Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

Saturday, December 26, 2009

கலக்கல் - 5

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><>
பொறங்கால தூக்கி வச்சி வா கண்ணா!!

பதிவர் ‘கண்ணா’ நீநீநீநீண்ண்ண்டடடட 5 மாத கால இடைவேளைக்கு பின் எழுத துவக்கியிருக்கிறார்…அவரை வரவேற்போம்… குனிய வச்சி கும்மியடிப்போம்... நிறைய விஷங்களையும், அனுபவங்களையும் தமிழ்கூறும் (கூறு போடும்!!) எங்களை போல வலைப்பதிவர்களுக்கு தர வேண்டும் என வேண்டுவோம்….வாழ்த்துவோம்……

வாடி.. வா...
<><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சல்யூட் ஃபார் மது & ஆனந்த் பிரகாஷ்

ருச்சிகா பலாத்கார வழக்குல ஹரியானா முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோருக்கு, 19 வருஷத்துக்கு பின்னால அவனுக்கு தண்டனை கிடைச்சது எல்லோரும் தெரியும். என்றாலும், அந்த தண்டனையை வாங்கி குடுக்க ருச்சிகாவோட தோழியான ஆராதனா குப்தா குடும்பத்தினரைதான் பாராட்ட தோனுதுங்க எனக்கு!

இவ்வளவு சீக்கிரமா (?) குடுத்த நீதியை பெற அவங்க கொடுத்த விலை என்னன்னனு தெரியுமா? ஆனந்த் பிரகாஷை (ஆராதனாவின் அப்பா) வேலையில் இருந்து சஸ்பண்ட் பண்ணியிருக்காங்க.. ஆராதனாவை காலேஜ் போகும்போது ரவுடிகள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. மது பிரகாஷை (ஆராதனாவின் அம்மா)வீடு புகுந்து மிரட்டி அடிச்சிருக்காங்க.. எல்லாத்துக்கும் மேல இவங்க 300 தடவைக்கும் மேல கோர்ட்டுக்கு அலைந்துதான் இந்த தீர்ப்பை, அந்த அல்லகைக்கு வாங்கிகுடுத்துருக்காங்க!!

""அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.""

நட்புக்காக போராடி நீதியை நிலைநாட்டிய ஆராதனா குடும்பத்துக்கு எல்லோர் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
சோக்காமுல்ல??

2வது படிக்கும்போது வினோத்கிட்ட, டீச்சர் ஒரு கேள்வி கேட்டாங்களாம்..

டீச்சர் : காந்திஜியோட பையன் யாரு?
வினோத் : தினேசன்
டீச்சர் : அடிங்.. இதை யாருடா சொல்லிகுடுத்தது உனக்கு?
வினோத் : L.K.G ல் இருந்து எல்லா மிஸ்சும்.. "காந்தி இஸ் பாதர் ஆஃப் தினேசன்" (தி நேஷன்)ன்னு சொன்னாங்கல்ல?? மறந்துடுவோமா??

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>

அவதாரம் பார்த்த அவதார்

எல்லாரும் பாத்துட்டாங்கனு, ஒரு வழியா நானும் அவதாரை பாத்துட்டேங்க!! (அம்மணமான திரியிற ஊருல.. கோமணம் கட்டுனவன் கோமாளி ஆகிட கூடாதுல்ல??)

டெர்மினேட்டர், டைட்டானிக் கொடுத்த ஜேம்சா இப்டி எடுத்துயிருக்காரு?? தொங்கிபோன கதைக்கு.. ஜாக்கி குடுத்து நெம்பி இருக்காரு?? கிழவிக்கூட களவி ஆடுன மாதிரி எல்லாமே வேஸ்டா பூட்ச்சே நைனா!! இருந்தாலும் டெக்னாலஜி 1,2,3,4 க்காக பார்க்கலாம்.(நன்றி ஹாலிவுட் பாலு!)

