Saturday, December 26, 2009

கலக்கல் - 5

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><>
பொறங்கால தூக்கி வச்சி வா கண்ணா!!

பதிவர் ‘கண்ணா’ நீநீநீநீண்ண்ண்டடடட 5 மாத கால இடைவேளைக்கு பின் எழுத துவக்கியிருக்கிறார்…அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……

வாடி.. வா...
<><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சல்யூட் ஃபார் மது & ஆனந்த் பிரகாஷ்

ருச்சிகா பலாத்கார வழக்குல ஹரியானா முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோருக்கு, 19 வருஷத்துக்கு பின்னால அவனுக்கு தண்டனை கிடைச்சது எல்லோரும் தெரியும். என்றாலும், அந்த தண்டனையை வாங்கி குடுக்க ருச்சிகாவோட தோழியான ஆராதனா குப்தா குடும்பத்தினரைதான் பாராட்ட தோனுதுங்க எனக்கு!

இவ்வளவு சீக்கிரமா (?) குடுத்த நீதியை பெற அவங்க கொடுத்த விலை என்னன்னனு தெரியுமா? ஆனந்த் பிரகாஷை (ஆராதனாவின் அப்பா) வேலையில் இருந்து சஸ்பண்ட் பண்ணியிருக்காங்க.. ஆராதனாவை காலேஜ் போகும்போது ரவுடிகள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. மது பிரகாஷை (ஆராதனாவின் அம்மா)வீடு புகுந்து மிரட்டி அடிச்சிருக்காங்க.. எல்லாத்துக்கும் மேல இவங்க 300 தடவைக்கும் மேல கோர்ட்டுக்கு அலைந்துதான் இந்த தீர்ப்பை, அந்த அல்லகைக்கு வாங்கிகுடுத்துருக்காங்க!!

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சோக்காமுல்ல??

2வது படிக்கும்போது வினோத்கிட்ட, டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்களாம்..

டீச்சர் : காந்திஜியோட பையன் யாரு?
வினோத் : தினேசன்
டீச்சர் : அடிங்.. இதை யாருடா சொல்லிகுடுத்தது உனக்கு?
வினோத் : L.K.G ல் இருந்து எல்லா மிஸ்சும்.. "காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>

அவதாரம் பார்த்த அவதார்

எல்லாரும் பாத்துட்டாங்கனு, ஒரு வழியா நானும் அவதாரை பாத்துட்டேங்க!! (அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??)

டெர்மினேட்டர், டைட்டானிக் கொடுத்த ஜேம்சா இப்டி எடுத்துயிருக்காரு?? தொங்கிபோன கதைக்கு.. ஜாக்கி குடுத்து நெம்பி இருக்காரு?? கிழவிக்கூட களவி ஆடுன மாதிரி எல்லாமே வேஸ்டா பூட்ச்சே நைனா!! இருந்தாலும் டெக்னாலஜி 1,2,3,4 க்காக பார்க்கலாம்.(நன்றி ஹாலிவுட் பாலு!)

1200 கோடி செலவு செஞ்சாங்கலாம் படத்துக்கு... அதுல ஒரு 120 ரூபா செலவு செஞ்சி, ஹீரோவுக்கு நல்லதா 4 டீ ஷர்ட் எடுத்து குடுத்துயிருக்கலாம்! கப்படிக்குது... படம் முழுக்க ஒரே டீ சர்ட்டுல வர்றாரு.. இதுக்குன்னே, ஜேம்ஸ் கேமரூனை கட்டிப்போட்டு தமிழ் படம் பாக்க வச்சிட்டு சொல்லனும்.. "பாத்தியில்ல?? எங்க ஹீரோங்க.. எப்டி ஒரே ஃப்ரேம்ல ஆறு டிரஸ்ல நடந்து வர்றாங்கன்னு?" திருந்துங்க சேம்சு!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
2010

2009-துல உங்களை எல்லாம் பல நேரங்கள்ல பின்னூட்டம் வழியாவும், பதிவு போட்டும்..

தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!
.
.
.
.
.
.
.
.
இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..
(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)

எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><>

Tuesday, December 22, 2009

ஐயிட்டம் 6... தள்ளிட்டுபோறது யாரு....


நீங்க
யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா? என்னது.. பாத்ததே இல்லியா? என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க! இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே!! இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு! என்சாய்...

இந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் (?????? ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம்! என்னங்கடா... நடக்குது இங்க?? இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க?? (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்!) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி"பப்பரப்பா"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது!!


ஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.

இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம்! நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல!. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க! ஏனோ.. கவுண்டமணி சொல்ற "குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்.." டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது!!



கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!

ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. ! திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு! எதுவாயிருந்தாலும்,

வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!

(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க?)

Sunday, December 13, 2009

பார்ட்டிஈஈஈஈஈஈஈ!!!

