Tuesday, June 30, 2009

இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க!!

சில தத்துவங்கள் (நா சொல்லப்பா..)

 • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ்
 • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன்
 • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே
 • உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட்.
 • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின்.
 • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி
 • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ
 • "காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட்
 • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!
  ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

 • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு பிரியல?
 • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
 • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
 • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?
 • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?
 • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
 • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?
 • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

  (இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட "ஏங்க" எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்...
ந1 : "என் மனைவி தேவதை! "
ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...
மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"
அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"

மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"
கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!
"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

Tuesday, June 23, 2009

ராகவன் நைஜீரியாவும், துபாயும், பின்னே நாங்களும்!!காட்சி 1 : காலை 9.00 மணி.
யப்பா.. தோ வர்றாரு, தா வர்றாருன்னு.. அண்ணாச்சி ராகவன் நைஜீரியா ஒரு வழியா 21-06-2009 அன்று காலை 9.00 மணியலவில் குடும்ப சகிதமாய் துபாய் என்ட்ரி குடுத்தாரு! வந்து கொஞ்ச நேரத்துல அண்ணாச்சி குசும்பனுக்கு போன் செய்து தகவல் சொல்ல.. நம்ம தான தலைவரு உடனே கிளம்பி, அவர்களுக்கு காலை உணவை வாங்கிகிட்டு, அவரு ஆபீஸ்ல ஹி ஹீ ஹி ன்னு இளிச்சு பர்மிஷன் வாங்கிட்டும், வாங்கிகட்டிகிட்டும்.. உடனே போய் அவரு தங்கியிருந்த 'Pearl Residence' க்கு போய், குசலம் விசாரிச்சாரு நம்மாளு. அப்புறம், அவங்களை கூப்பிட்டுகிட்டு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு திரும்பி ஹோட்டல்ல விட்டுட்டு, நல்லா ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டு நம்மாளு எஸ் ஆயிட்டாரு!
நீ என்னடா பன்ன வென்றுன்னு கேக்குறது புரியுது.. நா என்ன பெருசா பண்ணிடபோறேன்? வழக்கம் போல எல்லாருக்கும் போன் போட்டு பாஸூ.. கரிகட்டா ராவுல 7 மணிக்கு ஆஜாராயிடனுமுன்னு அரசியல்வாதி போல தாழ்மையுடன்(?) கேட்டுக்கிட்டேன்! நல்லவேள அதுபோலவே, எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்து, அண்ணன் என்னை அடிக்கறத்துக்கு முன்னாடியே காப்பாத்திட்டாங்க!!

காட்சி 2 : மாலை 6.00 மணி.

எனக்கு எப்போதுமே இப்படிதான்.. நான் ஒன்னு நினைப்பேன், அது ஒன்னு நடக்கும்! என்னன்னா.. சாய்ந்தரம் 5.30 மேல கிளம்பினா டிராபிக்ல மாட்டிபேன் சொல்லிட்டு, முன்னாடியே கிளம்பி, ரெரராம்ம்ம்பப முன்னாடி 6 மணி்க்கே போயிட்டேன்! நல்லவேள.. குசும்பரும், சுந்தர்ராமன் சாரும் உடனே 6.15 க்கு வந்துட்டாங்க. (அந்த 15 நிமிடம்... கலர் கலரா... கார்தாங்க பாத்துகிட்டுயிருந்தேன்!)


காட்சி 3 : மாலை 6.20 மணி.

மூன்று பேரும் சேர்ந்து (107) ரூமுக்கு சென்றோம். கதவை திறந்து ஆச்சிரியப்படுத்தி, பின்னர் அறிகப்படுத்தி கொன்டார் ராகவன் அண்ணாச்சி, அப்புறம் அண்ணியின் அறிமுகம், அடுத்து அருமை கண்ணா அரவிந்தின் அறிமுகமென்று அட்டகாசமான ஓப்பனிங் முடிச்சு அடக்கமாய் அமர்ந்தோம். சிறிது நேரம் கிரிக்கெட் பார்த்துகொண்டும், அரவிந்திடம் பேசிகொண்டும் இருந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக ராகவன் அவர்கள் கேமராவும், ஒரு சட்டை வாங்கி வரலாமா என்று கேட்க, நாங்கள் நான்கு பேரும்.. துபாயையே துண்டு போட போற மாதிரி துள்ளலுடன் கிளம்பினோம்.


