க வைத்தவர்.

ஸ்ஸ்... அப்பாடா!, ஒரு வழியா கடமையை முடிச்சிடேன்!!

38 comments:

கலையரசன் said...

இந்தா பிடிங்க மெடலை

குசும்பன் said...

//பதிவுலக ரஜினிக்கு அறிமுகம் வேனுமா? //

பாபா பட ரஜினியா?:)

//கலையரசன் said...
இந்தா பிடிங்க மெடலை//

பின்னூட்ட கடமையுமா? ரைட்டு!

அது ஒரு கனாக் காலம் said...

இப்படி உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு தானே, உடம்பை ரணகளம் ஆக்கிடீங்கலேப்பா .விதி வலியது, கொடியது, எங்க போனாலும் விடாது .. நீங்க எதிர்பாத்துகிட்டே இருங்க. ...

அப்துல்மாலிக் said...

ரஜினிக்கே விருதா

நாமக்கல் சிபி said...

ஜாம்பவான்களுக்கு இந்த விருதைக் கொடுத்து விருதை மேலும் கௌரவப் படுத்தி விட்டீர்கள்!

நாமக்கல் சிபி said...

//பாபா பட ரஜினியா?:)//

:)

நாமக்கல் சிபி said...

கருவிப்பட்டைய தொலசிபுட்டீங்க போல!

சென்ஷி said...

:))))

அசத்துங்க...

அப்பாலிக்கா விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...

விருது பெற்ற அனைவருக்கும் நன்றி.. கலை.. ஒருமாதிரி எஸ்கேப் ஆயிட்டீங்க.. சிண்டு முடியறதுக்கு சான்ஸே இல்ல..இஃகிஃகி

Joe said...

மிக்க நன்றி நண்பா! என்னைப் போன்ற சாதாரணப் பதிவருக்கும் இந்த விருதா? நெகிழ்ச்சியாக இருக்கிறது!

கடைசியா ஒரு சின்னக் கேள்வி, இதை வைச்சிக்கிட்டு என்ன பண்றது, கூடவே 5000$ பரிசுத் தொகையில்லையா? (இதுக்கு தான் சாரு நிவேதிதா பத்திகளை அதிகம் படிக்காதே-ன்னு சொன்னேன், கேட்டியா?)

சுசி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்க விருது வழங்கினவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

sakthi said...

வாழ்த்துக்கள் விருதினை பெற்றவர்க்கும்
பகிர்ந்தளிக்கப்பட்டவர்களுக்கும்

geethappriyan said...

//இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விருது இல்லாத தளமே நல்ல தளம், என்கிற ரேஞ்சிக்கு இந்தவிருது அனைனனவருருருருக்குகும் அளிக்கப்பட்டு வருகிறது. இத பார்க்கும்போது ஃபீல் ஆகி, மானாவரிய கண்ணீர் கழலுதுங்கோ!! //
என்ன கலை?
விருது குடுப்பதற்கு இவ்வழு கெஞ்சலா?
வாங்கறதுக்கு பிகு பண்ண போறாங்கப்பா?
:))))))))))

jothi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

kishore said...

வாழ்த்துக்கள் மச்சி..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

வினோத் கெளதம் said...

இது வரைக்கும் நான் பார்த்ததில் மிக சிறந்த விருது கொடுப்ப்பாளர் நீங்க தான் கலை..
பின்னுறிங்க..(பிரியாணி பேசுது வேற ஒன்னும் இல்லை)

Sukumar said...

கலை... விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் கலை....
Interesting Blog விருது கொடுத்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி கலை

கோபிநாத் said...

தல

உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

\\1. ஆசிப் மீரான் அதிரடி அண்ணாச்சி - பதிவுலக ரஜினிக்கு அறிமுகம் வேனுமா? \\

அண்ணாச்சிக்கு அம்புட்டு வயசா!!!! :)

Admin said...

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெறும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்கும், உங்களால் விருதுபெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

ரெட்மகி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் கலை உங்களால் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

கலையரசன் said...

[color=blue]குசும்பன் -க்கு [/color]
பாட்ஷா பட ரஜினியை பாபா பட ரஜினியாக்கிட்டீயலே..!

[color=blue ]அது ஒரு கனாக் காலம் -க்கு [/color]
சுந்தர் சார்.. இதுகே அழுதா எப்பூடி?
இன்னம் மெயின் பிக்சரே வரலை!

[color=blue ]அபுஅஃப்ஸர் -க்கு [/color]
நாங்க பில்கேட்சுகே கொடுபோமுல்ல!!

[color=blue ]பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி -க்கு [/color]
அதை ஜாம்பவானே வந்து பாராட்டுனதுக்கு நன்றியய்யா!!

[color=blue ]பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி -க்கு [/color]
பிரபலமா இருக்கீக.. தேடி தந்தா புண்ணியமா போகும் சாமீ!
ஆனா அதுக்கும்.. சக்திவேலை கூப்பிட்டுடாதீங்க!!

நாகா said...

விருதுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலை (எ) ஆப்பு (எ) ஆப்பரசன்.. :)

கலையரசன் said...

