Sunday, December 13, 2009

பார்ட்டிஈஈஈஈஈஈஈ!!!

எங்க ஆஃபீஸ்ல அடிக்கடி பார்ட்டி குடுப்பாங்க.. (உடனே கிளம்பி வந்துடாதீங்க வேலை கேட்டுகிட்டு) ப்ராஜெக்ட் கிடைச்சா பார்ட்டி, ஸ்கிராப் வித்தா பார்ட்டி, ஆனுவல் பார்ட்டின்னு டிசைன் டிசைன்னா பார்ட்டி குடுபாங்க. இதுல பல பார்ட்டிஸ் துறை சம்பந்தப்பட்டதாவே இருக்குறதால, அதுல பார்த்த மூஞ்சயே பார்த்து பயப்பவேண்டியதாயிருக்கும்.. ஆனா, அதுல Annual பார்ட்டி மட்டும்தான் பல தளத்திலிருந்தும், சைட்டிலிருந்தும், அலுவலக கிளையிலிருந்தும் வருவாங்க என்பதால.. (புதுசு புதுசா ஃபிகர்கள் வருமுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாமோ?) அந்த பார்ட்டிக்கு மட்டும் தவறாம நாம ஆஜாராயிடுவாம்!!

party2.jpg picture by rkarasans party1.jpg picture by rkarasans

ஆமா... எங்க பெருசா கூப்ட்டுகிட்டு போயிட போறானுங்க? துபாய் சுற்றுலாவில் மிக முக்காத ஒன்றான அந்த பாலை பயணத்துக்குதான்! அதான் பாஸ்.. தமிழ்ல சொன்னா Desert Safari. ஏற்கனவே 2007ல ஒரு தடவை கூப்டுகிட்டு போயிருக்காங்க... மறுபடியும் 2009 அதே பா.ப வுக்கு கூப்பிட்டு போறாங்க. (ரொம்ப காசு கம்மியா கேக்குறதால மட்டும் இல்லை! இந்த 400 நாதாரிகளை அடைக்க, துபாயில வேற எடம் இல்லாதது கூட காரணமாய் இருக்கலாம்!!) ஆப்பீஸ்ல 400 பேருக்கு 60 டயோட்டா லாண்ட் கிரூஸரை ரெடி பண்ணியிருந்தாங்க. அதுல அப்படியே ஏறி அலுங்காம குலுங்காம முதல் சீட்டுல எடம் புடிச்சிட்டேன். (எத்தினி பஸ்சுல வேட்டிய அவுத்துபோட்டு எடத்தை புடிச்சிருப்போம்! நம்மகிட்டயேவா?)
IMAG0893.jpg picture by rkarasans

ஹெட் ஆஃபீஸிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரத்துல ஹத்தா போற வழியில இருக்குற அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். எங்க வண்டிய ஒட்டுன ஆளு ஒரு பிலிஃப்பைனி, என்னைய பாத்ததுமே கேட்டான் "ஆர் யூ ஃப்ரம் டமில்நாட்டூ?" அப்படின்னு..(எப்படிதான் மூஞ்ச பாத்து கண்டுபுடிக்கிறாய்ய்ய்ய்ங்கலேலலா?). அவனுக்கு என்ன ஆத்திரமோ தெர்லிங்கண்ணா... அங்க ஆரம்பிச்சான்யா ரோலர் கோஸ்டர் வேலையை... படார்ன்னு மேல ஏத்துறான், சடார்ன்னு கீழ எறக்குறான், விர்ருன்னு சுத்துறான், சர்ருன்னு சருக்குறான்.. (ஸ்ஸ்ஸ்ப்பா! எவ்வளவு நேரந்தான் நானும் அடக்குறது? அட.. பயத்தைதாங்க!!). இதுல வேற, அவன் மேலிருந்து கீழே இறக்கும்போது... ""ரஜினிகாநந்ந்த்த்தா.. அய்ய்யயோ... அம்மமமமாா... ராஸ்கோலலா.."" அப்டின்னு ரிப்பிட்டேஷனா கத்தி கடுப்பாக்குறான்! (இந்த நாலு வார்த்தையை அந்த பிலிஃப்பைனிக்கு கத்துகுடுத்தவன் வாயில சங்குசக்கரத்தை கொளுத்தி போட..)
party4.jpg picture by rkarasans Party13.jpg picture by rkarasans party8.jpg picture by rkarasans

