Saturday, December 26, 2009

கலக்கல் - 5

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><>
பொறங்கால தூக்கி வச்சி வா கண்ணா!!

பதிவர் ‘கண்ணா’ நீநீநீநீண்ண்ண்டடடட 5 மாத கால இடைவேளைக்கு பின் எழுத துவக்கியிருக்கிறார்…அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……

வாடி.. வா...
<><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சல்யூட் ஃபார் மது & ஆனந்த் பிரகாஷ்

ருச்சிகா பலாத்கார வழக்குல ஹரியானா முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோருக்கு, 19 வருஷத்துக்கு பின்னால அவனுக்கு தண்டனை கிடைச்சது எல்லோரும் தெரியும். என்றாலும், அந்த தண்டனையை வாங்கி குடுக்க ருச்சிகாவோட தோழியான ஆராதனா குப்தா குடும்பத்தினரைதான் பாராட்ட தோனுதுங்க எனக்கு!

இவ்வளவு சீக்கிரமா (?) குடுத்த நீதியை பெற அவங்க கொடுத்த விலை என்னன்னனு தெரியுமா? ஆனந்த் பிரகாஷை (ஆராதனாவின் அப்பா) வேலையில் இருந்து சஸ்பண்ட் பண்ணியிருக்காங்க.. ஆராதனாவை காலேஜ் போகும்போது ரவுடிகள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. மது பிரகாஷை (ஆராதனாவின் அம்மா)வீடு புகுந்து மிரட்டி அடிச்சிருக்காங்க.. எல்லாத்துக்கும் மேல இவங்க 300 தடவைக்கும் மேல கோர்ட்டுக்கு அலைந்துதான் இந்த தீர்ப்பை, அந்த அல்லகைக்கு வாங்கிகுடுத்துருக்காங்க!!

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சோக்காமுல்ல??

2வது படிக்கும்போது வினோத்கிட்ட, டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்களாம்..

டீச்சர் : காந்திஜியோட பையன் யாரு?
வினோத் : தினேசன்
டீச்சர் : அடிங்.. இதை யாருடா சொல்லிகுடுத்தது உனக்கு?
வினோத் : L.K.G ல் இருந்து எல்லா மிஸ்சும்.. "காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>

அவதாரம் பார்த்த அவதார்

எல்லாரும் பாத்துட்டாங்கனு, ஒரு வழியா நானும் அவதாரை பாத்துட்டேங்க!! (அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??)

டெர்மினேட்டர், டைட்டானிக் கொடுத்த ஜேம்சா இப்டி எடுத்துயிருக்காரு?? தொங்கிபோன கதைக்கு.. ஜாக்கி குடுத்து நெம்பி இருக்காரு?? கிழவிக்கூட களவி ஆடுன மாதிரி எல்லாமே வேஸ்டா பூட்ச்சே நைனா!! இருந்தாலும் டெக்னாலஜி 1,2,3,4 க்காக பார்க்கலாம்.(நன்றி ஹாலிவுட் பாலு!)

1200 கோடி செலவு செஞ்சாங்கலாம் படத்துக்கு... அதுல ஒரு 120 ரூபா செலவு செஞ்சி, ஹீரோவுக்கு நல்லதா 4 டீ ஷர்ட் எடுத்து குடுத்துயிருக்கலாம்! கப்படிக்குது... படம் முழுக்க ஒரே டீ சர்ட்டுல வர்றாரு.. இதுக்குன்னே, ஜேம்ஸ் கேமரூனை கட்டிப்போட்டு தமிழ் படம் பாக்க வச்சிட்டு சொல்லனும்.. "பாத்தியில்ல?? எங்க ஹீரோங்க.. எப்டி ஒரே ஃப்ரேம்ல ஆறு டிரஸ்ல நடந்து வர்றாங்கன்னு?" திருந்துங்க சேம்சு!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
2010

2009-துல உங்களை எல்லாம் பல நேரங்கள்ல பின்னூட்டம் வழியாவும், பதிவு போட்டும்..

தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!
.
.
.
.
.
.
.
.
இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..
(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)

எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><>

Tuesday, December 22, 2009

ஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....


நீங்க
யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா? என்னது.. பாத்ததே இல்லியா? என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க! இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே!! இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு! என்சாய்...

இந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் (?????? ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம்! என்னங்கடா... நடக்குது இங்க?? இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க?? (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்!) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி"பப்பரப்பா"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது!!


ஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.

இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம்! நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல!. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க! ஏனோ.. கவுண்டமணி சொல்ற "குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்.." டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது!!



கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!

ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. ! திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு! எதுவாயிருந்தாலும்,

வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!

(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க?)

Sunday, December 13, 2009

பார்ட்டிஈஈஈஈஈஈஈ!!!

எங்க ஆஃபீஸ்ல அடிக்கடி பார்ட்டி குடுப்பாங்க.. (உடனே கிளம்பி வந்துடாதீங்க வேலை கேட்டுகிட்டு) ப்ராஜெக்ட் கிடைச்சா பார்ட்டி, ஸ்கிராப் வித்தா பார்ட்டி, ஆனுவல் பார்ட்டின்னு டிசைன் டிசைன்னா பார்ட்டி குடுபாங்க. இதுல பல பார்ட்டிஸ் துறை சம்பந்தப்பட்டதாவே இருக்குறதால, அதுல பார்த்த மூஞ்சயே பார்த்து பயப்பவேண்டியதாயிருக்கும்.. ஆனா, அதுல Annual பார்ட்டி மட்டும்தான் பல தளத்திலிருந்தும், சைட்டிலிருந்தும், அலுவலக கிளையிலிருந்தும் வருவாங்க என்பதால.. (புதுசு புதுசா ஃபிகர்கள் வருமுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாமோ?) அந்த பார்ட்டிக்கு மட்டும் தவறாம நாம ஆஜாராயிடுவாம்!!

party2.jpg picture by rkarasans party1.jpg picture by rkarasans

ஆமா... எங்க பெருசா கூப்ட்டுகிட்டு போயிட போறானுங்க? துபாய் சுற்றுலாவில் மிக முக்காத ஒன்றான அந்த பாலை பயணத்துக்குதான்! அதான் பாஸ்.. தமிழ்ல சொன்னா Desert Safari. ஏற்கனவே 2007ல ஒரு தடவை கூப்டுகிட்டு போயிருக்காங்க... மறுபடியும் 2009 அதே பா.ப வுக்கு கூப்பிட்டு போறாங்க. (ரொம்ப காசு கம்மியா கேக்குறதால மட்டும் இல்லை! இந்த 400 நாதாரிகளை அடைக்க, துபாயில வேற எடம் இல்லாதது கூட காரணமாய் இருக்கலாம்!!) ஆப்பீஸ்ல 400 பேருக்கு 60 டயோட்டா லாண்ட் கிரூஸரை ரெடி பண்ணியிருந்தாங்க. அதுல அப்படியே ஏறி அலுங்காம குலுங்காம முதல் சீட்டுல எடம் புடிச்சிட்டேன். (எத்தினி பஸ்சுல வேட்டிய அவுத்துபோட்டு எடத்தை புடிச்சிருப்போம்! நம்மகிட்டயேவா?)
IMAG0893.jpg picture by rkarasans

