Tuesday, December 22, 2009

ஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....


நீங்க
யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா? என்னது.. பாத்ததே இல்லியா? என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க! இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே!! இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு! என்சாய்...

இந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் (?????? ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம்! என்னங்கடா... நடக்குது இங்க?? இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க?? (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்!) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி"பப்பரப்பா"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது!!


ஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.

இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம்! நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல!. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க! ஏனோ.. கவுண்டமணி சொல்ற "குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்.." டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது!!கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!

ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. ! திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு! எதுவாயிருந்தாலும்,

வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!

(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க?)

59 comments:

அண்ணாமலையான் said...

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லியும் குற்றமில்லை...
பின்ன...?
காலம் செய்த கோலமடா?
தமிழன் செய்த பாவமடா..

ஜீவன்பென்னி said...

அந்த கன்றாவிய எல்லாம் பாக்குறீங்களா!!!

ஜெட்லி said...

வாழ்க... சன் டி.வி.!

நாஞ்சில் பிரதாப் said...

//ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ//
என்ன கொடுமை சரவணா... அஞசுக்கு அஞசுக்கும் மொக்கை பிகராச்சே... இதுகளையெல்லாம் பார்த்தா வேப்பிலை அடிக்கவேண்டியதுதான்.

நானும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கேன்...
நம்ம சிலுக்கு, அனுராதா, ஜோதிலட்சுமியே தேவலாம்...

பார்த்து கலை ஆட்டோ கீட்டோ வந்துடப்போவுது ஆளுங்கட்சி டிவி...

உங்குத்தமா என்குத்தமா...யாரை இங்கு குத்தம் சொல்ல...

குசும்பன் said...

கலாச்சார காவல் தெய்வம் கலைக்கு கருங்கல் சிலை வெய்யுங்கப்பா! பீச் ரோட்டுல:))

பன்றது எல்லாம் பலானவேலை பேச்சை பாரு, லொள்ளை பாரு..

Mohan said...

இது ஒரு முன்ணோட்டம்.
அடுத்து ராணீ ஒன்னு ராசா
ராசா ஒன்னு ராணி
ஒன் பை டு
கலக்கல் காம்பிணேசன் வரலாம்

கண்ணா.. said...

எல்லாத்தையும் ஃபுல்லா, நல்லா பாத்து முடிச்சிட்டு வந்து சாவகாசமா

”வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!”

அப்டீன்னு சொல்றியே நீதாண்டா உண்மையான தமிழன்.!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஐயோ ஐயோ
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு தான் போ
எல்லாமே செம கலக்கல்
ஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாரா?கிழபாடுங்கன்னு சொல்லுற?

பாத்து நம்ம பக்கமே இதெல்லாம் திரும்பும் ஒரு நாளு.
மத்தபடி எல்லாமே சிரிப்பை வரவழைக்க தவறவில்லைடா மாப்பி
வாக்குகள் சேர்க்கப்பட்டன.

கண்ணா.. said...

//அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! //

ஆறு ஃபிகர் பேரை மட்டும் கரெக்டா சொல்லிட்டு, ஆம்பளைக பேரை மறந்த பாத்தியா.... அங்கதாண்டா மச்சான் உன்னை பார்த்தா பெருமையாக்கீது...

கண்ணா.. said...

ஏண்டா நாதாரி,

நீ பாத்ததும் இல்லாம, வீடியோவை வேற போட்டு என்னை மாதிரி ச்சின்ன பசங்களையெல்லாம் ஏண்டா கெடுக்கற...

சென்ஷி said...

உன் ரூமுக்கு வர்றப்ப இந்த மாதிரி நிகழ்ச்சியை கண்ணுல காட்டவே மாட்டேங்குறியேடா

சென்ஷி said...

// குசும்பன் said...

கலாச்சார காவல் தெய்வம் கலைக்கு கருங்கல் சிலை வெய்யுங்கப்பா! பீச் ரோட்டுல:))

பன்றது எல்லாம் பலானவேலை பேச்சை பாரு, லொள்ளை பாரு..//

ம்ம்... நல்லவரு வந்திட்டாருய்யா.. சொம்பை எடுத்து உள்ளே வைங்க :)

வினோத்கெளதம் said...

உன்னோட கலச்சார பக்திய நினைத்து நான் கண் கலங்குகிறேன்.. இருந்தாலும் இன்னும் ஒரு மூணு, நாலு வீடியோ க்ளிபிங் சேர்த்து இருந்தினா..நாங்களும் பார்த்துவிட்டு எங்களின் 'கலாச்சார கன்டனத்தை'ஆணித்தரமாக பதிவு செய்து இருப்போம்..