1200 கோடி செலவு செஞ்சாங்கலாம் படத்துக்கு... அதுல ஒரு 120 ரூபா செலவு செஞ்சி, ஹீரோவுக்கு நல்லதா 4 டீ ஷர்ட் எடுத்து குடுத்துயிருக்கலாம்! கப்படிக்குது... படம் முழுக்க ஒரே டீ சர்ட்டுல வர்றாரு.. இதுக்குன்னே, ஜேம்ஸ் கேமரூனை கட்டிப்போட்டு தமிழ் படம் பாக்க வச்சிட்டு சொல்லனும்.. "பாத்தியில்ல?? எங்க ஹீரோங்க.. எப்டி ஒரே ஃப்ரேம்ல ஆறு டிரஸ்ல நடந்து வர்றாங்கன்னு?" திருந்துங்க சேம்சு!!

><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><>
2010

2009-துல உங்களை எல்லாம் பல நேரங்கள்ல பின்னூட்டம் வழியாவும், பதிவு போட்டும்..

தெந்தரவு செஞ்சிருக்கேன்..., பிரச்சனை கொடுத்துயிருக்கேன்.., எரிச்சல் படுத்தியிருக்கேன்..., கடுப்பை கெளப்பியிருக்கேன்..., உயிரை வாங்கியிருக்கேன்..., மொக்க போட்டுயிருக்கேன்..., ஆனா, இந்த ஆண்டு முடிவுல ஒன்னு சொல்லிக்க ஆசப்படுறேன்!!
.
.
.
.
.
.
.
.
இதையேதான் 2010துலேயும் செய்யபோறேன்... ஹி.. ஹா.. ஹி.. ஊஊகு.. ஏஹகே.. ஓஹோஹோ..
(அட பஞ்ச பரதேசி பிக்காலி பயலுவோலா.. எவண்டா செருப்ப வீசுனனனனது?)

எல்லா அன்பர்களுக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
><><><><><><><><><><><><><><><>><><><><><><><><><><><><><><><>><><><>

Wednesday, November 11, 2009

கலக்கல் - 4

************************************************************************************
நீங்களே சொல்லுங்க.. சரியா? தப்பா?

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு இந்தியன் ஏர்லைன்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 4,000 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு ஏஐஜியில பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 3,500 ரூபாய்!

1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு லேமென் பிரதர்ஸ் பங்கு வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு அதோட மதிப்பு 0,000 ரூபாய்!

ஆனா 1 வருஷத்துக்கு முன்னாடி நீங்க 1,00,000 ரூபாய்க்கு டின்-பீர் மொத்தமா வாங்கியிருந்தீங்கன்னா... இன்னைக்கு குடிச்சிட்டு பாக்கி உள்ள அலுமினிய டின்னை எடைக்கு போட்டா.. அதோட மதிப்பு 5,200 ரூபாய்! பீருக்கு பீரும் கிடைச்சுது.. காசுக்கு காசும் கிடைச்சுது!! எப்பூடி???

(என்னாது? ... ரைட்டு!... சரி விடு... அட! ஓரமா துப்புறறறது...?)

************************************************************************************
கேனத்தனமானதுதான்... ஆனா, உண்மை!

இதை
படிக்கிற எல்லாரும் கண்டிப்பா இதை செஞ்சு பாக்கணும்! சொன்னா நம்புங்க.. இது நா ஆபீஸ்ல சும்மா இருந்த நேரத்துல கண்டுபுடிச்சது இல்ல! இல்ல!! இல்ல!!!

நீங்க செய்ய வேண்டியது.. ஒரு நாற்காலியில உக்காருங்க. வலது பக்க காலை தூக்குங்கள். அப்படியே கிளாக்வைஸ் (Clockwise) பக்கமாக சுத்துங்க! அதே நேரம் உங்க வலது கைய்யால அப்படியே காத்துல நம்பர் 6 எழுத முயற்சி செய்யுங்க! இப்படி செய்யும்போது... உங்க கால் சுத்தும் திசை தானாக மாறும் பாருங்க!! (இதெல்லாம் ஒரு பொழப்பு...)

