Tuesday, September 29, 2009

ரெண்டையும் யூஸ் பண்ணுங்க!! (-18)

--------------------------------------------------------------------------------------------------------------
நம்ம பல பேரு வாழ்க்கையில அவங்களுக்கு எல்லாம் செயல்பாடும் சரியா நடக்குதான்னு கவலை பட்டுகிட்டே இருப்பாங்க. ஆனா, இவங்க கவலை படுறதுனால.. என்னா ஆக போகுது? உன்னை போல் ஒருவன் பட தொடர் விளையாட்டை பதிவருங்க நிறுத்திட போறாங்களா?

அதுக்குதான் ஒரு தடவ தலைவர் ஒரு குட்டி கதை சொன்னாரு.. கத தெரிஞ்சவங்க இங்கயே பனாலாயிடுங்க! இல்லைங்ரவங்க ஸ்டெப் பார்வேர்ட்...

ஒரு ஊருல வயசான தாத்தா ஒருத்தவரு, துடுப்பு பயணப்படகு வச்சி ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு ஆட்களை விட்டு பொழப்பு நடத்திகிட்டு இருந்தாரு. அப்ப ஒரு பயணி, ஒரு துடப்புல "வேலை"ன்னு எழுதியிருக்கறதையும்.. மற்றொரு துடுப்புல "நம்பிக்கை"ன்னு எழுதியிருக்கிறதையும் பார்த்தான். அத பார்த்தவன் சும்மா இருப்பானா? உடனே தாத்தா... தாத்தா... விளக்கம் ப்ளீஸ்ன்னான்.

உடனே தாத்தா விளக்கம் கொடுக்குறதவிட செயல்முறை விளக்கம் கொடுக்கறேன் பாருன்னு சொல்லிட்டு... வேலைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, நம்பிக்கைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. படகு உடனே செக்கு மாட்டை போல ஒரே இடத்துல சுத்த ஆரம்பிச்சிடுச்சு.. அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

அடுத்த கட்டமா நம்பிக்கைன்னு எழுதியிருந்த துடுப்பை தண்ணியில போட்டுட்டு, வேலைன்னு எழுதியிருக்கிற துடுப்பை மட்டும் வைச்சி துடுப்பு போட்டாரு. இப்பவும் படகு சுத்துச்சு, ஆனா எதிர்மறையான திசையில சுத்த ஆரம்பிச்சுடுச்சு. இப்பவும், அந்த இடத்தைவிட்டு முன்னேறவேயில்ல!

இதுலயிருந்து இன்னா தெரியுது? (உனக்கு வேலையில்லன் தெரியுதுன்னு இங்க சொல்லாதீங்க.. எங்க சொல்லனுமுன்னு உங்களுக்கே தெரியும்!)

என்னதான் கோயிலுக்கோ, சர்ச்சுகோ, மாஸ்குக்கோ போயி கடவுள்கிட்ட அழுது, உழுந்து புரண்டு, குனிஞ்சி வேண்டிகிட்டு வீட்டுக்கு வந்து நம்பிகையோட உக்காந்திருந்தா முன்னேறமுடியுமா? இல்லனா... மாடுபோல மாங்கு, மாங்குன்னு நம்பிகையில்லாம வேலையை மட்டும் முன்னேறமுடியுமா?? ரெண்டுமே ஒரு துடுப்பை வச்சி துடுப்பு போட்ட கதைதான்.

அதனால க.க.* (எ) ப.பெ.ப** என்ன சொல்றாருன்னா... வேலை செய்யாம நம்பிக்கையை வச்சிகிட்டு மட்டும் வாழ்க்கையில முன்னேற முடியாது! அதனால.. பெரியோர்களே, தாய்மார்களே கவலப்படுறத விட்டுட்டு... இரண்டு துடுப்புகளையும் வாழ்கைங்குற கடல்ல போட்டு வெற்றிகரமாக முன்னேறுங்கள்!!!!
--------------------------------------------------------------------------------------------------------------

* - கருத்கந்ததாமி
** - பஞ்சாயத்து பெரிய பன்னி

Saturday, September 19, 2009

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!




உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்!!!

இறைவன் நம் எல்லோருக்கும் நல்லதையே செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!

Sunday, September 6, 2009

கலக்கல் - 3

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அரட்டை குறித்து பரட்டை:

பின்னூட்டம்
போடும்போதோ, சாட்டிங்கில அரட்ட அடிக்கும்போதோ ASL,LOL,ROTFL,A3,PRT போல நிறைய ஷாட் கட் வார்த்தை வச்சியிருக்காங்க நம்ம பயபுள்ளங்கோ.. இவங்க திங்க் பண்ணி இங்க் பண்ணதுல எனக்கு சில டவுட்டுங்க!

