Monday, August 3, 2009

கலக்கல் - 2

--------------------------------------------------------------------------------------------

ரத்த
ஜோசியம் (தலைப்பே டெரரா இருக்கு..)
ஜப்பானில் பிளட் குரூப்பை வைத்து ஆராய்ச்சி செய்து, மனிதர்களுடைய குணாதிசியங்களை கீழ் கானும்படி வகைப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன குணங்களை கொண்டவர் என்பதை காசு கொடுக்காமலையே தெரிஞ்சிக்கோங்க... (பின்னூட்டத்தில.. கிளி ஜோசியர் ரேஞ்சிக்கு கிளம்பிடாதீங்கப்பு!!)

O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!

A குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்!

B குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்!

AB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்!
--------------------------------------------------------------------------------------------

"பார்த்ததிலேயே உனக்கு பிடித்த திரைப்படம் எது?'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - "பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா? 2003ல் வெளியாகிய பார்க் சான்ஊக் இயக்கியிருக்கும் "ஓல்டு பாய்" என்ற கொரிய படம்தான்.

எதற்க்கு என்று தெரியாமலே 15 வருட சிறை வாசம், சிறையில் இருக்கும்போதே மனைவியின் மரணம் மற்றும் குழந்தையின் மறைதலும், ஏன்.. எதற்க்கு என்று கண்டுபிடிக்க, 5 நாட்கள் மட்டுமே விடுதலை. இதுபோல் முடிவு கொண்ட படம் இருக்குமா என்று நாம் சிந்திக்ககூட முடியாதபடி முடிவு, நாவடக்காமையினால் வரும் வினை, பழிவாங்குதலின் உச்சக்கட்ட வெறி என்று இயக்குனர் கதை சொல்லிய விதம் அசாதாரணமானது. இதுபோல் கதை தமிழில் நினைத்துபார்க்க முடியுமா?????????????

மெமன்ட்டோ மற்றும் டெட்மேன் ஷூஸ் ஆகிய பழிவாங்குதல் வகை படங்கள் உலக அளவில் பேசப்பட்டாலும்.. முதல் இடத்தை பிடிப்பது "ஓல்ட் பாய்" மட்டுமே!!

ஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து "ஜிந்தா" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்!!

--------------------------------------------------------------------------------------------

மினி கதை:

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.

மருத்துவமனையில், பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

--------------------------------------------------------------------------------------------

கலக்கல் பாகம் -1 படிக்க..


34 comments:

வினோத் கெளதம் said...

சூப்பர் கலவை..
அந்த கதை நெகிழ்ச்சியான கதை.

வினோத் கெளதம் said...

நீங்க கொடுத்த Old boy CDல நான் முன்னாடியே சொன்ன மாதிரி சில விஷயங்கள் என்னால் யூகிக்க முடிந்தது..
அப்புறம் நம்ம தமிழ்ல நிறையா பழிவாங்கும் கதைகள் படமா வந்து இருக்கு.

வேந்தன் said...

மினி கதை சுப்பர்.
//எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ? //
:((((

ஷண்முகப்ரியன் said...

சுவையான கலக்கல்,கலை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் - கலக்கல் கலை :)

இது புதுசு :))

இரத்த ஜோசியம் நல்ல இருந்தது.. ஆனா இது மிகவும் பொதுவான கணிப்பு..

Ashok D said...

super.
Last one மனசை பிழைந்துவிட்டது.

உங்கள் ராட் மாதவ் said...

கலக்கல் கலையரசன்... வாழ்த்துக்கள்...

நாஞ்சில் நாதம் said...

\\\ மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ///

சூப்பர் பாஸ்

Suresh Kumar said...

உங்க கலக்கல் 2 கலக்கல்

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே கலக்கல்தான்... நல்லதகவலும் கூட

அது ஒரு கனாக் காலம் said...

super ... kalkal..kalai

Unknown said...

இந்தக் கலக்கல்ல கலக்கினது அந்தக் கதை... சூப்பரா இருக்கு

கோபிநாத் said...

கலக்கல்...தல ;)

அந்த குட்டி கதை சூப்பரு ;)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கல்யாணம் முடுஞ்சு இது தெரிஞ்சா???

SUMAZLA/சுமஜ்லா said...

உபயோகம், உண்மை, உலுக்கல்

மணிஜி said...

என் ரத்தத்தின் ரத்தமே

kishore said...

கதை நெகிழ்ச்சியாக இருந்தது கலை...

Joe said...

//
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
//
Super!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!
///

ரோட்டுல பத்து பேர் நடந்து போனா அதுல ஆறுபேர் O +ve வாதான் இருப்பாங்க.. நீ சொல்லுற ஜோசியம் ம்ம்கும்.....

பாவி மக்கா... எங்ககிட்ட இருந்து அம்புட்டுபயலும் இரத்தம் வாங்கிகிரானுக ஆனா கொடுக்குறதுக்கு என் குருப்ப தவற வேற அள் இல்ல,,, what kodumai ayya ?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நான் AB+ ... எனக்கு ஆக்ஸிடன்ட் எண்டால் பக்கத்தில போற ஆரையாவது பிடிச்சு ரத்தம் ஏத்தலாமா... அட்டவணை அப்படித்தான் சொல்லுது... ஆனா டாக்குத்தர் அப்படிச் சொல்லுறாரில்லை...

jothi said...

அழகான கலவை.