************************************************************************************
ரிவீட் மேலாண்மை

ஒருகா.. கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ் மூணு பேரும் ஆட்டோவுல போயிகின்னு இருக்க சொல்லோ... ஆட்டோ கன்டமாகி... கமன்டலம் பொளந்து மூணு பேரும் மேல பூட்டாங்கோ!!

அங்க நம்ம "டெர்மினேட்டர் எமன்" ரெடியா இருந்தாரு. மூணு பேரையும் கூப்பிட்டு... ராமதாசையும், ஜெவையும் சொர்க்கத்துக்கு போங்கன்னு சொல்லிட்டு, அவரு முன்னாடியே முடிவு செஞ்ச மாதிரி கலைஞரை நரகத்துக்கு போக சொல்லிட்டாரு!

க.மு.க வுக்கு இதுல உடன்பாடு இல்ல.. உடனே அவரு எமனை பார்த்து "ஏன்யா.. இந்த பாரபட்சம் உனக்கு? நாங்க மூணு பேருமே அரசியல்வாதி.. மூணு பேருமே ஊழல் பண்ணியிருக்கோம்.. மூணு பேருமே பொதுமக்களை ஏமாத்தியிருக்கோம்! இதுல.. ஏன் என்னா மயி... க்கு என்னை மட்டும் நரகத்துக்கு அனுப்புற?" அப்டின்னு எகிற ஆரம்பிச்சு மூணு பேருக்குமே பரீட்சை வைய்யி.. யாரு பாஸ் ஆகுறாங்கலோ அவங்க சொர்கத்துக்கும், ஃபெயில் ஆகுறவங்க நரகத்துக்கும் போகட்டும் ன்னு ஆட்சியில இருந்த தெனாவட்டுல கருத்து சொன்னாரு!


உடனே எமனும் ஒத்துகிட்டு முதல்ல இங்கலீஷ் டெஸ்ட்டு வச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "இந்தியாவுக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவரும் கரைக்டா சொல்லிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு் "இங்லாந்துக்கு" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு, அவங்களும் கரைக்டா சொல்லிட்டாங்க! மூணாவது நம்மாளை கூப்பிட்டு """செக்காஸ்லோவியாவுக்கு""" ஸ்பெல்லிங் சொல்ல சொன்னாரு... அதுக்கு நம்மாளு "செல்லாது.. செல்லாது.. ஒரு தமிழனை பார்த்து இங்கலிஷ்ல கேள்வி கேட்டு அவமானப்படுத்துறீங்களா? ம்.ம்..அடுத்த டெஸ்ட்டுக்கு போங்க ன்னாரு!

அடுத்தது தமிழ்ல பரீட்சை வச்சாரு டெர்மினேட்டரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு "நாய் எப்டி குரைக்கும்"?ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'ளொள்.. ளொள்'ன்னு குரைக்கும்ன்னு கரைக்டா எழுதிட்டாரு! அடுத்து ஜெவை கூப்பிட்டு "பூணை எப்டி கத்தும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு, அவரும் 'மியாவ்.. மியாவ்'ன்னு கத்துமுன்னு கரைக்டா எழுதிட்டாங்க.. மூணாவது நம்மாளை கூப்பிட்டு "யானை எப்டி பிளிரும்?"ன்னு எழுதி காட்ட சொன்னாரு.. ''''அடங்கொன்னியா''''..ன்னு முழிச்சிட்டு பெயிலா பூட்டாரு!!