காட்சி 4 : மாலை 6.40 மணி.

குசும்பன் சரவணனின் வழிகாட்டுதலிலும், சுந்தர்ராமனின் வாகன "சர்ர்ர்" ரிலும், கடையை வந்தடைந்தோம். கடையில் நுழையும் போது ராகவன் "கலை! நீதான் எலக்ட்ரானிக் எலியாமே, ஒழுங்கா நல்ல மாடலா வாங்கிகொடு" என்று அன்பு (அடிச்சுதான்!) கட்டளையிட்டார் (இந்தமாதிரி புரளிய கிளப்பனவன் மட்டும் என் கையில கிடைச்சா...). ஒரு கேமரா வாங்க போயிட்டு, அதே பணத்திற்க்கு வீடியோ கேமரா தனியாகவும், டிஜிட்டல் ஸ்டில் கேமரா தனியாகவும் வாங்கலாம் என்று கூடிபேசி கும்மியடிச்சி, சேல்ஸ்மேனை பம்படிச்சி, அரைமணிநேரத்துல பேரம்படிஞ்சி, டிஜிட்டல் ஸ்டில் கேமரா வாங்கினோம். இரண்டாவது வீடியோ கேமரா SONY வாங்கலாமா.. இல்ல JVC வாங்கலாமா என்று யோசிக்கும்போது JVC வாங்கலாம் என்று நா சொன்னவுடன் அதையே வாங்கிவிட்டார் ராகவன். (டேய் கலையரசா!.... இன்னுமாடா இந்த ஊரு உன்ன நம்புது?)

காட்சி 5 : மாலை 7.10 மணி.

கடையில் இருந்து கிளம்பும் முன்பு... ஆசாத்,பிரதீப்,கண்ணா,நாகா எல்லோரும் நாங்க வந்துட்டோமுன்னு போன் பேசி அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு, ரூமில் எங்களுக்காக காத்திருந்தார்கள். நாங்கள் வந்த பின்பு கும்மி ஆரம்பமானது.. நைஜீரியாவுல முடிவெட்ட எவ்வளவு என்பதிலிருந்து, துபாயில துப்புனா காசு கட்டனுமான்னு என்பதுவரைக்கும் அலசி ஆராய்ஞ்சு, சலிச்சு சக்கையாக்கி, பிரிச்சி பெடலெடுத்து அள்ளி காயவச்சிட்டாங்க எல்லாருமே!. நடுநடுவில் அம்மா! அப்பா!! என்று சவுண்டு கொடுத்துகொண்டிருந்தார் சரவணன்... ஏன்? என்னாச்சு? எப்படியாச்சு? எப்பயாச்சு? என்று விடாம நோன்டுனவர்களுக்கு, நோவாம பதில் சொன்னாரு குசம்பரு! (இடுப்பு புடிப்பாம்! என்ன நடந்திருக்குமுன்னு நீங்களே அவரவர் கற்பனைக்கேற்ப யோசிச்சுகோங்க)


காட்சி 6 : மாலை 7.30 மணி.

அவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே நானும், கண்ணாவும் வெளியேறி ஓட்டமும் நடையுமாக, கார்மெண்ட்ஸ் கடையை கண்டுபிடித்து... ராகவன் அண்ணாச்சிக்கு சட்டை ஒன்றை வாங்கிவந்தோம்! நாங்கள் வருவதற்க்குள் அபுஅப்சரும், ராகவனின் நண்பரும் வந்து டேரா போட்டு கதைத்துகொண்டிருந்தனர். வெறும் கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு தவிர்த்து , சில முக்கிய நாட்டுநடப்புகளையும், தமிழ்மன்றங்கள் குறித்தும் ஆசாத்தும், ராகவனும் விவாதித்தார்கள்.

