ரொம்ப சீரியசா எல்லாம் எழுத கூடாதுன்னு எங்க ஆயா சத்தியம் வாங்கிட்டு அப்பீட் ஆகிட்டாங்க என்பதால, சீரியசா எழுதுனா ஒரு பயபுள்ளையும் கமெண்ட் போடமாடேங்குது என்பதால, ஆப்பீஸ்ல இன்னைக்ககு வேலை இல்லை என்பதால, இந்த இடுகை வருங்கால் நகுக! (என்னைக்கிடா உனக்கு வேலை இருந்துதுன்னு எல்லாம் என் மேனேஜர் மாதிரி கேட்ககூடாது!)
தலைவரு 'ராஜாதிராஜா' படத்துல பாடியிருப்பாரு, "உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்" ன்னு. ஆனா அதை மாத்தி இப்படி பாடியிருக்கனும்!
"ஆபீஸ் வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்..அதில் உலவும் பேரெல்லாம் ஒரு கைதி போலதான்!"
* ஜெயில்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை பத்துக்கு பத்து ரூம்ல கழிப்பீங்க!
* ஆபீஸ்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை எட்டுக்கு எட்டு பொட்டியில முழிப்பீங்க!!
* ஆபீஸ்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை எட்டுக்கு எட்டு பொட்டியில முழிப்பீங்க!!
* ஜெயில்ல மணியடிச்சா மூணு வேளை சோறு போடுவாங்க ஓசியில!
* ஆபீஸ்ல ஒரு வேளை சாப்பாட்டுதான் நேரமே கிடைக்கும்!! (அதுவும் காசு குடுத்து சாப்பிடுறது, இன்னொரு வயித்தெரிச்சலு!)
* ஆபீஸ்ல ஒரு வேளை சாப்பாட்டுதான் நேரமே கிடைக்கும்!! (அதுவும் காசு குடுத்து சாப்பிடுறது, இன்னொரு வயித்தெரிச்சலு!)
* ஜெயில்ல நன்னடத்தைக்கு தண்டனை காலத்தை குறைப்பாங்க!
* ஆபீஸ்ல நன்னடத்தைக்கு இன்னம் கொஞ்சம் வேலையை குடுத்து பென்டை நிமுத்துவாங்க!!
* ஆபீஸ்ல நன்னடத்தைக்கு இன்னம் கொஞ்சம் வேலையை குடுத்து பென்டை நிமுத்துவாங்க!!
* ஜெயில்ல உங்க ரூமுக்கு போகனுமன்னா போலீஸ்காரனே கதவை திறந்து விடுவாங்க!
* ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!
* ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!
* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!
* ஜெயில்ல உங்களுக்கு சொந்தமா, தனியா டாய்லெட் இருக்கும் உங்க ரூம்ல!
* ஆபீஸ்ல பப்ளிக் டாய்லெட் போல எல்லாரும் யூஸ் பண்றதைதான் நாமும் யூஸ் பண்ணணும்!! (அதுல சிலபேரு.. உக்காருற இடத்துலதான் ஒன்னுக்கு அடிச்சி வைப்பான்!)
* ஆபீஸ்ல பப்ளிக் டாய்லெட் போல எல்லாரும் யூஸ் பண்றதைதான் நாமும் யூஸ் பண்ணணும்!! (அதுல சிலபேரு.. உக்காருற இடத்துலதான் ஒன்னுக்கு அடிச்சி வைப்பான்!)
* ஜெயில்ல பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள்-ன்னு எல்லாரும் வந்து பார்க்கலாம்!
* ஆபீஸ்ல நண்பர்கள் வந்திருந்து பேசுனா கூட, ஆப்பீஸ் டைம்ல வேலையை பாருடா வென்றுன்னு ரிசப்ஷன்ல உள்ள புவரான ரிச்சா கூட ரிவீட் அடிப்பா!!
* ஆபீஸ்ல நண்பர்கள் வந்திருந்து பேசுனா கூட, ஆப்பீஸ் டைம்ல வேலையை பாருடா வென்றுன்னு ரிசப்ஷன்ல உள்ள புவரான ரிச்சா கூட ரிவீட் அடிப்பா!!
* ஜெயில்ல ஒன்னியும் வேலை செய்ய வோணாம். செலவை எல்லாம் வரி கட்ரவனுங்கோ துட்டு!
* ஆபீஸ்ல வேலை செஞ்ச சம்பளத்துல வரியை கழிச்சிட்டு குடுப்பானுங்கோ. ஜெயில்ல உள்ளவங்களுக்கு செலவு செய்ய!! (இந்த இடத்துலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. ஜெயிலுக்கே பூடலாமான்னு!!)
* ஆபீஸ்ல வேலை செஞ்ச சம்பளத்துல வரியை கழிச்சிட்டு குடுப்பானுங்கோ. ஜெயில்ல உள்ளவங்களுக்கு செலவு செய்ய!! (இந்த இடத்துலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. ஜெயிலுக்கே பூடலாமான்னு!!)
* ஜெயில்ல உள்ள ஒரே கஷ்டம் அங்க உள்ள கொடூரமான வார்டனை சமாளிக்கிறதுதான்!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!
(ஓகே.. ஓகே.. அந்த டீசன்டான ஆளு வர்றாரு! நான் எஸ்சாயிக்கிறேன்.. நீங்க கீழ உள்ள வீடியோவை பாத்து என்ஜாய் பண்ணுங்க!!)