ஹெட் ஆஃபீஸிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரத்துல ஹத்தா போற வழியில இருக்குற அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். எங்க வண்டிய ஒட்டுன ஆளு ஒரு பிலிஃப்பைனி, என்னைய பாத்ததுமே கேட்டான் "ஆர் யூ ஃப்ரம் டமில்நாட்டூ?" அப்படின்னு..(எப்படிதான் மூஞ்ச பாத்து கண்டுபுடிக்கிறாய்ய்ய்ய்ங்கலேலலா?). அவனுக்கு என்ன ஆத்திரமோ தெர்லிங்கண்ணா... அங்க ஆரம்பிச்சான்யா ரோலர் கோஸ்டர் வேலையை... படார்ன்னு மேல ஏத்துறான், சடார்ன்னு கீழ எறக்குறான், விர்ருன்னு சுத்துறான், சர்ருன்னு சருக்குறான்.. (ஸ்ஸ்ஸ்ப்பா! எவ்வளவு நேரந்தான் நானும் அடக்குறது? அட.. பயத்தைதாங்க!!). இதுல வேற, அவன் மேலிருந்து கீழே இறக்கும்போது... ""ரஜினிகாநந்ந்த்த்தா.. அய்ய்யயோ... அம்மமமமாா... ராஸ்கோலலா.."" அப்டின்னு ரிப்பிட்டேஷனா கத்தி கடுப்பாக்குறான்! (இந்த நாலு வார்த்தையை அந்த பிலிஃப்பைனிக்கு கத்துகுடுத்தவன் வாயில சங்குசக்கரத்தை கொளுத்தி போட..)
party4.jpg picture by rkarasans Party13.jpg picture by rkarasans party8.jpg picture by rkarasans

ஒரு வழியா Sand Dune Bashing முடிச்சிட்டு, ஓட்டகத்தை மேய்க்க... சாரி! ஒரு ஃப்லோவுல உண்மை வந்துடுச்சு.. ஒட்டகத்தில் ஏறி சவரி செய்யிற இடத்துல விட்டாங்க.. அதுக்கு பக்கதிலேயே கம்பெனி ஏற்பாடு செஞ்சிருந்த கேம்ப்பும் இருந்தது! சரி.. ஒட்டகத்துல ஒரு ரைடு போயிட்டு வரலாமுன்னு நினைச்சிகிட்டு 'டெரரா மூஞ்ச' வச்சிகிட்டு ஒட்டகத்து பக்கத்துல போனேன்.. அது நம்மல பார்த்துட்டு 'பிஞ்சு மூஞ்ச' வச்சிகிட்டு வந்துடாருன்னு தலையை வெடுக்குன்னு திருப்பிகிச்சு! (ரைட்டு.. சரி விடுன்னு போறத்துக்கு நாங்க என்ன 'சூடு சொரனை' உள்ளவங்களான்னு, டப்புன்னு முதுகுமேல ஏறிட்டோமுல்ல? )
camel1.jpg picture by rkarasans camel2.jpg picture by rkarasans

அதை முடிச்சிட்டு திரும்புனா, அங்க ஒரு இடத்துல கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க.. என்னங்கடா இது? வித்தை ஏதாச்சும் காட்டுறாங்களான்னு போயி பார்த்தா.. Sand Scooterரை வச்சி படம் காட்டிகிட்டு இருந்தாங்க! சரின்னு இதையும் ஏன் விடுனுமுன்னு.. நண்பன் நெஞ்ச நக்கி, ஓசியில டிக்கெட்டை அண்டா போட்டேன்! (பிராக்கெட் போட்டா தப்பிச்சிடும் பயபுள்ள.. அதான் அண்டா!!) டிக்கெட் வாங்குன கொஞ்ச நேரத்தில் பைக்கை தந்துவிட்டார்கள். ஒரு 10 ரவுண்ட் அடிச்சிருப்பேன் ஒரு பயபுள்ள மட்டும் "குறுகுறுன்னு" கூறுபோடுற மாதிரி என்னையே பாத்துகிட்டு இருந்துது.. என்னடா வம்பா போச்சி? வண்டி ஓட்டுறது ஒரு குத்தமாடா!-ன்னு நினைசிகிட்டு திரும்ப வண்டிய குடுத்துட்டு வந்து, என் நண்பன்கிட்ட ஏன்டா அவன் அப்டி பாக்குறான்னு கேட்டேன்.. அதுக்கு என் நண்பன் "டேய் நாதாரி! வண்டிய மேடு மேல ஏத்த சொன்னா.. நிக்கிறவன் காலு மேல ஏத்திட்டு, பேச்ச பாரு! பாக்குறதோட விட்டானே.. பாடை கட்டாம!!" (அவன் கத்தவேயில்ல? ஒருவேளை லைட்டா ஏத்தியிருபேனோ?)
Bike1.jpg picture by rkarasans Bike2.gif picture by rkarasans

அப்புறம் என்ன பண்றதுன்னு கேம்ப் உள்ளார போனோம்.. போகும்போதே குலுக்கலுக்கான சீட்டை எழுதி போட்டுட்டு... நேரா எங்க போயிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க? கரைட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே! "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.. நான் ஒன்று அல்ல 7 பியர்ரு குடிப்பேனே!" My Favorite Austrian Beer CORONA பார்த்ததுக்கு அப்புறம், எனக்கு பக்கத்துல இருக்குற எதுவுமே என் கண்ணுக்கு தெரியலை.. கடைசியா பெல்லி டான்சரை பார்த்தவுடனேதான் எனக்கு கண்ணே தெரிஞ்சிது. ஒரு பக்கம் பாம்பு, பல்லியை தவிர சாப்பிட எல்லாம் வச்சிருக்க.. ஒரு பக்கம் போட்டிகளும், விளையாட்டுகளும் ஸ்டேஜ்ல நடக்க.. எங்க க்ரூப் மட்டும் எஸ்சாகி, அரேபிய பைப் சீஷாவை (ஷீலா தப்பா படிக்காதீங்க) இழுத்துகிட்டு இருந்தோம்!!

belly1.jpg picture by rkarasans belly2.jpg picture by rkarasans

இதுவே மெகா மொக்கையாகிடுச்சு.. இதுக்கு மேலையும் எழுதுனா நீங்க படிக்கவும் மாட்டீங்க.. (இல்லாட்டினா மட்டும் படிச்சிடுதான்...) அதனால, கடைசிய ஒன்னு மட்டும் சொல்லாம போனா.. இந்த பதிவு முழுமையடையாது! அதாங்க.. பெல்லி டான்சு!! எல்லாருமே பெல்லி டான்சரை "ஆஆஆஆஆஆஆ" ன்னு பார்த்துகிட்டு இருக்க சொல்லோ... நான் மட்டும் பக்கத்துல உள்ள ஈரோப்பியன் ஃபிகரை "ஈஈஈஈஈஈஈஈஈ"ன்னு பார்த்துகிட்டு இருந்தேன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க!!

Tuesday, December 8, 2009

லொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?











இந்த மொக்க கமெண்டுகளை பார்த்து யாரும் காண்டாக வேண்டாம், அப்டி மீறியும் உங்களுக்கு கோபமோ.. கம்பமோ வந்துச்சின்னா... உங்க காசை போட்டு போன் பண்ணி திட்டுறதை விட, நேர்ல பார்க்கும்போது முதுகுல டின்னோ, கேனோ, பேரலையோ கட்டிடுங்க!!