காட்சி 7 : மாலை 8.30 மணி.

பின்னர் அவர்கள் விமான பயனத்திற்க்கு நேரமாகிவிட்டதால், நாங்களும் டீசன்டாக(!) சுந்தர்ராமன் வாங்கி வந்த வடையையும், இட்லியையும் சாப்பிட்டுவிட்டு விடைபெறமனமில்லாமல் விடைபெற்றோம்! ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு, சீக்கிரமாக முடிந்ததில் சிறிது ஏமாற்றம். ஆனால், எந்த விதமான எதிர்பார்பும் இல்லாத பதிவுலகில் ஏற்பட்ட புதிய நட்புகள், ஊரில் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை ஞாயபகப்படுத்தியது.
நன்றி வந்த அண்ணன்மார்களுக்கும்! தோழர்களுக்கும்!!

இச்சந்திப்பு குறித்து நாகாவின் பார்வையில் (போட்டோகளுடன்)

Sunday, June 14, 2009

ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!


உலகப்படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.

பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர்கள் சிலரே! (யார்யாருன்னு கேக்காதீங்க!)

நான் இங்கு குறிப்பிட்டுள்ள படங்களில், பெருவாரியானவை.. பிரபலமடைந்த புத்தகதிலிருந்தே கதையே திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதுபோல பல தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக புத்தகங்களை தேடி இயக்குனர்களைப் போகவில்லை. தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இப்படி பல பொறுப்புகளையும் பெரிய பருப்புகள் மாதிரி எடுத்து கொண்டதாய் இருக்கலாம்!காப்பி அடிக்கிறதுக்கும் ஒரு திறமை வேனுமுன்னு நீங்க சொன்னா, நான் ஒத்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்னா, ஒரு பரபரபப்பான நிகழ்ச்சி ஒன்னு நடக்குதுன்னு வச்சிபோம்.. இங்க உள்ள பதிவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியா எழுதுறோம்? இல்லையே! அவரவர்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த வர்ணனையில் தான் பதிவிடுகிறோம்! அதுபோலதான், நம்மவூரு டயரடக்கருங்க.. கதையை மட்டும் கழட்டி, அல்லது காட்சிகளை மட்டும் உறுவி நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி பவுடர் அடிச்சி, பொட்டு வச்சிடுவானுங்க.. இதுக்கொன்னும் மூளைவேனுமுன்னு இல்ல.. நம்ம பாய்கடை ஆட்டுமூளையே போதும்!


இனி எனக்கு தெரிந்த, பார்த்த படங்களின் தொகுப்பு!

Once Upon a Time in America (1984) & The Godfather (1972) USA - நாயகன்

Léon (1994) France - சூரியபார்வை

She-Devil (1989) USA - சதிலீலாவதி (புதியது)

Lucky Number Slevin (2006) Germany - லாடம்

One Flew Over the Cuckoo's Nest (1975) USA - மனசுக்குள் மத்தாப்பு

Fight Club (1999) USA - அன்னியன்

Bicycle thief (1948) Italy - பொல்லாதவன்

Memento (2000) USA - கஜினி

Amores perros (2000) Mexico - ஆயுத எழுத்து

Mystic River (2003) USA - அஞ்சாதே

Cellular (2004) USA - வேகம், நாயகன் (தான தலைவன் ரித்தீஷ்)

