Thursday, May 28, 2009

நானும் செயின் ரியாக்ஷனும் (அதாங்க சங்கிலித்தொடர்)


இது ஒரு தொடர் பதிவு... (நம்மகிட்ட மாட்டுனதனால டெரர் பதிவு)

ஆரம்பித்தவர் நிலாவும் அம்மாவும். (மாட்டினது நானும் என் தூக்கமும்)
-------------------------------------------------------------------------------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
மை டியர் அப்பா வச்ச பெயர் : கலையரசன். கலைகள் எல்லாவற்றிற்கும் அரசனாக இருக்கனுமுன்னு நனைச்சி வச்சாராம்.
(கள புடுங்க கூட லாயிக்கு இல்லங்கறது வேற விசயம்..)
எனக்கு புடிச்ச பேருதான், என் நண்பர்கள் கூப்பிடும்போது ரொம்ப பிடிக்கும்..
(பாதி பேரு, கலை அப்புடினா பொண்னுன்னு நனைச்சிக்கிறானுங்க!)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 22 2009 (மாவீரன்இல்லியே.. இனி என் மக்களுக்காக போராட என்று என்னியபொழுது)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பின்ன? நா பல டைப்புல எழுதுவங்க.. ஸ்லேன்டிங், ரன்னிங், செப்பரேட்டட் /ன்னு எந்த எந்த ஆசிரியர்களுக்கு எப்டி புடிக்குதோ.. அப்டி! இந்த டக்கால்டி திறமையை(?) வச்சி பல பிகர்களை(?) திரும்பி பார்க்க வச்சிருக்கேன்! (நம்பவா போறீங்க..)

4).பிடித்த மதிய உணவு என்ன?
நான்-வெஜ் எல்லாமே பிடிக்கும் (மீன் தவிர). அதுவும் அம்மா செய்யுற வெரைட்டீஸ் இருக்கே...முனியான்டி விலாஸ் தோத்துது போங்க.. எரா,வாத்து,கொக்கு,முயல்,காடை,கவுதாரி, நொள்ளமடையான், இன்னும் சொன்னா கமென்ட்ஸ்ல ஏன் பாம்பு, தவளை எல்லாம் விட்டுடீங்கன்னு கேப்பீங்க.. சோ, ஸ்டாப்!
(சுருக்கமா சொன்னா சாப்பிடுற விஷயத்துல, என் பிரண்ட்ஸ என்ன கூப்புடுற பேரு : குறவன்)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதான் பாஸ் நம்ம ஸ்பேஷாலிட்டியே... அரை மணி நேரம் பேசுனா போதும், நம்ம நண்பர்தான் நீங்க! என்க்கு நட்பு வட்டாரம் ரொம்ம்ம்பபப பெருசு... ஆனா அதுல நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி குளியல்: கடைசியா குற்றாலத்துல குளிச்சது... தலை மடங்கி உடம்புகுள்ள போற மாதிரி...
"கடல்தான் நம்ம பேவரேட்" கடலூர், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி- கடல்களை கேட்டா எங்க கதை சொல்லும்!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.. முதல் தடவபார்க்கும் போது, டிரஸ் சென்ஸ் & பேசுற விதம் இததான் கவனிக்கமுடியும்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: என்ன பத்தி நானே எப்படி ? ஹி.. ஹி
பிடிக்காத விஷயம் : கோபம்! (மூன்று எழுத்து.. ஆனா அது பண்ற அழும்பு, ஆற்ற முடியாது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: எது சொன்னாலும் சரிங்க... செய்யறங்க..ன்னு சொல்லுற விதம் பிடிக்கும்!
பிடிக்காத விஷயம் : எது சொன்னாலும் சரிங்க..செய்யறங்க..ன்னு சொல்லிட்டு செய்யாம இருக்குறது!
(அடிக்கு பயந்து உண்மைய சொல்லா இருக்க முடியுமா?)


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மாவும்.. நண்பர்களும்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு நிற தேநீர் சட்டை(டீ ஷர்ட்), சாம்பல் நிற அரை குழாய் (ஷார்ட்ஸ்)
(ரொம்ம்மபப முக்கியம்.. அப்டின்னு நீங்க சொல்றது கேட்குது)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வசப்பாட்டு தான்!
(நண்பன் சாப்பிட போலாமுன்னு கூப்பிட்டு அரைமணி நேரமாச்சி, அதுகா திட்டுவான் இப்டி?)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான்..(என் ரூம் வாஷ் பேஸின் & குலோசெட் கூட கருப்புனா பாத்துகோங்க, நமக்கு எவ்ளோ புடிக்கும் அந்த கலர்ன்னு!)