ஒரு வழியா Sand Dune Bashing முடிச்சிட்டு, ஓட்டகத்தை மேய்க்க... சாரி! ஒரு ஃப்லோவுல உண்மை வந்துடுச்சு.. ஒட்டகத்தில் ஏறி சவரி செய்யிற இடத்துல விட்டாங்க.. அதுக்கு பக்கதிலேயே கம்பெனி ஏற்பாடு செஞ்சிருந்த கேம்ப்பும் இருந்தது! சரி.. ஒட்டகத்துல ஒரு ரைடு போயிட்டு வரலாமுன்னு நினைச்சிகிட்டு 'டெரரா மூஞ்ச' வச்சிகிட்டு ஒட்டகத்து பக்கத்துல போனேன்.. அது நம்மல பார்த்துட்டு 'பிஞ்சு மூஞ்ச' வச்சிகிட்டு வந்துடாருன்னு தலையை வெடுக்குன்னு திருப்பிகிச்சு! (ரைட்டு.. சரி விடுன்னு போறத்துக்கு நாங்க என்ன 'சூடு சொரனை' உள்ளவங்களான்னு, டப்புன்னு முதுகுமேல ஏறிட்டோமுல்ல? )
camel1.jpg picture by rkarasans camel2.jpg picture by rkarasans

அதை முடிச்சிட்டு திரும்புனா, அங்க ஒரு இடத்துல கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க.. என்னங்கடா இது? வித்தை ஏதாச்சும் காட்டுறாங்களான்னு போயி பார்த்தா.. Sand Scooterரை வச்சி படம் காட்டிகிட்டு இருந்தாங்க! சரின்னு இதையும் ஏன் விடுனுமுன்னு.. நண்பன் நெஞ்ச நக்கி, ஓசியில டிக்கெட்டை அண்டா போட்டேன்! (பிராக்கெட் போட்டா தப்பிச்சிடும் பயபுள்ள.. அதான் அண்டா!!) டிக்கெட் வாங்குன கொஞ்ச நேரத்தில் பைக்கை தந்துவிட்டார்கள். ஒரு 10 ரவுண்ட் அடிச்சிருப்பேன் ஒரு பயபுள்ள மட்டும் "குறுகுறுன்னு" கூறுபோடுற மாதிரி என்னையே பாத்துகிட்டு இருந்துது.. என்னடா வம்பா போச்சி? வண்டி ஓட்டுறது ஒரு குத்தமாடா!-ன்னு நினைசிகிட்டு திரும்ப வண்டிய குடுத்துட்டு வந்து, என் நண்பன்கிட்ட ஏன்டா அவன் அப்டி பாக்குறான்னு கேட்டேன்.. அதுக்கு என் நண்பன் "டேய் நாதாரி! வண்டிய மேடு மேல ஏத்த சொன்னா.. நிக்கிறவன் காலு மேல ஏத்திட்டு, பேச்ச பாரு! பாக்குறதோட விட்டானே.. பாடை கட்டாம!!" (அவன் கத்தவேயில்ல? ஒருவேளை லைட்டா ஏத்தியிருபேனோ?)
Bike1.jpg picture by rkarasans Bike2.gif picture by rkarasans

அப்புறம் என்ன பண்றதுன்னு கேம்ப் உள்ளார போனோம்.. போகும்போதே குலுக்கலுக்கான சீட்டை எழுதி போட்டுட்டு... நேரா எங்க போயிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க? கரைட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே! "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.. நான் ஒன்று அல்ல 7 பியர்ரு குடிப்பேனே!" My Favorite Austrian Beer CORONA பார்த்ததுக்கு அப்புறம், எனக்கு பக்கத்துல இருக்குற எதுவுமே என் கண்ணுக்கு தெரியலை.. கடைசியா பெல்லி டான்சரை பார்த்தவுடனேதான் எனக்கு கண்ணே தெரிஞ்சிது. ஒரு பக்கம் பாம்பு, பல்லியை தவிர சாப்பிட எல்லாம் வச்சிருக்க.. ஒரு பக்கம் போட்டிகளும், விளையாட்டுகளும் ஸ்டேஜ்ல நடக்க.. எங்க க்ரூப் மட்டும் எஸ்சாகி, அரேபிய பைப் சீஷாவை (ஷீலா தப்பா படிக்காதீங்க) இழுத்துகிட்டு இருந்தோம்!!