Monday, November 23, 2009

யப்பா... சாமி! முடியலை....

2003ல் இருந்து 2009 வரையில்.. நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பதிவர்கள் என எனக்கு ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி எனக்கு எச்சரிக்கை செய்து என்னை பல்வேறு சிக்கலான மற்றும் பயங்கரமான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிய அனைவருக்கும் இந்நாளில் நன்றியை தெரிவித்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!

உங்களால்தான் இது சாத்தியமாயிற்று....

* கோக் குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேனுங்கோ... அது டாய்லேட் அழுக்கை கிளீன் பண்ணும்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* குட்டையில ஊறுன பன்றி மாத்திரியே அலையிறங்கண்ணா... அது டியோடரண்ட் அடிச்சா கேன்சர் வரும்முன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன் ராசாக்களா... அது எப்ப நீங்க தியேட்டர் நார்காலியில எச்.ஐ.வி. ஊசியை சில சைக்கோஸ் சொருகியிருப்பாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* தனியா பஸ்சுலயோ, டிரைன்லயோ, ஃப்ளைட்லயோ போகும்போது பக்கதிலிருக்கறவனை திருடன் மாதிரியே பாக்குறேங்க நானு. அது எப்பொழுது இருந்துன்னா... நீங்க மயக்க ஸ்பிரே அடிச்சு நம்ம பொருள்களை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! (மால்ஸ்ல பொண்ணுங்க டெஸ்டிங் ஸ்பிரே அடிக்க வந்தா கூட பயந்து வருது!)

* தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க! அது எப்பொழுது இருந்துன்னா... தெரியாத போன் ஏதாவது வந்து அட்டன்ட் பண்ணா நம்ம சிம் கார்டை ஹேக் பண்ணி காசை கட் பண்ணிடுவாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* கேன்ல வர்ற தயிரோ, மோரோ, ஜுஸோ எதையுமே குடிக்கிறது இல்லை மக்கா! இதுவும் நீங்க எலி கேன் மேல யூரின் போயிருக்கும்.. எச்சி துப்பி வச்சிருக்குமுன்னு.. என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* பார்ட்டிக்கு போனாலோ, கிளப்புக்கு போனாலோ.. எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க! இதுகூட நீங்க அவளுங்க நம்மள மயக்கி, ஹோட்டலுக்கு கொண்டுபோயி, நமக்கு தெரியாம போதை மருந்து குடுத்து... கிட்னியை களவான்டு போறாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!

* 49 மெயிலை 1025 பேருக்கு இதுவரைக்கும் அனுப்பி இருக்கேங்க.. நீங்க சொன்னது போல... ஏங்க, இன்னம் எனக்கு நோக்கியா மொபைலை அவனுங்க அனுப்பவேயில்லை? அந்த மாடலே மார்கேட்டை விட்டு போயிடுச்சு பாசுங்களா!! (ஓசியில குடுத்தா பினாயிலையே குடிப்பியேன்னு பழைய பின்னுாட்டம் போடாம... புதுசா ஏதுனா யோசிச்சு திட்டுங்க!)

* முருகன், ஏசு, அல்லா படங்கள் போட்ட மெயிலை... மனசுல எதாவது ஆசையை நினைச்சிகிட்டே பார்வேர்ட் பண்ணா... நினைச்சது நடக்குமுன்னு சொன்னீங்க! கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!! (இன்னம் கொஞ்சம் வேற மாதிரி டிரை பண்ணணும் நீங்க!)

எது எப்படியோ ........ இதை படிச்சிட்டு 10 நிமிஷத்துல " 11,345 " பேருக்கு நீங்க இந்த இடுகையை பார்வேர்ட் பண்ணலைன்னா... நாளைக்கு காலையில 6.00 மணிக்கு "காக்கா" உங்க தலையில "கக்கா" போயிடும்!!

Wednesday, November 11, 2009

கலக்கல் - 4

************************************************************************************
நீங்களே சொல்லுங்க.. சரியா? தப்பா?

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 4,000 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு ஏஐஜியில பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 3,500 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு லேமென் பிரதர்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 0,000 ரூபாய்!

ஆனா 1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு டின்-பீர் மொத்தமா வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு குடிச்சிட்டு பாக்கி உள்ள அலுமினிய டின்னை எடைக்கு போட்டா.. அதோட மதிப்பு 5,200 ரூபாய்! பீருக்கு பீரும் கிடைச்சுது.. காசுக்கு காசும் கிடைச்சுது!! எப்பூடி???

(என்னாது? ... ரைட்டு!... சரி விடு... அட! ஓரமா துப்புறறறது...?)

************************************************************************************
கேனத்தனமானதுதான்... ஆனா, உண்மை!

இதை
படிக்கிற எல்லாரும் கண்டிப்பா இதை செஞ்சு பாக்கணும்! சொன்னா நம்புங்க.. இது நா ஆபீஸ்ல சும்மா இருந்த நேரத்துல கண்டுபுடிச்சது இல்ல! இல்ல!! இல்ல!!!

நீங்க செய்ய வேண்டியது.. ஒரு நாற்காலியில உக்காருங்க. வலது பக்க காலை தூக்குங்கள். அப்படியே கிளாக்வைஸ் (Clockwise) பக்கமாக சுத்துங்க! அதே நேரம் உங்க வலது கைய்யால அப்படியே காத்துல நம்பர் 6 எழுத முயற்சி செய்யுங்க! இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!! (இதெல்லாம் ஒரு பொழப்பு...)

************************************************************************************
ரிவீட் மேலாண்மை

ஒருகா.. கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ் மூணு பேரும் ஆட்டோவுல போயிகின்னு இருக்க சொல்லோ... ஆட்டோ கன்டமாகி... கமன்டலம் பொளந்து மூணு பேரும் மேல பூட்டாங்கோ!!

அங்க நம்ம "டெர்மினேட்டர் எமன்" ரெடியா இருந்தாரு. மூணு பேரையும் கூப்பிட்டு... ராமதாசையும், ஜெவையும் சொர்க்கத்துக்கு போங்கன்னு சொல்லிட்டு, அவரு முன்னாடியே முடிவு செஞ்ச மாதிரி கலைஞரை நரகத்துக்கு போக சொல்லிட்டாரு!

க.மு.க வுக்கு இதுல உடன்பாடு இல்ல.. உடனே அவரு எமனை பார்த்து "ஏன்யா.. இந்த பாரபட்சம் உனக்கு? நாங்க மூணு பேருமே அரசியல்வாதி.. மூணு பேருமே ஊழல் பண்ணியிருக்கோம்.. மூணு பேருமே பொதுமக்களை ஏமாத்தியிருக்கோம்! இதுல.. ஏன் என்னா மயி... க்கு என்னை மட்டும் நரகத்துக்கு அனுப்புற?" அப்டின்னு எகிற ஆரம்பிச்சு மூணு பேருக்குமே பரீட்சை வைய்யி.. யாரு பாஸ் ஆகுறாங்கலோ அவங்க சொர்கத்துக்கும், ஃபெயில் ஆகுறவங்க நரகத்துக்கும் போகட்டும் ன்னு ஆட்சியில இருந்த தெனாவட்டுல கருத்து சொன்னாரு!