வாழ்க கலாச்சாரம்..வாழ்க பண்பாடு..

வினோத்கெளதம் said...

//ஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாரா?கிழபாடுங்கன்னு சொல்லுற?//

அதானே..

D.R.Ashok said...

ஆஹா.... இவ்வளவு நல்ல நிகழ்ச்சியே பார்க்க தவறிட்டேனே... கலை.. என்ன டைம்ல பலான நிகழ்ச்சி போடறாங்கன்னு கூறவும்..

வழக்கம் போல் குசும்பன் சிக்ஸர் அடிக்கறார்பா... லொள்ள பாரு

வினோத்கெளதம் said...

அப்புறம் சொல்ல மறந்துத்டேன்..வழக்கம்ப்போல் "நகைச்சுவை" பின்னி பெடலெடுக்குது..

வினோத்கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப் said...

//நானும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கேன்...
நம்ம சிலுக்கு, அனுராதா, ஜோதிலட்சுமியே தேவலாம்...//

அதான் எல்லோரும் பார்க்கிறிங்க..ஆனா யாரும் அதைப்பத்தி சொல்ல மாட்டுறிங்களே..சொன்னா தானப்ப எங்களுக்கும் தெரியும்..

☀நான் ஆதவன்☀ said...

உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு...

☀நான் ஆதவன்☀ said...

நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க?

☀நான் ஆதவன்☀ said...

// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஐயோ ஐயோ
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு தான் போ
எல்லாமே செம கலக்கல்
ஏன் ப்ரித்ட்விராஜ் உன் சோதுல விஷம் வச்சிட்டாரா?கிழபாடுங்கன்னு சொல்லுற?///

:)))))))))))))) முடியல மச்சி. பதிவை விட இந்த பின்னூட்டம் தான் டாப்பு :)

☀நான் ஆதவன்☀ said...
This comment has been removed by the author.
Kolipaiyan said...

ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. !


- no more comments!

சுசி said...

//இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க..//
அது நடக்கணும்னு வேண்டுதலோட..

//அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!//
அதானே.. கலை இருக்கும்போது அவனுங்களுக்கெல்லாம் குடுக்கலாமா என்ன. வாட் நான்சன்ஸ்ஸு..

அநியாயத்துக்கு மறுபடி எனக்கு குட்டிம்மா ஞாபகத்துக்கு வர்றாங்க கலை :))))))))

ஸ்ரீராம். said...

"பிக்காலிங்க"

அப்படின்னா என்னங்க...

KISHORE said...

டேய் உன்னைய பத்தி தெரியாதவங்களுக்கு தான் நீ எழுதி இருக்குறது எதோ சமூக சீர்கேடு எதிர்ப்பு குரலா தெரியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது உன்னோட வைதெரிச்சலா தான் தெரியுது... சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா ..

Subankan said...

ம், இதைப் பாத்துட்டு நிகழ்ச்சிய நிறுத்திட்டாங்கன்னா ஒட்டுமொத்த சாபமும் உங்களுக்குத்தான் சொல்லிபுட்னேன்.

அபுஅஃப்ஸர் said...

கலை கொதிச்சிப்போயிருக்கு

இதுக்குதான் இந்த கண்ராவியெல்லாம் பாக்குறதில்லை.. டிஸ்கவரி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அப்படினு போய்டுறது..

மெய்யாலுமே உங்க கொதிப்புலே ஒரு அர்த்தம் இருக்கு.. இந்த கன்ட்ராவி மனுஷங்களுக்கு வெளங்கவா போகுது..

குறிப்பு: அதிக மக்கள் விரும்பி பார்க்கும் சேனல் சன்.. மக்கா கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கப்பா

சந்தனமுல்லை said...

:-))))

கிரி said...

நல்லா நறுக்குன்னு கேட்டீங்க.. TRP Rating படாதபாடு படுத்துகிறது

அன்புடன்-மணிகண்டன் said...

நான் அந்த நிகழ்ச்சிய பார்த்ததில்ல.. (நம்புங்க.. நம்பிக்கை தான் வாழ்க்கை)
ஆனா உங்க பதிவு.. ஐயோ.. வாய்ப்பே இல்லீங்க.. படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன்.. இனிமே மிஸ் பண்ணாம பார்க்கறேன்.. நிகழ்ச்சிய இல்ல.. உங்க பதிவுகளை..
:)

பிரியமுடன்...வசந்த் said...