belly1.jpg picture by rkarasans belly2.jpg picture by rkarasans

இதுவே மெகா மொக்கையாகிடுச்சு.. இதுக்கு மேலையும் எழுதுனா நீங்க படிக்கவும் மாட்டீங்க.. (இல்லாட்டினா மட்டும் படிச்சிடுதான்...) அதனால, கடைசிய ஒன்னு மட்டும் சொல்லாம போனா.. இந்த பதிவு முழுமையடையாது! அதாங்க.. பெல்லி டான்சு!! எல்லாருமே பெல்லி டான்சரை "ஆஆஆஆஆஆஆ" ன்னு பார்த்துகிட்டு இருக்க சொல்லோ... நான் மட்டும் பக்கத்துல உள்ள ஈரோப்பியன் ஃபிகரை "ஈஈஈஈஈஈஈஈஈ"ன்னு பார்த்துகிட்டு இருந்தேன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க!!

48 comments:

சென்ஷி said...

நல்லாருடா நல்லாரு..

ஸ்கிராப் வித்ததுக்கு பார்ட்டியா.. டேய் அது நேரா உன் பாக்கெட்டுக்குத்தானேடா வந்திருக்கும். தனியா தண்ணியடிச்சுட்டு இன்னா பேச்சு பேசறே நீயி...

சென்ஷி said...

வவுத்தெரிச்சலை கெளப்பறதுக்குன்னே இப்ப வீடியோ ஃபைலை வேற ஏத்தி வுடுறீங்களாடா.. எடுபட்டவனே... உருப்படாதவனே.. ;)

சென்ஷி said...

இன்னும் கெட்ட கெட்ட வார்த்தையில திட்டணும்னு தோணுது. சபை நாகரீகம் கருதி இதோட விட்டுக்கறேன். மிச்சத்தை நேர்ல பாத்து கும்முறேன்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீங்க. ரசித்தேன்.

கண்ணா.. said...

//எல்லாருமே பெல்லி டான்சரை "ஆஆஆஆஆஆஆ" ன்னு பார்த்துகிட்டு இருக்க சொல்லோ... நான் மட்டும் பக்கத்துல உள்ள ஈரோப்பியன் ஃபிகரை "ஈஈஈஈஈஈஈஈஈ"ன்னு பார்த்துகிட்டு இருந்தேன்?//

பெல்லி டான்சரை பார்க்க பல்லி மாதிரி ஸ்டேச்ஜ் பக்கத்துல சில்லிதனமா ஒட்டிகிட்டு இருந்தியாமே...


//"பார்ட்டிஈஈஈஈஈஈஈ!!!//

எதுக்கு இத்தனை ஈஈஈஈஈஈ.... இவ்ளோ ஈ சாப்பிட்டியா..?

கண்ணா.. said...

ஏன் 2009 ல ஓட்டகத்துக்கு மேல ஏறலயாக்கும்..?

கடிச்சு வச்சுட்டா....?

D.R.Ashok said...

பாட்டின்னு படிச்சுட்டேன்.. கலைக்கு திடீருன்னு பாட்டி ஞாபகம் வந்துடுச்சோன்னு நினைச்சிட்டேன்ப்பா...

pappu said...

2007 பெல்லியை விட 2009 பெல்லி டான்சர் ஜூப்பரு மாதிரி தெரிய்து. ஹி..ஹி...

அந்த கார் முன்னாடி நீங்கதானா... ஜ்மார்டு பாஸ்!

அனிமேட்டட் ஜிஃப்பா... ஸ்கூட்டர் ஓடுதே!

அகமது சுபைர் said...

கலை, 35 வயசானாலும் ரஜினிகாந்த் மாதிரி அழ்ழ்ழ்ழ்ழ்ழ்க்க்க்க்கா இருக்கீங்க... அதுக்கு ரகசியம் என்ன??

அகமது சுபைர் said...

கலை,

இந்த கம்பெனிக்கு வேற எங்க கிளைகள் இருக்கு?? ஒரு அப்ளிகேஷன் போட்டு வைப்போம்...

சுசி said...

உங்க ஃ போட்டோவ மட்டும் ஒழுங்..கா போட்டிருக்கீங்க?
எங்க சொல்லணுமோ அங்க சொல்லறேன் (நாரதர்னு நீங்கதானே சொன்னீங்க)

சுசி said...

// என்னைய பாத்ததுமே கேட்டான் "ஆர் யூ ஃப்ரம் டமில்நாட்டூ?" அப்படின்னு.//

சேம் ப்ளட்டுப்பா..