உடனே எமனும் ஒத்துகிட்டு முதல்ல இங்கலீஷ் டெஸ்ட்டு வச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "இந்தியாவுக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவரும் கரைக்டா சொல்லிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு் "இங்லாந்துக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவங்களும் கரைக்டா சொல்லிட்டாங்க! மூணாவது நம்மாளை கூப்பிட்டு """செக்காஸ்லோவியாவுக்கு""" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு... அதுக்கு நம்மாளு "செல்லாது.. செல்லாது.. ஒரு தமிழனை பார்த்து இங்கலிஷ்ல கேள்வி கேட்டு அவமானப்படுத்துறீங்களா? ம்.ம்..அடுத்த டெஸ்ட்டுக்கு போங்க ன்னாரு!

அடுத்தது தமிழ்ல பரீட்சை வச்சாரு டெர்மினேட்டரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "நாய் எப்டி குரைக்கும்"?ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'ளொள்.. ளொள்'ன்னு குரைக்கும்ன்னு கரைக்டா எழுதிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு "பூணை எப்டி கத்தும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'மியாவ்.. மியாவ்'ன்னு கத்துமுன்னு கரைக்டா எழுதிட்டாங்க.. மூணாவது நம்மாளை கூப்பிட்டு "யானை எப்டி பிளிரும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு.. ''''அடங்கொன்னியா''''..ன்னு முழிச்சிட்டு பெயிலா பூட்டாரு!!

கடுப்பான க.மு.க.. "யோவ் நான் வரலாறு பாடத்துல புலி.. அதுல வைய்யிய்யா டெஸ்டைன்னாரு"!! உடனே எமனும் வரலாறு பாடத்துல பரீட்சையை ஆரம்பிச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு 'இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைச்சிது?' ன்னு கேட்க, அவரு "1947" ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாரு! இரண்டாவது ஜெவை கூப்பிட்டு 'இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க எத்தனை பேரு உயிரை தியாகம் செஞ்சாங்க?'ன்னு கேட்க, அவங்களும் "2 லட்சம் பேரு"ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாங்க! அடுத்து நம்மாளு முறை.. எமன் அப்படியே திரும்பி.. "அந்த 2 லட்சம் பேரோட அட்ரசையும் சொல்லு" ன்னு கேட்டாரு! நம்மாளு "ரைட்டு.. வழிய சொல்லு கிளம்புறேன், நரகத்துக்கு" ன்னு து தூக்கி தோ போட்டுட்டு கிளம்பிட்டாரு..!

.க.- உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!
************************************************************************************
வளர்ச்சியால் வீழ்ச்சி

வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!
************************************************************************************

Saturday, November 7, 2009

மூணுல.. நீ ஒன்ன தொடு மாமா!

ஏ ஃபார் ஆயா.... பி ஃபார் பாயா... எழுத கூப்பிட்ட அறிவை தேடும் கார்த்திகேயனுக்கும், பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் பற்றி செந்தில்வேலனுக்கும் மற்றும் நான் ஆதவனுக்கும், தேவதையும்.. பத்து வரங்களும் எழுத கூப்பிட்ட கீத் குமாரசாமிக்கும் மற்றும் கிரி அவர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிச்சிக்கறேன்! இரண்டாவதா.. இதை எல்லாம் தனி தனியா எழுதி உங்க பொன்னான, வெள்ளியான, பித்தளையான நேரத்தை சுரன்டி சுண்ணாம்பாக்காமல்... மொத்தமா த்ரீயின் ஒன்னா எழுதி உங்க அன்பை அள்ளிகிறேன்!!


ஏ.பி.சி.டி. உங்கொப்பன் தாடி!
1. A- Available – இந்த கேள்வி ஹோட்டல்காரன்கிட்ட கேட்க வேண்டியாது! பாஸ்.. பாஸ்..

2. B - Best friend – எம்மாம் பேரு இருக்காய்ங்க...?

3. C- Cake or pie – ஸ்வீட் நோ இஷ்டம்!

4. D - Drink of choice – ஃபிளாக் டாக் (எந்த தண்ணின்னு சொல்லலியேப்பா...!)

5.E - Essential items you use everyday – ஜ ஆரம்பிச்சி டி யில முடியும்.

6. F- Favorite colour - உங்க மயிரு... கலர்னு சொல்ல வந்தேங்க!!

7. G - Gummy bears or worms – டேய்.. இப்படியெல்லாம் கேள்வி கேக்கசொல்லி யாருடா சொல்லிகொடுத்தது?

8. H - Hometown – அப்படியே மேல போயி (மேமமமமலலலலல இல்ல..) ஹெட்டரை படிங்க!

9. I - Indulgence – பாவமான புள்ளய பார்த்து... என்ன கேள்வி இது?

10. J - January/February – மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர். (12 மாசம் கரைக்டா இருக்கான்னு என்னிக்கோங்க!)

11. K - Kids and their names – பெரியவீட்டோடதா? சின்னவீட்டோடதா?

12. L - Life is incomplete with out – மரணம்!

13. M - Marriage date – அததான் நானும் கேட்டுகிட்டு இருக்கேன் அவ வீட்டுல..

14. N - Numberof siblings – ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு! (தம்பி)

15. O - Oranges or Apples – கடிக்கவா? குடிக்கவா?

16. P - Phobias/ Fears – கடன்காரன்களை பார்த்தா படபடப்பா இருக்கு! இதுக்கு பேரு ஃபோபியாவா? இல்ல.. பயமா??

17. Q - Quotes for today – சிரித்து வாழவேண்டும்!

18. R - Reason to smile – வாயிருக்குல்ல...

19. S - Season – கலக்கப்போவது யாரு? Season 1,2,3,4

20. T- TAG 4 PEOPLE – 'அன்னை' தெரசா, காந்தி 'தாத்தா', நேரு 'மாமா', 'ஆயா' மனோரமா. (எல்லாம் சொந்தக்காரய்ங்கதான்!!)

21. U- Unknown fact about me – ரொம்ப நல்லவன்

22. V - vegetables you dont like – உருளைக்'கிழ'ங்கு (ஏன்னா.. நம்ம யூத் இல்ல..?)

23. W - Worst habbit - கிர்ர்ர்... உர்ர்ர்... (வெறிநாயி எப்படி கத்துதுபாரு அம்மா சொல்லுவாங்க)

24. X - Xrays you had – அந்த கண்ணாடிய வாங்கதான் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன். (தலைவரு 'நெற்றிகண்' படத்துல யூஸ் பண்ற கண்ணாடிதான்!)

25. Y - Your favourite food – சாம்பார் சாதம் 'வித்' டைகர் ப்ரான்ஸ்

26. Z - Zodiac sign – தமிழில் 'சொம்பு', ஆங்கிலத்தில் 'சிங்கம்'!


டேட்டிங் வித் தேவதை :

முதல் வரம்: என் அப்பா எனக்கு மீண்டும் வேண்டும்!

ரெண்டாவது வரம்: உலகத்துல உள்ள எல்லா மனிதர்களுக்கும் ஜாதி,மதம் மறந்து போகனும்!

மூணாவது வரம்: பெண் குழந்தை!!