லொல்லாடா ஏண்டா இது போடுறாய்ங்கன்னுதுமே டி.வி. முன்னாடி நின்னு அதுவும் மேக்கபு எல்லாம் போட்டுட்டு ஆனா கைலியோட :))))
மூஞ்ச டிவிக்குள்ளாற வச்சு பாத்துட்டு இங்க வந்து வியாக்கியானம் பேசுறியா இருடி மாப்ள கல்யாணத்துக்கு ரகசியாவ கூப்ட்டு வந்து வந்து வந்து.....

அது ஒரு கனாக் காலம் said...

நாங்க இந்த மாதிரி ப்ரோக்ராம் எல்லாம் பார்க்கிறது கிடையாது !!!!!!!

Chitra said...

இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. ................ அந்த நிகழ்ச்சி ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில் என் பொண்ணு கேக்க ஆரம்பிச்ச கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, சேனலை மாத்திட்டேன். என்னவோ போங்க..... இவங்கதான் தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்துறேன் என்று ஒரேயடியா மூழ்க வைக்குறாங்க.

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன் என்று பாட வேண்டும் போலிருக்கு.

இந்த கருமாந்திரம் எதுவும் இங்குத் தெரியாது... அது வரைக்கும் நான் புண்ணியம் பண்னவன்.

jothi said...

இந்த நிகழ்ச்சில வேலை செய்யற எவனும் இந்த பதிவை பாத்தாரெண்டு நாளைக்கு சோறு தின்ன மாட்டான். அந்த அளவிற்கு கிழி கிழி,..இப்ப நாமதான் கர்ச்சீப் கொடுக்கணும்

அஹோரி said...

அவனுங்க "செய்திகள்" க்கு இந்த நிகழ்ச்சி எவ்வளவோ தேவலாம்.

ஹேமா said...
This comment has been removed by the author.
ஹேமா said...

நல்லாவே ரசிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க கலையரசன்.

negamam said...

வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!

கலையரசன் said...

அண்ணாமலையான் -க்கு
வாங்க பிரதர் மவூன்டைன்..
நாளும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடாஆஆஆஆ..

ஜீவன்பென்னி -க்கு
வேற ஏதாவது கண்றாவி இருந்தா சொல்லுங்க.. அதையும் பார்த்துடுவோம்!!

ஜெட்லி -க்கு
வாழ்க... கலைஞர் டி.வி.!

நாஞ்சில் பிரதாப் -க்கு
ரைட்டு பிரதாப்பபு.. அப்ப நீயும் தலையில துண்டை போட்டுட்டுதான் தியேட்டர் பக்கம் போற ஆளா? அப்ப வாங்க.. வந்து எங்க கும்பல்ல ஐகியம் ஆகுங்க!!

கலையரசன் said...

குசும்பன் -க்கு
வாங்க நல்லவரே! க்கூம்.. நம்மள போட்டோ புடிச்சு போட்டாலே அப்டிதான் இருக்கும்.. இதுல கருங்கல் சிலை வேறயா??

Mohan -க்கு
நன்றி மோகன்.. அடுத்தது செஞ்சாலும் செய்வாங்க..

கண்ணா -க்கு
டேய் கண்ணா.. நம்ம அப்பப்ப தமிழன்னு நிருபிச்சிகிடே இருக்கனும்! இல்லன்னா செத்துட்டேன்னு நினைச்சு, தூக்கிட்டு போயி பொதச்சிடுவாங்க!

கார்த்திக்கேயனும் அதே -க்கு
வாங்க கார்த்தி.. நீங்க வாக்குகளை சரியாக சேர்பீர்கள் + சிரிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்!
அப்புறம்.. உங்க சோத்தில் (பதிவில்) விஷம் வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நினைவில் கொள்வீராக..

கலையரசன் said...

கண்ணா -க்கு
மச்சி.. உன் எதிர் வீட்டுகாரன் பேரு தெரியுமா உனக்கு? ஆனா அவன் பொண்டாட்டி பேரை தெரிஞ்ச்சி வச்சிருக்கியே எப்பீடி??? அதுபோலதான் கண்ணு இதுவும்..

சென்ஷி -க்கு
ஆமான்டா.. நீ வாடா 11 மணிக்கு! உனக்கு ரெக்கார்ட் பண்ணி வச்சா காமிக்க முடியும்? அப்புறம்.. நீ சொன்ன மாதிரி உள்ள எடுத்து வச்சிட்டேன்!!