சுசி said...

//அவனுக்கு என்ன ஆத்திரமோ தெர்லிங்கண்ணா//

இடம் புடிச்சீங்க சரி.. கூட யார் இருந்தாங்கன்னு சொல்லலையே.

சுசி said...

//ஒரு பக்கம் பாம்பு, பல்லியை தவிர சாப்பிட எல்லாம் வச்சிருக்க.//

அச்சச்சோ.. அப்போ நீங்க என்ன சாப்டீங்க?

சுசி said...

//நான் மட்டும் பக்கத்துல உள்ள ஈரோப்பியன் ஃபிகரை "ஈஈஈஈஈஈஈஈஈ"ன்னு பார்த்துகிட்டு இருந்தேன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க!!//

நாங்க ஏன் சொல்லப் போறோம். அதான் உங்க தலைப்பே சொல்லுதே

கண்ணா.. said...

// அகமது சுபைர் said...
கலை, 35 வயசானாலும் ரஜினிகாந்த் மாதிரி அழ்ழ்ழ்ழ்ழ்ழ்க்க்க்க்கா இருக்கீங்க... அதுக்கு ரகசியம் என்ன??
//


ஃப்புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஸ்கிராப் வித்ததுக்கு பார்ட்டியா.. டேய் அது நேரா உன் பாக்கெட்டுக்குத்தானேடா வந்திருக்கும். தனியா தண்ணியடிச்சுட்டு இன்னா பேச்சு பேசறே நீயி...//

டேய் மாப்பி 400பேராடா போனீங்க?
பெருங்கூட்டமாச்சே?
அது என்னடா அது வருஷம் போட்டு போட்டோ போட்டிருக்க? உனக்கு வயசே ஆகலைன்னு நம்பவைக்க்தானே?

அட அண்டா போட்டியா?
புதுசா இருக்கே, நடத்து
ஃபார்மாலிட்டி பண்ணியாச்சிடா

குசும்பன் said...

நாசமா போ!

☀நான் ஆதவன்☀ said...

இந்த மாதிரி டூர் போனமா மத்தவங்க மனசை புண்படுத்தாம கமுக்கமா இருந்தோமான்னு இல்ல... உனக்கும் செந்தில் வேலனுக்கும் டூர் போன கதையெல்லாம் பதிவா போட்டு வெறுப்பேத்துறதே வேலையா போச்சு :)

நாஞ்சில் பிரதாப் said...

நற..நற...நற... சிலபேருக்கு வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறதே வேலையப்போச்சு...

பெல்லி டான்ஸர் ஒண்ணை தள்ளிக்கிட்டு வரவேண்டியதான தல...குறைந்தபட்சம் அந்த யுரோப்பு பிகரையாவது கரெக்ட் பண்ணிருக்கலாம்...பார்ட்டி டோட்டல் வேஸ்ட்... இதுக்கு பதிவு வேற....

அபுஅஃப்ஸர் said...

ஆகா நல்லா என் ஜாய் பண்ணிருக்கே மக்கா..
நல்லாயிருங்க மக்கா

ரசனையான எழுத்துக்கள்

பலா பட்டறை said...

//இந்த நாலு வார்த்தையை அந்த பிலிஃப்பைனிக்கு கத்துகுடுத்தவன் வாயில சங்குசக்கரத்தை கொளுத்தி போட.//

தமிழ நல்லாதான் பரப்பறாங்க போல... நல்ல ரகளையான பதிவு... என்ஜாய். :)

KISHORE said...

கடைசி பாரா சூப்பர் மச்சி.. என்ஜாய் பண்ணு..

சரண் said...

சரண் கூறியது...(Ilaiya bharatham)

@ கலையரசன்
//வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!!//

படம் சம்மந்தமா ஸ்டில்ல வெச்சுட்டு ஏமாத்திட்டேன்னு தல'க்கு கோபம் போலிருக்கே. கொஞ்ச கொஞ்சமா எரிச்சலூட்டுற விஷயத்தை ஒதுக்கிடுவோம் பாஸ்.

அது ஒரு கனாக் காலம் said...

//ஸ்கிராப் வித்ததுக்கு பார்ட்டியா.. டேய் அது நேரா உன் பாக்கெட்டுக்குத்தானேடா வந்திருக்கும். தனியா தண்ணியடிச்சுட்டு இன்னா பேச்சு பேசறே நீயி//....சரியா சொன்னீங்க

Chitra said...

