Saturday, December 26, 2009

கலக்கல் - 5

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><>
பொறங்கால தூக்கி வச்சி வா கண்ணா!!

பதிவர் ‘கண்ணா’ நீநீநீநீண்ண்ண்டடடட 5 மாத கால இடைவேளைக்கு பின் எழுத துவக்கியிருக்கிறார்…அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……

வாடி.. வா...
<><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சல்யூட் ஃபார் மது & ஆனந்த் பிரகாஷ்

ருச்சிகா பலாத்கார வழக்குல ஹரியானா முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோருக்கு, 19 வருஷத்துக்கு பின்னால அவனுக்கு தண்டனை கிடைச்சது எல்லோரும் தெரியும். என்றாலும், அந்த தண்டனையை வாங்கி குடுக்க ருச்சிகாவோட தோழியான ஆராதனா குப்தா குடும்பத்தினரைதான் பாராட்ட தோனுதுங்க எனக்கு!

இவ்வளவு சீக்கிரமா (?) குடுத்த நீதியை பெற அவங்க கொடுத்த விலை என்னன்னனு தெரியுமா? ஆனந்த் பிரகாஷை (ஆராதனாவின் அப்பா) வேலையில் இருந்து சஸ்பண்ட் பண்ணியிருக்காங்க.. ஆராதனாவை காலேஜ் போகும்போது ரவுடிகள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. மது பிரகாஷை (ஆராதனாவின் அம்மா)வீடு புகுந்து மிரட்டி அடிச்சிருக்காங்க.. எல்லாத்துக்கும் மேல இவங்க 300 தடவைக்கும் மேல கோர்ட்டுக்கு அலைந்துதான் இந்த தீர்ப்பை, அந்த அல்லகைக்கு வாங்கிகுடுத்துருக்காங்க!!

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சோக்காமுல்ல??

2வது படிக்கும்போது வினோத்கிட்ட, டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்களாம்..

டீச்சர் : காந்திஜியோட பையன் யாரு?
வினோத் : தினேசன்
டீச்சர் : அடிங்.. இதை யாருடா சொல்லிகுடுத்தது உனக்கு?
வினோத் : L.K.G ல் இருந்து எல்லா மிஸ்சும்.. "காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>

அவதாரம் பார்த்த அவதார்

எல்லாரும் பாத்துட்டாங்கனு, ஒரு வழியா நானும் அவதாரை பாத்துட்டேங்க!! (அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??)

டெர்மினேட்டர், டைட்டானிக் கொடுத்த ஜேம்சா இப்டி எடுத்துயிருக்காரு?? தொங்கிபோன கதைக்கு.. ஜாக்கி குடுத்து நெம்பி இருக்காரு?? கிழவிக்கூட களவி ஆடுன மாதிரி எல்லாமே வேஸ்டா பூட்ச்சே நைனா!! இருந்தாலும் டெக்னாலஜி 1,2,3,4 க்காக பார்க்கலாம்.(நன்றி ஹாலிவுட் பாலு!)

1200 கோடி செலவு செஞ்சாங்கலாம் படத்துக்கு... அதுல ஒரு 120 ரூபா செலவு செஞ்சி, ஹீரோவுக்கு நல்லதா 4 டீ ஷர்ட் எடுத்து குடுத்துயிருக்கலாம்! கப்படிக்குது... படம் முழுக்க ஒரே டீ சர்ட்டுல வர்றாரு.. இதுக்குன்னே, ஜேம்ஸ் கேமரூனை கட்டிப்போட்டு தமிழ் படம் பாக்க வச்சிட்டு சொல்லனும்.. "பாத்தியில்ல?? எங்க ஹீரோங்க.. எப்டி ஒரே ஃப்ரேம்ல ஆறு டிரஸ்ல நடந்து வர்றாங்கன்னு?" திருந்துங்க சேம்சு!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
2010

2009-துல உங்களை எல்லாம் பல நேரங்கள்ல பின்னூட்டம் வழியாவும், பதிவு போட்டும்..

தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!
.
.
.
.
.
.
.
.
இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..
(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)

எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><>

80 comments:

கண்ணா.. said...

//அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... //

ஏன் மறுக்கா 5 மாசம் ஓடுறதுக்கா....


ங்கொய்யால...என்னா பாசம்..

:) நன்றி மச்சான்

கண்ணா.. said...

//நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!//

:( தண்டனை என்ன தெரியுமா

ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!


வாழ்க ஜனநாயகம்

கண்ணா.. said...

//அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??//

மச்சான் நான் கோமணம் கட்டுனவன்....


அய்ய ஆயி பசங்க அம்மணமாவா திரியுரீங்க

ஸேம்.. ஸேம்...பப்பி ஸேம்

ஆயில்யன் said...

//தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!///

இவ்ளோ செஞ்சுட்டு 1தான் சொல்லிக்க ஆசைப்படுறீங்களா ! பரவாயில்ல 2,3,4 கூட சொல்லுங்க கோச்சுக்கமாட்டோம்! :)

கண்ணா.. said...

//(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?//

அதான எவண்டா அவன் செருப்பை வீசுனது.....

அவன் அதை எடுத்து ப்ளாட்பாரத்துல கடை வச்சு வியாபாரம் பாக்குறான் பாருடா....

சென்ஷி said...

//(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)//

ஹைய்ய்.. நான் வீசுன செருப்பு கரெக்டா போய் சேர்ந்துடுச்சு :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)//

ஹைய்ய்.. நான் வீசுன செருப்பு கரெக்டா போய் சேர்ந்துடுச்சு :)//

:))))))))))))))))))))

♠ ராஜு ♠ said...

ஆராதானா ஃபேமிலிக்கு ராயல் சல்யூட்.

கிழவியோட களவி- பின்றீங்க கலை.

கண்ணா.. said...

யோவ் ஆயிலு..


நீ என்ன எப்ப பாத்தாலும் சென்ஷியோட கமெண்டை காப்பி பண்ணி ரிப்பீட்டேய் அல்லது ஸ்மைலி போட்டுட்டு போற...


நான் இன்னைக்கு பாக்குற ரெண்டாவது கமெண்ட் இது

kamalesh said...

யோசிக்கும்படியா, சிரிக்கும் படியா நல்லாத்தான் இருக்கு இந்த பதிவும் ...உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……//

வோம் - அவ‌ர் எதையும் தாங்கும் இத‌ய‌ம் கொண்ட‌வ‌ர் என்ப‌தை நாம் அறிவோம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//2வது படிக்கும்போது வினோத்கிட்ட.............//

அப்ப‌வே இப்ப‌டித்தானா???????

க‌ரிச‌ல்கார‌ன் said...

//(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?//

ந‌ல்ல‌ ஷீ வா பாத்து வீசுங்க‌ப்பா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!//

அத‌ ஏன் த‌மிழ்ல‌ சொல்றிங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கண்ணா.. said...
//அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??//

மச்சான் நான் கோமணம் கட்டுனவன்....
அய்ய ஆயி பசங்க அம்மணமாவா திரியுரீங்க//

வ‌ட‌லூர் வ‌ட்டார‌த்துலேயே முத‌ முத‌ல்லா டான்டெக்ஸ் போட்ட‌து யாரு தெரியுமா? க‌லைதான்!! யாரைப் பாத்து என்ன‌ கேக்குறீங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கண்ணா.. said...
யோவ் ஆயிலு..


நீ என்ன எப்ப பாத்தாலும் சென்ஷியோட கமெண்டை காப்பி பண்ணி ரிப்பீட்டேய் அல்லது ஸ்மைலி போட்டுட்டு போற...


நான் இன்னைக்கு பாக்குற ரெண்டாவது கமெண்ட் இது//

ரிப்பீட்டேய்

கண்ணா.. said...

கரிசலு...


ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்லதான் வேலையா...

எந்த பக்கம் போனாலும் உன் கமெண்டாஆஆஆ இருக்கு...........

குசும்பன் said...