The Reincarnation of Peter Proud (1975) Sweden - எனக்குள் ஒருவன்

Red Corner (1997) USA - தாம் தூம்

Shutter (2004) Thailand - சிவி

Changing Lanes (2002) USA - டேக்சி 4777

Judgement Night (1993) USA - சரோஜா

Man on Fire (2004) USA - ஆணை

City lights (1931) UK - நிலவே முகம் காட்டு

Bangkok Dangerous (1999) Thailandபட்டியல்

To Sir, with Love (1967) USA - நம்மவர்

City of God (2002) Brazil / France - புதுப்பேட்டை

Planes, Trains & Automobiles (1987) USA - அன்பே சிவம்

Derailed (2005) French / USA - பச்சைக்கிளி முத்துச்சரம்

Mrs. Doubtfire (1993) USA - அவ்வை சன்முகி

The Road Home (1999) China - பூ

Moon Over Parador (1988) USA - இந்திரன் சந்திரன்

The Fugitive (1993) USA - கிரிமினல்

Tie me up tie me down (1990) Spanish - குணா

What about bob? (1991) USA - தென்னாலி

Green Card (1990) USAநளதமயந்தி

மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் எல்லாமே அப்பட்டமான நகலாக்கம் என நான் கூறவில்லை, சிலவற்றில் அதிகமான காட்சி கலப்புகளும், சிலவற்றில் கதையை மட்டும், சிலவற்றில் அப்பட்டமான நகலாக்கலும் உள்ளது. இப்பதிவை படிப்பவர்கள் இரண்டு விதமான விவாதம் செய்வார்கள், அந்த உலகபடங்களை பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் அல்லவா என்றும், அதற்க்காக சொந்தமாக கதையெழுதாமல் எல்லா உலகப் படங்களையும் நகலாக்கம் செய்தால் பரவாயில்லையா என்றும், கருத்துக்கள் அவரவர் பார்வையில் வேறுபடலாம்!

நான் இங்கே கீழே குறிப்பிட்டுள்ள படங்கள், தமிழில் உல்டா செய்தது மட்டுமே. இது இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுகு போன்றவர்களும் இது போன்ற படங்களை சுட்டு படமெடுத்துள்ளார்கள். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம். மேலே ஏதாவது படம் தவறியிருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.. லிஸ்டுல ஏத்திடுவோம்!!

Tuesday, June 9, 2009

கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)
கருப்பு வர்ணத்தை பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா ? நமக்கு பல வர்ணங்களின் பரிட்சயம் இருந்தும், கருப்புதான் பெரும்பாலோருக்கு பிடிக்க காரணம்? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கருப்பு என்பது ஒரு வர்ணமே அல்ல!. கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. பதிவர்கள் பலரது பதில்களில் கருப்பு வர்ணத்தை பிடிக்கும் என எழுதியிருந்தார்கள் . எனது பதிலும் அதுதான், அதனால் தானோ என்னவோ நான் இந்த பதிவிட காரணமாயிருக்கலாம்!

கருப்பின் குணம்
நாம் கருப்பு ஆடைகள் உடுத்தியிருக்கும் போது மெலிந்து காணப்படுவோம். வாழும் அறைகளில் கருப்பு வர்ணம் அடித்தால், நல்ல அகலமான அறைகள் கூட குறுகியது போல தென்படும் நம் கண்களுக்கு. கருப்பு வர்ணம் அடித்தத் பெட்டி, வெள்ளை வர்ணம் அடிதத பெட்டியை விட எடை அதிகமானதாக தோன்றும். கருப்பு வர்ணத்தினூடே எந்த ஒரு வர்ணம் சேர்ந்தாலும், பிரகாசமாய் ஜெலிக்கும்!.


கருப்பும், உலகமும்!