நாலாவது வரம்: எப்பொழுதும் நண்பர்களோடான ஒற்றுமை!

ஐந்தாவது வரம்: சன் பிக்சர்ஸ் படமெடுத்தாலும் பரவாயில்லைங்க தேவ்ஸ்.. இந்த டிரைலர் போடறதை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க.. இல்லனா, கொல்லுங்க!.

ஆறாவது வரம்: டி.வி.யில வர்ற மெகா தொடர், மொக்க தொடர்ல நடிக்கிறவங்களுக்கு 1 வருஷத்துக்கு பேதி புடுங்கனும்!

ஏழாவது வரம்: தூங்கும்போது, யாரும் எனக்கு போன் பண்ணகூடாது!

எட்டாவது வரம்: குடிக்கக் குடிக்க வற்றாத ஒரு சரக்கு பாட்டில், மிக்சிங்கோட வேணும்.

ஒன்பதாவது வரம்: எவ்வளவு சரக்கடிச்சாலும் வாசனை வரக்கூடாது.. அப்டி வந்தாலும்.. அடி வாங்க உடம்புல தெம்பு இருக்கனும்!!

பத்தாவது வரம்: இன்னொரு பத்து வரம் பார்சல்!!

[Thumbs+Up+Down.jpg]


(பிடி)த்த, டிக்காத பத்து!!

தொழில்அதிபர் :
பிடித்தவர் : சுனில் மிட்டல்
பிடிக்காதவர்கள் : அம்பானி பிரதர்ஸ்

விஞ்ஞானி
பிடித்தவர்: சிவேஷ்வர் ஷர்மா (புதிய இன்டர்நெட் டெக்னாலஜிக்காக..)
பிடிக்காதவர் : புலிக்கல் அஜயன்

தமிழக கல்வியாளர்
பிடித்தவர்: டாக்டர் இரா.விஜயராகவன்
பிடிக்காதவர்: யாருமில்லைங்கண்ணா

எழுத்தாளர்
பிடித்தவர் : பாமரன்
பிடிக்காதவர் : சாணி (ஞானி என்று வாசிக்கவும்!)

இயக்குனர்
பிடித்தவர் : பாலுமகேந்திரா
பிடிக்காதவர் : மணிரத்னம்

நடிகர்:
பிடித்தவர் : சூஸ்
பிடிக்காதவர் : பஞ்ச் பேசும் அனைத்து கபோதிகளும்

நடிகை:
பிடித்தவர் : பூஜா
பிடிக்காதவர் : பெரிய லிஸ்டு இருக்கு! (எ.கா. ரேவதி,ராதிகா,சுகாசினி,ஊர்வசி )

இசையமைப்பாளர்:
பிடித்தவர் : யூத்கிங்
பிடிக்காதவர் : சப்பி சாரி.. சிற்பி!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிடித்தவர்: நீயா நானா கோபிநாத்
பிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!)

வானொலி பண்பலை தொகுப்பாளர்
பிடித்தாவர், பிடிக்காதவர்: பலவருஷம் ஆச்சி வானொலி, கடலொலி, தரவொலி எல்லாம் கேட்டு..

அரசியல்வாதி:
பிடித்தவர்: ராமதாஸ் (நோ கமெண்ட்ஸ்)
பிடிக்காதவர்: சுசு (??????)

தொடர் பதிவு எழுத கூப்பிட்டாலே ஏதோ சாணி கையோட, கைக்குலுக்குன மாதிரி நம்ம பதிவருங்க மூஞ்சி போற போக்கை பாக்கனுமே... அதனால, நா யாரகிட்டயும் கை குலுக்க விரும்பல!!

Sunday, November 1, 2009

'கலை ரிட்டர்ன்ஸ்!'


10 நாள் லீவ் எடுத்துக்கொண்டு டபுள் ஷாட் (தீபாவளி + புதுமணை புகுவிழா) கொண்டாட்டதோடு தமிழகம் வந்து கொண்டாடியது.. மனதை விட்டு அகல மறுக்கிறது, நான்கு நாட்கள் ஆகியும்! வழக்கமாக வெளிநாடு வந்தபிறகு கடந்த மூணு வருஷமா தீபாவளி சைலண்டா ரூமோடு இல்லனா ஆபீசோடு போய்விடும். இந்த வருஷம் தாய்நாட்டில் கொண்டாட வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு சந்தோஷம்.

தீபாவளி முதல் நாள் சென்னை ஏர்போர்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே கொண்டு வந்து சேர்த்துவிட்டது (அதிசயமா இருக்குல்ல?) ஏர்அரேபியா என்கிற தெய்வம்! லேட்டா வந்திருந்தா கூவமே காரித்துப்புற மாதிரி திட்டியிருப்பங்குறது வேற விசயம்.. அடுத்த அதியசம் என்னன்னா, சென்னையில் இருந்து வடலூர் வரும் ரோடு குண்டும் குழியுமா நாலரை மணி நேரம் எடுக்கும் பயணம், மூன்றே மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தது மற்றொரு ஆச்சரியம். ரோடு எல்லாம் நீட் அண்ட் க்ளீன்! Hatts off to highway department!!

வந்ததும் வராததுமா பத்திரிக்கையை தூக்கிட்டு கிளம்பிவிட்டேன். அம்மாவுக்கு முடியாமல் போனதாலும், விஷேசத்திற்க்கு மூன்றே நாட்கள் பாக்கியிருந்ததாலும், நைட் 10 பத்து மணி வரையில் வேட்டையை தொடர்ந்தேன். நண்பர்கள் எல்லாம் "டேய் இந்த நேரத்துல போய் பேய்க்கா பத்திரிக்கை வைக்கபோற? மூடிக்கிட்டு போய் படுடா!"ன்னு அன்பா கேட்டுகிட்டதால அடக்கி வாசிச்சேன். சரி.. சரி கிரகபிரவேசத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்... (அடுத்த பதிவுக்கு மேட்டர் வேணுமில்ல மக்கா?) இப்ப ஓவர் டு தீபாவளி சீன்ஸ்!!


விடியகாலையில் எட்டு மணிக்கு செவிட்டுல யாரோ அரைஞ்ச மாதிரி ஒரு பீலிங்ஸ்சு.. அட! நிஜமாவே என் தம்பி பொண்ணுதான் செவுட்டுல இரண்டு வச்சிருக்கு! ரைட்டுன்னு எந்திரிச்சு வந்து ஹால்ல உக்காந்தா, எங்க அம்மா அவங்க கடமைக்கு தலையில இரண்டு வச்சாங்க. அதாங்க.. தலையில அடிச்சு எண்ணை தேச்சி விட்டாங்க! தீபாவளி அன்னைக்காவது குளி குளின்னு திட்டின ஆத்மாக்களை சாந்தியடை வைக்க அப்படியே போயி குளிச்சிட்டு வந்து பார்த்தா... சுட சுட இட்லி, தோசை, மட்டன் குருமா, வடை, சுழியன்னு சும்மா கும்முன்னு சாப்பிட்டுவிட்டு ஜம்முன்னு வெளியே கிளம்பினேன். இதுல நம்ப முடியாத விஷயம் என்னன்னா.. எங்க வீட்டுல யாரும் 10 மணி வரைக்கும் டி.வியை ஆன் பண்ணவேயில்ல, அதே மாதிரி நான் சென்ற நண்பர்கள் வீட்டுலையும் யாரும் டி.வியை பார்க்கல! என்னாங்கடா இது? (நல்லா விசாரிச்சிட்டேன்.. கரண்ட்டு, கேபிளு எல்லாம் இருக்குங்க. ஒருவேளை நம்ம பதிவர்கள் எழுதுறதை படிச்சிட்டு திருந்தியிருப்பாங்களோ? யேய்.. யேய்.. அப்படி எல்லாம் சிரிக்ககூடாது!)

