Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, June 14, 2009

ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!


உலகப்படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.

பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர்கள் சிலரே! (யார்யாருன்னு கேக்காதீங்க!)

நான் இங்கு குறிப்பிட்டுள்ள படங்களில், பெருவாரியானவை.. பிரபலமடைந்த புத்தகதிலிருந்தே கதையே திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதுபோல பல தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக புத்தகங்களை தேடி இயக்குனர்களைப் போகவில்லை. தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இப்படி பல பொறுப்புகளையும் பெரிய பருப்புகள் மாதிரி எடுத்து கொண்டதாய் இருக்கலாம்!



காப்பி அடிக்கிறதுக்கும் ஒரு திறமை வேனுமுன்னு நீங்க சொன்னா, நான் ஒத்துக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஏன்னா, ஒரு பரபரபப்பான நிகழ்ச்சி ஒன்னு நடக்குதுன்னு வச்சிபோம்.. இங்க உள்ள பதிவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியா எழுதுறோம்? இல்லையே! அவரவர்களுக்கு பிடித்த அல்லது தெரிந்த வர்ணனையில் தான் பதிவிடுகிறோம்! அதுபோலதான், நம்மவூரு டயரடக்கருங்க.. கதையை மட்டும் கழட்டி, அல்லது காட்சிகளை மட்டும் உறுவி நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி பவுடர் அடிச்சி, பொட்டு வச்சிடுவானுங்க.. இதுக்கொன்னும் மூளைவேனுமுன்னு இல்ல.. நம்ம பாய்கடை ஆட்டுமூளையே போதும்!


இனி எனக்கு தெரிந்த, பார்த்த படங்களின் தொகுப்பு!

Once Upon a Time in America (1984) & The Godfather (1972) USA - நாயகன்

Léon (1994) France - சூரியபார்வை

She-Devil (1989) USA - சதிலீலாவதி (புதியது)

Lucky Number Slevin (2006) Germany - லாடம்

One Flew Over the Cuckoo's Nest (1975) USA - மனசுக்குள் மத்தாப்பு

Fight Club (1999) USA - அன்னியன்

Bicycle thief (1948) Italy - பொல்லாதவன்

Memento (2000) USA - கஜினி

Amores perros (2000) Mexico - ஆயுத எழுத்து

Mystic River (2003) USA - அஞ்சாதே

Cellular (2004) USA - வேகம், நாயகன் (தான தலைவன் ரித்தீஷ்)

The Reincarnation of Peter Proud (1975) Sweden - எனக்குள் ஒருவன்

Red Corner (1997) USA - தாம் தூம்

Shutter (2004) Thailand - சிவி

Changing Lanes (2002) USA - டேக்சி 4777

Judgement Night (1993) USA - சரோஜா

Man on Fire (2004) USA - ஆணை

City lights (1931) UK - நிலவே முகம் காட்டு

Bangkok Dangerous (1999) Thailandபட்டியல்

To Sir, with Love (1967) USA - நம்மவர்

City of God (2002) Brazil / France - புதுப்பேட்டை

Planes, Trains & Automobiles (1987) USA - அன்பே சிவம்

Derailed (2005) French / USA - பச்சைக்கிளி முத்துச்சரம்

Mrs. Doubtfire (1993) USA - அவ்வை சன்முகி

The Road Home (1999) China - பூ

Moon Over Parador (1988) USA - இந்திரன் சந்திரன்

The Fugitive (1993) USA - கிரிமினல்

Tie me up tie me down (1990) Spanish - குணா

What about bob? (1991) USA - தென்னாலி

Green Card (1990) USAநளதமயந்தி

மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் எல்லாமே அப்பட்டமான நகலாக்கம் என நான் கூறவில்லை, சிலவற்றில் அதிகமான காட்சி கலப்புகளும், சிலவற்றில் கதையை மட்டும், சிலவற்றில் அப்பட்டமான நகலாக்கலும் உள்ளது. இப்பதிவை படிப்பவர்கள் இரண்டு விதமான விவாதம் செய்வார்கள், அந்த உலகபடங்களை பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் அல்லவா என்றும், அதற்க்காக சொந்தமாக கதையெழுதாமல் எல்லா உலகப் படங்களையும் நகலாக்கம் செய்தால் பரவாயில்லையா என்றும், கருத்துக்கள் அவரவர் பார்வையில் வேறுபடலாம்!

நான் இங்கே கீழே குறிப்பிட்டுள்ள படங்கள், தமிழில் உல்டா செய்தது மட்டுமே. இது இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுகு போன்றவர்களும் இது போன்ற படங்களை சுட்டு படமெடுத்துள்ளார்கள். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம். மேலே ஏதாவது படம் தவறியிருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.. லிஸ்டுல ஏத்திடுவோம்!!

Blog Widget by LinkWithin