 • சீனாவில் கருப்பு வர்ணத்தை தண்ணீரை குறிப்பதற்க்கும், பணிகாலத்தை குறிப்பதற்க்கும், மேற்கு திசையை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
 • ஐரோப்பிய நாடுகளில் கருப்பு வர்ணத்தை, அஞ்சலி செலுத்தும் போது அணிவதற்க்கும், இறந்தவர்க்கு அணிவிக்கவும், அலட்சியமாக எடுத்துகொள்வதற்க்கும், கண்டனம் தெரிவிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
 • தாய்லாந்தில் கருப்பு வர்ணத்தை, தீயசக்திகளின் குறியீடாகவும், மகிழ்ச்சியின்மையின் வர்ணமாகவும், துரதர்ஷ்டத்தை குறிப்பதற்க்கும் பயன்படுத்துகிறார்கள்!!
 • மெக்சிகோ, ஸ்பெயின், போர்த்துகீஸ், இட்டாலி, கிரீஸ் போன்ற நாடுகளில், கணவனை இழந்த பெண்கள் வாழ்வின் பிற்பகுதியை கருப்பு வர்ண உடையணிந்துதான் கழிக்கவேண்டும், அதுமட்டுமல்லாது முற்காலத்தில் மதத்தை குறிக்கும் ஒரு குறியீடாகவும், மதகுருக்கள் கருப்பு அங்கியை தவிர வேறெதயும் அணிய கூடாது என்ற சட்டமும் இருந்தது.
 • இங்கிலாந்தில் கருப்பு வர்ணத்தில் மட்டுமே பேருந்தும், வாடகை வாகனங்களும் காணகிடைக்கும், அதுபோல் கருப்பு வர்ணம் என்பது ஒரு அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது!


கருப்பும், சில நம்பிக்கைகளும்!


கருப்பு பூனை குறுக்கே சென்றால், போகும் காரியம் வெற்றி அடையாது என்பது நம்பிக்கை. (இங்கிலாந்தை தவிர்த்து. அவர்களுக்கு அது அதி்ர்ஷ்டம்!)


கருப்பு உடையில் இறந்தவர்களை புதைத்தால், அவர்கள் மறுபடியும் ஆவியாக வருவார்கள் என்பது!


கருப்பு வர்ண நாய் கனவில் வந்தால், உங்களுக்கு நெருங்கியவர்கள் யாரோ இறந்துவிடுவார்கள் என்பது!


கல்யாணத்தின் போது கருப்பு வர்ணம் கொண்ட விலங்குகள் நுழைந்தாலோ, குறுக்கே சென்றாலோ, கண் னில் தென்பட்டாலோ துரதர்ஷ்டம் என்பது!

கருப்பில் நல்லவை சில

கருப்பு டை - நீதிபதி அணிவது
கருப்பு அங்கி - பாதிரியார்கள் அணிவது
கருப்பு பெட்டி - ரகசியம் காக்கும் பெட்டி
கருப்பு பெல்ட் - கைதேர்ந்தவன் (சண்டை பயிர்சியில்)
கருப்பு பூனைபடை - பாதுகாவலர்கள்

கருப்பில் தீயவை சில

கருப்பு ஆடு - உளவாளி (கூட இருந்து குழி பறிப்பவன்)
கருப்பு சந்தை - திருட்டு பொருள்களை விற்பது
கருப்பு பட்டியல் - தேச துரோகிகளின் பட்டியல்
கருப்பு நகைச்சுவை - நம் நம்பிகைகளை, நமக்கு பிடித்தவர்களை வைத்து நைய்யான்டி செய்வது
கருப்பு பந்து - ஓட்டு போடாமல் ஒருவரை நிராகரித்தல்

கறுப்புத் தோல் உடையவர்களுக்கு, தோல் கான்சர் வராதாம். கருப்புத் தோலில் பிக்மெண்ட் அடத்தியாக இருப்பதால், புற ஊதாக் கதிர்களால் உண்டாகும் கேன்சர் உண்டாவதில்லை என்று சொல்லுகின்றார்கள். கருப்பை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளது கடலில் ஒரு துளிதான். கருப்பு நிறம் என்பது நல்லது என்று ஒரு சாராரும், தீமை என்று மறுசாராரும் வாதிக்கலாம் ஆனால், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத வர்ணம் ஆகிவிட்டது கருப்பு!!.