கடுப்பான க.மு.க.. "யோவ் நான் வரலாறு பாடத்துல புலி.. அதுல வைய்யிய்யா டெஸ்டைன்னாரு"!! உடனே எமனும் வரலாறு பாடத்துல பரீட்சையை ஆரம்பிச்சாரு.. முதல்ல ராமதாச கூப்பிட்டு 'இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைச்சிது?' ன்னு கேட்க, அவரு "1947" ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாரு! இரண்டாவது ஜெவை கூப்பிட்டு 'இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க எத்தனை பேரு உயிரை தியாகம் செஞ்சாங்க?'ன்னு கேட்க, அவங்களும் "2 லட்சம் பேரு"ன்னு கரைக்டா சொல்லி பாஸாயிட்டாங்க! அடுத்து நம்மாளு முறை.. எமன் அப்படியே திரும்பி.. "அந்த 2 லட்சம் பேரோட அட்ரசையும் சொல்லு" ன்னு கேட்டாரு! நம்மாளு "ரைட்டு.. வழிய சொல்லு கிளம்புறேன், நரகத்துக்கு" ன்னு து தூக்கி தோ போட்டுட்டு கிளம்பிட்டாரு..!

.க.- உங்க மேனேஜ்மென்ட் உங்களை குனிய வச்சி கும்மியடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா.... தப்பிக்க முடியாதுடியோவ்..!!!
************************************************************************************
வளர்ச்சியால் வீழ்ச்சி

வளர்ந்தது விஞ்ஞானம்..
சுருங்கியது நேரமும், தூரமும்
கூடவே உறவும், உணர்வும்!!
************************************************************************************

Sunday, September 6, 2009

கலக்கல் - 3

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அரட்டை குறித்து பரட்டை:

பின்னூட்டம்
போடும்போதோ, சாட்டிங்கில அரட்ட அடிக்கும்போதோ ASL,LOL,ROTFL,A3,PRT போல நிறைய ஷாட் கட் வார்த்தை வச்சியிருக்காங்க நம்ம பயபுள்ளங்கோ.. இவங்க திங்க் பண்ணி இங்க் பண்ணதுல எனக்கு சில டவுட்டுங்க!

ASL - Age, Sex, Location
இதுதான் அதிகமா சாட்ல யூஸ் பண்ற வார்த்தைங்க.. அதாவது உள்ள பூத்தவுடனே கேட்டுடுவானுங்க ASL பிலீஸ்சுன்னு. எனக்கு என்ன டவுட்டுன்னா... முதல் தடவையா யாரையாவது பாக்கும்போது இந்த கேள்வியை கேட்டுயிருக்கீங்களா? அப்படி கேட்டதுனால நடந்ததை கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க...

LOL - Laughing Out Loud
இத 3 வரிக்கு ஒரு தடவை டைப் அடிப்பாங்க. மொக்க ஜோக் சொன்னாலும் இதேதான்.. ஜோக்கு சொல்ல டிரை பண்ணாலும் இதேதான்!. இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இதையே ஆபீஸ்ல, வீட்டுல, பஸ்சுல செஞ்சா.. கூட இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க?

ROTFL - Rolling On The Floor Laughing
இத நாம ரொம்ப சீரியசா பேசும்போது சொல்லுவாங்க! (நமக்குதான் சீரியஸ். அவங்களுக்கு இல்ல!) இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா... இத நெனைச்சி பாக்கவே கொடூரமாயில்ல இருக்கு!? (படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை!)

[ROTFL.jpg]

A3 - Anytime, Anywhere, Anyplace
எனக்கு தெரிஞ்ச A3-ன்னா.. பேப்பர் சைஸ்சுதான்! இவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. எங்க வேணுனாலும், எந்த இடத்துல வேனாலும், எந்த நேரத்துல வேனாலும்.. என்ன சண்ட போட கூப்பிடுறானுங்கலோ?