14.பிடித்த மணம்?
தமிழ்மணம் அப்டின்னு சொல்லி உங்கள வெறுப்பேத்தாம...
மல்லிகைமணம்- ன்னு சொல்லி உங்க மணசுல இடம்பிடிக்கிறேன்!

15.நீங்க அழைக்கப் போகும் ஏன் உங்களுக்கு பிடித்த உள்ள. அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜாக்கி சேகர் : கடலூர்காரர்.. ஆல்இன்ஆல் அழகுராஜா! இரண்டு வருடமாக பதிவெழுதி பலரை (என்னையும் சேர்த்து) கொள்ளை அடித்தவர்... இன்னும் 3 பதிவுகள் எழுதினால் 200 பதிவுகளை தொடுபவர். அவருக்கு என் வாழ்த்துக்களும்... அழைப்பிதழும்!

அக்னிபார்வை :லவ்ஸ் கட்டி பதிவிடுபவர், வித்தியாசமான எழுத்துக்களால் வாசகர்களை தன் வசம் கட்டிவைத்துள்ளார் (அன்பாலதாங்க!). 100 பதிவுக்கு மேல் எழுதி 200 நோக்கி வெற்றி நடைபோடுறாரு, பறக்குறாரு, சீருறாரு..அவர நா இங்க மாட்டிவிடுறேன்.. சங்கிலி தொடராமுல்ல, எழுதலனா சாமிகுத்தம்!

இனியவன்: இளைமையான & நகைச்சுவையான எழுத்துக்கு சொந்தகாரர்... வந்த கொச்ச நாட்களிலேயே, பல பதிவர்களை திரும்பி பார்க்க வைத்தவர். அவருக்கு நம்ம வாழ்த்தும், அழைப்பும்!

(ஆங்கில மற்றும் வது விமர்சனத்தால் பின்னி பெடல் எடுத்து, நோன்டி நொங்கெடுப்பவர்.... அவருடைய எளிமையான எழுத்துக்களுக்கு நான் ரசிகன்! அப்படின்னு வண்ணத்துபூச்சியாரை கூப்பிடலாமுன்னு டைப் பன்னிட்டேன்.. அதுகுள்ள ஜெஸ்ட் மிஸ்சு! எம்மாம் பாஸ்டா இருக்காய்ங்க!)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவுலக அருமை நண்பன் கிஷோரின் : வெளிநாட்டு மோகம் என்ற பதிவு. என் மனசுல இருந்தத அப்படியே எழுதி இருந்தான்!
(என்ன அப்டி பாக்குறீங்க? அந்த பதிவ நா எழுதி தரல அவனுக்கு..)

17. பிடித்த விளையாட்டு?
ஷட்டில்
சுக்ரீவனின் அண்ணன் பந்து, அதாங்க.. வாலிபால்!
ரம்யா.. சே, ரம்மின்னு டப் பன்னா அப்டி வருது!
(மவனே.. ஒழுங்கா பதில் சொல்டானு, நீங்க சொல்றது காதுல விழுது..)

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை!
(கண்ணாடி எதுக்குனா அணியனும்? தலை சீவுற அப்ப பார்த்தா மட்டும் போதாது?)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
திரில்லர், உண்மை கதை, காமெடி

20.கடைசியாகப் பார்த்த படம்?
The Curious Case of Benjamin Button [2008]

21.பிடித்த பருவ காலம் எது?
ஐஸ் ஏஜ்! அப்டின்னு சொல்ல ஆசதான், ஆனா அப்ப நா பொறக்கலையே.. அதனால எந்த காலமாக இருந்தாலும் புடிக்கும், ராகுகாலத்தை தவிர!

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
The Complete Idiots Guide to Tantric sex- அப்டின்னு சொன்னா புக்கு கேட்டு வருவீங்க என்பதால... Murphy's Laws 1000 - படிக்கிறேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அத எதுக்கு மாத்தனும்?