Sunday, June 7, 2009

நடந்தது என்ன? துபாய் பதிவர் சந்திப்புஅமீரக பதிவர் சந்திப்பு : 05.06.௨009
இடம்: கராமா பார்க் (சிம்ரன் ஆப்பக்கடைக்கு முன்பு)
நேரம்: மாலை 6.00 - 8.00

1. மாலை 6.00 முதல் 8.30 வரை கராமா பார்க் புல்வெளியில்
2. பார்க்குக்கு வெளியில் (அவ்வளவு சீக்கிரம் போயிடுவோமா?) (8.30 முதல் 9.00 வரை
3. அஞ்சப்பர் உணவகம் (9:00 முதல் 09:45 வரை)

நீண்ட, வட்ட, முக்கோண இடைவெளிக்குப் பின் துபாயில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது என்பதை ஆழ்ந்த(?!) மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்! (ஒ.கே, கை தட்டி முடிச்சிட்டீங்களா?) . ஏற்கனவே கொட்டையை தின்னு பழத்தை கீழே போட்ட பதிவர்களோடு, புதிய பல்பு பதிவர்கள் பலரும் சந்திப்பில் கலந்துகொண்டு விழித்தார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்! (மறுபடியும், ஜோரா ஒருகா கை தட்டுங்க..)

மாலை 6.00 மணிக்கு நடக்கவிருக்கும் சந்திப்புக்கு 5.00 மணிகே கிளம்பினால்தான் சரியாக இருக்குமுன்னு நினைச்சிக்கிட்டு (நாம நினைச்சது என்னக்கி கரைக்டா நடந்துருக்கு!) கிளம்பி, டாக்சி பிடித்து, பார்கில் நுழைந்தால்... மீ த பர்ஸ்ட்டு! (பின்னூட்ட வியாதி!). சரி, வந்ததது வந்தாச்சு.. பொழுது போக வேண்டாமா? அதனால, ஒவ்வருத்தருக்கா போன் போட்டேன். பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா?, பாஸ்.. நீ கெளம்பிட்டீங்களா? ன்னு கருணாஸ் ரேஞ்சிக்கு பேச ஆரம்பிச்சிட்டேன்!

5.45 க்கு இரண்டாவது வந்து என் வயிற்றில் தேன், பால், தயிர் வார்த்தார்கள் கண்ணாவும் வினோத் கெளதமும். அதன் பின் மூன்றாவதாக சுந்தர்ராமன் அண்ணன் வந்தாரு, அவரு வந்ததை விட அவர் கையில் இருந்த வடை பாக்ஸை பார்த்ததும் மகிழ்ச்சி! (சீ.. வட சாப்பிடதான் போனீயான்னு கேட்டா, மறந்துபோய் ஆமான்னு உண்மையை சொல்லிடுவேன்!) வடை சுட்டு கொடுத்த அவரது துணைவியாருக்கு, பதிவர்கள் சார்பா ஒரு ஸ்பெசல் நன்றி! (ப்பா.. டோக்கன் போட்டாச்சு! அடுத்த தடவை வட நிச்சயம்!)

6:10.. குழுமியிருந்த பதிவர்களிடம் இருந்தும் லேசான சலசலப்பு.. "ஏய்.. குசுப்பன் சரவணன் மாதியில்ல இருக்கு" என்ற கும்மியடிச்சி நாங்கள் முடிவுக்கு வரும் முன்பே.. பதிவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து அனுமதி இல்லாமல் அமர்ந்து கொண்டார்..