அப்புறம் மதியமா யூத் எல்லாம் என்ன செய்வாங்களோ அதையே 'அடி'யேனும் செய்தேன். அப்புறம் என்ன பண்றதுங்க.. டூட்டி ஃப்ரீ கடையில் வாங்குன "பிளாக் டாக்"கை தூக்கியா போட முடியும்? அது உள்ளாற போயி குரைக்க ஆரம்பிச்சதும் பாதிபேரு நண்பனின் லாட்ஜில் மோட்சம் வாங்கிட்டாங்க. பாக்கி நாங்க ஒரு 6 பேரு விடாம "சொ.கா.சூ" வச்சிக்க கிளம்புனோம்! அதவேற சபீனா போட்டு விளக்கனுமா? அதாங்க.. ஆதவன் படத்துக்கு கிளம்பினோம். (துப்பாதீங்க.. துப்பாதீங்க.. முதல் நாள் பார்த்ததால, விமர்சனம் எதுவும் படிக்காம.. தெரியாம... செப்டிக் டேங்கில் இறங்கிட்டோம்!) சூர்யா + ஆதவன்னு சொல்லும் போதே தக்காளி.... மொக்கைன்னு விளங்கியிருக்கனும். சுருக்கமா சொல்லனுமுன்னா.. வெட்டி _____ நித்திரைக்கு கேடு!

இப்படிக்கா... தீபாவளி.. ருசியா, பசியா, கிக்கா, பெக்கா, 'மக்'கா, சிட்டா போயிடுச்சு! அழகான மறக்க முடியாத மகிழ்ச்சியான தீபாவளி!! லைட்டா ஏதோ கருகுற வாசனை அடிக்குது! அமீரக உடன்பிறப்புகள் என் செலவுல லெபன் அப் வாங்கி குடிங்க!! (அழுவக்கூடாது வினோத்.. அடுத்த தீபாவளிக்கு மாமா உன்னையும் கூப்பிடுட்டு போறேன்.. சரியா?)

வாலாட்டல் : நான் வந்தது தெரிந்து, போன் நம்பர் கண்டுபிடித்து, எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன பதிவுலக நண்பர்கள் மற்றும் அண்ணன்கள்.. ஷண்முகப்பிரியன் ஐயா, ஜாக்கி சேகர், தண்டோரா (எ) மணி, குசும்பன், கிஷோர், கார்த்திகேயன், வினோத் ஆகியோர்களுக்கு நன்றி, மெர்சி, அரிகட்டோ, சுக்ரன் லக்!!

Monday, October 12, 2009

ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்!!


ரொம்ப
சீரியசா எல்லாம் எழுத கூடாதுன்னு எங்க ஆயா சத்தியம் வாங்கிட்டு அப்பீட் ஆகிட்டாங்க என்பதால, சீரியசா எழுதுனா ஒரு பயபுள்ளையும் கமெண்ட் போடமாடேங்குது என்பதால, ஆப்பீஸ்ல இன்னைக்ககு வேலை இல்லை என்பதால, இந்த இடுகை வருங்கால் நகுக! (என்னைக்கிடா உனக்கு வேலை இருந்துதுன்னு எல்லாம் என் மேனேஜர் மாதிரி கேட்ககூடாது!)

தலைவரு 'ராஜாதிராஜா' படத்துல பாடியிருப்பாரு, "உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்" ன்னு. ஆனா அதை மாத்தி இப்படி பாடியிருக்கனும்!
"ஆபீஸ் வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்கைதான்..
அதில் உலவும் பேரெல்லாம் ஒரு கைதி போலதான்!"


* ஜெயில்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை பத்துக்கு பத்து ரூம்ல கழிப்பீங்க!
* ஆபீஸ்ல உங்க பெரும்பான்மையான நேரத்தை எட்டுக்கு எட்டு பொட்டியில முழிப்பீங்க!!

* ஜெயில்ல மணியடிச்சா மூணு வேளை சோறு போடுவாங்க ஓசியில!
* ஆபீஸ்ல ஒரு வேளை சாப்பாட்டுதான் நேரமே கிடைக்கும்!! (அதுவும் காசு குடுத்து சாப்பிடுறது, இன்னொரு வயித்தெரிச்சலு!)

* ஜெயில்ல நன்னடத்தைக்கு தண்டனை காலத்தை குறைப்பாங்க!
* ஆபீஸ்ல நன்னடத்தைக்கு இன்னம் கொஞ்சம் வேலையை குடுத்து பென்டை நிமுத்துவாங்க!!

* ஜெயில்ல உங்க ரூமுக்கு போகனுமன்னா போலீஸ்காரனே கதவை திறந்து விடுவாங்க!
* ஆபீஸ்ல உங்க நாய் லைசன்சை காட்டிட்டு (அ) தேச்சிட்டு நம்மலே கதவை திறந்து உள்ளபோயி குந்திகினும்!!

* ஜெயில்ல நீங்க டி.வி. பாக்கலாம், புக் படிக்கலாம், தூங்கலாம், எக்சட்ரா.. எக்சட்ரா..
* ஆபீஸ்ல நீங்க டி.வி பார்த்தீங்க.. இல்ல சேட் பண்ணீங்க.. டேமேஜர் உங்க கொமட்டுலேயே குத்துவாரு!!

* ஜெயில்ல உங்களுக்கு சொந்தமா, தனியா டாய்லெட் இருக்கும் உங்க ரூம்ல!
* ஆபீஸ்ல பப்ளிக் டாய்லெட் போல எல்லாரும் யூஸ் பண்றதைதான் நாமும் யூஸ் பண்ணணும்!! (அதுல சிலபேரு.. உக்காருற இடத்துலதான் ஒன்னுக்கு அடிச்சி வைப்பான்!)

* ஜெயில்ல பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள்-ன்னு எல்லாரும் வந்து பார்க்கலாம்!
* ஆபீஸ்ல நண்பர்கள் வந்திருந்து பேசுனா கூட, ஆப்பீஸ் டைம்ல வேலையை பாருடா வென்றுன்னு ரிசப்ஷன்ல உள்ள புவரான ரிச்சா கூட ரிவீட் அடிப்பா!!

* ஜெயில்ல ஒன்னியும் வேலை செய்ய வோணாம். செலவை எல்லாம் வரி கட்ரவனுங்கோ துட்டு!
* ஆபீஸ்ல வேலை செஞ்ச சம்பளத்துல வரியை கழிச்சிட்டு குடுப்பானுங்கோ. ஜெயில்ல உள்ளவங்களுக்கு செலவு செய்ய!! (இந்த இடத்துலதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. ஜெயிலுக்கே பூடலாமான்னு!!)

* ஜெயில்ல உள்ள ஒரே கஷ்டம் அங்க உள்ள கொடூரமான வார்டனை சமாளிக்கிறதுதான்!
* ஆபீஸ்ல அவங்க பேரை டீசன்டா மேனேஜருன்னு சொல்லுவாங்க!!