வினோத்கெளதம் -க்கு
//இன்னும் ஒரு மூணு, நாலு வீடியோ க்ளிபிங் சேர்த்து இருந்தினா//

எந்த கிளப்பிங்கைடா சொல்ற? அதை வேனும்னா போடட்டுமா? இன்னம் கொஞ்சம் கலாச்சார கண்ணீர் வரும் பரவாயில்லியா???

D.R.Ashok -க்கு
வாங்க டி.ஆர். அப்டியே..சொல்லிட்டா மட்டும் பாத்துட்டுதான் மறுவேலை பாப்பீங்க..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ஒன்னியும் சொல்றதுக்கு இல்ல..

கலையரசன் said...

வினோத்கெளதம் -க்கு
நன்றி விகொ!! உன் பேர சுருக்கி வைகோ மாதிரி ஆக்கிட்டேன்.. அவரை மாதிரி நீயும் பெரியாளா வருவ..

//சொன்னா தானப்ப எங்களுக்கும் தெரியும்//
சொன்னா எப்டி தெரியும்? சேனலை மாத்துனாதான் தெரியும் பாசு...

☀நான் ஆதவன்☀ -க்கு
வாடி மாப்புள.. காப்பி பேஸ்ட் எல்லாம் சரியாதான் வேல செய்யுது.. அப்புறம்டி.. சிரிப்பா சிரிக்குற? உனக்கும் விஷம் வெயிட்டிங்குடி!!

Kolipaiyan -க்கு
@ Next phase you contain to comment

சுசி -க்கு
நன்றி சுசிக்கா.. எதுக்கா? பின்ன... என் மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க.. (சிரிப்பு ஸ்மைலி போட்டுகோங்க!)
கடைசிய உங்க மனசுல உள்ளதையும்.. ப்ச்..ப்ச்.. (சோக ஸ்மைலி போட்டுகோங்க!)

கலையரசன் said...

ஸ்ரீராம் -க்கு
வாங்க பாஸ்.. அது தெரியாதா?
..க்காலி + முக்காலி = பிக்காலிலிலி

KISHORE -க்கு
வாடா..
நாலும் தெரிஞ்சவனே..
என்னை அறிந்தவனே..
உலகை புரிஞ்சவனே..
செரங்கை சொறிஞ்சவனே..
(சிரங்கு என்ற சொல் கல்யாணம் என்பதை மனதில் கொள்க..)

Subankan -க்கு
நன்றி சுபா.. அடங்கா கோபம் கொண்ட உங்கள் சாபத்துக்கு!

அபுஅஃப்ஸர் -க்கு
நன்றி அபு.. அவனுங்க காதை குடுத்தும் கேக்க மாட்டாங்க.. முக்க குடுத்தும் கேக்க மாட்டானுங்க.. ஏதோ நம்ம தாக சாந்திக்காக எழுதினது!!

கலையரசன் said...

சந்தனமுல்லை -க்கு
நன்றி முல்லை..

கிரி -க்கு
ஆமாங்க..
Television Rating Points-ஐ மாத்தி,
Terror Rating Points -ஆ மாத்திட்டுதான் மறுவேல பாப்பாங்க கிரி..

அன்புடன்-மணிகண்டன் -க்கு
நன்றி மணி.. இனிமே மிஸ்பண்ணம பாருங்க.. பதிவ தாங்க!

பிரியமுடன் வசந்த் -க்கு
மச்சி.. நம்ம எல்லாம் தூங்கும்போதே கூலிங்கிளாஸ் போட்டுட்டு தூங்குற ஆளுங்க.. அதையெல்லாம் சட்டசபையில சலம்பிக்கிட்டு விடு! விடு !!

வந்து வந்து வந்துன்னு நீ இங்கயே இப்டி இழுக்குறியே.. கூப்பிட்டுட்டு வந்து மட்டும் என்ன செஞ்சி கிழிக்க போற?

கலையரசன் said...

அது ஒரு கனாக் காலம் -க்கு
நன்றி சார்.. நல்லவேளை, தப்பிச்சீங்க!!

Chitra -க்கு
வாங்க மேடம்.. அதை பத்தி நீங்க இடுகை எழுதுங்களேன்.. உங்களின் நகைச்சுவை கலந்து! படிச்சிட்டு நாங்களும் சிரிக்கிறோம்!!

இராகவன் நைஜிரியா -க்கு
நன்றியண்ணே! பாடுங்க.. ஆடுங்க.. ஓடுங்க.. குதிங்க.. டைவ் அடிங்க.. மெத்தத்துல, நல்லாயிருங்க!!

jothi -க்கு
நன்றி ஜோதி! உங்க குழந்தை நலமா? எங்கங்க ஆளையே காணும் கொஞ்ச நாளா?