பாலைவனத்தில் விட்டதுக்கே இந்த ரவுசு. தூள்!

வினோத்கெளதம் said...

2009 ஒட்டகம் ரொம்ப நோஞ்சானா இருக்கே..Economic crisis காரணமோ..

ஹாலிவுட் பாலா said...

ஹை... நீங்களும் கொரோனாவா...!! :) :)

ஸேம் பிஞ்ச்!!!!!! :) :)

ஹும்.. பார்ட்டின்னா இப்படியில்லா.. பெல்லி டான்ஸரெல்லாம் பொட்டு இருக்கனும். எங்களுக்கும் ஒரு பார்ட்டி நடந்துச்சே..!

கோபிநாத் said...

கடமை ;)

பிரியமுடன்...வசந்த் said...

போட்டோ எல்லாம் ரொம்ப அழகா இருக்குடா நீயும்தான்...!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கலக்கல் படங்களுடன் ஒரு கலக்கல் இடுகை.

இடுகை முழுக்க நகைச்சுவை ரசம் பொங்கி வழியுது :))

இளைய கவி said...

ஏம்பா இந்த பெல்லிடாண்ஸர் படம் இன்னும் கொஞ்சம் போடக்கூடாதா?

கலையரசன் said...

சென்ஷி -க்கு
நல்லாருடா நல்லாரு..
ஸ்கிராப்பை பத்தி உன்கிட்ட் சொன்னேன் பாரு!
நீயே வேலைக்கு உலை வச்சிடுவ போல?

விக்னேஷ்வரி -க்கு
நன்றி தலைவி...

கண்ணா.. -க்கு
வாடா மொக்க கண்ணா!!
பயங்கரமா கமண்டியிருக்க...

D.R.Ashok -க்கு
ஆமா அசோக்கு.. பிராக்கேட்குள்ள பாட்டின்னு வாசித்தால் மண்டையில கொட்டுவேன்னு எழுதலாம்ன்னு நினைச்சேன்!

கலையரசன் said...

pappu -க்கு
நன்றி பாசு..
பெல்லி டான்சரை எல்லாம் கரைக்டா பாரு.. படிக்காத!
அனிமேஷன் நான் பண்ணேன் நல்லாயிருக்கா?

அகமது சுபைர் -க்கு
டம்ம்ம்பிபிபிபி!! 35 வயசாச்சுன்னு நீ சொன்னதை மறந்துட்டேன்! ஏன்னா.. என்னை தலைவர் கூட கம்பேர் பண்ண உனக்கு.. வெள்ளிகிழமை எக்ஸ்ட்ரா 2 லெக் பீஸ் உண்டுபா!!

சுசி -க்கு
அய்யோ.. எம்மா... உன்கிட்ட மாட்டுனாலும் மாட்டுனேன்.. அவனுங்களே மறந்தாலும், கூப்டு வச்சி கும்ம சொல்லுவிங்க போல?
உங்களுக்கும் சேம் பிளட்டா? அப்ப நம்ம இரண்டு பேரும் ஓ "பாசிட்டிவா"?

கண்ணா.. -க்கு
என்னா சாமி? வவுரு சரியில்லையா?

கலையரசன் said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் -க்கு
நன்றி மாப்பி... படிச்சிட்டு பார்மாலிட்டி பண்ணத்துக்கு..
உன்னை மயின்ட்ல வச்சிகிறேன், அப்புறமா யூஸ் பண்றேன்!!

குசும்பன் -க்கு
ண்ணே.. அந்த வாழ்த்துன வாயை தூக்கிட்டு, அண்ணாச்சி வீட்டுக்கு வெள்ளிகிழமை வாங்க!!

☀நான் ஆதவன்☀ -க்கு
நீ மட்டும் சேட்டன் கூட சரக்கடிச்சதை போட்டோவோட போட்டு எங்க மனசை புண்படுத்தாம கமுக்கமா இருந்தியா? இல்லல்ல...????? பழிக்கு பழி!!

நாஞ்சில் பிரதாப் -க்கு
வாங்க தல.. அந்த அளவுக்கு எனக்கு கெப்பாக்குட்டி இல்ல தல..
உங்கள மாதிரி அசீத்து கணக்கா இருந்தா, ஒரு வேளை பண்ணியிருப்பனோ-?
:-)

கலையரசன் said...

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி மக்கா...
எல்லாம் உங்க ஆதரவுதான் தல!