// சென்ஷி said...
//(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)//

ஹைய்ய்.. நான் வீசுன செருப்பு கரெக்டா போய் சேர்ந்துடுச்சு :)
//

ங்கொயாலே அதுக்கு நீபோட்டிருக்கும் செருப்பை வீசனுமடா, ஏன் டா என் செருப்பை கழட்டி வீசுன?

நாஞ்சில் பிரதாப் said...

//அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்.//
தல சொல்ட்டீங்கல்ல பண்ணிருவோம்...

காந்தியடிகள் மேட்டரு சூப்பர் நைனா... செத்தப்புறமும் நம்மள சிரிகக்வைக்கிறாரே...

//இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..//

வேட்டைக்காரனையே தாங்கிட்டோம்....

செருப்பைநான் வீசலை தல.. இப்ப ஒரு அழுகுன முட்டை பறந்துவரும்பாருங்க அது நான்தான் வீசுனேன் :-)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)
வினோத்து வீசுன செருப்பு அதுக்குள்ளயுமா ரீச் ஆய்டிச்சு?
நான் காறி துப்புனேனே அது பட்டிச்சா?
================================
ஜேம்ஸ்காமரூன் இந்த படத்தை 10 வருஷத்துக்கு முன்னயே எழுத்திடாரு அதுனால தான் இதில் பல படங்களின் சாயல் தெரியுது,பட்ஜெட் காரணத்தால் தான் இவ்வலவு தாமதம்.
அதனால் தான் புதுமுக ஹீரோ வேறு.
இந்த படத்தை நீ ஐமெக்ஸ்ல தான் பார்த்திருக்கணும், மில்லியன் ஆஃப் கலர்ஸும்,வினோதமான மிருகங்களும்,மனிதனின் படைப்புதிறனுக்கு ஒரு நற்சாட்சி, இதை தான் டெக்னாலஜிக்கு இனி உதாரணம் காட்டவேண்டும்.
================
உன் பதிவை விட என் பின்னூட்டம் நீள்வதால் இத்துடன் முடிக்கி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!
================
ராயல் சல்யூட்கள் ஆராதனா&ஃபாமிலி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

கண்ணாவின் மீள்வருகையை சிலாகித்து இந்த வாரம் சார்ஜாவின் பீச் க்ராண்டு ஹோட்டலுக்கு அருகே உள்ள ஷார்ஜா ப்ரீமியர் ஓட்டல் அருகே உள்ள கலை வீட்டில் கலை பார்ட்டி தருகிறான். எல்லோரும் வருக, ட்ரின்க்ஸ் அன்லிமிடட்(கலை நீ சொன்னதை சரியா எழுதினேனா?)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

"காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??
====================
இந்த பொழப்புக்கு நீயி
டேய் இதே சம்பவத்தை நீயில்ல சொன்னதா அன்னிக்கு சொன்ன? இதுல வினோத் எங்கடா வந்தான்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஒய் யூ கய்ஸ் நாட் கமிங் ஃபார் கும்மி?
லாட் ஆஃப் ஆணி ரிமூவிங் அட் ஆஃபிஸ்?

கண்ணா.. said...

கார்த்தி வந்துட்டேன்.

ஏண்டா கலை ஆபிஸ்ல இருந்து எவ்ளோ நேரந்தான் கமெண்டை படிச்சுகிட்டே இருப்பே..

வந்து பதில் சொல்றா ..ங்கொய்யால...

சென்ஷி said...

//கண்ணாவின் மீள்வருகையை சிலாகித்து இந்த வாரம் சார்ஜாவின் பீச் க்ராண்டு ஹோட்டலுக்கு அருகே உள்ள ஷார்ஜா ப்ரீமியர் ஓட்டல் அருகே உள்ள கலை வீட்டில் கலை பார்ட்டி தருகிறான். எல்லோரும் வருக, ட்ரின்க்ஸ் அன்லிமிடட்//

இதைத்தான் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். :)

☀நான் ஆதவன்☀ said...

அது ஒரு சோக்குன்னு அதையும் பதிவுல போட்ட உன் மேல செருப்பு தூக்கி போட்டது தப்பே இல்ல மச்சி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

கலை கேட்டியாடா?
வந்து பதில் சொல்றா ..ங்கொய்யால...

சென்ஷி said...

