
10 நாள் லீவ் எடுத்துக்கொண்டு டபுள் ஷாட் (தீபாவளி + புதுமணை புகுவிழா) கொண்டாட்டதோடு தமிழகம் வந்து கொண்டாடியது.. மனதை விட்டு அகல மறுக்கிறது, நான்கு நாட்கள் ஆகியும்! வழக்கமாக வெளிநாடு வந்தபிறகு கடந்த மூணு வருஷமா தீபாவளி சைலண்டா ரூமோடு இல்லனா ஆபீசோடு போய்விடும். இந்த வருஷம் தாய்நாட்டில் கொண்டாட வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு சந்தோஷம்.
தீபாவளி முதல் நாள் சென்னை ஏர்போர்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே கொண்டு வந்து சேர்த்துவிட்டது (அதிசயமா இருக்குல்ல?) ஏர்அரேபியா என்கிற தெய்வம்! லேட்டா வந்திருந்தா கூவமே காரித்துப்புற மாதிரி திட்டியிருப்பங்குறது வேற விசயம்.. அடுத்த அதியசம் என்னன்னா, சென்னையில் இருந்து வடலூர் வரும் ரோடு குண்டும் குழியுமா நாலரை மணி நேரம் எடுக்கும் பயணம், மூன்றே மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தது மற்றொரு ஆச்சரியம். ரோடு எல்லாம் நீட் அண்ட் க்ளீன்! Hatts off to highway department!!
வந்ததும் வராததுமா பத்திரிக்கையை தூக்கிட்டு கிளம்பிவிட்டேன். அம்மாவுக்கு முடியாமல் போனதாலும், விஷேசத்திற்க்கு மூன்றே நாட்கள் பாக்கியிருந்ததாலும், நைட் 10 பத்து மணி வரையில் வேட்டையை தொடர்ந்தேன். நண்பர்கள் எல்லாம் "டேய் இந்த நேரத்துல போய் பேய்க்கா பத்திரிக்கை வைக்கபோற? மூடிக்கிட்டு போய் படுடா!"ன்னு அன்பா கேட்டுகிட்டதால அடக்கி வாசிச்சேன். சரி.. சரி கிரகபிரவேசத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்... (அடுத்த பதிவுக்கு மேட்டர் வேணுமில்ல மக்கா?) இப்ப ஓவர் டு தீபாவளி சீன்ஸ்!!
விடியகாலையில் எட்டு மணிக்கு செவிட்டுல யாரோ அரைஞ்ச மாதிரி ஒரு பீலிங்ஸ்சு.. அட! நிஜமாவே என் தம்பி பொண்ணுதான் செவுட்டுல இரண்டு வச்சிருக்கு! ரைட்டுன்னு எந்திரிச்சு வந்து ஹால்ல உக்காந்தா, எங்க அம்மா அவங்க கடமைக்கு தலையில இரண்டு வச்சாங்க. அதாங்க.. தலையில அடிச்சு எண்ணை தேச்சி விட்டாங்க! தீபாவளி அன்னைக்காவது குளி குளின்னு திட்டின ஆத்மாக்களை சாந்தியடை வைக்க அப்படியே போயி குளிச்சிட்டு வந்து பார்த்தா... சுட சுட இட்லி, தோசை, மட்டன் குருமா, வடை, சுழியன்னு சும்மா கும்முன்னு சாப்பிட்டுவிட்டு ஜம்முன்னு வெளியே கிளம்பினேன். இதுல நம்ப முடியாத விஷயம் என்னன்னா.. எங்க வீட்டுல யாரும் 10 மணி வரைக்கும் டி.வியை ஆன் பண்ணவேயில்ல, அதே மாதிரி நான் சென்ற நண்பர்கள் வீட்டுலையும் யாரும் டி.வியை பார்க்கல! என்னாங்கடா இது? (நல்லா விசாரிச்சிட்டேன்.. கரண்ட்டு, கேபிளு எல்லாம் இருக்குங்க. ஒருவேளை நம்ம பதிவர்கள் எழுதுறதை படிச்சிட்டு திருந்தியிருப்பாங்களோ? யேய்.. யேய்.. அப்படி எல்லாம் சிரிக்ககூடாது!)
அப்புறம் மதியமா யூத் எல்லாம் என்ன செய்வாங்களோ அதையே 'அடி'யேனும் செய்தேன். அப்புறம் என்ன பண்றதுங்க.. டூட்டி ஃப்ரீ கடையில் வாங்குன "பிளாக் டாக்"கை தூக்கியா போட முடியும்? அது உள்ளாற போயி குரைக்க ஆரம்பிச்சதும் பாதிபேரு நண்பனின் லாட்ஜில் மோட்சம் வாங்கிட்டாங்க. பாக்கி நாங்க ஒரு 6 பேரு விடாம "சொ.கா.சூ" வச்சிக்க கிளம்புனோம்! அதவேற சபீனா போட்டு விளக்கனுமா? அதாங்க.. ஆதவன் படத்துக்கு கிளம்பினோம். (துப்பாதீங்க.. துப்பாதீங்க.. முதல் நாள் பார்த்ததால, விமர்சனம் எதுவும் படிக்காம.. தெரியாம... செப்டிக் டேங்கில் இறங்கிட்டோம்!) சூர்யா + ஆதவன்னு சொல்லும் போதே தக்காளி.... மொக்கைன்னு விளங்கியிருக்கனும். சுருக்கமா சொல்லனுமுன்னா.. வெட்டி _____ நித்திரைக்கு கேடு!
இப்படிக்கா... தீபாவளி.. ருசியா, பசியா, கிக்கா, பெக்கா, 'மக்'கா, சிட்டா போயிடுச்சு! அழகான மறக்க முடியாத மகிழ்ச்சியான தீபாவளி!! லைட்டா ஏதோ கருகுற வாசனை அடிக்குது! அமீரக உடன்பிறப்புகள் என் செலவுல லெபன் அப் வாங்கி குடிங்க!! (அழுவக்கூடாது வினோத்.. அடுத்த தீபாவளிக்கு மாமா உன்னையும் கூப்பிடுட்டு போறேன்.. சரியா?)
வாலாட்டல் : நான் வந்தது தெரிந்து, போன் நம்பர் கண்டுபிடித்து, எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன பதிவுலக நண்பர்கள் மற்றும் அண்ணன்கள்.. ஷண்முகப்பிரியன் ஐயா, ஜாக்கி சேகர், தண்டோரா (எ) மணி, குசும்பன், கிஷோர், கார்த்திகேயன், வினோத் ஆகியோர்களுக்கு நன்றி, மெர்சி, அரிகட்டோ, சுக்ரன் லக்!!
