2003ல் இருந்து 2009 வரையில்.. நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பதிவர்கள் என எனக்கு ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி எனக்கு எச்சரிக்கை செய்து என்னை பல்வேறு சிக்கலான மற்றும் பயங்கரமான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிய அனைவருக்கும் இந்நாளில் நன்றியை தெரிவித்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!
உங்களால்தான் இது சாத்தியமாயிற்று....
* கோக் குடிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேனுங்கோ... அது டாய்லேட் அழுக்கை கிளீன் பண்ணும்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* குட்டையில ஊறுன பன்றி மாத்திரியே அலையிறங்கண்ணா... அது டியோடரண்ட் அடிச்சா கேன்சர் வரும்முன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* தியேட்டருக்கு போய் படம் பாக்குறதையே விட்டுடேன் ராசாக்களா... அது எப்ப நீங்க தியேட்டர் நார்காலியில எச்.ஐ.வி. ஊசியை சில சைக்கோஸ் சொருகியிருப்பாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* தனியா பஸ்சுலயோ, டிரைன்லயோ, ஃப்ளைட்லயோ போகும்போது பக்கதிலிருக்கறவனை திருடன் மாதிரியே பாக்குறேங்க நானு. அது எப்பொழுது இருந்துன்னா... நீங்க மயக்க ஸ்பிரே அடிச்சு நம்ம பொருள்களை ஆட்டைய போட்டுடுவாங்கன்னு என்னைக்கி நீங்க மொயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க! (மால்ஸ்ல பொண்ணுங்க டெஸ்டிங் ஸ்பிரே அடிக்க வந்தா கூட பயந்து வருது!)
* தெரியாத நம்பர் வந்தா போன் எடுக்கவே பயமா இருக்குங்க! அது எப்பொழுது இருந்துன்னா... தெரியாத போன் ஏதாவது வந்து அட்டன்ட் பண்ணா நம்ம சிம் கார்டை ஹேக் பண்ணி காசை கட் பண்ணிடுவாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* கேன்ல வர்ற தயிரோ, மோரோ, ஜுஸோ எதையுமே குடிக்கிறது இல்லை மக்கா! இதுவும் நீங்க எலி கேன் மேல யூரின் போயிருக்கும்.. எச்சி துப்பி வச்சிருக்குமுன்னு.. என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* பார்ட்டிக்கு போனாலோ, கிளப்புக்கு போனாலோ.. எவ்வளவு அழகான குஜிலியா இருந்தாலும் பாக்குறது கூட இல்லைங்க! இதுகூட நீங்க அவளுங்க நம்மள மயக்கி, ஹோட்டலுக்கு கொண்டுபோயி, நமக்கு தெரியாம போதை மருந்து குடுத்து... கிட்னியை களவான்டு போறாங்கன்னு என்னைக்கு நீங்க மெயில் அனுப்ச்சிங்கலோ அன்னைலேருந்துதாங்க!
* 49 மெயிலை 1025 பேருக்கு இதுவரைக்கும் அனுப்பி இருக்கேங்க.. நீங்க சொன்னது போல... ஏங்க, இன்னம் எனக்கு நோக்கியா மொபைலை அவனுங்க அனுப்பவேயில்லை? அந்த மாடலே மார்கேட்டை விட்டு போயிடுச்சு பாசுங்களா!! (ஓசியில குடுத்தா பினாயிலையே குடிப்பியேன்னு பழைய பின்னுாட்டம் போடாம... புதுசா ஏதுனா யோசிச்சு திட்டுங்க!)
* முருகன், ஏசு, அல்லா படங்கள் போட்ட மெயிலை... மனசுல எதாவது ஆசையை நினைச்சிகிட்டே பார்வேர்ட் பண்ணா... நினைச்சது நடக்குமுன்னு சொன்னீங்க! கடைசியில... எல்லா "ஆசைகளுக்கும்" கல்யாணம் ஆகிடுச்சு!! (இன்னம் கொஞ்சம் வேற மாதிரி டிரை பண்ணணும் நீங்க!)
எது எப்படியோ ........ இதை படிச்சிட்டு 10 நிமிஷத்துல " 11,345 " பேருக்கு நீங்க இந்த இடுகையை பார்வேர்ட் பண்ணலைன்னா... நாளைக்கு காலையில 6.00 மணிக்கு "காக்கா" உங்க தலையில "கக்கா" போயிடும்!!