Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, January 10, 2010

அட.. மானங் கெட்டவனே!!

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ? அப்டின்னு சுப்ரமணிய பாரதியார் எழுதியிருந்தலும், நாம எல்லாம்.. சரி.. சரி.. நா மட்டும்தான்.. மானத்தை மாஞ்சா போட்டு பறக்கவுடுவோம்! "சரி, அதுக்கென்னடா இப்ப?"ன்னு ஒரு 'நாட்டாமை சொம்பை' தூக்கி நடுவுல போடுறது நல்லாவே கேக்குது. ஒன்னுமில்லைங்க.. காலையில என் கூட வேலை பாக்குற ஒருத்தரு, அவரோட வேலையை ஒழுங்கா பாக்காததால, அவரு ஒழுங்கா வேலை பாக்குறாரான்னு பாக்கற ஒருத்தவருகிட்ட, திட்டு வாங்கிட்டாரு!

ஏத்து வாங்குனவன் அப்டியே போவாம, என்கிட்ட வந்து.. "மானம் மருவாத உள்ளவன் எவனாவது இங்க வேலை பாப்பானா? இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்க... நாளு தெரு பிச்ச எடுத்து சாப்புடலாம்" ன்னு சொல்லிட்டு போயிட்டான்! (அட.. கோ-டாக்! அதை என்னை பாத்து ஏன்டா சொன்ன??) சரி.. மானம்னா என்ன? அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கா? கடந்த ஒரு வருஷத்துல எத்தனை முறை போயிருக்கு? எங்கங்க போயிருக்கு?, எந்தந்த இடத்துல போயிருக்கு? அப்டின்னு சும்மாதானே இருக்கோம்ன்னு பழைய டேட்டாவை, விரலை வச்சி சுரண்டி பாத்ததுல.... டொய்ன்..டொய்ன்..டொய்ன்.. (Flash for UR Front)

maanam.gif picture by rkarasans


ஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி.. என் நண்பன் இதை எதுக்குடா மாட்டிட்டு வந்தேன்னு கேட்டு கொஞ்ச மானம் போச்சி! அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி!!

இதுனாலும் பரவாயில்லை.. ஒரு நாள் என் ரூமுக்கு வந்த என் தம்பி.. என்னுடைய பர்சனல் இன்டர்நெட் கனெக்சன்ல யூ டியூப்ல வீடியோ எதையோ பாத்துகிட்டு இருக்குறப்ப.. "ஐ.. இந்த சைட்டை ப்ளாக் பண்ணலையா?" ன்னு ஆப்பீஸ்ல இருக்குற பழக்க தோஷத்துல கேட்டு கொஞ்சம் மானம் போச்சி! சரின்னு அவனும் சிரிச்சிகிட்டே ஊருலேருந்து வந்திருந்த சித்தி பொண்ணு கல்யாண சி.டி.யை போட்டு பார்த்தான், பார்த்துகிட்டே இருக்குறப்ப.. சிவ பூஜை கிங்காங் போல பக்கத்து ரூம்மெட் வந்து கிரிகெட் ஸ்கோர் பாக்க டி.வியை மாத்த சொல்ல.. நான் ரிமோட்ல ஆல்ட் + டேப் கீயை தேடிகிட்டு இருந்தேன்! நீங்க என்னத்த தேடுறீங்க? பாக்கி உள்ள மானமும் போச்சின்னு சொன்னாதான் அடுத்த பாரா போவீங்களோ???

writing_tshirt-.jpg picture by rkarasans


அடுத்த (கட்ட(மா)னம், என் கூட வேலை செய்யுற நோண்டுலிங்கம் ஒருதன், மொபைல்ல உள்ள ஒரு முக்கிய மெசேஜை தெரியாம டெலீட் பண்ணிட்டு, தலையில கை வச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். நா சும்மா இல்லாம கூலா போயி அவங்கிட்ட.. "விட்ரா.. விட்ரா... 'ரீசைக்ளின் பின்'லேருந்து எடுத்துகலாம்"ன்னு சொன்னப்ப விட்ட 'லுக்'குலயே மானம் போச்சி! இப்டி எங்க போனலும் என் மானத்தை மால்லாக்க போட்டு கும்மியடிச்சதை நினைச்சு உடம்பு சரியில்லாம போச்சு. சரிடான்னு முடியாம நடந்து போயி மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா? 500mg வேணுமான்னு கேட்க, நான் உடனே 512mg குடுங்கன்னு சொல்லி, அவமானமா.. மானம் போச்சி!!