அந்த கதை நேற்றுதான் மின்னஞ்சலில் வந்தது. தமிழில் படிக்கும் போது இன்னும் சுவை. அதுவும் அந்த படம் மனசை எங்கோ கொண்டு பொகுதுங்கோ,..

geethappriyan said...

டேய் மாபி
என்னால் தமிளிஷில் இந்த அற்புத பதிவிற்கு
ஒரு ஒட்டு அட்டுமே போட முடிந்ததை எண்ணி வருந்தினேன்.
மற்ற திரட்டிகளில் போட்டேன்.

A குரூப்- a1+ நாங்க அப்படிதான் இருப்போம்

ஒல்டுபாய் பாத்தேண்டா மச்சான்
என்னா படம்?
கடவுளே...
எனக்கு பிடிக்காத கொரியா காரன கூட பிடிக்க வைச்சது.

//ஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து "ஜிந்தா" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்!!//

மச்சான் இந்த டெயில் பீஸ் ரொம்ப அருமை
நீ

சலங்கை ஒலி படத்தில் சரத்பாபு எழுதிய கவிதையை படித்தபடி கமல் வீம்பு செய்வார்.இதைபோல எவனால் எழுதமுடியும் என்று?

நீ அப்படி நிறைய முறை நினைக்க வைக்கிறாய்..

கலையரசன் said...

வினோத்கெளதம் -க்கு
நன்றி மச்சி! உன் கடமை உணர்ச்சி என்னை புல்லரிக்க வைச்சிடுச்சுடா..
நீ புத்திசாலிடா.. அதான் அந்த படத்தோட முடிவையும் கண்டுபுடிச்சிட்ட..
தமிழ்ல பழிவாங்குற படங்கள் நிறையா வந்துயிருக்கு என்பதையும் கண்டுபுடிச்சிட்ட..

வேந்தன் -க்கு
நன்றி பாஸ்.. தமிழாக்கம் எப்பூடி??

ஷண்முகப்ரியன் -க்கு
நன்றி ஐயா! தொடர் வருகைதந்து என்னை ஊக்குவிப்பதற்க்கும், உங்கள் பாராட்டிற்க்கும்!!

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்.. பொதுவாதான் ஆராய்ச்சி பண்ணினவங்க சொன்னாங்க நண்பா..

கலையரசன் said...

D.R.Ashok -க்கு
நன்றி டாக்குடர் அசோகு...

RAD MADHAV -க்கு
நன்றி மாதவ், எதோ உங்க புண்ணியத்துல...

நாஞ்சில் நாதம் -க்கு
நன்றி பாஸ்.. அதுதானே நடக்குது!

Suresh Kumar -க்கு
நன்றி சுரேஷ்.. டபுள் கலக்கலுன்னு சொல்ல வரீங்க?

கலையரசன் said...

ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி தலைவா..

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி வடையெழு வள்ளலே..

கீத் குமாரசாமி -க்கு
நன்றி கீத்.. உனக்கும் அந்த குட்டி தான் புடிச்சிருக்கா?

கோபிநாத் -க்கு
நன்றி தல.. தொடர் வருகைக்கும், பின்னுவிக்கும்..

குறை ஒன்றும் இல்லை !!!
நன்றி நண்பா! ஒன்னும் பண்ண முடியாது டம்ரீ..

கலையரசன் said...

SUMAZLA/சுமஜ்லா -க்கு
நன்றி, நன்நி, சுக்ரியா மேடம்..

தண்டோரா -க்கு
என் உடன்பிறப்பே! எங்க ரொம்ப நாளா கானாம்?

KISHORE -க்கு
அப்படியாங்க.. நன்றிங்க!
டேய்.. ஏன் ஒன்னும் எழுதமாட்ற?

Joe -க்கு
இங்கிலிபீசெல்லாம் பிரியாது மச்சி..

ப்ரியமுடன் வசந்த் said...

மச்சி கதை ரொம்ப நல்லா இருந்துச்சு

ஏன் நீங்க தொடர்ந்து இது மாதிரி கதைகள் எழுதக்கூடாது?

கலையரசன் said...

[பி]-[த்]-[த]-[ன்] -க்கு நன்றி மக்கா..
என்னமோ இத நானே எழுதுன மாதிரியில்ல கேள்விகேக்குற..
போய், ஜப்பான்ல கேளுடாங் கொய்யி..

மதுவதனன் மௌ -க்கு
நன்றி மெள.. ஒருவேளை அவரு போலி டாக்குடரா இருப்பாரோ?

jothi -க்கு
தொடர் வருகைக்கு நன்றி ஜோதி..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. -க்கு
என்னடா மாமா.. கட்டிங் போட்டுட்டு வந்துட்டியா..
ரொம்ப ஓவரா என்னைய புகழுறியே!
அடக்கி வாசி.. அடக்கி வாசி..
பொட்டி வாக்கிகிட்டு பேசுறானுன்னு உண்மையை
சொல்லிட போறானுங்க..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கதை கலக்கல். படிப்பினையுள்ளது. நன்றி.

Aravazhi said...

Hai Kalai
Mini story super kalakkal...
At the last your Message is wonderful.All the best to more kalakkal....

Aravazhi

Anonymous said...

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

வினோத் கெளதம் said...

call me kalai.
Congrats 4 100..

Unknown said...

//.. மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ? ..//

நெஞ்சை தொட்ட வரிகள்..

Unknown said...

//மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?//

ரொம்ப நல்லா இருக்கு.

Blog Widget by LinkWithin