(ஓகே.. ஓகே.. அந்த டீசன்டான ஆளு வர்றாரு! நான் எஸ்சாயிக்கிறேன்.. நீங்க கீழ உள்ள வீடியோவை பாத்து என்ஜாய் பண்ணுங்க!!)


Saturday, October 3, 2009

ஸ்டிரிக்ட்லி... "லவ்வர்ஸ் ஒன்லி"

நம்ம கிஷோரு ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்ணிகிட்டு இருந்தாரு! (அவன் லவ் எல்லாம் பண்றானா?, அவனுக்கு லவ்வு ஒரு கேடா?-ன்னு அவனை டிசைன், டிசைனா திட்டனுமுன்னு நினைக்கிறவங்க.. கமெண்ட் மேடைக்கு வந்து ஆசை தீர திட்டலாம்!!) இது அவங்க வீட்டுல அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சி போயி பொண்ணை, வீட்டுலேயே அடைச்சி வச்சிட்டாரு. நம்ம ஹீரோ கிசோரு சேரன் ரேஞ்சிக்கு ஃபீல் பண்ணி ஒரு லெட்டர் எழுத எனகிட்ட ஐடியா கேட்டாரு.. அதாவது, அவ அப்பா பார்த்தாலும் பிரியாத ரகசிய கடிதம் எழுத சொல்லி... அந்த லெட்டர்தாங்கண்ணா இது! நீங்க முடிச்சா இதுல உள்ள உள்குத்தை கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல திட்டு.. சாரி! சொல்லுங்க பாப்போம்!!!

நான் உன்மேல வச்சியிருந்த உண்மையான காதல்
போயிடுச்சு! அப்புறம், உன் மேல உள்ள வெறுப்பு
ஒவ்வொறு நாளும் வளர்ந்துகிட்டேதான் இருக்கு. உன்னைய சந்திக்கும்போது,
எனக்கு உன் மூஞ்ச கூட பார்க்க புடிக்கலை!
ஒரு விஷயம் செய்யனுமுன்னு நினைக்கிறேன். என்னன்னா,
வேற நல்ல ஃபிகரை பாக்கலாமுன்னு இருக்கேன். எனக்கு விருப்பமில்ல
உன்ன கல்யாணம் செய்ய. கடைசியா நாம பேசுனப்ப
நீ அறிவுகெட்டதனமா பேசுனதும், அதுவே என்னை
உன்னை மறுபடியும் சந்திகிற ஆசையை தூண்டவே,
தூண்டல. உனக்கு எப்போதுமே, உன்னைய பத்திய நினைப்புதான்.
நாம இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன? எனக்கு
தெரியும் வாழ்கையில நா கஷ்டப்படுவேன்னு! எனக்கு எப்பவுமே இல்லை
ஆசை உன்கூட வாழனுமுன்னு. என்கிட்ட நல்லமனசு இருக்கு
சாரி! இருந்துச்சு.. ஆனா, அது இப்பயில்ல
நான் உன்கிட்ட கொடுக்குறதுக்கு. உன்னபோல உலகத்துல யாரும் இல்ல
சுயநலமாவும், முட்டாளாவும். உன்னால முடியாது
என்மேல அன்பு காட்டுறத்துக்கு, உதவி செய்யறத்துக்கு.
ஓப்பனா சொல்லுனுமுன்னா.. நீ நல்லா புரிஞ்சிக்கோ,
நான் உண்மையதான் சொல்றேன். எனக்கு ஒரு உதவி செய்,
இதுதான் முடிவுன்னு நீ நினைச்சா.. திரும்ப முயற்சி பண்ணாத
பதில் எழுத. நீ எழுதின லெட்டர்கள் எல்லாம்
கிழிச்சி போட்டுட்டேன். உனக்கு எப்பவுமே இருந்ததில்ல
என்மேல உண்மையான அன்பு காட்டுதல். குட் பை! சத்தியமா சொல்றேன்
திரும்ப என்னை தொல்ல பண்ணாத. தயவுசெஞ்சு, நினைக்காத
இன்னமும் நான் உன் லவ்வர்ன்னு!!

ஷகிலா: நான் லெட்டர் அனுப்ப மாட்டனே.. ஈ-மெயில் பண்ணுவேன், எஃப் மெயில் பண்ணுவேன், எஸ்.எம்.எஸ். பண்ணுவேன் கார்த்திகேயன் மாதிரி அறிவுத்தேடலோட கேள்வி கேட்காதீங்க!!
---------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, September 29, 2009

ரெண்டையும் யூஸ் பண்ணுங்க!! (-18)

--------------------------------------------------------------------------------------------------------------
நம்ம பல பேரு வாழ்க்கையில அவங்களுக்கு எல்லாம் செயல்பாடும் சரியா நடக்குதான்னு கவலை பட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா, இவங்க கவலை படுறதுனால.. என்னா ஆக போகுது? உன்னை போல் ஒருவன் பட தொடர் விளையாட்டை பதிவருங்க நிறுத்திட போறாங்களா?

அதுக்குதான் ஒரு தடவ தலைவர் ஒரு குட்டி கதை சொன்னாரு.. கத தெரிஞ்சவங்க இங்கயே பனாலாயிடுங்க! இல்லைங்ரவங்க ஸ்டெப் பார்வேர்ட்...

ஒரு ஊருல வயசான தாத்தா ஒருத்தவரு, துடுப்பு பயணப்படகு வச்சி ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு ஆட்களை விட்டு பொழப்பு நடத்திகிட்டு இருந்தாரு. அப்ப ஒரு பயணி, ஒரு துடப்புல "வேலை"ன்னு எழுதியிருக்கறதையும்.. மற்றொரு துடுப்புல "நம்பிக்கை"ன்னு எழுதியிருக்கிறதையும் பார்த்தான். அத பார்த்தவன் சும்மா இருப்பானா? உடனே தாத்தா... தாத்தா... விளக்கம் ப்ளீஸ்ன்னான்.

உடனே தாத்தா விளக்கம் கொடுக்குறதவிட செயல்முறை விளக்கம் கொடுக்கறேன் பாருன்னு சொல்லிட்டு... வேலைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, நம்பிக்கைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. படகு உடனே செக்கு மாட்டை போல ஒரே இடத்துல சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

அடுத்த கட்டமா நம்பிக்கைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, வேலைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. இப்பவும் படகு சுத்துச்சு, ஆனா எதிர்மறையான திசையில சுத்த ஆரம்பிச்சுடுச்சு. இப்பவும், அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

இதுலயிருந்து இன்னா தெரியுது? (உனக்கு வேலையில்லன் தெரியுதுன்னு இங்க சொல்லாதீங்க.. எங்க சொல்லனுமுன்னு உங்களுக்கே தெரியும்!)

என்னதான் கோயிலுக்கோ, சர்ச்சுகோ, மாஸ்குக்கோ போயி கடவுள்கிட்ட அழுது, உழுந்து புரண்டு, குனிஞ்சி வேண்டிகிட்டு வீட்டுக்கு வந்து நம்பிகையோட உக்காந்திருந்தா முன்னேறமுடியுமா? இல்லனா... மாடுபோல மாங்கு, மாங்குன்னு நம்பிகையில்லாம வேலையை மட்டும் முன்னேறமுடியுமா?? ரெண்டுமே ஒரு துடுப்பை வச்சி துடுப்பு போட்ட கதைதான்.