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : அமைதியின் சத்தம்
பிடிக்காத சப்தம்: டி.வி. சத்தம் அதிகமானால்..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வேற எங்க.. துபாய்தான்!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குனு சொன்ன நம்பவா போறீங்க?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் அப்பாவின் இழப்பு!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியே கோவிச்சிக்காம, மேல போயி 8வது கேள்விக்கு 2 வது பதில படிச்சுக்குங்க.. (படிக்கலனா.. டென்ஸ்சனாயிடுவேன், ஆமா!)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வேளாங்கண்ணி.. தமிழ்நாட்டு கோவா! எத்தனை முறை போனாலும் எங்களுக்கு சலிக்கவே சலிக்காத ஊர்..பீச்சுல 2 மணி நேரம் உழுந்து பொறன்டுட்டு, கரையில உக்காந்து பீர் அடிச்சிகிட்டே, பிரஷா சூடா வருத்த எரா வை சாப்டா... யப்பா! எப்படா ஆகஸ்ட் மாசம் வருண்னு இருக்கு (அப்பதான் எனக்கு லீவு)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
கர்ணன் போல : நாம செத்தாலும், நம்ம செஞ்சது வாழனும்!

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நெறைய இருக்குங்கண்ணா.. அப்புறமா நேருல சொல்றேன், சபையில சொல்ல முடியாது!
(இத படிச்சிபாத்துட்டு மன்டையில மொத்தறதுக்கா?)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
கொடுங்கள்! பெறுங்கள்!!

Friday, May 22, 2009

கலக்கல் - 1புரளியும், நானும்...
காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ இயந்திரம் மாதிரி வேலை செஞ்சிட்டு, இங்க துபாய்ல பொழப்ப ஒட்ட வேண்டி இருக்கு, இதுல வெந்த புண்னுல ஃப்பேர்க் வைச்சி நோன்டுற மாதிரி, ஆப்பீஸல உள்ள சில டாபர்ஸ்.. என் உணர்வ கேலி பண்ணிப்பாக்குதுங்க!

ஒன்னுமில்ல பாஸ்... நானே மாவீரன் பிரபாகரனை சுட்டுட்டோம், போட்டுட்டோமுன்னு.. புரளியை கிளப்பின பத்திரிகையையும், தொலைக்காட்சி மீடியங்களையும் நா கருவிக்கொண்டிருக்க... இங்க, மலபாரிங்க... சிங்கள சாக்கடைங்க கிட்ட பார்ட்டி கேக்குதுங்க.. அதுக்கு சாக்கடை சொல்லுது..." இப்ப ரெசசன் டைம், அதனால..கண்டிப்பா வைக்கிறேன் வெயிட் பன்னுங்கன்னு". இதலாம் என் முன்னாடியே, நா இருக்கும் போதே பேசுதுங்க... பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்? மேல நாட்டுல இருக்குற இங்கலீஸ்காரன் எப்டி புரிஞ்சிப்பானுங்க?

இப்ப நெனைக்கறேன், தமிழ்நாட்டுல இருந்தாலாவது... நம்க்கு ஆறுதலா, சப்பக்கட்டு கட்றதுக்காவது ஆள் இருப்பாங்க.. இங்க அந்த ஆறுதலும் இல்ல!
இதுக்கு கட்டிங் இல்ல.. புல் அடிச்சாலும் போதாது! ஏன் இவ்வளவு கோவம்னா, மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறியகொண்டு வந்து சேத்துட்டானுங்க!!

-------------------------------------------------------------------------------------

ஏன் நம்ம குடிக்கிறம்முன்னா..

  • ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது.
  • 24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன ?
  • நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.
  • கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீர் ஒன்றே சாட்சி
  • குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை.
-------------------------------------------------------------------------------------

க்கூக்குக்கூ.... ஹைக்கூ

*நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி!

*வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று
தெறிப்பது கெட்டமீன் வாடை!

* நிரந்தர முதல்வரின் லேட்டஸ்ட் வீடு
இதுதான் அவர் சமாதி!

Monday, May 18, 2009

ரிவி்ட் ஆப் 2009 (தேர்தல் முடிவு)தேர்தல் நேரத்துல ஈழ பிரச்ச்னையை தாமதமாக பேசிவிட்டு பின்னர் கண்டுக்கொள்ளாமல் விட்ட அ.தி.மு.க -விற்க்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 1

கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த பா.ம.க -வுக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 2

பிடிவாதமாக கூட்டணியை தவிர்த்து, தன் கட்சியை 4,5 இடத்திலாவது ஜெயிக்க வைப்பார்கள் என கனவு கண்ட தே.மு.தி.க -வுக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 3