PRT - பார்ட்டி
பள்ளு விளக்குனிங்களா? உடனே கேட்பாங்க PRT. ஏன்பா சாமிகளா.. அங்கதான் தொல்ல தாங்கலன்னு இங்க வந்தா இங்கேயுமாப்பா? ரைட்டு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கெட்ட பழக்கம் இல்லாத மனிதன்

ஒரு நாள் ஒருவன் ஆட்டோவுக்காக காத்திருந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அவனிடம் பிச்சைகேட்கிறான். இந்த ஆளும் அவனை எப்படியல்லாமோ துரத்தி பார்க்கிறான், ஆனால் முடியவில்லை. உடனே ஐடியா செஞ்சி "தோபாரு.. நான் பைசா எல்லாம் தரமாட்டேன்.. உனக்கு என்ன வேணுமுன்னு கேளு, நான் அத வாங்கி தரேன்" ன்னு சொல்ல, "எனக்கு ஒரு கப் டீ வாங்கி குடுங்க போதும் சார்" ன்னு திரும்பி பதில் சொன்னான்.

உடனே நம்மாளு "இங்க டீ கடை எதுவும் இல்லியே.. சரி, இந்தா இதை பிடி" ன்னு சிகிரெட்டை எடுத்து கொடுக்க, "ஐய்யய்யோ! சிகிரெட் உடம்புக்கு கேடு" ன்னு சொன்னான் பிச்சை.

அப்படியான்னு நம்மாளு அதுக்கு அப்புறம் பாக்கேட்ல இருந்த குவாட்டரை எடுத்து "இதை குடிச்சி என்ஜாய் பண்ணு, போ!" ன்னு சொன்னான். அதுக்கு பிச்சை "ஐய்யய்யோ! சரக்கடிச்சா.. மூளைக்கும், லிவருக்கும் பாதிப்பு வரும். எனக்கு வேனாம்" ன்னு சொன்னான்.

கடுப்பான நம்மாளு " சரி.. சரி.. நான் குதிரை ரேசுக்குதான் போறேன். அங்கவா! உனக்கும் சில டிக்கேட் வாங்கி தர்ரேன், உனக்கு அதிர்ஷ்டம் இருந்தா பணம் கிடைக்கும்" ன்னான். திரும்ப பிச்சை "வேண்டாம்! வேண்டாம்!! சூதாடரது தப்பு!!" ன்னு தம்புடிச்சு நின்னான்.

கடைசியா நம்மாளு "ஐயா சாமி! தயவு செஞ்சி என் வீட்டுகாவது வாய்யா" ன்னு கெஞ்ச.. பிச்சை ஆச்சரியமாகி "என்ன பாஸ்? என்னை போய் வீட்டுகெல்லாம்.. ஹி..ஹி..ஹி" ன்னு நெளிய.. நம்மாளு சொன்னானாம்...

"இல்லப்பா! என் பொண்டாட்டி எப்போதும் கேட்டுகிட்டே இருப்பா.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆளு பார்க்க எப்படி இருப்பான்னு?"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தத்து பித்து:

௧. எப்பொழுது எல்லாம் வெற்றியின் சாவி என் கைகளில் கிடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பூட்டை யாராவது மாத்திடுறாங்க!

௨. பிழை செய்வது மனித இயல்பு, மன்னிக்கப்படுவது கம்பெனி பாலிசி இல்லை!!

௩. மது அருந்துவது பிரச்சனைக்கான தீர்வு இல்லை, பால் குடிச்சா மட்டும் மாறிடவா போகுது?

௪. ஒருவனுக்கு அவன் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய்! திரும்ப அவனுக்கு பிரச்சனை வரும்போது அவன் உன்னையே நினைப்பான்!!

௫. வெற்றி பெற்ற அனைத்து பெண்கள் பின்னாலும், வியப்படைந்த ஆண் கண்டிப்பா இருப்பான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
படிச்சதில் பிடிச்சது:

என் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்குள்ள கழிப்பறையில் எழுதியுள்ள வாக்கியங்களை படித்ததும் சிரித்துவிட்டேன். உங்களுக்காக தமிழில்..

குதிரை போல வாங்க!
திருடன் போல் உட்காருங்கள்!!
முடிந்ததும் ராஜநடை போடுங்கள்!!!