தோ.. இப்ப கடைசியா அவதார் படம் பாக்க தியேட்டர் போனப்ப, ஷாப்பிங் மால்ல பர்ச்சேஸ் பண்ண கூப்பனை காமிச்சிட்டு (தெரியாமதாங்க.. ம்கும்.. நம்ப மாட்டீங்களே!) உள்ள போக பாக்க.. கவுண்டர்காரன் சட்டை புடிச்சி இழுத்து டிக்கேட் கேட்டு வாங்க அங்க கொஞ்சம் மானம் போச்சி! அது மட்டுமா? உள்ள போயி படம் பாக்கறப்ப.. டைம் என்னன்னு தெரிஞ்சிக்க கம்ப்யூட்டர்ன்னு நினைச்சு, ஸ்கிரீன் ஓரத்துல கெடிகாரத்தை தேடி பாத்தேங்க.. தேடி பார்த்ததோட சும்மா இல்லாம, அந்த உண்மையை இப்ப உங்ககிட்ட சொல்லி... ஒட்டிகிட்டுயிருந்த மொத்த மானமும் போச்சுல்ல! போச்சுல்ல!! போச்சுல்ல!.

முக்காத குறிப்பு : இதுக்கு முன்னாடி உனக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு? எதுல ஏறி போச்சு? அப்டின்னு எல்லாம் ரொம்ப மொக்கையா எதையும் யோசிக்காம.. தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போங்க!!

Monday, August 24, 2009

சில கேள்விகளும்.. கோலிவுட்டின் பதில்களும்!!



கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் பட்டணத்தில் வசிக்கும் அழகான ஹீரோவிக்கு அம்மா. அவனை திரும்ப கிராமத்துக்கு வரவழைச்சு, கிராமத்து பெண்ணை காதலிக்க வைக்கனும். அவன் இங்க வரமாட்ரான்.. அவனை கிராமத்துக்கு வரவழைக்க என்ன செய்யனும்?


பதில்:
ரொம்ப சிம்பிள்.. ஒரு தந்தி அடிக்கனும் "அம்மா சீரியஸ்! உடனே வா!!". தந்திய பார்த்து வந்தவுடனே, "டேய், என் பேர குழந்தைங்கள பாக்காம என் உயிர் போகாதுடா" ன்னு ஒரு பிட்ட போடு. பாக்கி விஷயத்த நம்ம ஹீரோயின் பார்த்துப்பா.. அப்புறம் என்ன? ஒரு காப்பாத்துற சீனு.. இரண்டு குத்துபாட்டு... சண்டை.. சுபம்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஹீரோ, என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறுவேஷம் போடனும். ஏதாவது ஐடியா குடுங்க..


பதில்:
உங்களை கண்டுபிடிக்க முடியாதபடி மாத்த பல வழிகள் இருந்தாலும்.. நான் உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றது என்னன்னா.. "கருப்பு கூலிங்கிளாஸ் போட்டுட்டு, தலையை சீவாமல் கலைச்சி விட்டுட்டீங்கன்னா" உங்க அம்மாவே எதிருல வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுவே! இன்னம் கொஞ்சம் கஷ்டமா டிரை பண்ணனுமா? " மீசையை எடுத்துட்டு, கேப் போட்டா போதும்" உங்க டைரக்டர்ராலையே கண்டுபிடிக்க முடியாது!

கேள்வி:
அன்புள்ள கோலி,
வெரி அர்ஜண்ட்! கண்டிப்பாக பதில் வேண்டும். ஹீரோயினை பாம்பு கடித்துவிட்டது, இப்ப நான் ஹீரோவாக என்ன செய்ய வேண்டும்?


