வணக்கம் நண்பர்களே... நலமா?
என்னடா.. 1வருஷமா இவன் பதிவு ஒண்ணையும் காணோம்னு ஆளாளுக்கு, இவன் செத்துத்தான்னு நிம்மதியா இருந்தீங்களா? காலாட்டிக்கிட்டே தூங்கலைன்னா மனுசன் செத்துட்டதா நெனச்சி புதைச்சிருவாங்களாம்.. அதான் அப்படி ஏதாவது நினைச்சு கருமாதி பண்ணிடாதீங்கனு சொல்லிட்டு போலாம்னு வந்தேன் :)

நிற்க.
கொஞ்ச நாளா பதிவுலகம் பக்கமே வர முடியல.. (டபுள் மீனிங்?) வேலை தேடுதல், கல்யாணம், கருமாதின்னு பல நவீன பிரச்சனைகள். இப்போ எல்லாம் ஓரளவுக்கு சிமெண்ட் போட்டு செட் ஆக்கியாச்சு! சரி.. எல்லாம் முடிச்சு வேலை வெட்டி இல்லாதவன் என்ன செய்வான்? கரெக்ட்... அதேதான்... ஆரம்பிச்சிட்டேன். (எவன்டா அவன்? அதுகுள்ள மவுஸை, க்லோஸ் பட்டன் கிட்ட கொண்டுபோறது?)
ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதினாலும், நா சொல்லிக் கொள்ளும்படியா ஒன்னும் எழுதி கிழிக்கலை இதுவரைக்கும். சில சமயங்கள்ல ஆணி அடிப்பது அதிகமானாலோ, மன/பணகஷ்டம் அதிகமானாலோ, கண்டிப்பா பதிவுலகத்துல எழுதவோ படிக்கவோ மனசு வரலைங்க. (அப்டி எழுத, படிக்கலன்னா செத்தா போயிடுவ? # உங்க மனசாட்சி) அஃப்கோர்ஸ், இந்த மாதிரி வழக்கமான விதிகள் மான்புமிகு பதிவுலக பரதேசிகளுக்கு பொருந்தாது! அது யாரு யாருன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
உட்காறு.
அப்படி என்ன முக்கியம் இது? பதிவு எழுதி, கமெண்ட் போடுறதுன்னு சில பேர் கேட்பீ்ங்க. சரிதான்! அதை செய்ததால் எனக்கு இந்த பதிவுலகம் சில முக்கியமான நண்பர்களை கொடுத்திருக்கு! சில சிக்கலான சூழ்நிலையில் இருந்த போது பண உதவியும், மனஉறுதியும் அளித்த நண்பர்கள் வினோத், சென்ஷி, அறிவுதேடல் கார்த்திகேயன், ஆதவன், அகமத் சுபைர், குசும்பன் மற்றும் பல நண்பர்கள் எந்த ஒரு பலனையும் எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன். நன்றி சொல்லி அவர்களை அன்னியப்படுத்த விரும்பவில்லை!
படுத்துக்கோ.
என்னய்யா... நா சரியாதானே பேசறேன்? இது வரைக்கும் சைலண்ட் மோடில் இருந்த என் பதிவு, இனி ஸ்டார்ட் மியூஜிக் மோடில் மாறுகிறது. இனி பொழுதுபோகாத வேளையில்.. பல மொக்கைகளோடு வந்து...
என்னய்யா... நா சரியாதானே பேசறேன்? இது வரைக்கும் சைலண்ட் மோடில் இருந்த என் பதிவு, இனி ஸ்டார்ட் மியூஜிக் மோடில் மாறுகிறது. இனி பொழுதுபோகாத வேளையில்.. பல மொக்கைகளோடு வந்து...
டன் டன் டன் டன் டன்ன்ன்...
யேய் டன்டனக்கா.. டனக்குனக்கா...
ஜிந்தாக்தா.. ஜிந்தா ஜிந்தா.. ஜிந்தாக்தா.. தா..
(உங்களுக்கு எந்த மெட்டு புடிக்குதோ அதை போட்டுக்குங்க)
18 comments:
வெல்கம் பேக்டா..
எதுனாலும் திட்டணும்ன்னு தோணுது பொழச்சிப்போ..!
வாங்க வாங்க,.. இனி தொடர்ந்து வாங்க,..
தங்கள் வரவு நல் வரவு ஆகட்டும்.
வருக வருக - வர்வேற்கிறோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உன் கணக்குக்கு இன்னும் கொஞ்சம் குப்பையை சேர்த்து வை... :))
//சரி.. எல்லாம் முடிச்சு வேலை வெட்டி இல்லாதவன் என்ன செய்வான்? கரெக்ட்... அதேதான்... ஆரம்பிச்சிட்டேன். //
:-)))
\\அஃப்கோர்ஸ், \\
;)) நல்லாயிருடா மச்சி ;)
:))))வெல்கம் பேக்கு
திடீர்னு சென்டிமென்டா எல்லாம் பேசுற... நம்ப முடியவில்லை...இல்லை... இல்லை..லைஈஈஈஈஈஈஈஈஈஈ
கடந்த வாரம் தான் உங்க ப்ளாக் வந்து போனேன்.. நிறைய சைனீஸ் கமெண்டெல்லாம் இருந்தது..
we miss u lot man.... welcome back with your so much lollu's
Happy life :)
@ ப்ரியமுடன் வசந்த் - ஏன்டா திட்டாம போன? கா...
@ jothi - நன்றி பாஸ்.. தொடர்ந்துடுவோம்...
@ சுசி - மகிழ்ச்சி... அப்படியே ஆகட்டும் மகாராணி!
@ cheena (சீனா) - நன்றி, சீனா வித் பேனா..
@ அகமது சுபைர் - மச்சி! சாக்கு பை தெரியும்.. அது என்ன குப் பை?
@ கிரி - நன்றி! நாங்க ஆறு போடுவோம் :-))))))
@ கோபிநாத் - உன் புண்ணியத்துல.. என்பதை விட்டுட்ட மச்சி!!
@ ☀நான் ஆதவன்☀ - கல்யாணம் ஆனது ஒரு காரணமா இருக்குமோ மாப்புள???
@ D.R.Ashok - பார்டா.. பதிவ பொதச்சு 1 வருஷம் ஆனாலும், அட்டன்டன்ஸ் போட்ட உங்க நேர்மை இருக்கே.. யம்ம யம்ம யம்மா..
Welcome back MaaMs..
டேய்... வாடா வாடா வாடா வாடா வாடா வாடா வாடா...
வெல்கம் பேக் டா
மொக்கைய ஆரம்பி
@ வினோத் கெளதம் - நன்றி மாப்ஸ்..
@ kishore - டேய்.. வரேன்டா.. வரேன்டா.. வரேன்டா..
@ |கீதப்ப்ரியன்|Geethappriyan| - நன்றி மச்சான்! ஆரம்பிச்சிடுவோம்...
Welcome Back and Best of luck.
Yengada romba nala kanamennu parthen.. Va va adichu aduren....
welcome back...
Post a Comment