முக்காத குறிப்பு: உங்களுக்கு இந்த பதிவு புடிச்சிருந்தா, ஓட்டு குத்துங்க! புடிக்கலைன்னா, பஸ் ஏறி வந்து மூஞ்சில குத்துங்க!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Monday, August 3, 2009

கலக்கல் - 2

--------------------------------------------------------------------------------------------

ரத்த
ஜோசியம் (தலைப்பே டெரரா இருக்கு..)
ஜப்பானில் பிளட் குரூப்பை வைத்து ஆராய்ச்சி செய்து, மனிதர்களுடைய குணாதிசியங்களை கீழ் கானும்படி வகைப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன குணங்களை கொண்டவர் என்பதை காசு கொடுக்காமலையே தெரிஞ்சிக்கோங்க... (பின்னூட்டத்தில.. கிளி ஜோசியர் ரேஞ்சிக்கு கிளம்பிடாதீங்கப்பு!!)

O குரூப் - நீங்கள் தலைவராக கூடிய எல்லா திறமைகளும் கொண்டவர். நீங்கள் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், எப்பேர்பட்டாவது அதை முடிக்காமல் விட மாட்டீர்கள்.. அவ்வளவு தன்நம்பிக்கை. நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும், நம்பிகையானவராகவும், அன்பானவராகவும் இருப்பீர்கள்! உங்களிடம் உள்ள தீய குணங்கள் - பொறாமையும், தற்பெருமையும்!

A குரூப் - கட்டுக்கோப்பான, அமைதியை விரும்பும், குழுக்களாக பணி செய்யும் குணம் உள்ளவர் நீங்கள். நீங்கள் கூட்டு முயற்ச்சியே வெற்றியை தரும் என்று ஆணித்தனமாக நம்புபவர். அமைதியாக இருப்பதும், தன்மையாக பேசுவதும் இயல்பாக கொண்டவர் நீங்கள். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்று பார்த்தால் - வளைந்து கொடுக்காததும், இறுக்கமாக இருப்பதும்தான்!

B குரூப் - நீங்கள் ஒரு தனிமை விரும்பி. யார் எதை சொன்னாலும்.. நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ, அதைதான் செய்வீர்கள். நேர்மையாக, கருணை, புதியவை புகுத்தல் ஆகியவை இயல்பாக கொண்டவர் நீங்கள்.. உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - உங்கள் கருத்தை.. அடுத்தவர் மீது தினிப்பது, விட்டுகொடுக்காததும் தான்!

AB குரூப் - நீங்கள் ஜாலியான ஆனால், கட்டுகோப்பான பேர்வழிகள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்களிடம் பழகுவது மிகவும் சுலபம். உங்களிடம் உள்ள தீய குணங்கள் என்றால் - அலட்சியம் மற்றும், முடிவு எடுப்பதில் தடுமாற்றம்!
--------------------------------------------------------------------------------------------

"பார்த்ததிலேயே உனக்கு பிடித்த திரைப்படம் எது?'' என்று நண்பர் கார்த்திக்கேயன் கேட்டபோது நான் சொன்னேன் - "பார்த்ததில் பிடித்தது பல. ரசித்தது சில. ஆனால், என்னை வியக்க மற்றும் திடுக்கிட வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். என்ன படம் தெரியுமா? 2003ல் வெளியாகிய பார்க் சான்ஊக் இயக்கியிருக்கும் "ஓல்டு பாய்" என்ற கொரிய படம்தான்.

எதற்க்கு என்று தெரியாமலே 15 வருட சிறை வாசம், சிறையில் இருக்கும்போதே மனைவியின் மரணம் மற்றும் குழந்தையின் மறைதலும், ஏன்.. எதற்க்கு என்று கண்டுபிடிக்க, 5 நாட்கள் மட்டுமே விடுதலை. இதுபோல் முடிவு கொண்ட படம் இருக்குமா என்று நாம் சிந்திக்ககூட முடியாதபடி முடிவு, நாவடக்காமையினால் வரும் வினை, பழிவாங்குதலின் உச்சக்கட்ட வெறி என்று இயக்குனர் கதை சொல்லிய விதம் அசாதாரணமானது. இதுபோல் கதை தமிழில் நினைத்துபார்க்க முடியுமா?????????????