அதனால க.க.* (எ) ப.பெ.ப** என்ன சொல்றாருன்னா... வேலை செய்யாம நம்பிக்கையை வச்சிகிட்டு மட்டும் வாழ்க்கையில முன்னேற முடியாது! அதனால.. பெரியோர்களே, தாய்மார்களே கவலப்படுறத விட்டுட்டு... இரண்டு துடுப்புகளையும் வாழ்கைங்குற கடல்ல போட்டு வெற்றிகரமாக முன்னேறுங்கள்!!!!
--------------------------------------------------------------------------------------------------------------

* - கருத்கந்ததாமி
** - பஞ்சாயத்து பெரிய பன்னி

Saturday, September 19, 2009

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!




உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!

இறைவன் நம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!

Sunday, September 6, 2009

கலக்கல் - 3

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அரட்டை குறித்து பரட்டை:

பின்னூட்டம்
போடும்போதோ, சாட்டிங்கில அரட்ட அடிக்கும்போதோ ASL,LOL,ROTFL,A3,PRT போல நிறைய ஷாட் கட் வார்த்தை வச்சியிருக்காங்க நம்ம பயபுள்ளங்கோ.. இவங்க திங்க் பண்ணி இங்க் பண்ணதுல எனக்கு சில டவுட்டுங்க!

ASL - Age, Sex, Location
இதுதான் அதிகமா சாட்ல யூஸ் பண்ற வார்த்தைங்க.. அதாவது உள்ள பூத்தவுடனே கேட்டுடுவானுங்க ASL பிலீஸ்சுன்னு. எனக்கு என்ன டவுட்டுன்னா... முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா? அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க...

LOL - Laughing Out Loud
இத 3 வரிக்கு ஒரு தடவை டைப் அடிப்பாங்க. மொக்க ஜோக் சொன்னாலும் இதேதான்.. ஜோக்கு சொல்ல டிரை பண்ணாலும் இதேதான்!. இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இதையே ஆபீஸ்ல, வீட்டுல, பஸ்சுல செஞ்சா.. கூட இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க?

ROTFL - Rolling On The Floor Laughing
இத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க! (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல!) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு!? (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை!)

[ROTFL.jpg]

A3 - Anytime, Anywhere, Anyplace
எனக்கு தெரிஞ்ச A3-ன்னா.. பேப்பர் சைஸ்சுதான்! இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. எங்க வேணுனாலும், எந்த இடத்துல வேனாலும், எந்த நேரத்துல வேனாலும்.. என்ன சண்ட போட கூப்பிடுறானுங்கலோ?

PRT - பார்ட்டி
பள்ளு விளக்குனிங்களா? உடனே கேட்பாங்க PRT. ஏன்பா சாமிகளா.. அங்கதான் தொல்ல தாங்கலன்னு இங்க வந்தா இங்கேயுமாப்பா? ரைட்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்

ஒரு நாள் ஒருவன் ஆட்டோவுக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அவனிடம் பிச்சைகேட்கிறான். இந்த ஆளும் அவனை எப்படியல்லாமோ துரத்தி பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. உடனே ஐடியா செஞ்சி "தோபாரு.. நான் பைசா எல்லாம் தரமாட்டேன்.. உனக்கு என்ன வேணுமுன்னு கேளு, நான் அத வாங்கி தரேன்" ன்னு சொல்ல, "எனக்கு ஒரு கப் டீ வாங்கி குடுங்க போதும் சார்" ன்னு திரும்பி பதில் சொன்னான்.

உடனே நம்மாளு "இங்க டீ கடை எதுவும் இல்லியே.. சரி, இந்தா இதை பிடி" ன்னு சிகிரெட்டை எடுத்து கொடுக்க, "ஐய்யய்யோ! சிகிரெட் உடம்புக்கு கேடு" ன்னு சொன்னான் பிச்சை.

அப்படியான்னு நம்மாளு அதுக்கு அப்புறம் பாக்கேட்ல இருந்த குவாட்டரை எடுத்து "இதை குடிச்சி என்ஜாய் பண்ணு, போ!" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை "ஐய்யய்யோ! சரக்கடிச்சா.. மூளைக்கும், லிவருக்கும் பாதிப்பு வரும். எனக்கு வேனாம்" ன்னு சொன்னான்.

கடுப்பான நம்மாளு " சரி.. சரி.. நான் குதிரை ரேசுக்குதான் போறேன். அங்கவா! உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்" ன்னான். திரும்ப பிச்சை "வேண்டாம்! வேண்டாம்!! சூதாடரது தப்பு!!" ன்னு தம்புடிச்சு நின்னான்.

கடைசியா நம்மாளு "ஐயா சாமி! தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி "என்ன பாஸ்? என்னை போய் வீட்டுகெல்லாம்.. ஹி..ஹி..ஹி" ன்னு நெளிய.. நம்மாளு சொன்னானாம்...

"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தத்து பித்து:

௧. எப்பொழுது எல்லாம் வெற்றியின் சாவி என் கைகளில் கிடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பூட்டை யாராவது மாத்திடுறாங்க!

௨. பிழை செய்வது மனித இயல்பு, மன்னிக்கப்படுவது கம்பெனி பாலிசி இல்லை!!

௩. மது அருந்துவது பிரச்சனைக்கான தீர்வு இல்லை, பால் குடிச்சா மட்டும் மாறிடவா போகுது?

௪. ஒருவனுக்கு அவன் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய்! திரும்ப அவனுக்கு பிரச்சனை வரும்போது அவன் உன்னையே நினைப்பான்!!

௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
படிச்சதில் பிடிச்சது:

என் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்குள்ள கழிப்பறையில் எழுதியுள்ள வாக்கியங்களை படித்ததும் சிரித்துவிட்டேன். உங்களுக்காக தமிழில்..

குதிரை போல வாங்க!
திருடன் போல் உட்காருங்கள்!!
முடிந்ததும் ராஜநடை போடுங்கள்!!!

முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Sunday, August 30, 2009

கணிணி பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை!!

யார்யார் அதிகமான நேரம் கணிணிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் கவணிக்கவேண்டிய முக்கியமான தகவல் இது!

கீபோர்ட்டையும் மவுசையும் சரியான உயரம் மற்றும் திசையில் பயண்படுத்த தவறினால் "கார்பல் டனல் சின்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome)எனும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாக நேரிடும் அபாயம் உள்ளது.

கீழே தொகுக்கப்பட்டுள்ள படங்கள் கார்பல் டனல் சின்ட்ரோம் துன்பத்துக்கு ஆளான ஒருவரின் கை அறுவைச் சிகிச்சை புகைப்படங்கள்!






கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கீபோர்ட் மற்றும் மவுஸ்சை பயன்படுத்தக்கூடிய சரியான வழிமுறைகள்..






கார்பல் டனல் சின்ட்ரோம் வராமல் தடுக்க, கைகளுக்கான பயிற்சி முறை படங்கள்!!

இதை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கை செய்யுங்கள்... நன்றி!

Blog Widget by LinkWithin