குறிப்பிட்ட மக்களுக்காக கட்சி நடத்தும், தொடர்குண்டு வெடிப்பு நடந்தாலும் கண்டுகொள்ளாமல் ஓட்டு கேட்கும், இந்துத்துவா கொள்கையை விடாமல் பிடித்து தொங்கிகொன்டிருக்கும் பா.ஜ.க-விக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 4

நாக்கை துருத்தி ஈழ பிரச்சனையை கையில் வைத்து பிரச்சாரம் செய்த வை.கோ, அந்தர்பல்டி அடித்து அதிமுக விடம் கூட்டனி சேர்ந்த ம.தி.மு.க-விக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 5

பழமைவாத கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு கட்சி நடத்திவரும் கம்யூனிஸ்டுகளின் சி.பி.எம்-க்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 6

ஈழதமிழர்கள் வெடிகுண்டுகளுக்கும் பசிப்பிணிக்கும் பலியாகும் வேளையிலே, நமகென்ன மசுரா போச்சுன்னு (காங்., தி.மு.க., etc) கட்சிகளுக்கு ஓட்டு போட்டு மக்களுக்கு மக்களே வச்சுக்கிட்டாங்க - ரிவிட்டு!!

Tuesday, May 12, 2009

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க.. இத படிங்க பாப்போம்.)


உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

ஒக்கந்து யோசிப்பாய்ங்கலோ..., அப்படின்னு சொல்லப்படாது

Saturday, May 9, 2009

அன்னையர் தின வாழ்த்துகள் !!அம்மா என்றால் அன்பு !!

வாழ் நாளெல்லாம் உன் அன்பில்
நனையும் எங்களுக்கு...
ஒரு நாளில்
நன்றியை சொல்ல முடியுமா??

அன்பு மகன்கள் :
கலை & ஆடல்

Friday, May 8, 2009

காமெடி: கட்சிகளும் அதன் சின்னங்களும்

கட்சிகளும் அதன் சின்னங்களும்

திமுக சின்னம்

கலைஞர் வெளக்கம் குடுக்கராராமாம்...
எதுக்கு சட்டசபையில் கண்னாடி போடுறாருன்னு.


அ.தி.மு.க சின்னம்

பழத்தை அம்மா சாப்டாச்சி..
பாக்கி உள்ளதுதான் மேலே படத்தில்.

லாலுவின் சின்னம்

பீகாரில் கரண்ட் இல்லல்லோ... இவரு புடிக்கிறாராம்....
(நா சொல்றத விட மேலே படத்தை பாத்துக்கோங்க)சி.பி.எம் சின்னம்

இவங்க ஆட்சிக்கு வந்தா, நாம இத உபயோகபடுத்துவோம்.இத நா சொல்லல.. அவங்க சின்னம் கொல்லுது. சே.. சொல்லுது.


சிவ சேனா சின்னம்

இவங்க சின்னம் பத்தி சொல்லலாம், ம்ம்ம்ம..
அப்புறம் உங்கள பாக்க முடியுமானு, தெரியல...


மாயாவதி சின்னம்

இதுக்கு ஓன்னும் அர்த்தம் இல்ல...
அவங்கலோட சொந்த போட்டோதான்.


பி.ஜே.பி சின்னம்

நரேந்திர மோடியும், வருண் காந்தியும் நம்ம அறிவை
தாமரை போல மலர செய்வாங்க. (சிரிக்காதீங்க)

சமஜ்வாடியின் சின்னம்


இங்லலீசும், கம்ப்யூட்டரும் தடை செய்தவுடன்,இவங்க சின்னத்தை வச்சிதான் நாம பேப்பர் போட்டு பொழப்ப நடத்தவேண்டி வரும்.


கடைசியா.... ஆனா சும்மா நச்..ன்னு

கை சின்னம்

எல்லா இந்தியர்களும் நல்லா கேட்டுகோங்க..
உங்க தலையெழுத்து எப்போதும்,
எங்க குடும்பத்து,கையிலதான்..
கையிலதான்..
கையிலதான்!

Thursday, May 7, 2009

8 Pack, 6 Pack, 4 Pack & Rice Bag

முதலில் 8 pack பற்றி பாப்போம்!!
கீழே உள்ள அமிரும் , விஷாலும்.

இரண்டாவது 6 pack பற்றி பாப்போம்!! சூர்யாவும் , தனுஷும் .

மூன்றாவது 4 pack பாப்போம்!!
விக்ரம் & ஜெயம் ரவி.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
நம்ம 120 kg rice pack!!!!!

யாரும் சமைக்க கேக்காதீங்க !!

Blog Widget by LinkWithin