அவருடன், பதிவர் சிவராமன் வந்திருந்தார். அடுத்த சில மணிதுளிகளில் என்பக்கம் பிரதீப், ஆசாத் அண்ணாச்சி, அஷோக் அவர்களும் ஆஜார்! வந்தவர்களும், வந்திருந்தவர்களும் அறிமுக படலம் முடிந்து, அவரவர் இடத்தில் அமர்ந்தனர். வடை சாப்பிட்டதாலும், குசும்பன் சரவணன் கொண்டு வந்த கடலயை (நிஜ கடலை) சாப்பிட்டதாலும், அயர்சியாகி (சாப்பிட்டத்துகேவா?) அக்காவ பத்தி தப்பா பேசாத (ஆக்வுவாஃபினா) பாட்டில் வாங்க நானும் பிரதீபும் சென்றோம்!. வாங்கிவிட்டு பிரதீப் "நான்தான் காசு கொடுபேன்" என்று அடம்பிடித்ததும், நான் திரும்ப ஓடிபோய் ஆப்பிள் ஜூசும், ஆரஞ்ச் ஜூசும், வாங்கி வந்தேன்.

திரும்பி வருவதற்குள் மாவீரன் அய்யணாரும், அவரது நண்பரான ஜெயக்குமார் வந்து வட்டத்தை பெரியதாக்கியிருந்தார்கள். அப்பா, ஒருவழியா எல்லோரும் வந்தாச்சுன்னு சிமெண்ட் போடாமல் செட் ஆகும் போது வந்து செட் ஆனாங்க நம்ம செந்திலும், லியோ சுரேசும். நல்லவேளையாக 7.30 மணிக்கு மேலும் வெளிச்சம் குறையாமல் இருந்து முகத்தை நோக்கி விவாதம் செய்ய ஏதுவாய் இருந்த தி.மு.க விற்கு (சூரியனுக்கு) நன்றி!!

அதன்பின் ஒவ்வொருவராக கடலையை ஆரம்பிக்க முதலில் பேசிய ஆசாத் அண்ணன், எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் போட்டு.. இலக்கியம், வரலாறு, கவிதை, என பேசி அனைவரையும் கவர்ந்தார். பின்னர், அய்யணார் அருமையாய் அவரை கையமர்த்தி முதலில் எல்லோரும் வரிசையாக தங்களை அறிமுகப்படித்திக் கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அறிமுகங்கள் முடிந்தபின் அவர்ரவர்களின் வலைப்பூ முகவரியும், அலைபேசியின் எண்களையும் கண்ணா சேகரித்து வைத்துகொண்டார். (அத வாங்கி வச்சிகிட்டு என்ன பண்றாருன்னு, யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!)

இடையில் அய்யணார் உலகசினிமா பற்றியும், ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பது பற்றியும் உரையாற்றினார். இடையில் வந்த வாசிப்பாளர்(!) பின்னூட்ட புயல் தியாகு என்கிற நாகா பல கேள்விகளை கேட்டும், சுந்தர்ராமன் பல கொக்கிகளை போட்டும் திக்குமுக்காட செய்தார்கள். வழக்கம்போல் குசும்பன் சரவணன் இடையிடையே பல பிட்டுகளை அள்ளிவிட்டு கொன்டிருந்தார் (ஷக்கீலா பிட்டுகள் அல்ல!). நாங்கள் (புதிய பதிவர்கள்) அவர்கள் வாயை பார்த்துகொண்டிருந்தோம் என்று தனியாக சொல்ல தேவையில்லை!

வினோத் கொளதம் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திலும், நேரமின்மையாலும், சந்திப்பை 8.30 மணிக்கு முடிக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது. இருப்பினும் பதிவர் சந்திப்பு அற்புதமாக அமைந்ததில் எனக்கும், சக புதிய பதிவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் சந்திப்பிலாவது நீண்டநேரம் கலந்துகொள்ள முயலவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

கலந்துகொண்ட பதிவர்கள் -

1. குசும்பன்
2. அய்யணார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. விநோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன் (அடியேன்தான்!)

கலந்துகொண்ட பின்னூட்ட பிஸ்தாக்கள்:
1. லியோ சுரேஷ்
2. அஷோக் குமார்
3. தியாகு என்கிற நாகா
4. ஜெயக்குமார்

வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
மேலும் படங்களுக்கு கண்ணா பதிவை பார்க்கவும்!

Blog Widget by LinkWithin