சென்ஷி -க்கு
நன்றிங்கண்ணா! சிரிப்புக்கும், முதல் வருகைக்கும்!!

Keith Kumarasamy -க்கு
ஒரு குரூப்பாதான் அலையறிங்க போல..

Joe -க்கு
நீ சாதாரண பதிவர்னு எந்த பை.கா.கூ சொன்னது?
(நீ கேட்டபடி விருது கொடுத்துடேன்..நான் பெங்களூர் வரும்போது 1 கேஸ் பட்வைசரும், எஸ்போர்ட் எரா வருவலும் நான் சொன்னபடி வாங்கி வச்சிடு!)

சுசி -க்கு
நன்றியக்கோவ்!!

கலையரசன் said...

sakthi -க்கு
நன்றி சக்தி, உங்க வாழ்த்துக்கு..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
அப்படிங்கற? உனக்கு குடுத்தா தூக்கி போட்டுடுவியோ.. :-)

jothi -க்கு
நன்றி ஜோதி.. தொடர் வருகைக்கு!

KISHORE -க்கு
நன்றி மச்சி! கும்மியடிக்காம போறீயே.. பிசியோ?

கலையரசன் said...

ஜெஸ்வந்தி -க்கு
நன்றி ஜெ.. தொடர்வற்க்கும், வந்தமைக்கும் சேர்த்து!

வினோத்கெளதம் -க்கு
பயங்கரமான கண்டுபிடிப்பாளர்டா நீ!
பதிவுலக அடுத்த சக்திவேல் வாழ்க!!

Sukumar Swaminathan -க்கு
நோ.. நோ.. நோ...
அது என் கடமை சுகுமார்!!

கோபிநாத் -க்கு
வாங்க தல.. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்கோ!!

//அண்ணாச்சிக்கு அம்புட்டு வயசா//
என்னது... ரஜினிக்கு வயசாயிடுச்சா?
(காந்தி செத்துடாரா.. ஸ்டைலில் படிக்கவும்!)

கலையரசன் said...

சந்ருக்கு - நன்றி பாஸ்!

ஆ.ஞானசேகரன்க்கு - நன்றிங்கண்ணா!!

ரெட்மகிக்கு - நன்றி தோழா!!!

Suresh Kumar - நன்றி தலைவா!!!!

நாகா -க்கு
//கலை(எ)ஆப்பு(எ)ஆப்பரசன்//
நீ ஸ்மைலி போட்டுட்டு போயிட்ட..
இங்க எல்லாபயலுவலும் என்னைய
குருகுருன்னு பாக்குறானுவ..

பித்தன் said...

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

நாகா said...

//நாகா -க்கு
//கலை(எ)ஆப்பு(எ)ஆப்பரசன்//
நீ ஸ்மைலி போட்டுட்டு போயிட்ட..
இங்க எல்லாபயலுவலும் என்னைய
குருகுருன்னு பாக்குறானுவ..//

ஸ்மைலி என்ன, அடுத்த ஆர்டிகிளே உன்னப் பத்திதான்.. :) மறுபடியும் ஒரு ஸ்மைலி..

Subankan said...

நானும் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....

வாழ்த்துக்கள்.

http://subankan.blogspot.com/2009/07/blog-post_21.html

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விருது இல்லாத தளமே நல்ல தளம், என்கிற ரேஞ்சிக்கு இந்தவிருது அனைனனவருருருருக்குகும் அளிக்கப்பட்டு வருகிறது. இத பார்க்கும்போது ஃபீல் ஆகி, மானாவரிய கண்ணீர் கழலுதுங்கோ!! //

உண்மைதாங்கோவ்


//
அவரை அறிமுகப்படுத்தி எழுத தேவையில்லை என்றாலும், எழுதுலனா.. 'சங்கு'தான்டி ன்னு சொன்னதுனால எழுதுறேன்!. சுருக்கமா, சுருக்கமில்லாம சொன்னா... பாஸ்தான் பதிவுலக நகைச்சுவைக்கு H.O.D. (o.k வா பாஸ்?)
//

:))

//
இப்படியே போனா நான் விருது கொடுக்க ஆள் கூகுள்ல தேடினாலும் கிடைக்க மாட்டாங்கன்னு உண்மையை புரிஞ்சு(!) இடுகையை இட்டுடோமுல்ல!!
//
நம்ம கொடுக்கறதுக்கு ஆளே இல்லீங்கோவ்..

வால்பையன் said...

எல்லோரும் துபாய் பதிவர்கள் போலயே!

Unknown said...

// இத பார்க்கும்போது ஃபீல் ஆகி, மானாவரிய கண்ணீர் கழலுதுங்கோ!!//

:)))

கலை ரொம்ப நாளா வலை பக்கம் வரல பதிவர் சந்திப்பு எப்படி ?

jothi said...

கலக்குங்க கலை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Joe said...

Excuse me, Kalai... that 5000$ prize money along with the award...

Why no response? ;-)

கவித்தோழன் said...

hi kalai anna pls give ur email id and mobile number

http://kavithozhan.blogspot.com

shaikh ibrahim
050-9210947
shaikamjath0012@gmail.com

native : vadalur,near muruga theatre.

Blog Widget by LinkWithin