//வ‌ட‌லூர் வ‌ட்டார‌த்துலேயே முத‌ முத‌ல்லா டான்டெக்ஸ் போட்ட‌து யாரு தெரியுமா? க‌லைதான்!!//

எங்க தலையிலயா

D.R.Ashok said...

வாழ்த்துகள் கலை

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//வ‌ட‌லூர் வ‌ட்டார‌த்துலேயே முத‌ முத‌ல்லா டான்டெக்ஸ் போட்ட‌து யாரு தெரியுமா? க‌லைதான்!!//

எங்க தலையிலயா//

இது என்னடாது புது குழப்பம்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

டேய் இன்னடா பதில் சொல்லாம அந்த குண்டு பிலிப்பினிகிட்ட கடலையா போடுற?

சென்ஷி said...

//"காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" //

எந்த காந்தின்னு சொல்லித் தொலைங்கப்பா.. என் ஊர்ல நாலஞ்சு காந்தி இருக்காய்ங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அதுல பெண்களும் அடக்கம்பா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//D.R.Ashok said...
வாழ்த்துகள் கலை//

எதுக்கு
வ‌ட‌லூர் வ‌ட்டார‌த்துலேயே முத‌ முத‌ல்லா டான்டெக்ஸ் போட்ட‌துக்கா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அதுல பெண்களும் அடக்கம்பா//

ம‌துரை ப‌க்க‌ம் போக‌ வேண்டாமா????????????

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

Blogger க‌ரிச‌ல்கார‌ன் said...

//அதுல பெண்களும் அடக்கம்பா//

ம‌துரை ப‌க்க‌ம் போக‌ வேண்டாமா????????????
------------------
இதில மதுரை எங்க வந்தது பாஸு?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

மச்சி 37

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கண்ணாவின் மீள்வருகையை சிலாகித்து இந்த வாரம் சார்ஜாவின் பீச் க்ராண்டு ஹோட்டலுக்கு அருகே உள்ள ஷார்ஜா ப்ரீமியர் ஓட்டல் அருகே உள்ள கலை வீட்டில் கலை பார்ட்டி தருகிறான். எல்லோரும் வருக, ட்ரின்க்ஸ் அன்லிமிடட்//

ந‌ம்ம‌ ஊர்க்கார‌ன் ஒருத்தன் இங்க‌ பாசமா பார்ட்டிக்கு கூப்பிட‌றான்

அங்க‌ என்ன‌ வெட்டி பேச்சு கிள‌ம்புங்க‌டா

க‌லை லாரி நிறுத்த‌ற‌துக்கு இட‌ம் இருக்குல்ல‌

கண்ணா.. said...

//இதில மதுரை எங்க வந்தது பாஸு?//

அது ஆண்டிபட்டி போற வழில வந்துச்சு பாஸூ

☀நான் ஆதவன்☀ said...

//வினோத்து வீசுன செருப்பு அதுக்குள்ளயுமா ரீச் ஆய்டிச்சு?
நான் காறி துப்புனேனே அது பட்டிச்சா?//

ஹிஹிஹி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இதில மதுரை எங்க வந்தது பாஸு?//


அண்ன‌ண் ஊரு ம‌துரை அண்ணி பேரு ..... (ந‌ம்ம‌ அஞ்சா ...... அண்ன‌ண்)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அண்ன‌ண் ஊரு ம‌துரை அண்ணி பேரு ..... (ந‌ம்ம‌ அஞ்சா ...... அண்ன‌ண்)
==============
இப்போ விளங்கி,அது ஏன் பாடத்துல வரல?
அதுக்கு கண்டனம்,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//ந‌ம்ம‌ ஊர்க்கார‌ன் ஒருத்தன் இங்க‌ பாசமா பார்ட்டிக்கு கூப்பிட‌றான்

அங்க‌ என்ன‌ வெட்டி பேச்சு கிள‌ம்புங்க‌டா

க‌லை லாரி நிறுத்த‌ற‌துக்கு இட‌ம் இருக்குல்ல‌//

அது பெரிய தோப்பு பங்களா,எத்தினி லாரி வேண்ணா நிறுத்தலாம்

கலை இப்பொ வரலைன்னா நீ காலி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டேய் இன்னடா பதில் சொல்லாம அந்த குண்டு பிலிப்பினிகிட்ட கடலையா போடுற?//

க‌ட‌லை தீஞ்சிருச்சா க‌லை

கலையரசன் said...