பதில்:
பயப்பட வேண்டாம். பாம்புகள் விஷத்தை ஏற்ற மட்டும் செய்யாது, திரும்பவும் விஷத்தை உறியும் சக்தி கொண்டது. நீங்க திரும்ப விஷத்தை எடுக்க வைக்க செய்ய வேண்டியது என்னன்னா.. நல்ல உயரமான மலையில் ஏறி நின்று பாம்பை புகழ்ந்து பக்தி பாடல் ஒன்றை பாடனும்! இப்ப பாம்புக்கு இரண்டுல ஒரு முடிவு எடுக்கனும். ஒன்னு மலையில ஏறி வந்து பாடுற உங்கள போடனும். இல்லனா, விஷத்தை திரும்ப ஊறிஞ்சிட்டு ஓடனும். பாம்பு மலை மேல ஏறி வந்து உங்களை கடிக்க சோம்பேறிதன பட்டு, விஷத்தை திரும்ப எடுத்துடு்ம். எப்புடி ஐடியா?

கேள்வி:
அன்புள்ள கோலி,
ஹீரோயின் பெண்களுக்கான ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். ஹீரோ அவளை காதலிக்கிறதால.. யாருக்கும் தெரியாமல் ஹீரோயினை சந்திக்கறது எப்படி?

பதில்:
ரொம்ப ஈசியான கேள்விதான். கடைக்கு போய் ஒரு பர்தா வாங்கி போட்டுகோங்க.. நேரா ஹாஸ்டலுக்கு போங்க. நீங்க 6 அடிக்கு மேல இருந்தாலோ, கையில.. காலுல நிறைய முடி இருந்தலோ, கவலப்படாதிங்க.. யாரும் உங்களை கவனிக்க மாட்டாங்க! எக்ட்ரா பிட்டிங்ஸ் பத்தி நான் சொல்ல தேவையில்லைன்னு நினைகிறேன்..


கேள்வி:
அன்புள்ள கோலி,
நான்தான் படத்தில் ஹீரோவோட தங்கச்சி. எனக்கு கல்யாணம் நடக்க.. நான் எந்த வகையான ராசிகல் மோதிரம் அணிய வேண்டும்?

பதில்:
ராசிக்கல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. எப்படியா இருந்தலும் உங்களை ஒருத்தவன் ரேப் பண்ணிடுவான் கவலப்படாதிங்க! ரேப் பண்ணிட்டு கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க அண்ணன்கிட்ட சவால் வேற விடுவான். அப்புறம் என்ன? அண்ணன் பொங்கி, அவனை கும்மி.. எது எப்படியோ.. உங்களுக்கு கடைசியல கல்யாணம் நடக்கும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
என்னுடைய கார் ஹய்வே ரோட்டுல ரிப்பேராயிடுச்சு. இப்ப நா அதை எப்படி சரி பண்றது?

பதில்:
இந்த மாதிரி நேரத்துல.. ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. அது... ரேடியேட்ர்ல தண்ணி ஊத்துனா சரியாகிடும். இப்ப நீங்க டிக்கியில இருக்குற வாட்டர் கேனை எடுத்துகிட்டு, உங்களுக்கு புடிச்ச திசையில போங்க.. கண்டிப்பா அங்க ஒரு அருவியும், அந்த அருவியில குளிச்சிகிட்டே பாட்டு பாடுற ஒரு அழகான பொண்ணும் இருக்கும்!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஹீரோயினா நடிக்கிறேன். குளிக்கும் சீனில் எப்படி நடிப்பது என்று எனக்கு உங்கள் ஆலோசனை தேவை!

பதில்:
இது கொஞ்சம் பிரைவசியான மேட்டர்தான்.. இருந்தாலும் நீ்ங்க கேட்கறீங்கன்னு சொல்றேன். உடம்பை சுத்தி புடவையோ, டவல்லோ கட்டிக்கனும். ஷவர்ல குளிக்கும்போது புடவையோ, டவல்லோ படாத இடங்களுக்கு சோப்பு போடனும் அவ்வளவுதான்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் வில்லன் நடிகராக ஆக ஆசபடுறேன். உங்களுடைய அட்வைஸ் வேனும் எனக்கு.. குடுப்பீங்களா?

பதில்:
கண்டிப்பாக! முதல் சீனில் இருந்து.. யாரை பார்த்தாலும் முரைக்கனும், அள்ளக்கைகளை அப்பபப்ப அறையனும், "ஹேய்.. ஏய்.. ஏயயய்ய்ய்ய்ய்"ன்னு சம்பந்தம் இல்லாம சவுண்டு விடனும், குறிப்பா ஹீரோ எத்தனை தடவை அடிச்சாலும்.. வலிக்காத மாதிரியே திரும்ப போய் அவங்கிட்ட அடிவாங்கனும், கடைசியா.. "திருந்தனும்" இல்லன்னா.. "செத்துபோகனும்". அவ்வளவுதான் பாஸ்!!

