--------------------------------------------------------------------------------------------
ரத்த ஜோசியம் (தலைப்பே டெரரா இருக்கு..)
ஜப்பானில் பிளட் குரூப்பை வைத்து ஆராய்ச்சி செய்து, மனிதர்களுடைய குணாதிசியங்களை கீழ் கானும்படி வகைப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன குணங்களை கொண்டவர் என்பதை காசு கொடுக்காமலையே தெரிஞ்சிக்கோங்க... (பின்னூட்டத்தில.. கிளி ஜோசியர் ரேஞ்சிக்கு கிளம்பிடாதீங்கப்பு!!)
O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!
A குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்!
B குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்!
AB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்!
--------------------------------------------------------------------------------------------
"பார்த்ததிலேயே உனக்கு பிடித்த திரைப்படம் எது?'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - "பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா? 2003ல் வெளியாகிய பார்க் சான்ஊக் இயக்கியிருக்கும் "ஓல்டு பாய்" என்ற கொரிய படம்தான்.
எதற்க்கு என்று தெரியாமலே 15 வருட சிறை வாசம், சிறையில் இருக்கும்போதே மனைவியின் மரணம் மற்றும் குழந்தையின் மறைதலும், ஏன்.. எதற்க்கு என்று கண்டுபிடிக்க, 5 நாட்கள் மட்டுமே விடுதலை. இதுபோல் முடிவு கொண்ட படம் இருக்குமா என்று நாம் சிந்திக்ககூட முடியாதபடி முடிவு, நாவடக்காமையினால் வரும் வினை, பழிவாங்குதலின் உச்சக்கட்ட வெறி என்று இயக்குனர் கதை சொல்லிய விதம் அசாதாரணமானது. இதுபோல் கதை தமிழில் நினைத்துபார்க்க முடியுமா?????????????
மெமன்ட்டோ மற்றும் டெட்மேன் ஷூஸ் ஆகிய பழிவாங்குதல் வகை படங்கள் உலக அளவில் பேசப்பட்டாலும்.. முதல் இடத்தை பிடிப்பது "ஓல்ட் பாய்" மட்டுமே!!
ஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து "ஜிந்தா" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்!!
--------------------------------------------------------------------------------------------
மினி கதை:
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
மருத்துவமனையில், பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
--------------------------------------------------------------------------------------------
கலக்கல் பாகம் -1 படிக்க..