கண்ணா -க்கு
வா மச்சான்.. திரும்பி ஏன்டா வந்த???
நீ கோமணம்தான் கட்டுவேன்னு இப்பவாவது ஒத்துகிட்டியே!!
வாழ்க சுயதம்பட்டம்!!

ஆயில்யன் -க்கு
வாங்க பாசு! நீங்க ஆயிரம் சொன்னாலும் கோவிச்சிக்க மாட்டீங்கன்னு தெரியும் பாஸூ..

சென்ஷி -க்கு
அய்ய்யோ செருப்பாடா அது??? விசயகாந்து "கஜேந்திரா"வுல போட்டுட்டு வர்ற மாதிரி போட்டுகிட்டு ரூமுக்கு வருவியே?

அதை தூக்கியாடா அடிச்ச...?? அட, மனசாச்சியில்லாத மாங்கா!!

♠ ராஜு ♠ -க்கு
நன்றி ராசு... சரியா சொல்லுப்பா.. எதை பின்றேன்னு! கொரங்கு பயபுள்ளைங்க.. தப்பா நினைக்க போகுதுங்க!!

கலையரசன் said...

கண்ணா -க்கு
டேய் நாயனம்... நீ ஆயில்யனையும், கரிசலையும் சொல்றியா??
காலையிலேருந்து டாய்லட்டை தவிர, எங்க போனாலும் உன் கமெண்டாதான்டா இருக்கு!!

kamalesh -க்கு
நன்றி கமலேஷ்..

க‌ரிச‌ல்கார‌ன் -க்கு
வாய்யா.. கரிசகாட்டு கருவாயா!!
அந்த டான்டெக்ஸ் ஜட்டிய தூக்கிட்டு போனது நீதானா???
எதாவது பதிவர் சந்திப்புன்னு வரும்போது போட்டுட்டு வா... மாத்திகலாம்!!

அப்புறம், முதல் முறையா கும்மிய கலந்துகிட்டத்துக்கு நன்றி!!

குசும்பன் -க்கு
யப்பா ராசா... இதுக்கு அவன் செருப்பே தேவலாம்!!

கலையரசன் said...

நாஞ்சில் பிரதாப் -க்கு
வாங்க அசீத்து!! பாத்து கும்முங்க..
பயப்புள்ள, கடிச்சி வச்சிட போகுது!

அழுகுன முட்டைன்னா ஓகே!
ஆனா.. ஆசிட் முட்டை நாட் அலவ்ட்!!
இந்த அண்ணன் பாவம்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
வாங்க அறிவுத்தேடி!! காரித்துப்புனியே.. பான்பராக் போட்டு துப்புனியா... இல்ல, போடாம துப்புனியா??
முதல் இரண்டு பின்னூட்டம் சீரியசான காமெடி!!

அப்புறம்.,அறிவுத்தேடி! நான் பார்ட்டி வைக்கிறேன்! நீ எல்லாரும் சாப்பாடு வாங்கிட்டு வர்றியா??
(யேய்.. எங்கடா ஓட்டுற??)

கண்ணா -க்கு
மச்சி!! ஆபிஸ்ல இருந்துதான் கமெண்டை படிச்சிகிட்டு இருக்கேன்னு எப்புடிடா கண்டுபுடிச்ச?? கண்டிப்பா போன ஜென்மத்துல உன் பேரு ஷெர்லாக் ஹோம்சாதான் இருக்கனும்!!

சென்ஷி -க்கு
நீ எப்போதுமே எதிர்பார்த்து காத்திரு!
நீ எதியும் வச்சிடாத..
(பண்ணாட... 2 பார்டிய ஏமாத்திட்டியேடா!!)

கோபிநாத் said...

;)))

ஸ்ரீமதி said...

:))))))))))))))

கலையரசன் said...