கேள்வி:
அன்புள்ள கோலி,
நான் ஒரு ஏழை ஹீரோ. ஆனா.. வில்லன்களை நம்ப வச்சி பழிவாங்க, நான் பணக்காரன் போல் ஆக்ட் குடுக்கனும். ஐடியா ப்ளீஸ்?

பதில்:
முதல்ல நீங்க துபாய் வடிவேலு போட்ட ஷைனிங் துணியில சட்டை தச்சி போட்டுகிட்டு, முட்டிய தொடுற மாதிரி கோட் போட்டுகனும். அப்புறம் மூஞ்சை மறைக்கிற மாதிரி கண்ணாடியும், காலுக்கு சம்பந்தமே இல்லாத ஷூவையும் போட்டுகனும். சையிடுல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.. மண்டைக்கு லைட் கலர், கையில 9 விரலுக்கு கிளிட்டரிங் மோதிரம், எருமை மாட்டு சங்கிலி போல ஒன்னு கழுத்துல போட்டுக்கனும். கூடவே.. லெப்ட் சைட் இரண்டு பேரு, ரைட் சைட் இரண்டு பேரு,(கண்டிப்பா அதுல 2 பேரு நீக்ரோவா இருக்கனும்) டிப்-டாப்பா நடந்து வரனும். எல்லாரோட காதுலேயும் செவிட்டு மிஷின் மாதிரி ஓயரை காதுல சொருகியிருக்கனும். வில்லன்கிட்ட பேசுறப்ப.. ஈரோப்காரன் கேட்டா செத்துபோற லெவலுக்கு இங்கிலிபீசு பேசுனா.. நீங்களும் மல்டி மில்லனியர்தான்!!

(எழுதறத்துக்கு இன்னும் நிறையா இருந்தாலும்.. டைப் அடிக்க கை வலிக்குதுன்னு உண்மைய சொல்லாம, உங்க பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பலன்னு பொய் சொல்லி முடிச்சிகிறேனுங்கோ!)

Monday, August 10, 2009

ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!

என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. "துபாயில் இருந்து குசும்பன்", "அமெரிக்காவில் இருந்து டேனியல்", "சிங்கபூரில் இருந்து பித்தன்" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே!!


இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

8 கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

8 வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

8 கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

8 "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...

எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

Thursday, July 23, 2009

என் ஃபிளாகில் எனக்கு பிடிக்காத- 10



1. ஒரு பயலுவலும் படிக்க மாட்றாங்க..

நானும் தலையை பிச்சிகிட்டு, ஏதேதோ ஆராய்ச்சி பண்ணி, உருட்டி பெறட்டி, முக்கி மொனரி, பிச்சி பிராஞ்சி, மக்கி மண்னாகி எதாவது எழுதும்போது ஒருத்தரும் வரலையின்னா... யாருமே இல்லாத கடைக்கு யாருக்குங்க டீயாத்தனும்? ("இதுல வர்ர ஆளுங்க மட்டும் அப்படியேயய படிச்சிடுறாங்களா?" ன்னு நீங்க கொலம்பஸ் ஆகிடாதிங்க!)

2. பத்து பைசாவுக்கு புண்ணியம் இல்ல..

பாதிநேரம் வேலைய செய்யறமோ இல்லியோ, பதிவ எப்படி போட்டு ஹிட்ஸ் வாங்குறதுன்னு யோசிச்சே பசி பயங்கரமா எடுக்குது. விளம்பரம் வச்சா காசு பாக்கலாமுன்னு பல பேரு கூவுனாலும், வச்சா மட்டும் அதுமேல களிக் பன்னிட்டுதான் மறுவேலை பாப்பாங்க நம்ம மக்களு! இதுல தனியா வேற சொல்லனுமா, இந்த பிளேக்குனால ஒட்ட காலணா கூட கிடைக்காதுன்னு..

3. கூகிளான்டவர் பக்கத்துல முதல்ல வர்லயே...

நானும் மாஞ்சி மாஞ்சி இடுகை இட்டாலும், கூகிள்ல முதல் பக்கத்துல காமிக்க மாட்டுதுங்க (நாட்டுக்கு ரெரரராம்ம்பபப முக்கியம்). அப்படி காமிக்கலனா என்ன மாதிரி நல்லவ.. (மூட்ரா..!) எப்படிங்க மக்கள் கவனிப்பாங்க?