எங்க ஆஃபீஸ்ல அடிக்கடி பார்ட்டி குடுப்பாங்க.. (உடனே கிளம்பி வந்துடாதீங்க வேலை கேட்டுகிட்டு) ப்ராஜெக்ட் கிடைச்சா பார்ட்டி, ஸ்கிராப் வித்தா பார்ட்டி, ஆனுவல் பார்ட்டின்னு டிசைன் டிசைன்னா பார்ட்டி குடுபாங்க. இதுல பல பார்ட்டிஸ் துறை சம்பந்தப்பட்டதாவே இருக்குறதால, அதுல பார்த்த மூஞ்சயே பார்த்து பயப்பவேண்டியதாயிருக்கும்.. ஆனா, அதுல Annual பார்ட்டி மட்டும்தான் பல தளத்திலிருந்தும், சைட்டிலிருந்தும், அலுவலக கிளையிலிருந்தும் வருவாங்க என்பதால.. (புதுசு புதுசா ஃபிகர்கள் வருமுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாமோ?) அந்த பார்ட்டிக்கு மட்டும் தவறாம நாம ஆஜாராயிடுவாம்!!

party2.jpg picture by rkarasans party1.jpg picture by rkarasans

ஆமா... எங்க பெருசா கூப்ட்டுகிட்டு போயிட போறானுங்க? துபாய் சுற்றுலாவில் மிக முக்காத ஒன்றான அந்த பாலை பயணத்துக்குதான்! அதான் பாஸ்.. தமிழ்ல சொன்னா Desert Safari. ஏற்கனவே 2007ல ஒரு தடவை கூப்டுகிட்டு போயிருக்காங்க... மறுபடியும் 2009 அதே பா.ப வுக்கு கூப்பிட்டு போறாங்க. (ரொம்ப காசு கம்மியா கேக்குறதால மட்டும் இல்லை! இந்த 400 நாதாரிகளை அடைக்க, துபாயில வேற எடம் இல்லாதது கூட காரணமாய் இருக்கலாம்!!) ஆப்பீஸ்ல 400 பேருக்கு 60 டயோட்டா லாண்ட் கிரூஸரை ரெடி பண்ணியிருந்தாங்க. அதுல அப்படியே ஏறி அலுங்காம குலுங்காம முதல் சீட்டுல எடம் புடிச்சிட்டேன். (எத்தினி பஸ்சுல வேட்டிய அவுத்துபோட்டு எடத்தை புடிச்சிருப்போம்! நம்மகிட்டயேவா?)
IMAG0893.jpg picture by rkarasans

ஹெட் ஆஃபீஸிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரத்துல ஹத்தா போற வழியில இருக்குற அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். எங்க வண்டிய ஒட்டுன ஆளு ஒரு பிலிஃப்பைனி, என்னைய பாத்ததுமே கேட்டான் "ஆர் யூ ஃப்ரம் டமில்நாட்டூ?" அப்படின்னு..(எப்படிதான் மூஞ்ச பாத்து கண்டுபுடிக்கிறாய்ய்ய்ய்ங்கலேலலா?). அவனுக்கு என்ன ஆத்திரமோ தெர்லிங்கண்ணா... அங்க ஆரம்பிச்சான்யா ரோலர் கோஸ்டர் வேலையை... படார்ன்னு மேல ஏத்துறான், சடார்ன்னு கீழ எறக்குறான், விர்ருன்னு சுத்துறான், சர்ருன்னு சருக்குறான்.. (ஸ்ஸ்ஸ்ப்பா! எவ்வளவு நேரந்தான் நானும் அடக்குறது? அட.. பயத்தைதாங்க!!). இதுல வேற, அவன் மேலிருந்து கீழே இறக்கும்போது... ""ரஜினிகாநந்ந்த்த்தா.. அய்ய்யயோ... அம்மமமமாா... ராஸ்கோலலா.."" அப்டின்னு ரிப்பிட்டேஷனா கத்தி கடுப்பாக்குறான்! (இந்த நாலு வார்த்தையை அந்த பிலிஃப்பைனிக்கு கத்துகுடுத்தவன் வாயில சங்குசக்கரத்தை கொளுத்தி போட..)
party4.jpg picture by rkarasans Party13.jpg picture by rkarasans party8.jpg picture by rkarasans

ஒரு வழியா Sand Dune Bashing முடிச்சிட்டு, ஓட்டகத்தை மேய்க்க... சாரி! ஒரு ஃப்லோவுல உண்மை வந்துடுச்சு.. ஒட்டகத்தில் ஏறி சவரி செய்யிற இடத்துல விட்டாங்க.. அதுக்கு பக்கதிலேயே கம்பெனி ஏற்பாடு செஞ்சிருந்த கேம்ப்பும் இருந்தது! சரி.. ஒட்டகத்துல ஒரு ரைடு போயிட்டு வரலாமுன்னு நினைச்சிகிட்டு 'டெரரா மூஞ்ச' வச்சிகிட்டு ஒட்டகத்து பக்கத்துல போனேன்.. அது நம்மல பார்த்துட்டு 'பிஞ்சு மூஞ்ச' வச்சிகிட்டு வந்துடாருன்னு தலையை வெடுக்குன்னு திருப்பிகிச்சு! (ரைட்டு.. சரி விடுன்னு போறத்துக்கு நாங்க என்ன 'சூடு சொரனை' உள்ளவங்களான்னு, டப்புன்னு முதுகுமேல ஏறிட்டோமுல்ல? )
camel1.jpg picture by rkarasans camel2.jpg picture by rkarasans