☀நான் ஆதவன்☀ -க்கு
வாங்க அவ்வ்வ்வ்!
நீ சொன்ன "நிலாவுக்கு போன மாடு"
சோக்கை விடவா கேவலமா இருக்கு???
பவ்வ்வ்வ்வ்வ்!!

சென்ஷி -க்கு
எனக்காவது தலையில போட எலாஸ்டிக் இருக்கு!
நீ துண்டு போலயில்ல கட்டனும்??

D.R.Ashok -க்கு
நன்றி அசோக்ஜி!!

கார்த்திக்கேயனும் அதே -க்கு
அடப்பாவி.. அந்த கடலை உருண்டையில ஏன்டா விஷம் வைக்கிற???

கலையரசன் said...

சென்ஷி -க்கு
ம்.. எங்க ஊருல பரோட்டா கடை வச்சிருக்குற காந்தி!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
//அதுல பெண்களும் அடக்கம்//
இவ்வளவு தூரம் வந்துட்ட..
அப்படியே, எந்த காந்திய வாந்தி
எடுக்கவச்ச நீன்னு செல்லிட்டு போயிடு!!

கரிச‌ல்கார‌ன் -க்கு
//ம‌துரை ப‌க்க‌ம் போக‌ வேண்டாமா?//
இம்மாம் ஞாபக சக்தியா உனக்கு???
உன்கிட்ட சாக்கரதையா இருக்கனும் போல...ம்..

கார்த்திக்கேயனும் அதே -க்கு
//இதில மதுரை எங்க வந்தது பாஸு?//
ம்ம்.. உன்கிட்ட டீ வாங்கி குடிக்க வந்துது..!

கலையரசன் said...

க‌ரிச‌ல்கார‌ன் -க்கு
//லாரி நிறுத்த‌ற‌துக்கு இட‌ம் இருக்குல்ல‌//
என்ன ககா.. இப்டி கேட்டுட்ட??
ஃப்ளைட்டையே நிறுத்தலாம் வாங்கடியோவ்!!

கண்ணா -க்கு
அப்ப ஆண்டிபட்டி ஆயாபட்டி போற வழிய வருமா பாஸூ??

☀நான் ஆதவன்☀ -க்கு
நீ சிரிகிறத பாத்தா...
படத்துல ஹீரோ, வில்லனை அடிக்கும்போது..
பொதுமக்கள் கூட்டமா நின்னுகிட்டு
கையை தட்டி சிரிகிற மாதிரியே இருக்குடா!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
இனிமேதான் காலி பண்ண போறியா?? முடியல...

கலையரசன் said...

க‌ரிச‌ல்கார‌ன் -க்கு
அடபோங்ப்பா.. உங்க வயிதெரிச்சல்ல..
க‌ட‌லை தீஞ்சிருச்சு!!

கோபிநாத் -க்கு
இன்னம் கொஞ்சம் வாயை பொளந்து சிரிக்கலாம்.. தப்பில்லை!!

ஸ்ரீமதி -க்கு
வாங்... நன்றிங்...

பித்தன் said...

en seruppu paarcel for this new year

KISHORE said...

மச்சி.. என்னுதுன்னு நெனச்சி பக்கத்துக்கு வீட்டுகாரர் செருப்ப வீசிட்டேன்.. திருப்பி குடுத்துடுடா..பாவம் அவரு..

மச்சி வழக்கம் போல கலக்கல் கலைதான் நீ..

பின்னோக்கி said...

செருப்பு ஓல்டு பேஷன்ங்க.
ஆட்டோ இல்லைன்ன ஷீ தான்.

இவ்வளவு அழகா புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

உங்களுக்கு ஹேப்பி புது இயர்.

(சே.. ஒரு செருப்ப வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது. இன்னொன்னயும் புடிங்க)

ஸ்ரீராம். said...

காந்தி பையன்..... கலக்கல்.

வம்பன் said...

அடேயப்பா எவ்ளோ கமெண்டு?
நல்ல பதிவை எவனும் சீண்ட மாட்டானுங்களே,மடையனுங்க.
நீயே உனக்கு ஓட்டு போட்டுப்பியோ?
ஆமா எப்படி பேமண்டு?பண்ணுற?