கலையரசன் said...

அஹோரி -க்கு
நன்றி பாஸ்.. நீங்க அந்த செய்திகளின் தோரணம் கட்டி தொங்கவிடவேண்டியதுதானே!!

ஹேமா -க்கு
நன்றி ஹேமா! ஹா.. ஹா..ஹா கரைக்டா கண்டுபுடுச்சிட்டீங்க!!

negamam -க்கு
அப்படியே.. நீங்களும் வாழ்க!!

ச.செந்தில்வேலன் -க்கு
தாங்சுபா.. அடுத்த தபா எதுனா சொல்ட்டு போப்பா!!

♠ ராஜு ♠ said...

தலைப்புல ஒரே ஒரு எழுத்து மட்டும் மிஸ்ஸிங்.

பின்னோக்கி said...

இவ்வளவு நல்ல நிகழ்ச்சிய மிஸ் பண்ணிட்டேனே. பார்த்துட்டு அடுத்த பின்னூட்டமிடுறேன்.

அம்பிகா said...

\\இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. //

ஆனா என்ன கிழிச்சி தொவச்சி போட்டாலும், எதுவும்
மாறப் போறதில்ல.

அன்பரசன் said...

நல்ல சமூக சிந்தனைங்க

thenammailakshmanan said...

//இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க. //

கலை எதை சொல்ல எதை விட

கலக்குறீங்க

சிரிச்சு முடியல

:-)))

SanjaiGandhi™ said...

எப்பா ராசா.. கண்ணுக்குக் குளிர்ச்சியா போடற நிகழ்ச்சியைக் கூடவா கொறை சொல்வீங்க?

நாளைமுதல் போடப் படும் கார்ட்

” கலைக்கண்ணோட பாருங்கய்யா.. காமக் கண்ணோட பார்க்காதிங்க. ”

Sathish said...

ஹி ஹி பசங்க பிட்டு படம் பார்த்து கேட்டு போயிட்ட கூடாதுன்னு இப்படி ஒரு ஏற்பாடு கலைஞர்(?) மூலமாக..?!!

thenammailakshmanan said...

HAPPY NEW YEAR KALAI

Kanagu said...

போச்சு போங்க !!! "பெண்களுக்கு (?????? )" எதிரா பேசறிங்களா?? பெண்கள் சமஉரிமை என்னாவது ??
சொல்ல முடியாது, அந்த ஆறு பேரும் ஆறு கட்சில மகளியர் அணி தலைவி ஆனாலும் ஆயிருவாங்க...
வாழ்க ஜனநாயகம்!!!!

திவ்யாஹரி said...

"அந்த கன்றாவிய எல்லாம் பாக்குறீங்களா!!!"

"டேய் உன்னைய பத்தி தெரியாதவங்களுக்கு தான் நீ எழுதி இருக்குறது எதோ சமூக சீர்கேடு எதிர்ப்பு குரலா தெரியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது உன்னோட வைதெரிச்சலா தான் தெரியுது... சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா .."

Blogger கண்ணா.. said...

எல்லாத்தையும் ஃபுல்லா, நல்லா பாத்து முடிச்சிட்டு வந்து சாவகாசமா

”வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!”

அப்டீன்னு சொல்றியே நீதாண்டா உண்மையான தமிழன்.!!


"இதெல்லாம் தாங்க கேட்க தோணுது.. அதை ஏங்க fulla பார்த்திங்க.. அதுவும் ஒரு எபிசோடு விடாம.. யோசிக்க வேண்டிய விஷயம்.. but உங்க கோபம் நியாயம்.. "ராணி 6 ராஜா யாரு" ன்னு கேட்டதும் 6 பேருகிட்ட ஒருத்தன் மாட்டிகிட்டான் போலன்னு நெனச்சி பயந்துட்டேன்.. ஸ்டார்ட் பண்ணதும் வழக்கம் போல "போகோ" சேனல் மாத்திட்டேன்.. எத்தனையோ அமைப்பு இருக்கு.. டிரஸ் குறைச்சிபோட்டா கண்டிக்க ஒரு அமைப்பு வைக்கணும் போல.. அவங்க உடம்பு தெரியாம இருக்க நாம பாடுபட வேண்டியது இருக்கு.. என்ன கொடுமை பாருங்க?"

Alberto Guzman said...

"பிக்காலிங்க" அப்படின்னா என்னங்க...

Blog Widget by LinkWithin