பலா பட்டறை -க்கு
நன்றி பட்டறை!!

KISHORE -க்கு
எம்மாம் தண்ணி வச்சாலும் நாய் நக்கிதான் குடிக்கும்!

சரண் -க்கு
ரைட்டு பாஸ்..

கலையரசன் said...

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சார்...
நீங்களுமா???? யூ டூ?????

Chitra -க்கு நன்றி யக்கா!! எங்கள கொண்டுபோய் லாஸ் வெகாஸ்ல விட்டா இதைவிட ரனகளமா இருக்குமுல்ல?

வினோத்கெளதம் -க்கு
ஆமாங்க! போய் புல்லுகட்டு வாங்கிகுடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...

ஹாலிவுட் பாலா -க்கு
தள.. வலிக்காம கிள்ளுங்க!
உங்க பார்டிய பத்தி எழுதுனா எனக்கு வயிரு மட்டுமா எரியும்?
ம்ம்ம்ம்ம.. (பெருமூச்சு)

கலையரசன் said...

கோபிநாத் -க்கு
மறு கடமை :-)

பிரியமுடன்...வசந்த் -க்கு
யப்பா சாமி.. குளுவுரு டைம்டா!!
நடுக்குது...

ச.செந்தில்வேலன் -க்கு
நன்றி செந்தில்..
அடுத்த தடவை மோரு, சாம்பாரு எல்லாம் பொங்கி வழிய வச்சிடுவோம் :)

இளைய கவி -க்கு
நன்றி கவி!
போட்டா மட்டும்?

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிபா,... ஆனாலும் கொஞ்சம் எரிச்சல்தான்.. என்னால் அனுபவிக்க முடியலேயேனு

பித்தன் said...

poga varudhu baasu

அன்புடன் மலிக்கா said...

4. மாதத்து முன்பு நாங்களும் போனோமுள்ள எங்க அத்தானின் ஆபீஸ் பார்ட்டிக்கு. அழகான பாலைமணல். ஒட்டச்சவாரி. பைக்சவாரின்னு எங்கவீட்டு சின்னஹீரோ கலக்கிடாரு. அழகான அனுபவம்.

ம்ம் எல்லாரும் பார்த்து ரசிக்கனுமுன்னு படம்போட்டு காட்டிருக்கீங்க பார்க்கட்டும் பார்க்கட்டும்

அக்பர் said...

இங்கெல்லாம் அது இல்லையேன்னு ஏக்கமா இருக்கு.

ம்ம்ம் ஜமாயுங்க.

ஸ்ரீராம். said...

ஒட்டகத்துக்கு பக்கத்துல ஏணியைக் காணோமே...எப்படி ஏறினீங்க....!!

பைக் சுத்தி சுத்தி வந்ததும் கீழ இருக்கற டான்சரை ஆசையாக் கொஞ்ச நேரம் பார்த்துகிட்டே இருந்தேன்...இதோ ஆட ஆரம்பிப்பாங்க..இதோ ஆட ஆரம்பிச்சுடுவாங்கன்னு..ம்.....

Mohan Kumar said...

உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். நல்ல பிள்ளையா என் ப்ளாக் வந்து வாங்கிட்டு போங்க

கலையரசன் said...

ஆ.ஞானசேகரன் -க்கு
நன்றி தல...
எரிச்சலா? மருந்து வேணுமா?

பித்தன் -க்கு
எனக்கு கண்ணு எரியுது பாசு..

அன்புடன் மலிக்கா -க்கு
நன்றி மல்லிகா... நீங்க அதை பத்தி எழுதுங்க..

அக்பர் -க்கு
நன்றி பாஸ்!
எது இல்லையேன்னு ஏக்கமா இருக்கு????

கலையரசன் said...

ஸ்ரீராம். -க்கு
நன்றி ராம்.. ராம்.. ஸ்ரீராம் ராம்.. ராம்..
ரசித்தேன் உங்க பின்னூட்டத்தை..

Mohan Kumar -க்கு
நன்றி தலைவா.. நல்ல பிள்ளையா உங்க ப்ளாக் வந்து, விருதை வாங்கிகிட்டேன்! எங்க வூட்டுல எங்க மாட்டுலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்!!

tamiluthayam said...

பார்ட்டிக்கு ரெம்ப போய் உடம்ப கெடுத்துக்காதீங்க

அண்ணாமலையான் said...

இவ்ளோ விஷயம் இருக்கா?

Blog Widget by LinkWithin