ஹாலிவுட் பாலா said...

அட போங்கப்பா.. 19 வருஷம் கழிச்சி ஆறு மாசம் தண்டனையாம். அதுக்கும்.. பெயின் எடுத்துட்டானாம்.

உங்க மேல எறிய செருப்பை, இந்திய ஜனநாயகத்து மேல எறியலாம்.

இவனுங்களுக்கு எல்லாம் நந்தாவுல வர்ற மாதிரி, இல்ல மிடிஸ் ஈஸ்ட் மாதிரி... ‘க்ர்க்’ தண்டனை கொடுக்கணும்.

வினோத்கெளதம் said...

கொஞ்சம் வெளியே போய்ட்டு உள்ள வந்து பார்த்தா நம்மல வச்சி எதாச்சும் காமெடி பண்ணிரங்கப்பா..

கண்ணா நீ சொன்னா மாதிரியே எழுதியாச்சு..பார்ட்டி எல்லாம் ஒழுங்கா தந்துபுடனும் சொல்லிப்புட்டேன்..

வினோத்கெளதம் said...

என் செருப்பு இன்னும் அங்கேயே தான் இருக்கு..கடைசியா ஒரு தடவை வீசுனேன் இல்லை இன்னும் எடுக்கவே இல்ல..

வினோத்கெளதம் said...

உன் வோட்டு பெட்டி பத்தி எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு..எல்லாம் ஜனநாயக முறைப்படி தானே தேர்தல் நடக்குது..

jothi said...

கலக்கல்தான்,..

pappu said...

கண்ணா பாலா அக்கவுண்ட்ல ஊடு கட்டுறவருதான? இதோ வந்துட்டேன்.

கலை எப்பவும் ப்ளாஸ்ட்டா இருக்குங்க உங்க ப்ளாக்!

பிரியமுடன்...வசந்த் said...

வாடி வா...

:)))

ஹேப்பி நியூ இயர்டா கலை...!

வர்ற வருஷத்திலயும் இதே போல கலக்குடா மாப்பி...!

புலவன் புலிகேசி said...

கலக்கல்ங்க...வேணும்னா காமரூனை வேட்டைக்காரன் பாக்க வச்சி தண்டணை கொடுத்துடுவோமா..???

கலையரசன் said...

பித்தன் -க்கு
நன்றி பாஸூ.. போடுக்குற மாதிரி இருக்குமா??

KISHORE -க்கு
இப்ப பக்கத்துக்கு வீட்டுகாரனோட செருப்பையும் (!!!!!!) போட ஆரம்பிச்சிட்டியா??

பின்னோக்கி -க்கு
நன்றி தலைவா...
ஆட்டோ, ஷீ எல்லாம் முன்னாடி போட்டாச்சே!!
அப்ப இவ்வளவு நாளா ஒத்த செருப்போடையா நடந்தீங்க???

ஸ்ரீராம் -க்கு
நன்றி பாஸ்..

கலையரசன் said...

வம்பன் -க்கு
உங்களுக்கு ரெரரரரம்ம்ம்ப குறும்பு!!

ஹாலிவுட் பாலா -க்கு
வாங்கய்யா வாத்தியாரைய்யா..
ஏன் இம்புட்டு கோவம்?? அதுசரி! இதுகூட இல்லன்னா.. பொதச்சி பால் ஊத்திடுவாங்க!!

வினோத்கெளதம் -க்கு
க்கும்... வடிவேலுவ வச்சி கிரைம் த்ரில்லரா எடுக்க முடியும்??
அவன் பார்ட்டி எல்லாம் ஒழுங்கா தருவான்.. நீ குடிச்சிபுட்டு ஆடாம இரு!!

//கடைசியா ஒரு தடவை வீசுனேன் இல்லை//
டேய் வீசுனியா? இல்லியா? உன்க்கே கொழப்பமா இருக்கா????