மெமன்ட்டோ மற்றும் டெட்மேன் ஷூஸ் ஆகிய பழிவாங்குதல் வகை படங்கள் உலக அளவில் பேசப்பட்டாலும்.. முதல் இடத்தை பிடிப்பது "ஓல்ட் பாய்" மட்டுமே!!

ஒடஞ்ச சி.டி பீஸ்: இதே கதையை (முடிவை மாற்றி) ஹிந்தியில் சஞ்சய் தத் நடித்து "ஜிந்தா" என்று எடுத்தார்கள்... பார்த்துட்டு சி.டி யை ஒடச்சி போட்டுடேன்!!

--------------------------------------------------------------------------------------------

மினி கதை:

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.

மருத்துவமனையில், பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

--------------------------------------------------------------------------------------------

கலக்கல் பாகம் -1 படிக்க..


Friday, May 22, 2009

கலக்கல் - 1



புரளியும், நானும்...
காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ இயந்திரம் மாதிரி வேலை செஞ்சிட்டு, இங்க துபாய்ல பொழப்ப ஒட்ட வேண்டி இருக்கு, இதுல வெந்த புண்னுல ஃப்பேர்க் வைச்சி நோன்டுற மாதிரி, ஆப்பீஸல உள்ள சில டாபர்ஸ்.. என் உணர்வ கேலி பண்ணிப்பாக்குதுங்க!

ஒன்னுமில்ல பாஸ்... நானே மாவீரன் பிரபாகரனை சுட்டுட்டோம், போட்டுட்டோமுன்னு.. புரளியை கிளப்பின பத்திரிகையையும், தொலைக்காட்சி மீடியங்களையும் நா கருவிக்கொண்டிருக்க... இங்க, மலபாரிங்க... சிங்கள சாக்கடைங்க கிட்ட பார்ட்டி கேக்குதுங்க.. அதுக்கு சாக்கடை சொல்லுது..." இப்ப ரெசசன் டைம், அதனால..கண்டிப்பா வைக்கிறேன் வெயிட் பன்னுங்கன்னு". இதலாம் என் முன்னாடியே, நா இருக்கும் போதே பேசுதுங்க... பக்கத்துல மாநிலத்து கேரளாக்காரனே நம்ம உணர்சியை புரிஞ்சிக்கலைனா? வடநாட்டுல இருக்குற இந்திக்காரன் எப்படி புரிஞ்சிப்பான்? மேல நாட்டுல இருக்குற இங்கலீஸ்காரன் எப்டி புரிஞ்சிப்பானுங்க?

இப்ப நெனைக்கறேன், தமிழ்நாட்டுல இருந்தாலாவது... நம்க்கு ஆறுதலா, சப்பக்கட்டு கட்றதுக்காவது ஆள் இருப்பாங்க.. இங்க அந்த ஆறுதலும் இல்ல!
இதுக்கு கட்டிங் இல்ல.. புல் அடிச்சாலும் போதாது! ஏன் இவ்வளவு கோவம்னா, மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறியகொண்டு வந்து சேத்துட்டானுங்க!!

-------------------------------------------------------------------------------------

ஏன் நம்ம குடிக்கிறம்முன்னா..

  • ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது.
  • 24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன ?
  • நாம் குடிக்கும்போது, போதை ஏறிவிடுகிறது. நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.
  • கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீர் ஒன்றே சாட்சி
  • குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை.
-------------------------------------------------------------------------------------

க்கூக்குக்கூ.... ஹைக்கூ

*நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி!

*வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று
தெறிப்பது கெட்டமீன் வாடை!

* நிரந்தர முதல்வரின் லேட்டஸ்ட் வீடு
இதுதான் அவர் சமாதி!
Blog Widget by LinkWithin