4. கடைய தொறந்து வச்சிகிட்டு தேவுடு காக்கறது...

சத்தியமா.. கமெண்ட் பாக்ஸ் வச்சிருக்கங்க நானு! அதுல டெஸ்ட் செஞ்சும் பாத்துடேன்.. நல்லா வேலையும் செய்யுது. ஆனா ஆளுங்கதான் வர மாட்றாங்களா? இல்ல.. வந்து படிச்சுட்டு, இந்த மொன்னைக்கு எதுக்கு பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணாக்கிகிட்டுன்னு நினைச்சு ஓடி போயிடுறாங்களான்னு பிரியல மக்கா!!


5. பழைய டெம்பிளேட்டையே இன்னமும் வச்சிகிட்டு அழுவறது..

அவங்கவங்க புத்தம் புதுசா, கண்ணுக்கு குளிர்ச்சியா, பாக்குறத்துக்கு ஆசையா, ஓசியில குடுக்கற டெம்பிளேட்டை.. டெம்டே இல்லாம மாத்திட்டாங்க! நா மட்டும் "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு"ன்னு பழைய டெம்பிளேட்டை பவுசே குறையாம பத்திரமா வச்சிருக்கேன்! (மாத்துறத்துக்கு டைம் இல்லன்னு 'டீசான்டா'(!) சொல்லியிருக்கலாமோ?)

6. பதிவு போடுறதுக்கு மேட்டர் இல்லாம முக்குறது..

ஆயிரம்தான் நா வாய் கிழிய பேசினாலும், எழுதசொன்னா நான் கொஞ்சம் ஆவணிதான் போயிடுவேன்! இருந்தாலும் ஆசை யாரை உட்டுது?. இதுதான் எழுதனுமுன்னு இல்லாம, எதையாவது ஆபீஸ் டேபிளுக்கு அடியில உக்காந்து யோசிச்சு எழுதிடுவேன் ங்கறது வேற விசயம்! (மச்சி.. நீ எழுதேன்! நீ எழுதேன்!! என்ற ரேஞ்சிக்கு போகாம இருந்தா சரி..)

7. நான் எழுத நினைகிறத எழுதாம, ஏதேதோ கிறுகுறது..

நாம எழுதற தகவல்கள் யாருக்காவது உபயோகமா இருக்கனுன்னு நினைச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன். ஆனா, அது முடியாம.. நான் கிறுக்கியது எல்லாம் மொத்தமா மொக்கயாக்கியது! (என்னுடைய நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்குமே?)

8. அருமையா எழுதும் பதிவர்களுக்கு லிங்கு கொடுக்காதது..

என்னைவிட (நீயெல்லாம் ஒரு ஆளு?) அருமையா, அட்டகாசமா, அறிவா, அழகா, அம்சமா (போதும்.. போதும்.) எழுதுற சக மற்றும் மூத்த பதிவர்களோட "லிங்"கை இன்னமும் என்னுடைய வலைப்பூவில் இனைக்காம, சோம்பேறி சொம்பா திரியிறது.

9. அட்சென்சை சேர்த்தும் அதை காமிக்காதது..

ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்த அட்சென்சை, ஒவ்வொரு இடுகைக்கு கீழே காண்பிக்குமுன்னு பார்த்தா... அது 'பாப்பரபபபான்னு' பல்ல இளிச்சிகிட்டு நிக்குறது! வர்ற ஆளுங்க எல்லாம் ஏதோ சூனியம் வச்ச ஃபளாக்கு போலன்னு தலைதெறிக்க ஓடுறாங்க பாஸ்!!

10. என் நேரத்தை முழுங்கி.. என்னை, அதுக்கு அடிமையாக்கியது..

(10வது பாயிண்ட், "எனக்கு நானே சுண்ணாம்பு" திட்டத்தில் இணைத்துகொண்டது!)

Tuesday, June 30, 2009

இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க!!

சில தத்துவங்கள் (நா சொல்லப்பா..)

  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ
  • "காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

    (இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட "ஏங்க" எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்...
ந1 : "என் மனைவி தேவதை! "
ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...
மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"
அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"

மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"
கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"



பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!
"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

Blog Widget by LinkWithin