நீங்க யாராவது கேபரே டான்ஸ்சு, ஸ்டிரிப் டீஸ் டான்ஸ்சு, ரெக்கார்ட் டான்ஸ்சு எல்லாம் பாத்துயிருக்கீங்களா? என்னது.. பாத்ததே இல்லியா? என்ன ஆளுங்க நீங்க.. முதல்ல போயி ஞாயித்துகிழமை சன், ஃபாதர், கிரான்ட் ஃபாதர் டிவியில வர்ற ராணி 6 ராசா யாரு நிகழ்ச்சிய மறக்காம பாத்துடுங்க! இதுல ஒரு நன்மை என்னன்னா, மேல சொன்ன டான்ஸ எல்லாம் பார்க்க காசு குடுக்கனும்... ஆனா, இங்க காசெல்லாம் இல்ல.. சொம்மாவே!! இந்த மாதிரி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை பாத்து ரசிக்கனுமுன்னுதான தாத்தா இலவச டிவி கொடுத்துயிருக்காரு! என்சாய்...
இந்த நிகழ்ச்சிய பத்தி சொல்னும்னா.. ஆறு குத்தாட்டம் ஆடும் குமரிகள் (?????? ஆறு கேள்விக்குறி) 6 கிழபாடுகளை ஆட விட்டு, யாரு அவங்க ராசான்னு தேர்ந்தெடுக்கனுமாம்! என்னங்கடா... நடக்குது இங்க?? இதுல கொடும என்னன்னா.. ஆடுறான் பாருங்க.. அவனோட கண்ணகியும், ஆடுறா பாருங்க.. அவங்களோட சொம்பனும், சொந்தங்களும் சுத்தி உட்கார்ந்து கும்மியடிச்சு உற்சாகப்படுத்துறதுதான். இந்த நிகழ்ச்சி மட்டும் சொந்தமாவா சிந்திச்சிட போறானுங்க?? (இத சிந்திச்சவன் எப்பேர்பட்ட அறிவாளியா இருப்பான்னு நா சிந்திச்சிகிட்டு இருக்கேன்!) என்.டி.டி.வி. இமேஜின் டி.வி-யில் ஒளி"பப்பரப்பா"கிட்டு வர்ற ராக்கி கா சுயம்வர் நிகழ்ச்சியதான் இந்த பிக்காலிங்க இப்டி பிச்சி போட்டுயிருக்குது!!
ஆங்.. அந்த ஆறு யாரு யாருன்னு சொல்ல மறந்துட்டனே! ரகசியா, சுஜா, அனுஜா, தேஜாஸ்ரீ, மேக்னா நாயுடு, அபிநயா ஸ்ரீ (பயப்படாதீங்க.. பயப்படாதீங்க..) அப்புறம் அந்த ராசாங்க பேரு.. பப்லு (எ) ப்ரித்விராசு, சஞ்சய், ராகவ், சக்தி அப்புறம் இன்னம் இரண்டு சனியன் சகடைங்க யாருன்னு தெர்லீங்க!! இந்த சின்னத்திரை கூத்'தாடி'களும், பெரியத்திரையில் இருந்து வந்த 'ஆத்தா'டிகளும்.. சேர்ந்து நம்ம ஆளுங்க மானத்தை காத்தாடிகளா பறக்கவுடுறாங்க.
இதுங்க டிரஸ் எப்ப அவுந்து விழுமோன்னு மூச்சை பிடிச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்க... ஆம்புளைக்கு பொம்பளை வேஷம் போட்ட கணக்கா ஒரு காம்ப்பைரிங் காட்டேரி குறுக்க வந்து கூத்தடிக்குது.. பேரு சந்தோஷியாம்! நம்ம டாரரராகறதை பார்த்து சந்தோஷபடுறதால, அந்த பேரை வச்சிருக்காங்க போல!. அடுத்ததா, இதுக்கு நடுவர்களா வர்ற ஆளுங்களை பாருங்க.. ஒரு படத்துல நடிச்ச அசோக்கு, அப்பாசு, சிபிராசுன்னு சும்மா வீட்டுல சொறிஞ்சிகிட்டு ஒக்காந்திருப்பவங்களை கூப்பிட்டு வந்து கூவ சொல்றாங்க! ஏனோ.. கவுண்டமணி சொல்ற "குண்டூசி விக்கிறவன்... புண்ணாக்கு விக்கிறவன்.." டயலாக் ஞாபகம் வந்து தொலைக்குது!!
கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!
கடந்த எப்பிசோட்ல பிரித்திவிராசும், ரகசியாவும் சேர்ந்து ஆடுனாங்க பாருங்கககக.. ஹய்யோ! மானாட மயிராட (எழுத்து பிழையில்லை) எல்லாம் அவங்க கடியிருக்குற கர்ச்சீப்பை கொண்டுவந்து பிச்சை வாங்கனும்! இந்த கொடுமை இல்லாம, அதுங்க ஆடுனத்துக்கு.. அதுங்களே ஸ்டார் குடுத்துக்குதுங்க.. ஒன்னு ஆடினத்து அப்புறம், பாக்கி உள்ள ஐந்தும் "ஐ வில் கிவ் யூ... 4 ஸ்டார்ஸ்" ன்னு சொல்றப்ப.. "ஐ வில் கிவ் யூ 4 கிக்ஸ்"ன்னு நேர்ல போயி நாலு எத்து விடுனுமுன்னு தோனுது எனக்கு. அதுல இந்த தேஜா ஸ்ரீ கொஞ்சம் ஓவராவே போயி கட்டிபுடிச்சு ஸ்டாருக்கு பதில், முத்தம் குடுக்குது மூதேவி!
ஒருவேளை மிட்நைட் மசாலா பாக்க நம்மாளுங்க நைட்டு வரைக்கு கண்ணு முழிச்சி உடம்பை கெடுத்துக்க வேண்டாம்ன்னு ஒரு நல்லெண்ணத்துல போடுறாங்களோ... என்னவோ.. ! திமுக மகளிர் அணி நடத்துன மாநில மாநாட்டுல தொலைக்காட்சியில பெண்களை ஆபாசமாகக் காட்டுறதை கண்டித்து தீர்மானம் நிறைவேத்துனாங்க. ஆனா, அவங்க நடத்தற சானல்களில் மட்டும் அவுத்துபோட்டு ஆபாசமா ஆடுலாம்ன்னு தீர்மானத்துல ஒரு பாயிண்ட் அவமானமா எழுதியிருப்பாங்க போல... ரைட்டு! எதுவாயிருந்தாலும்,
வாழ்க... சன் டி.வி.!
வளர்க.. அவர்களது பெண்ணியம் பேசும் நிகழ்ச்சிகள்!!
(உன்னை எவன்டா அத எல்லாம் பாக்க சொன்னது?, பிடிக்கலன்னா சேனலை மாத்திகிட்டு போயிட்டேயிரு, நீங்க கோபப்பட்டா நிகழ்ச்சிய நிறுத்திட போறாங்க.. போன்ற பின்னூட்டங்கள் டெலீட் செய்யப்படும் என்று சொன்னா மட்டும் விடவா போறீங்க?)