ASL - Age, Sex, Location
இதுதான் அதிகமா சாட்ல யூஸ் பண்ற வார்த்தைங்க.. அதாவது உள்ள பூத்தவுடனே கேட்டுடுவானுங்க ASL பிலீஸ்சுன்னு. எனக்கு என்ன டவுட்டுன்னா... முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா? அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க...

LOL - Laughing Out Loud
இத 3 வரிக்கு ஒரு தடவை டைப் அடிப்பாங்க. மொக்க ஜோக் சொன்னாலும் இதேதான்.. ஜோக்கு சொல்ல டிரை பண்ணாலும் இதேதான்!. இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இதையே ஆபீஸ்ல, வீட்டுல, பஸ்சுல செஞ்சா.. கூட இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க?

ROTFL - Rolling On The Floor Laughing
இத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க! (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல!) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு!? (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை!)

[ROTFL.jpg]

A3 - Anytime, Anywhere, Anyplace
எனக்கு தெரிஞ்ச A3-ன்னா.. பேப்பர் சைஸ்சுதான்! இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. எங்க வேணுனாலும், எந்த இடத்துல வேனாலும், எந்த நேரத்துல வேனாலும்.. என்ன சண்ட போட கூப்பிடுறானுங்கலோ?

PRT - பார்ட்டி
பள்ளு விளக்குனிங்களா? உடனே கேட்பாங்க PRT. ஏன்பா சாமிகளா.. அங்கதான் தொல்ல தாங்கலன்னு இங்க வந்தா இங்கேயுமாப்பா? ரைட்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்

ஒரு நாள் ஒருவன் ஆட்டோவுக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அவனிடம் பிச்சைகேட்கிறான். இந்த ஆளும் அவனை எப்படியல்லாமோ துரத்தி பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. உடனே ஐடியா செஞ்சி "தோபாரு.. நான் பைசா எல்லாம் தரமாட்டேன்.. உனக்கு என்ன வேணுமுன்னு கேளு, நான் அத வாங்கி தரேன்" ன்னு சொல்ல, "எனக்கு ஒரு கப் டீ வாங்கி குடுங்க போதும் சார்" ன்னு திரும்பி பதில் சொன்னான்.

உடனே நம்மாளு "இங்க டீ கடை எதுவும் இல்லியே.. சரி, இந்தா இதை பிடி" ன்னு சிகிரெட்டை எடுத்து கொடுக்க, "ஐய்யய்யோ! சிகிரெட் உடம்புக்கு கேடு" ன்னு சொன்னான் பிச்சை.

அப்படியான்னு நம்மாளு அதுக்கு அப்புறம் பாக்கேட்ல இருந்த குவாட்டரை எடுத்து "இதை குடிச்சி என்ஜாய் பண்ணு, போ!" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை "ஐய்யய்யோ! சரக்கடிச்சா.. மூளைக்கும், லிவருக்கும் பாதிப்பு வரும். எனக்கு வேனாம்" ன்னு சொன்னான்.

கடுப்பான நம்மாளு " சரி.. சரி.. நான் குதிரை ரேசுக்குதான் போறேன். அங்கவா! உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்" ன்னான். திரும்ப பிச்சை "வேண்டாம்! வேண்டாம்!! சூதாடரது தப்பு!!" ன்னு தம்புடிச்சு நின்னான்.

கடைசியா நம்மாளு "ஐயா சாமி! தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி "என்ன பாஸ்? என்னை போய் வீட்டுகெல்லாம்.. ஹி..ஹி..ஹி" ன்னு நெளிய.. நம்மாளு சொன்னானாம்...

"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தத்து பித்து:

௧. எப்பொழுது எல்லாம் வெற்றியின் சாவி என் கைகளில் கிடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பூட்டை யாராவது மாத்திடுறாங்க!

௨. பிழை செய்வது மனித இயல்பு, மன்னிக்கப்படுவது கம்பெனி பாலிசி இல்லை!!

௩. மது அருந்துவது பிரச்சனைக்கான தீர்வு இல்லை, பால் குடிச்சா மட்டும் மாறிடவா போகுது?

௪. ஒருவனுக்கு அவன் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய்! திரும்ப அவனுக்கு பிரச்சனை வரும்போது அவன் உன்னையே நினைப்பான்!!

௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
படிச்சதில் பிடிச்சது:

என் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்குள்ள கழிப்பறையில் எழுதியுள்ள வாக்கியங்களை படித்ததும் சிரித்துவிட்டேன். உங்களுக்காக தமிழில்..

குதிரை போல வாங்க!
திருடன் போல் உட்காருங்கள்!!
முடிந்ததும் ராஜநடை போடுங்கள்!!!

முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Blog Widget by LinkWithin