மறுபடியும் வினோத்கெளதம் -க்கு
//உன் வோட்டு பெட்டி பத்தி எனக்கு சந்தேகமாவே //
இருக்கும்.. இருக்கும்.. உனக்கு பட்டாபட்டியதானே தெரியும்! ஓட்டு பொட்டிய எல்லாம் தெரிஞ்சு வச்சியிருக்கியா நியி??

கலையரசன் said...

jothi -க்கு
நன்றி ஜோதி..

pappu -க்கு
அவரேதான் பப்பு! அவனை பாத்து வச்சிக்காத..
தெரிஞ்சு மட்டும் வச்சிக்க..
அதுதான் உன் உடம்புக்கும், கண்ணுக்கும் நல்லது!!

பிரியமுடன்...வசந்த்-க்கு
வரேன்டி வர்றேன்... கலக்கிடுவோம் காப்பி!!

புலவன் புலிகேசி -க்கு
நன்றி புபு!! ஏன்? கேமரூன் உயிரா இருக்குறது புடிக்கலையா உங்களுக்கு??

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ........... said...

ரசிக்கும் வகையில் எழுத்துகளை கசியவிட்டு இருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி .!!!!

ஹேமா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கலையசரசன்.

thenammailakshmanan said...

வாங்க கலையரசன் ..
உங்க பங்களிப்பு இல்லாம வலையுலகமா ..
தினம் சிரிக்கவைத்தவர் நீங்க..

உங்க சேவை இந்த உலகத்துக்கு தேவை ..(மன்னார் அன் கம்பெனி ஸ்டைல்ல படிக்க வேண்டாம்).. ஹா ஹா .. உங்களுக்குதான் கலக்கக் தெரியுமா ...


புத்தாண்டு வாழ்த்துக்கள் கலையரசன்

சுசி said...

வந்தவரு அதே பொறங்கால் பின்தலைமேல அடி பட திரும்பி ஓடியிருப்பார் கலை.. உங்க வரவேற்ப படிச்சு.

என்னோட சல்யூட்டும் அவங்களுக்கு. ஆனா இனியும் அவங்களுக்கு கஷ்டம் தொடராம இருக்கணும்.

//""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""//
ராயல் சல்யூட்டெல்லாம் வச்சிட்டு கடைசீல ஏன் அவங்கள திட்டறீங்க?

அது நிஜமா வினோத் சொன்னதுதானா?

அவதார் ஞாயிறு(கிழமைய சொன்னேன். அப்புறம் அவதார் ஞாயிறுன்னு புது படமான்னு கேக்க கூடாது) பாக்கலாம்னு இருக்கேன். ஆமா நீங்க என்ன அவதாரம்னு சொல்லலையே?

அப்போ நான் வீசின கத்தி மிஸ்ஸாயிடுச்சா? .. குட்டிம்மா.. பெரியப்பா உங்கள கூப்டுராறு பாருங்க..

நல்லவேளை.. இன்னைக்கு எனக்கு லீவு. வீட்ல இருந்து படிச்சேன்.
//ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..// ன்னு நாங்களும் சிரிச்சோம்ல.

உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கலை.

'மாயி' சரத்குமார் said...

எலே இங்க வச்சி இருந்த சொம்ப எவன்ல தூக்கிட்டு போனது..

அக்பர் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கலையரசன் said...

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் -க்கு
நன்றி சங்கர்..

ஹேமா -க்கு
உங்களுக்கும்.. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா..

thenammailakshmanan -க்கு
ஹா ஹா நன்றி மேடம்..
உங்களுக்கும்.. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

சுசி -க்கு
வாங்க டாக்! உங்ககிட்ட புடிச்சதே இதுதான்.. நறுக்கு, நறுக்குன்னு சைட்டுல இன்ஜெக்ஷனை ஏத்திகிட்டு போயிட்டே இருப்பீங்களே!!

உங்களுக்கும்.. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் யக்கோவ்!!

அன்புடன் மலிக்கா said...

செம கலக்கல்..

நேரம்கிடைக்கும்போது இதையும் வந்துபாருங்கள்

http://fmalikka.blogspot.com/

கண்ணன் said...

மிகவும் அருமை

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .சிறந்த ஆக்கங்களை வெளியிட்டு வரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு .....

Blog Widget by LinkWithin