அதை முடிச்சிட்டு திரும்புனா, அங்க ஒரு இடத்துல கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க.. என்னங்கடா இது? வித்தை ஏதாச்சும் காட்டுறாங்களான்னு போயி பார்த்தா.. Sand Scooterரை வச்சி படம் காட்டிகிட்டு இருந்தாங்க! சரின்னு இதையும் ஏன் விடுனுமுன்னு.. நண்பன் நெஞ்ச நக்கி, ஓசியில டிக்கெட்டை அண்டா போட்டேன்! (பிராக்கெட் போட்டா தப்பிச்சிடும் பயபுள்ள.. அதான் அண்டா!!) டிக்கெட் வாங்குன கொஞ்ச நேரத்தில் பைக்கை தந்துவிட்டார்கள். ஒரு 10 ரவுண்ட் அடிச்சிருப்பேன் ஒரு பயபுள்ள மட்டும் "குறுகுறுன்னு" கூறுபோடுற மாதிரி என்னையே பாத்துகிட்டு இருந்துது.. என்னடா வம்பா போச்சி? வண்டி ஓட்டுறது ஒரு குத்தமாடா!-ன்னு நினைசிகிட்டு திரும்ப வண்டிய குடுத்துட்டு வந்து, என் நண்பன்கிட்ட ஏன்டா அவன் அப்டி பாக்குறான்னு கேட்டேன்.. அதுக்கு என் நண்பன் "டேய் நாதாரி! வண்டிய மேடு மேல ஏத்த சொன்னா.. நிக்கிறவன் காலு மேல ஏத்திட்டு, பேச்ச பாரு! பாக்குறதோட விட்டானே.. பாடை கட்டாம!!" (அவன் கத்தவேயில்ல? ஒருவேளை லைட்டா ஏத்தியிருபேனோ?)
Bike1.jpg picture by rkarasans Bike2.gif picture by rkarasans

அப்புறம் என்ன பண்றதுன்னு கேம்ப் உள்ளார போனோம்.. போகும்போதே குலுக்கலுக்கான சீட்டை எழுதி போட்டுட்டு... நேரா எங்க போயிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க? கரைட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே! "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.. நான் ஒன்று அல்ல 7 பியர்ரு குடிப்பேனே!" My Favorite Austrian Beer CORONA பார்த்ததுக்கு அப்புறம், எனக்கு பக்கத்துல இருக்குற எதுவுமே என் கண்ணுக்கு தெரியலை.. கடைசியா பெல்லி டான்சரை பார்த்தவுடனேதான் எனக்கு கண்ணே தெரிஞ்சிது. ஒரு பக்கம் பாம்பு, பல்லியை தவிர சாப்பிட எல்லாம் வச்சிருக்க.. ஒரு பக்கம் போட்டிகளும், விளையாட்டுகளும் ஸ்டேஜ்ல நடக்க.. எங்க க்ரூப் மட்டும் எஸ்சாகி, அரேபிய பைப் சீஷாவை (ஷீலா தப்பா படிக்காதீங்க) இழுத்துகிட்டு இருந்தோம்!!

belly1.jpg picture by rkarasans belly2.jpg picture by rkarasans

இதுவே மெகா மொக்கையாகிடுச்சு.. இதுக்கு மேலையும் எழுதுனா நீங்க படிக்கவும் மாட்டீங்க.. (இல்லாட்டினா மட்டும் படிச்சிடுதான்...) அதனால, கடைசிய ஒன்னு மட்டும் சொல்லாம போனா.. இந்த பதிவு முழுமையடையாது! அதாங்க.. பெல்லி டான்சு!! எல்லாருமே பெல்லி டான்சரை "ஆஆஆஆஆஆஆ" ன்னு பார்த்துகிட்டு இருக்க சொல்லோ... நான் மட்டும் பக்கத்துல உள்ள ஈரோப்பியன் ஃபிகரை "ஈஈஈஈஈஈஈஈஈ"ன்னு பார்த்துகிட்டு இருந்தேன்னு யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க!!

Tuesday, December 8, 2009

லொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?











இந்த மொக்க கமெண்டுகளை பார்த்து யாரும் காண்டாக வேண்டாம், அப்டி மீறியும் உங்களுக்கு கோபமோ.. கம்பமோ வந்துச்சின்னா... உங்க காசை போட்டு போன் பண்ணி திட்டுறதை விட, நேர்ல பார்க்கும்போது முதுகுல டின்னோ, கேனோ, பேரலையோ கட்டிடுங்க!!
Blog Widget by LinkWithin